Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 29, 2016

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது. மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம்  (PFRDA) அறிவிப்பு. தமிழ்நாடு, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு.

    தமிழ்நாட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட பொதுக் குழு கூட்டம்

    டி.என்.பி.எஸ்.சி - கிராம நிர்வாக அலுவலர் 2016 தேர்விற்கான விடை குறிப்புகள்

    13022 அரசுப் பள்ளிகளை இயக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் அடுத்த இலக்கு

    பகுதிநேர ஆசிரியர்களே!!!!! குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி மாணவர்களின் அறிவு, செயல்திறன் மற்றும் உள்ளார்ந்த திறனை வளர்க்க, செயல்பாடுகள் வாயிலாக கற்க, அச்சம், கவலை, மன அழுத்தமின்றி சுதந்திரமாக தமது கருத்துகளை வெளியிடச் செய்ய, தாங்கள் பெற்ற அறிவை வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்யவே அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இடைநிலை வகுப்புகளுக்கு(ஆறு முதல் எட்டு வரை) நூறு மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாநில அரசுகளால் பகுதிநேர பயிற்றுநர்களை நியமித்துக் கொள்ள மத்திய அரசு (MHRD) அனுமதிக்கிறது.  ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் பங்காக 65%, மாநில அரசின் பங்காக 35% என்ற வகையில் இந்த திட்டம் நாடு முழுவதும் அமுலில் உள்ளது. பகுதி நேர பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.5000(கர்நாடகா, அருணாச்சல பிரதேசம்), ரூ.5200(ஒரிசா), ரூ.6000(ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம்), ரூ.15000(கோவா) என்று வழங்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை அறிவிக்கப்பட்டது.

    ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

    மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார். 

    இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!!!

    ஏழை குடும்பத்தினருக்கு மானியத்தில் காஸ் வழங்கப்படும் என்றும், திறன் மேம்பாட்டின் படி வரும் 3 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கிராமப்புறங்களி்ல் 6 கோடி குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அணு மின் சக்தி உற்பத்திக்கு 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் இன்றை பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.வருமான வரி விலக்கில் எவ்வித மாற்றம் இல்லை என தெரிவித்தார். இவர் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருந்த போது மும்பை பங்குச்சந்தை, கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

    2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் : 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு; அருண்ஜேட்லி

    2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்து வருகிறார். இது மோடி பதவியேற்ற பின் தாக்கலாகும் 3-வது பட்ஜெட் ஆகும். சர்வதேச பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று குறிப்பிட்ட அருண்ஜேட்லி உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளபோது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று பட்ஜெட் தாக்கல் அருண்ஜேட்லி தெரிவித்தார். உலக பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்தியா வளர்ச்சி போக்கில் உள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார்.

    வருமானவரி கழிவு 2000லிருந்து 5000ஆக உயர்வு

    2016-17ஆம் தனி நபர் வருமான வரி கழிவு ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

    வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை

    மத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள்

    • 1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

    2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

    பட்ஜெட் -2016

    -சிறுதொழில்முனைவோர் துறைக்கு ரூ5,000 கோடி ஒதுக்கீடு


    -எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ500 கோடி நிதி ஒதுக்கீடு

    -2016-17-ல் ரூ9 லட்சம் கோடி விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்

    -62 புதிய நவோதயா பள்ளிகள் திறக்கப்படும்

    -அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் குறைந்தசெலவில் டயாலிஸ் சேவை

    -முதியோருக்கு ரூ1 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம்

    "SSTA" கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

    கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

    மாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா பயணம்

    அறிவியல் படைப்பு போட்டியில் வெல்லும் மாணவர்கள், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர். ராமேஸ்வரத்தில் இதுகுறித்து கலாம் பேரன் சலீம், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் இயக்குனர் ஸ்ரீமதிகேசன் கூறியதாவது:

    தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

    பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாயின.

    வி.ஏ.ஓ., தேர்வு தாள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்?

    கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தது. இதில், 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த ஆட்சி எது?' என்ற வினா இடம் பெற்றிருந்தது. வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று எழுத்து தேர்வு நடந்தது. சென்னை, பாரதி மகளிர் கல்லுாரி தேர்வு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

    காலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர் ஆலோசனை

    தேர்வின் போது பயத்தின் காரணமாகவே மாணவர்கள் பசியை தவிர்த்து விடுகின்றனர். இதனால் மனதளவில் பதட்டமும், உடலளவில் கூடுதல் சோர்வுமாக தவிக்கின்றனர். 'மூளைக்கு தேவையான சக்தி, காலை உணவில் உள்ளது' என்கிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதன்மை உணவு நிபுணர் ஜெயந்தியால்.அவர் கூறியதாவது:

    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்!!

    AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR GOVT. STAFFS & TEACHERS:
    PLAN NATIONAL SME @ Rs149,
    (Service Tax 14% Extra)
    CUG CALLS UNLIMITED FREE
    400 MIN FREE LOCAL TO TN MOBILE
    500MB 2G DATA FREE PER MONTH
    AFTER FREE MINUTES,CALL RATE:
    ALL NETWORK TN MOBILE 30p Min

    Saturday, February 27, 2016

    ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு

    ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

    ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது.அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

    அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.

    ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

    பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

    10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர்.

    பதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள்: தகுதி பட்டியல் பரிசீலிக்கப்படுமா?

    கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

    முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.

    தனித்தேர்வர் தேர்வு தேதி அறிவிப்பு

    தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தனித்தேர்வர்களுக்கான, ௮ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 18ம் தேதி துவங்கும். ஏப்., 18ம் தேதி, தமிழ்; 20ம் தேதி, ஆங்கிலம்; 21ம் தேதி,

    Friday, February 26, 2016

    அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் திருத்தம் செய்து ரூ.15 லட்சம் மோசடி: இளநிலை உதவியாளர் தாற்காலிகப் பணி நீக்கம்

    ஆரணி அருகே அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் மாதந்தோறும் திருத்தங்கள் செய்து, ரூ.15 லட்சம் வரை மோசடியாகப் பெற்ற இளநிலை உதவியாளரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இடைநிலை ஆசிரியர்கள் 6–வது நாளாக உண்ணாவிரதம் மயக்கம் அடைந்தவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது

    தங்களுடன் வேலைபார்க்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்கோரி நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் 6–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருந்த சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

    பிளஸ் 2 பொதுத் தேர்வு: நேர விவரங்கள் அறிவிப்பு

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேர விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மதுரை மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர். இதற்கான வினாத் தாள்கள் 12 மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாத்து வருகின்றனர்.

    பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்

    பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

    உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு

    உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது. உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.

    வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர்.

    மாவட்டத் தலைவர் பெ.மாங்கனி தலைமை வகித்தார். பொருளாளர் க.செந்தில்குமரன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் கோ.ரா.ரவிச்சந்திரன் பேசினார்.

    புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு-விளக்கம்

    புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.

    Thursday, February 25, 2016

    அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இலவச கல்வி!

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. அமெரிக்காவில், 4,500 பல்கலைகளில், இன்ஜினியரிங், அறிவியல் மற்றும் கலை படிப்புகளில், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்திய மாணவர்கள் ஆர்வம்சமீப காலமாக, அரசியல் அறிவியல், சமூகவியல் போன்ற கலை படிப்புகளிலும் இந்திய மாணவர்கள் அதிகம் சேர்வதாக, அமெரிக்க துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    போலி மருத்துவ கல்லூரி; நடவடிக்கை எடுக்க சி.ஐ.சி., உத்தரவு

    போலி டாக்டர்கள், போலி மருத்துவ சான்றிதழ்கள் விவகாரம் பற்றி மத்திய தகவல் கமிஷன் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக சி.ஐ.சி., அனுப்பிய நோட்டீசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    7th Pay Commission Latest News – Empowered Committee may submit its report in April

    There is good news in the store for central government employees who are waiting for the implementation of Seventh Pay Commission. Reportedly, review report will be submitted to Finance Ministry at April end. Pay commission Sources say that P K Sinha headed Empowered Committee of Secretaries will submit its report to Finance Minister Arun Jaitley in April end.

    டி.பி.ஐ., வளாகத்தில் வலுக்கிறது போராட்டம் ஆசிரியர், பணியாளர் 20 பேர் கவலைக்கிடம்

    கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களில், 20 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது.சென்னையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் இயங்கும், டி.பி.ஐ., வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தனியார் பள்ளிகளில் பகுதிநேர பணி; சி.இ.ஓ., எச்சரிக்கை

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வேறு தனியார் பள்ளிகளில் பகுதி நேர பணியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை: 

    பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் சில அறிவிப்புகள்...

    இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    அவை.

    மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை 50 சதவீதம் அதிகரிப்பு, இணையதள சேவை அதிகரிப்பு, ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அதிகரிப்பதும் பயணிகளுக்கு சிறந்த அறிவிப்புகளாகும்.

    பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

    பள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

    மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்

    பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி

    சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதன் விவரம்: செயல்படுத்தப் போகும் திட்டங்கள்: "நம்மாழ்வார் விவசாயத் திட்டம்' எனும் பெயரில் நாற்று நடுவதற்குரிய கருவிகளும், இயற்கை உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும். பிறநாட்டில் விவசாய முறைகளைக் கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வோர் ஆண்டும் 5 ஆயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவர்.

    "ரூ.251க்கு செல்லிடப்பேசியை அளிக்கத் தவறினால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை": மத்திய அரசு

    செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து அவர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?

    தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி?

    ''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி. தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியதாவது: கோடையில் வியர்வை அதிகமாகும். காலை, மாலையில் குளிப்பது நல்லது. தடிமனான ஆடைகளை தவிர்த்து இலகுவான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்.

    உண்மை தன்மை சான்று இல்லை; ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்

    பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2016 ஜன.,1 ன் படி பாடவாரியாக சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்கள் மட்டுமே இடம்பெற முடியும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - குடும்ப நல நிதி - ரூ.1,50,000/- லிருந்து ரூ.3,00,000/- ஆக உயர்வு ஆணை வெளியீடு

    ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - CPS, சந்தாதாரர்கள் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு / ராஜினாமா / இறப்பு - கணக்கு முடித்து இறுதித் தொகை பெறுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை

    பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

    2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட கோரி 6வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது

    2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு  இணையான ஊதியம் வழங்கிட கோரி (மத்திய அரசுக்கு இணையாக அல்ல)  SSTA அமைப்பினர் 20/02/2016  முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆறாவது நாளாக சென்னை DPI வளாகத்தில் நடத்தி வருகின்றனர். இதில் 6  ஆசிரியர்களின் உடல்நிலை மோசமடைந்து தீவிரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் போராட்டத்தை வழிநடத்திடும் SSTA  மாநிலப் பொதுச்செயலாளர் ராபர்ட் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகி வருவதாலும்,

    10-ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப். 29-இல் தொடக்கம்

    10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் காஜாமைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    TNPTF - கூடுதல் நிதித்துறை செயலர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விவாதித்தனர்.

    24.2.2016, இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

    பிளஸ்2 தமிழ், ஆங்கில ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல்

    பிளஸ் 2 தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பேசுதல், கேட்டல் செய்முறைத் தேர்வுக்கு 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள உழைப்பூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.

    Tuesday, February 23, 2016

    பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

    வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்  ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

    தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


    வலுக்கிறது போராட்டம் திணறும் டி.பி.ஐ., வளாகம் - SSTA

    பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித் துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக்கோரி, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், 5ம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

    அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான வினாத் தாள்கள் வியாழக்கிழமை வந்தடைந்தது. மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சீல் வைத்த அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    "பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது"

    எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி 11.3.2016

    Monday, February 22, 2016

    ஏன் இந்த போராட்டம்?

    போராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்!!!

    போராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்: இரு சங்கங்கள் தொடர் உண்ணாவிரதம்!!!

    ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழக பள்ளிகளில், 2012ல், இரவு காவலர்களாக, 2,000 பேர்; துப்புரவாளர்களாக, 3,000 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இரவு காவலர்கள், 14 ஆயிரம் ரூபாய் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால், துப்புரவு பணியாளர்களுக்கு, 3,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.'தங்களுக்கும் கால முறை ஊதியம் வேண்டும்' என, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?

    டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தலைநகர் டில்லியில் தண்ணீருக்கு தட்டுப்பாடு:பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு

    இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்திய, 'ஜாட்' சமூகத்தினர், டில்லிக்கு செல்லும் குடிநீர் கால்வாயின் மதகுகளை அடைத்ததால், ஹரியானாவின் முனாக் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், டில்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்கள் சிலவற்றுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

    காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர். 

    மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

    மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.எல்.டி.சி., விண்ணப்ப நடைமுறை சிக்கலாக இருப்பதாக, மத்திய அரசு ஊழியர்கள் கூறி வந்தனர். விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, எல்.டி.சி., நிராகரிக்கவும் படுகிறது. இதையடுத்து, இதற்கான நெறிமுறைகளை, மத்திய அரசு எளிமை படுத்தியுள்ளது.

    தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

    உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடைமுறைப்படி, தேர்வர்களுக்கு இலவச கறுப்பு, 'பால்பாய்ன்ட்' பேனா வழங்கப்பட்டது; மொபைல் போன்கள் தேர்வறையில் தனியாக வைக்கப்பட்டன.

    அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி

    போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போர்ட் எடுத்தல், சொத்து பிரச்னைகளை தீர்த்தல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெறுதல், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, கல்விச்சான்று தேவைப்படுகிறது.

    கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

    பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச், 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து, 18 முதல், 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்-கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்

    மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது. பள்ளி அளவில் அறிவியல் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையில் மாணவர் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் சுற்று சூழல் மற்றும் அறிவியல் தொடர்பான புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும்.

    இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

    காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.

    கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பொதுத் தேர்வு: மாணவர்களின் நலனுக்காக தடையில்லா மின்சாரம்

    10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி, தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கோவிந்தராஜு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தேர்தல், தேர்வு நெருங்குவதால் அரசு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

    அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடுபட்ட கோரிக்கைகளை வரைவு அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் அளிக்க உள்ளோம். இவற்றை அரசு தனது அரசாணையில் வெளியிட வேண்டும். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளனர்.

    Saturday, February 20, 2016

    மகள் திருமணத்திற்கு பள்ளிக்கு 2 நாள் விடுமுறை : ஹெச்.எம் உள்பட ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்?

    ஜலகண்டாபுரம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக  பள்ளிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைமை ஆசிரியை உள்பட அனைத்து ஆசிரியர்களும்  கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.  சேலம் மாவட்டம்  ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. 

    அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்

    அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    Thursday, February 18, 2016

    ஜாக்டோ அண்மைச் செய்திகள்: 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் ஜாக்டோ ஒருமனதாக தீர்மானம்

    25.02.2016 தேதிக்குள் தமிழக அரசு ஜாக்டோவின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், 25.02.2016 அன்று மாலை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்த

    இன்று 18.02.2016 அன்று நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட குழு முடிவுகள். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

    முடிவு: 1. 20.02.2016 அன்று காலை 11.00 அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம். 

    முடிவு 2. 25.02.2016 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய ஜேக்டோ பேரமைப்பின் கோட்டை நோக்கி பேரணி. 

    மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

    சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவைத் திட்டம் தொடங்கப்படும். இதன்படி மூத்த குடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படும்.

    கலெக்டர் அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்: அரசு பணிகள் முடங்கியது

    அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது.கடந்த 10–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆசிரியர் அமைப்புகள், நீதித் துறை, வணிக வரித்துறை ஊழியர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

    அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

    ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை

    ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய ஆலோசனை நடந்தவுள்ளது.

    நீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயிரம் பேர் கைது

    தமிழகத்தில் அரசு ஊழியர்களின், 'ஸ்டிரைக்' நேற்று, எட்டாவது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரசு ஊழியர் போராட்டம் பற்றி பேச அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டார்.‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்....’’ என்று அவர் பேச தொடங்கியதும், சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு நிறைய உறுப்பினர்கள் இதுபற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் என்னிடம் கொடுத்துள்ளனர். ஆய்வில் உள்ளது. பதில் வந்ததும் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

    அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2016 - தேர்வர்கள் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் - ஓழுங்கீனச் செயலாக கருதப்படுதல் மற்றும் தண்டனை வழங்கப்படுதல் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல் சார்பாக இயக்குனர் உத்தரவு


    தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை

    பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு அறையில் ஆசிரியர்களின் கண்காணிப்பு பணிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து துாங்கி வழிந்து விடாமல் தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட தடை விதிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு தான் இந்த திட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது. 

    தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் போராட்டம் வலுக்கிறது: 6 லட்சம் அரசு ஊழியர் கைது; பல துறை அலுவலகங்கள் வெறிச்சோடின; அரசு பணிகள் தொடர்ந்து முடங்கின

    தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 6 லட்சம் ஊழியர்கள்  தாலுகா வாரியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தது. இவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில்  விடுவிக்கப்பட்டனர். தமிழக அரசின் வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரக வளர்ச்சி, சத்துணவு, கல்வி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ்  10.63 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

    புதுக்கோட்டையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து  ஒப்பாரி வைத்து  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், சத்துணவு ஊழியர்கள்  உள்ளிட்ட 937 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    "தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது"

    அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்று நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் நுட்பக் கல்வி மேலாளர் சோலைக்குட்டி தனபால் கூறினார்.

    'அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்த எந்த அரசும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது"துரைமுருகன் பேச்சு,அரசு ஊழியர் போராட்டம் பற்றி பேச அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டார்.‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்....’’ என்று அவர் பேச தொடங்கியதும், சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு நிறைய உறுப்பினர்கள் இதுபற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் என்னிடம் கொடுத்துள்ளனர். ஆய்வில் உள்ளது. பதில் வந்ததும் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

    பள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனைக்கு தடை.

    தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது; அதிக தேர்ச்சி காட்டுவது என்ற இலக்கை நோக்கியே பள்ளிகள் இயங்குகின்றன. குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை தான், தங்கள் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றன.

    சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான நவம்பர் மாத தேர்வு முடிவுகள், பிப்., 18 மாலையில் வெளியாகும்.

    உலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

    என்.சி.ஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த நொய்டாவில், 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், உலகின் மிக மலிவான ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது. 'பிரீடம் 251' எனப் பெயரிடப்பட்ட, இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.டில்லியில், நேற்று மாலை நடந்த விழாவில், பிரீடம் 251 ஸ்மார்ட் போன், அறிமுகப்படுத்தப்பட்டது. 

    Wednesday, February 17, 2016

    தமிழக பட்ஜெட்; கல்விக்கு கூடுதல் நிதி

    தமிழக சட்டசபையில் 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று(16-02-2016) தாக்கல் செய்யப்பட்டது. நேற்று தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலையில், கல்விக்கு ரூ.24 ஆயிரத்து 820 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக ரூ.86 ஆயிரத்து 193 கோடியும் மற்றும் உயர்கல்வியில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 84 ஆயிரத்து 609 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 544 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாணவர்கள் கல்வி நிதி சுமை நீக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல் செய்தார்.

    7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!

    தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ளது.

    பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்

    பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே, கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது.

    பி.எப்., வட்டி அதிகரிப்பு 0.05% சதவீதம் உயர்வு.

    ''நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக கட்டுப்பாட்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன், மத்திய அறங்காவலர் குழுமத்தின், 211வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

    'திரிசங்கு' நிலையில் துவக்கப்பள்ளிகாப்பாற்ற அதிகாரிகளுக்கு மனமில்லை

    சிவகங்கை அருகே அலங்கம் பட்டியில் தன்னார்வ நிறுவனம் நடத்திய பள்ளி, நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியாக மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இழுத்தடிக்கின்றனர். மேலப்பூங்குடி ஊராட்சி அலங்கம்பட்டியில் 'அசேபா' என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பள்ளி துவக்கப்பட்டது.

    தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ‘படி’ மற்றும் போக்குவரத்து, போலீஸ் செலவுகள் அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.வழக்கமாக சட்டமன்ற தேர்தலுக்கான செலவு தொகையை மத்திய அரசு வழங்கும். பாராளுமன்ற தேர்தல் செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 148 கோடி செலவானது. இந்த தேர்தலுக்கு 35 சதவீதம் செலவு தொகை அதிகரித்துள்ளது.

    முதல்வரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ஜாக்டோ

    பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற அமைச்சர்களின் வாக்குறுதிக்காக அமைதிகாத்து காத்திருக்கின்றனர்.

    VIII STD PUBLIC EXAMINATION (PRIVATE CANDIDATE) - APRIL 2016 ESLC EXAMINATION - PRESS RELEASE & INSTRUCTIONS

    தேசிய வருவாய் வழித்தேர்வு தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவு

    தேசிய வருவாய் வழி, திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்திராதேவி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: 

    நெல்லையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.

    போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்

    இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர் தெரிவித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.

    தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை

    தமிழக அரசு ஜாக்டோ அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை யில் தெரிவித்த படி பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது.

    பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின்    முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

    IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

    Tuesday, February 16, 2016

    விடா முயற்சிகள் ஜெயித்திடும்


    மறியல் போராட்டம்: 2,217 பேர் கைது

    பள்ளிக்கல்வி - 16.02.2016 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது - பள்ளிகள் தடையில்லாமல் செயல்படுதல் - விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

    2016-17ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.2 லட்சம் கோடி

    தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வரும் நிதியாண்டுக்கான வரவு, செலவு கணக்கு, கடன்தொகை  பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதிநிலை அறிக்கையில் மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் இல்லை

    தமிழக சட்டப்பேரவையின் வழக்கமான மரபை பின்பற்றி புதிய அறிவிப்புகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படாது என்ற பேரவையின் வழக்கமான மரவை பின்பற்றி, அதிமுக தலைமையிலான அரசு புதிய அறிவிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழக இடைக்கால பட்ஜெட் ; ஓ.பி.எஸ்., தாக்கல் செய்தார் ; எதிர்கட்சி வெளிநடப்பு

    தமிழக பட்ஜெட் கூட்டம் இன்று (16 ம் தேதி ) காலை 11 மணிக்கு துவங்கியது . 2016 -17 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டுக்குஎதிர்ப்பு தெரிவித்து திமுக , தேமுதிக., காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

    தமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்...உடனுக்குடன்

    தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் துவங்கியது. முதல்வர் ஜெயலலிதாவின் புகழாரத்துடன் நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உரையைத் துவக்கினார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,  

    மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக நிதிநிலை அறிக்கையில், 1,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி ஒரத்தநாடு, நெல்லையில் தொடக்கப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு 24, 820 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    7th Pay Commission Latest News – Member suggests for merging DA with pay this year

    Dr.Roy, who is one of the members of 7th Pay Commission has suggested that generous award of pay hike can be extended to Central Government Employees by providing them the pay increase in staggered manner. He also suggested that DA could be merged with Pay this year and the real increase in pay suggested by Pay Commission can be made effective in the subsequent years so that the impact of the increase in pay out of 7th pay commission would be minimal each year and consequently Economic Stability of the Country is not affected. The text of Dr.Roy’s suggestion on implementation of 7th pay Commission recommendations which has been published in Hindu :

    7th Pay Commission Latest News – Strike Call on 11th April 2016 – 95% Railway employees want strike

    NJCA, the joint action Committee represented by associations of Central Government Employees including Railway Employees and Civilian Defence Employees have planned for All India Strike on 11th April 2016 against anti-employees 7th Pay Commission Recommendations. In this connection. In this connection AIRF, has conducted Strike Ballot among Railway Employees to get decision whether to participate in All India Strike on 11th April 2016 called for by NJCA. After completion this exercise AIRF has released a press release to the effect that result of Strike Ballot is in favour of participating in Strike. As many as 95% of Railway Employees have voted for proceeding for Indefinite Strike.

    இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வு

    தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள, 329 இளநிலை பயிற்சி அலுவலர்கள் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.இதற்கான முதல்நிலை தேர்வு, 21ம் தேதி நடைபெற உள்ளது. 

    சேமிப்பு கணக்கில் அளவுக்கு மீறினால்... பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

    வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன் மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.ஐ., என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை, வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் பருவ கால வைப்புத் தொகையாக மாற்றியதாக, புதுக்கோட்டை எஸ்.பி.ஐ., வங்கி கிளை மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

    "ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி"

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) சார்பில் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் சங்க கூட்டு இயக்கங்களுடன் (டேக்டோ, ஜாக்டோ) அரசு சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கோட்டையே கதியாய் கிடக்கும் கல்வி அதிகாரிகள்!

    முதல்வர் ஜெயலலிதா பாணியில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம், கல்வித் துறை செயலர் சபிதா அடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா

    தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழகத்தில், மார்ச், 4 முதல், பிளஸ் 2; மார்ச், 15 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன; 15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    மகளிர் குழுவினர் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு

    சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பள்ளிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.,10 முதல் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாகவே தாங்கள் வேலை செய்யும் மையங்களை பூட்டி, ஆவணங்களை கையோடு எடுத்து சென்றனர்.

    பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஸ்டிரைக்

    பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால், எந்த உறுதியும் அளிக்கவில்லை.எனவே, ஜாக்டோவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நேற்று முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். 'முதல் நாளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை' என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தெரிவித்தார்.

    Monday, February 15, 2016

    தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல்

    தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
    தமிழக சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போது முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்படும்.

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு போராட்டம்

    தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

    அண்ணா பல்கலை ஊழியர்கள் மறியல்

    இன்ஜி., கல்லுாரி அலுவலர்கள், பணி வரன்முறை கோரி, சென்னையில் உள்ள அண்ணா பல்கலை முன் மறியல் செய்ய முயன்றனர். அண்ணா பல்கலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன், 13 உறுப்பு கல்லுாரிகளான, அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 565 பேர், அலுவலர் மற்றும் ஊழியராக நியமிக்கப்பட்டனர். அனைத்து ஊழியர்களும், அந்தந்த மண்டல அலுவலகங்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் பணியாற்றினர். 

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விபரம் வெளியீடு

    தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. கடந்த, 2015 மே, 31ம் தேதி நிலவரப்படி ஓய்வு பெறும் அனைத்து வகை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம், 3,025 என, உத்தேசமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்!

    கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில், முதல் முறையாக தமிழ், ஆங்கிலம், பாடங்களுக்கு அரை மதிப்பெண் வழங்க, முதன்மை விடைத்தாளில் பிரத்யேக புள்ளி வைத்த கட்டம் அச்சிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் முதல் வாரத்தில் துவங்கவுள்ளன. இதற்கான, விடைத்தாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    தொலைநிலை கல்வி இன்ஜினியர் படிப்புக்கு தடை!

    இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, திறந்த நிலை மற்றும் தொலைநிலை கல்வியில் வகுப்புகள் நடத்த, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. கல்லுாரிகளில், நேரடியாக முழு நேர படிப்பில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள், தொலை நிலை கல்வியில் சேர்ந்து படிக்கலாம்; கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கலாம்.

    ஏப்ரல் 11 முதல் 13 லட்சம் ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

    ரயில்வே துறையின், 13 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக, ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. பெரும்பாலானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆதரவு தெரிவித்து இருப்பதாக தொழிற்சங்கத்தினர் கூறினர். இந்திய ரயில்வேயில், பயணிகள் சேவையில், 12 ஆயிரம்; சரக்கு ரயில் சேவையில், 7,000 என, 19 ஆயிரம் ரயில்கள் ஓடுகின்றன. ரயில் இயக்கம், பணிமனை, உற்பத்தி தொழிற்சாலையில் பணி புரிவோர் என, 13 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.

    மாணவர்கள் குழப்பமோ குழப்பம் 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழா, பிற மொழியா?

    தமிழகத்தில், 2006 முதல், பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது. இதன் படி, முதல் ஆண்டில், 1ம் வகுப்பு, அடுத்த ஆண்டில், 2ம் வகுப்பு என, தற்போது, 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாகியுள்ளது. 

    அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

    தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மருத்துவ நுழைவு தேர்வு 96 சதவீதம் பேர் ஆர்வம்

    தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,163 முதுநிலை மருத்துவப் படிப்புகள், 40 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத்தேர்வு, சென்னையில், ஐந்து கல்லுாரிகளில் நடந்தது. இதற்கு, 11 ஆயிரத்து, 438 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    ரேஷன் கடைகள் இன்று திறந்திருக்கும்

    'ரேஷன் கடைகள், இன்று, வழக்கம் போல் செயல்படும்' என, ரேஷன் கடை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை, வணிக வரி, சத்துணவு துறை உள்ளிட்ட பல துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ரேஷன் ஊழியர்கள், இன்று முதல், வேலை நிறுத்தம் செய்ய போவதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று வழக்கம் போல், கடைகளை திறக்க இருப்பதாக ரேஷன் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு (GPF)ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை!

    வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம்

    ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன.

    SSTA ஓரே கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு!!!

    இடைநிலை ஆசியர்கள் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்று பல்வேறு சட்டப் போராட்டத்தினையும், களப் போராட்டத்தினையும் 5 ஆண்டுகளாக நமது இயக்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடுமையான போராட்டம் மட்டுமே வெற்றிவாய்ப்பை பெற்றுத்தரும் என்ற  சூழலில் மிக கடுமையான  போராட்டத்தில் SSTA களம் இறங்குகிறது. இதுவரை மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    Saturday, February 13, 2016

    பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 2015-16ஆம் ஆண்டிற்கான நேரடி நியமனம் / இதர நியமன முறைக்கான காலிப் பணியிடம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியீடு

    அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்: பொன். இராதாகிருஷ்ணன்

    அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

    அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேருக்கு மாற்றுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. 

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடரும்: நஜீம் ஜைதி

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருந்தால், அதனை சேர்ப்பதற்கு காலஅவகாசம் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, அரசியல் கட்சிகள்-அதிகாரிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: மழை-வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தோருக்கு இலவசமாக புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து தனிப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படும்.

    பி.எஃப். பணத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளலாம்

    வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான வசதிகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பி.எஃப். பணத்தைப் பெறும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்) உயரதிகாரி ஒருவர், தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

    சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த விவரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Friday, February 12, 2016

    1062 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

    1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு பெண் ஊழியர் மாரடைப்பால் மரணம்

    நாகை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த தோழர் ஏ.அமுதா. 2003 போராட்டத்தின்போது பணிக்கு வந்த தற்காலிக இளநிலை உதவியாளர். CPS திட்டத்தில் உள்ள இவர் நேற்று துவங்கியுள்ள அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார். அரசின் போக்கால் ஏற்பட்ட மன அலுத்தத்தின் விளைவாக நெஞ்சுவலி வந்து தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி

    அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது.    தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள். 

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி

    தர்மபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பாக, பள்ளி செல்லா மற்றும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, இரண்டு நாள் அறிவியல் விழிப்புணர்வு பயிற்சி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று துவங்கியது. பயிற்சியை கல்லூரி முதல்வர் சுந்தரவல்லி துவக்கி வைத்தார். 

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்

    நடப்பாண்டில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் அதிக சதவீதத்தில் மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்த தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில், பள்ளி கல்வி துறை கல்வியாண்டு துவக்கம் முதல் மாணவ, மாணவியருக்கு மட்டுமின்றி பாட வாரியான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு வகுப்பு, பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

    பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு; மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

    பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, சிறப்பு கூட்டு வழிபாடு, சைதாப்பேட்டையில், வரும் 21ம் தேதி நடக்கிறது. சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் அண்ணாமலையார் ஆன்மிக குழு சார்பில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், கூட்டு வழிபாடு நடக்கிறது. வரும், 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு, யோகசனத்துடன் வழிபாடு துவங்கும். 

    முதுநிலை மருத்துவம் 14ல் நுழைவு தேர்வு

    முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, பிப்., 14ல் நடத்தப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில், 1,163 இடங்களும்; எம்.டி.எஸ்., படிப்பில், 40 இடங்களும் உள்ளன.

    குழு விவாதம் ஏன், எதற்கு, எப்படி?

    இன்று எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பாகட்டும், இல்லை வங்கி பணி, ஐ.டி., பணியாகட்டும் திறமை வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்க ‘குழு விவாதம்’ முறை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ‘குழு விவாதம்’ என்பது அதிக அளவு பங்கேற்பாளர்களை கழித்து கட்ட ஒரு முறை என்று சிலர் நினைக்கின்றனர். அது ஒரு புறம் உண்மை என்றாலும், குழு விவாதம் பங்கேற்பாளரின் தலைமை பண்பு, குழு நிர்வாகம், ஒருங்கிணைத்தல், ஊக்கப்படுத்தும் திறன் போன்ற பல நிர்வாக திறன்களை வெளிக்கொணர்கிறது.

    ஊரகவேலைவாய்ப்பு வேலை திட்டம் நிறுத்தம்:அரசு ஊழியர்கள் போராட்டத்தால்

    அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, நூறு நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குக்கிராம மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட 33 சங்கங்கள் இணைந்து, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், "சிறப்பு காலமுறை' ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, "காலமுறை' ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொது மக்கள், அரசு சார்ந்த எந்த பணிகளையும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

    பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், 4ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

    5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது

    கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் 5 பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது. தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா, அமிர்தா, கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.

    விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி

    தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.

    70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் முடிவு

    மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

    தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்

    கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர் என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் முறையே, 4,500 ரூபாய், 3,500 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர். 

    தொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அறிவிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவுதொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அறிவிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

    தொடர் மறியலில் ஈடுபட அரசு ஊழியர்கள் முடிவு

    அரசு தரப்பில் சாதகமான பதில் இல்லாததால், இன்று (பிப்., 12) முதல் தொடர் மறியலில் ஈடுபட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுபோன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

    பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதி

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை பயிற்றுவிக்க, 2006 ல் 1,880 கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. தற்காலிக பணியிடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணி நீட்டிப்பு செய்தால் மட்டுமே கம்ப்யூட்டர் பயிற்றுனர்கள் ஊதியம் பெற முடியும்.

    8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

    தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் 'ஆன்லைன்' விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.

    தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு

    தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது

    'கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா, அமிர்தா, கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

    கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பாக, பிப்., ௧௫ல், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளளனர்.தமிழகம் முழுவதும், 89 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்காலிக பணி நியமன அடிப்படையில், ௧௯௯௮ முதல் கவுரவ விரிவுரையாளர்கள், பணியாற்றி வருகின்றனர். 

    Thursday, February 11, 2016

    த.அ.உ.சட்டம் 2005 - தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.8500 கோடி என அரசு தகவல்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநிலச் செயற்குழு கூட்டம்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்று சிறப்பு மிக்க மாநில மாநாடு தீர்மானங்களை நிறைவேற்ற கோரியும், ஜேக்டோவின் அமைச்சரவை மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு பின்னால் தற்போதை சூழலில் மாநில மாநாடு தீர்மானங்களை எவ்வாறு அமுல்படுத்திட வேண்டும் என்பது குறித்து முடிவாற்றவும் அவசர மாநிலச் செயற்குழு நாளை (12.2.2016) காலை 10.00 மணிக்கு திருச்சியில் கூடுவதாகவும்,

    தேசிய குடற்புழு நீக்க தினம் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் விழா

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் என்றென்றும் நன்றி!!!


    பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணை

    3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' பணிகள் ஸ்தம்பிப்பு

    மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.

    சம்பள உயர்வு குறித்து பேச 7 பேர் குழு அமைப்பு

    தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சம்பளம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2015 டிச., 1 முதல், புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். இதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூ., - காங்., உள்ளிட்ட, 16 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

    ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு

    ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர்.ஆசிரியர்களின், ௧௫ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, ஐந்து கட்ட போராட்டங்களை, ஜாக்டோ சங்கம் நடத்தியது. அடுத்த போராட்டம் குறித்து முடிவு செய்ய, பிப்., ௧௩ல் திருச்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்ட திட்டமிட்டிருந்தது.

    13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு

    தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 13 இடங்களில், மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஓராண்டாக சீனியர் விரிவுரையாளர்கள் தான் 'பொறுப்பு' முதல்வர்களாக இருந்தனர்.

    அகஇ - 2015-16ம் ஆண்டிற்கு தலைமையாசிரியர்களுக்கு "LEADERSHIP QUALITIES" என்ற தலைப்பில் பயிற்சியினை மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்: நஜீம் ஜைதி

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள்  சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய காலம் மே மாதம் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இதேபோல புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு புதுச்சேரியில் நஜீம் ஜைதி ஆலோசனை மேற்கொண்டார். 

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

    நிதித்துறை - அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் இதர படிகள் பெற தகுதியானவர்கள் பட்டியலை 15.02.2016க்குள் அனுப்ப அரசு உத்தரவு

    10ம் வகுப்பு மாணவர்கள் 8 பேருக்கு 'டிசி': அரசு பள்ளியில் தலைமையாசிரியர் நடவடிக்கை

    விருதுநகரில் நுாறு சதவீத தேர்ச்சிக்காக அரசு பள்ளியில் எட்டு பேருக்கு 'டிசி' கொடுத்ததால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.விருதுநகர் மாவட்டம் மூவரை வென்றான் அருகே உள்ளது எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலை பள்ளி. இப்பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் சரிவர படிக்காத பத்தாம் வகுப்பு மாணவர்கள் கண்ணன், சி.முனீஸ்வரன் உட்பட எட்டு பேருக்கு தலைமை ஆசிரியரால் 'டிசி' கொடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று விருதுநகரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.

    Wednesday, February 10, 2016

    ஆதார் கார்டு இணைப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

    தேசிய மக்கள் தொகை பதிவேட் டில் ஆதார் கார்டு எண்களை இணைக்கும் பணியில் ஆசிரியர் களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு அளிப்பதை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி பாலசந்தர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

    மத்திய அரசு ஊழியர்களிடம்'ஸ்டிரைக்' குறித்து வாக்கெடுப்பு

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் ஏப்., 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.

    மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி பற்றிய அறிவுரைகள்

    டி.இ.ஓ., காலிப்பணியிடம் கல்வித்துறை நடவடிக்கை

    தமிழக பள்ளி கல்வித்துறையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலியிடங்களை நிரப்ப, 2008க்குள் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது.அரசு உயர் நிலை, தொடக்கக்கல்வித்துறையில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்காலியாக இருந்தன. சீனியர் தலைமை ஆசிரியர்களே கூடுதலாக கல்வித்துறை அலுவலர் பணியை கவனித்தனர். பொறுப்பு அலுவலர் என்பதால், துறை சார்ந்த சில முடிவு, உத்தரவுகளை எடுக்காமல் இருந்தனர்.

    தேர்தல் பணி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

    உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு? சி.பி.ஐ., விசாரணைக்கு கோரிக்கை

    தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் தேர்வில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    Tuesday, February 9, 2016

    ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்; தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி பொது செயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை

    இன்று மாலை 5.50 மணியளவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அறையில் ஜாக்டோ குழுவினருடனான பேச்சு வார்த்தை தொடங்கியது.அரசு தரப்பில் நிதித்துறை அமைச்சர் திரு ஓ.பன்னிர் செல்வம் அவர்கள் தலைமையில், கல்வி அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கல்வித்துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜாக்டோ தரப்பில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 21 பேர் கலந்துகொண்டனர்.

    ஜாக்டோவின் கோரிக்கைகள் முதல்வர் பரிசீலித்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உறுதிமொழி; இதையடுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பிப்ரவரி 16 அன்று கூட ஜாக்டோ முடிவு

    அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும்

    ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது

    ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் வீதம்

    மொத்தம் 21 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர்.