Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 30, 2016

    7th Pay Commission: Govt accepts recommendations; 14 key developments

    The Union Cabinet on Wednesday approved the implementation of the recommendations of 7th Pay Commission on pay and pensionary benefits. It will come into effect from January 01, 2016. The 7th Pay Commission recommendations are being implemented within 6 months from the due date. The Cabinet also decided that arrears of pay and pensionary benefits would be paid during the current financial year (2016-17) itself, unlike in the past when parts of arrears were paid in the next financial year.  The recommendations will benefit over 1 crore employees. This includes over 47 lakh central government employees and 53 lakh pensioners, of which 14 lakh employees and 18 lakh pensioners are from the defence forces.

    Here are 14 developments on the 7th Pay Commission roll-out:

    1. The present system of Pay Bands and Grade Pay has been dispensed with and a new Pay Matrix as recommended by the Commission has been approved. The status of the employee, hitherto determined by grade pay, will now be determined by the level in the Pay Matrix. Separate Pay Matrices have been drawn up for Civilians, Defence Personnel and for Military Nursing Service. The principle and rationale behind these matrices are the same.

    அகஇ - குறிப்பிட்ட கால இடைவேளையில் நடத்தப்படும் அடைவு ஆய்வு சார்பான இயக்குனரின் செயல்முறைகள்

    DGE - D.EL.ED., FIRST & SECOND YEAR EXAMINATION JUNE 2016 TIME TABLE

    ஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சான்றுகளின் உண்மைத் தன்மை சார்பான கோரிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப இயக்குனர் உத்தரவு

    7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு என கூறப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ஊதிய உயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.

    7ஆவது ஊதியக் குழு பரிந்துரை; முக்கிய அம்சங்கள்...

    * அமலாகும் தேதி: 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி

    * ஒட்டுமொத்த ஊதியம், இதர படிகள், ஓய்வூதியங்கள் 23.55% உயர்வு

    * குறைந்தபட்ச ஊதியம்: மாதந்தோறும் ரூ.18,000

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

    மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும்.

    7வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்க அனுமதி

    மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி

    7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்டிருக்கும் ஊதியத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையில் கூறப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு திருப்தியளிக்கவில்லை என்றும் விலைவாசிக்கேற்றவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    ஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்

    இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாயா, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஊழியர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளைப் புறக்கணித்துவிட்டு அந்தப் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் மத்திய அரசின் முடிவு, எங்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதனால் தொழில்துறையில் அமைதி சீர்குலைந்தால், அதற்கு மத்திய அரசே பொறுப்பாகும்.

    Wednesday, June 29, 2016

    இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.

    10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் உடனடி துணைத் தேர்வு துவங்கி, ஜூலை, 6ல் முடிகிறது. தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, விருப்ப மொழி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி!

    தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் ஒரு ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாடங்களும் முழுமையாக நடத்த முடியாமல் போவதால், கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்களும், பள்ளி ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 3,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு அண்மையில் அறிவித்தது.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது!

    மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம்உயர்த்தப்படுகிறது. 

    Tuesday, June 28, 2016

    272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

    தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

    மொத்த இடங்கள்:272

    பணி - காலியிடங்கள் விவரம்:

    பணி: Senior Lecturers-38

    அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

    பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடையாமைக்கு இரு காரணங்கள்:
    1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது.

    தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

    பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு 'கண்டனம்' என்ற தண்டனை, 'தவறு இனி நடக்கக்கூடாது' என்ற எச்சரிக்கை ஆகிய இருவித தண்டனையை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது. 

    7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு

    மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இம்மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை இதன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது.

    Monday, June 27, 2016

    14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்ச்சி பட்டதாரிகள் விண்ணப்பிப்பு

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 14 ஆயிரம் காவலர் காலிப்பணியிடங்களுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி?

    மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறியாகி உள்ளது.

    தொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி!

    கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

    மேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் திட்டங்கள்

    பத்து ஆண்டுகள் ஆகியும் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்படவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராதது, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் ஐஐடி நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவச் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளதாகவும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் முன்னிலை பெறுவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக்கிய பதிவுகள்

    1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும். பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    2. பணி நியமன முழு விபரம்.
    3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.
    4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.
    5. GPF/TPF/CPS எண் விபரம்.
    6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.

    ALAGAPPA UNIVERSITY - PRE-REGISTRATION ENTRANCE EXAM FOR PH.D., PROGRAM AUGUST 2016

    EMIS ENTRY: செய்முறை விளக்கம்

    கல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
    இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.

    1)   மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.

    2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).

    3) Common pool (student pool)ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின்        பள்ளிக்கு மாற்றுதல்

    மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்:-

    முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.

    தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை

    தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழகத்தில் தொடக்க பள்ளிகளை, நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை, உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலையாகவும் தரம் உயர்த்த, மத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோடி மிச்சம்

    நாடு முழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால், 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், மத்திய நிதித் துறை செயலர் அசோக் லவாஸா கூறியுள்ளார். 

    இன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்: இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில் தடை

    தமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. பல்கலை வளாகத்தில், இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 524 இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 1.92 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலை மூலம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், 23ம் தேதி துவங்கியது. முதல் நாளில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 500 இடங்களில், 352 இடங்கள் மட்டுமே நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கான, 5,000 இடங்களுக்கு, 221 பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.

    ''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''

    ''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

    பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு அழைப்பு

    திருநெல்வேலி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஜூலை 18-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு “சி-டெட்” எனப் படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி, செப் டம்பர்) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

    அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்.

    எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம் பலமணி நேரம் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளியில் கவனம் செலுத்தி கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில் குறைபாடு உண்டாகிறது. 

    Sunday, June 26, 2016

    ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது

    'ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், இரு மடங்கு அளவுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி கல்வித்துறை - தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியற்களுக்கு 29.06.2016 அன்று மாறுதல் கலந்தாய்வு சென்னை ரிப்பன் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

    அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? - தி ஹிந்து செய்தி

    தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம்உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!அரசுப்பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனைஎளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்தியமரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில்உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும்மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்குமூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரைஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும்இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும்படித்திருந்திருக்கின்றனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்.

    தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக,மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

    Thursday, June 23, 2016

    2316 முதுகலை, சிறப்பாசிரியர்கள் நியமனம் அறிவிப்பு எப்போது வெளியாகும் ?.

    அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்

    ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஆண்டிற்கு, 18 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து உள்ளார். பி.எஸ்.எல்.வி., - சி 34 ராக்கெட் மூலம், 'இஸ்ரோ'வின் கார்டோசாட்- 2; அமெரிக்காவின், -13; கனடா, இரண்டு; ஜெர்மனி, இந்தோனேஷியா தலா ஒன்று; சத்யபாமா பல்கலை ஒன்று; புனே பொறியியல் கல்லுாரி ஒன்று என, மொத்தம், 20 செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக, நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டன.

    பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய குழு வருகை

    தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளின் படி, தனியார், சுயநிதி பள்ளிகளில் அறிமுக வகுப்பில் 25 சதவீதம் நலிவுற்ற மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு அறிவித்தது.

    சீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்தில் அரசு பள்ளியில் சேர்ப்பு: பொதுநலன் வழக்கானது ‘தி இந்து’ செய்தி

    பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் சேர்க்க மறுத்தது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அரசுப் பள்ளியில் அவர் கேட்ட பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    இன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்

    சென்னை அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்க விண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம் பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கும். நாளை மறுநாள், மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப்பு

    ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2006 ஜூன் 1ல் காலமுறை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

    சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

    இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள். ”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந் த ஆவணத்தில் கையெழுத்து போட் டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து. உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.

    Wednesday, June 22, 2016

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள்

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளராக திரு.க.செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவராக திரு.மணி, கோவை அவர்களும், பொதுச்செயலாளராக திரு.க.செல்வராஜ் நாமக்கல் அவர்களும்,

    பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்

    பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழில் நிரந்தர பதிவு எண்ணுடன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பதை தடுக்கும் வகையில், பார்கோடு குறியீட்டுடன் நிரந்தர பதிவு எண் கொண்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், என கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழியர் அசத்தல்

    பிளஸ் 2 முடித்து, 10 ஆண்டுகளுக்கு பின், ஐ.டி., பணியாளர் ஒருவர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் சிவராஜ், 28; 10 ஆண்டுகளுக்கு முன், பிளஸ் 2 படித்தவர். மருத்துவ படிப்பில் சேராமல், இன்ஜியரிங் முடித்தார். பின், சென்னை யில் உள்ள, ஐ.டி., எனப்படும் தகவல்
    தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். திடீரென இவருக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க ஆர்வம் வந்தது.

    ஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை

    நோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கல்வித்துறை தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊதியம் கணக்கிடும் போது, சிலருக்கு தவறுதலாக கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குளறுபடி தணிக்கையின் போது கண்டறியப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக வழங்கிய தொகையை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படுகிறது.

    மத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசனை

    மத்திய அரசை கண்டித்து ஜூலை 11 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள மத்திய அரசு ஊழியர்கள், அடுத்த நெருக்கடி கொடுப்பது குறித்து ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசிக்கின்றனர். ஊதிய உயர்வு உட்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 11 முதல் ரயில்வே, தபால், ராணுவம் உட்பட மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

    ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு

    ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர். 

    அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

    அரசு, தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்

    நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம். நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது... கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். குழு சமர்பித்த பரிந்துரைகள் :

    பழமையான பிளஸ் 2 ’சிலபஸ்’ புதிய பாடத்திட்டம் எப்போது வரும்?

    பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஒவ்வொரு பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கல்வியின் தேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். இப்படி உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகள் வரை அமலில் இருக்கும்.

    மத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசனை

    மத்திய அரசை கண்டித்து ஜூலை 11 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள மத்திய அரசு ஊழியர்கள், அடுத்த நெருக்கடி கொடுப்பது குறித்து ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசிக்கின்றனர். ஊதிய உயர்வு உட்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 11 முதல் ரயில்வே, தபால், ராணுவம் உட்பட மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    மதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் சேர்க்கை நடைபெறவில்லை

    கட்டாயக் கல்விச் சட்டப்படி மதுரையில் 8 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. கட்டாயக் கல்வி சட்டப்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை மாணவ, மாணவியர் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அந்த சட்டப்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

    பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்கள்: இன்று முதல் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தொடக்கம்

    மதுரையில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றுகள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டதையடுத்து அவற்றை வாங்க மாணவர்கள் குவிந்தனர். மேலும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தொடங்குகிறது.

    பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு

    பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பொது சேம நல நிதியை இடையிலேயே திரும்ப பெற அனுமதியளித்து. இதற்கு முன்பு சந்தாதார் வைப்பு திட்டக் கணக்கை இடைநிறுத்தம் செய்து கொண்டாலும் 5 ஆண்டு நிறைவுக்கு பிறகே வைப்பு நிதியை பெற முடியும்.

    Tuesday, June 21, 2016

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு: ஓ.பன்னீர்செல்வம்

    அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி, திமுக ஆட்சியில் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறினார்.

    புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

    தமிழக அரசு 1.7.2012 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் ஒவ்வொரு மாதமும் 150 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும்தான் சிகிச்சை பெற முடியும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 657 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

    56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் கவுன்சில் அதிரடி

    தமிழகத்தில், அனுமதியின்றி செயல்பட்ட, 56 நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போலி பள்ளிகள், கல்லுாரிகள் மீதான நடவடிக்கை தொடர்கிறது. 'பாரத் சேவக் சமாஜ்' அறிவிப்பு பற்றி கவலை இல்லை' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் தெரிவித்துள்ளது.

    'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விசாரணை

    கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மதுபானக் கடையில், மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கு மது விற்ற ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். மதுரையைச் சேர்ந்த, 15 வயதுக்கு உட்பட்ட, ஆறு மாணவர்கள் நேற்று, கொடைக்கானல் வந்தனர். பள்ளிக்கு செல்வதாகக் கூறி, வீட்டுக்குத் தெரியாமல் சீருடையுடன் வந்தனர். ஒரு மாணவன் வீட்டிலிருந்த ஏ.டி.எம்., கார்டையும் எடுத்து வந்திருந்தார்.

    தஞ்சையில் தனியார் பள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரியர்கள் விரட்டியடிப்பு; மாணவர்கள் கண்ணீர்

    தஞ்சையைச் சேர்ந்த தனியார் பள்ளி, மாணவ - மாணவியர் அதிகளவில் சேருவதற்காக, கவர்ச்சி விளம்பரம் செய்து ஏமாற்றியது. நாமக்கல்லில் இருந்து பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களை, பள்ளியில் இடங்கள் பூர்த்தியானதும், நேற்று அடித்து விரட்டியது. ஆசிரியர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய மாணவ, மாணவியரைகேவலமாக பேசி, பள்ளியை விட்டு விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. மாணவ - மாணவியர் அதிகளவில் வந்து சேர்வதற்காக, புது பாணியை கையாண்டது.

    பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முக்கியத் தேதிகள்

    ** தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் 22
    ** விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் 23
    ** விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 24

    மாணவர்களுக்கு 'டேட்டா கார்டு: பி.எஸ்.என்.எல்

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.

    வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 13 பட்டப் படிப்புகளில் 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை சுமார் 34 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தனர். இதையடுத்து விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியும், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியும் கடந்த சில நாள்களாக நடைபெற்ற நிலையில், தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

    'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது'

    அரசு பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுத்தாலோ, தனியார் பள்ளிகளில் பணிபுரிந்தாலோ, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, மாவட்டத்திற்கு, தலா, ஆறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு, விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை, மாவட்ட குழு மூலம் தேர்வு செய்து, ஆக., 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார். 

    மருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்

    தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. அழைப்பு கடிதம் அனுப்பப்படாததால், 'கட் - ஆப்' மதிப்பெண் அட்டவணைப்படி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், இரண்டு இ.எஸ்.ஐ., கல்லூரிகள் மற்றும் ஆறு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும்; 1,055 பி.டி.எஸ்., படிப்புக்கான இடங்களும் உள்ளன. இதற்கு, 25 ஆயிரத்து, 379 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியானது.

    பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது

    பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில், பலவித மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கடந்த 2015 ஆண்டு, பச்சை நிறத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு சிவப்பு நிற எழுத்துக்களுடன் இருந்தன. தேர்வுக்கான பதிவு எண், வரிசை எண் என, மாற்றப்பட்டு உள்ளது. புதிதாக நிரந்தர பதிவு எண் அச்சிடப்பட்டு உள்ளது.

    பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்

    பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அசல் சான்றிதழ் பெறும் மாணவர்கள், தங்களின் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வளவு?

    சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு மொத்தம் 68 எம்.பி.பி.எஸ். இடங்கள் திங்கள்கிழமை (ஜூன் 20) ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, 18,000 இடங்களை அரசிடம் ஒப்படைத்த பொறியியல் கல்லூரிகள்

    பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 18 ஆயிரம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதன்மூலம், நிகழாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலம் இந்தக் கூடுதல் இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு

    மெட்ரிக், தனியார் பள்ளிகள் சிலவற்றில் 9 மற்றும் 11ம் வகுப்புகளிலேயே 10, பிளஸ் 2 வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் இது சாத்தியமில்லை. இதனால் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அடிப்படையிலும் பின்தங்கி உள்ளன. எனவே, மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கடந்த காலங்களில் சிறப்பு வழிகாட்டி கையேடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்பட்டன. தேர்வுக்கு குறைந்த காலமே இருந்ததால் மாணவ, மாணவியர் இவற்றை முழுமையாக படிக்க முடியவில்லை.

    ஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தாய்வு தொடக்கம்: கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்

    புதுச்சேரி சென்டாக் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். சென்டாக் தரவரிசைப்பட்டியல் வெளியீட்டுக்கு பின் அவர் கூறியதாவது:

    பேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்தாகும்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

    பேருந்து படிகட்டில் ஃபுட்போர்டு அடித்துச் செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. பள்ளி மாணாக்கர் தொடர்ந்து பேருந்துகளில் ஃபுட்போர்டு அடித்துச் சென்றால் அவர்களது இலவச பேருந்து பயண சலுகை ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Monday, June 20, 2016

    தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு

    இலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் பள்ளிகள் வேறு வழியின்றி, இலவச சேர்க்கை மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன.

    ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசனை

    மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், 598 இடங்களில், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்' இயங்கி வருகின்றன.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் இந்த பள்ளிகள்தான், ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறுகின்றன.

    ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக்குனர் அட்வைஸ்!

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடமைக்கு அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டால் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என கல்வித்துறை இணை இயக்குனர் பேசினார். கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 30ம் இடமும், 10ம் வகுப்பில் 29ம் இடம் பெற்றது. மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குனர் (தொழில் கல்வி) பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை குறித்து, தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    '10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'

    பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

    கல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு

    கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், 2,000 சிறிய பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதியை உயர்த்திய நிலையில், பழைய கட்டணத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவின் படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது.

    மின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு

    மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு மின் வாரியத்தில், 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர் மற்றும், 25 இளநிலை தணிக்கையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. விண்ணப்பித்து இருந்த, 18 ஆயிரம் பேரில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான முழுச் செலவையும் ஏற்க மத்திய அரசு முடிவு

    போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பிற்படுத்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஆகும் முழுச் செலவையும் மத்திய அரசே இனி ஏற்க முடிவு செய்துள்ளது. முன்பு, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்காக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கு ரூ.20,000 உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது.

    புற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு

    புற்றுநோய், மலட்டுத் தன்மை போன்றவற்றை உருவாக்கும் அபாயகர நச்சுப்பொருள்களை வெளிப்படுத்தும் பாலிதீன் பைகளில், சுடச்சுட குழம்பு, தேநீர் போன்ற உணவுப் பொருள்களைக் கட்டுவதற்கு தடை விதித்து அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் "அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்' பிளாஸ்டிக் பொருள்கள் நிறைந்திருக்கின்றன.

    7th Pay Commission: Govt employees to get revised salary with 6 months arrears on Aug 1

    The central government employees may start receiving increased salary with 6 months of arrears from August 1.

    As per media report, increased salary of July will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensioners' accounts on August 1, 2016. However, there is no clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one go or it will be deposited in installments.

    உதவி பேராசிரியர் தேர்வு முடிவு; அண்ணா பல்கலை இழுத்தடிப்பு

    அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு, நான்கு மாதங்களாக வெளியிடப்படாததால் தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர்.இப்பல்கலை சார்பில் மெக்கானிக்கல், மின்னியல், மின்தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கட்டடவியல் துறைகளில் 25 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜன., 24ல் நடந்தது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்வு துவக்கம்

    தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், இரண்டு இ.எஸ்.ஐ., மற்றும் ஆறு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., படிப்புக்கான இடங்களும் உள்ளன. இதற்கு, 25 ஆயிரத்து, 379 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியானது.

    ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்

    ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.

    பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

    வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பள்ளி மாணவர்கள் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தொடக்கக் கல்வி - சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வேலை செய்ய வேண்டிய கட்டாயமில்லை என தகவல்

    புதிய கல்வி கொள்கை

    கல்வி முறையில் மாற்றம், தரம் வேண்டும் என்பதில் யாருக்கும் சந்ேதகமில்லை. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் புதிய கல்வி கொள்கை வகுப்பதற்காக மத்திய அரசின் கேபினட் செயலராக இருந்த டிஎஸ்ஆர் சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2015ல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டிய அறிக்கையை நீண்ட ஆய்வுக்கு பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து அதன் பின் தான் சட்டமியற்றப்படும் என்றாலும், புதிய கல்வி கொள்கையின் பல பரிந்துரைகள்  தற்போதே விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது.

    Friday, June 17, 2016

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    2016-17 - MBBS / BDS MERIT LIST CLICK HERE...
    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

    பிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்

    பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 19-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்டர், பளபளக்கும் தரைதளமும் உண்டு

    கிணத்துக்கடவு அருகே, சிறு கிராமமான சங்கராயபுரத்தில், 'ஏ.சி ஹாலில்' ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. அரசுப்பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என்றாலே, சுற்றுச்சுவர் இல்லாத பழைய கட்டடம், மரத்தை சுற்றும் மைதானம், வேலி அருகே, புதருக்குள் துருப்பிடித்த விளையாட்டு உபகரணங்கள் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும்.

    'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி! கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

    கல்லுாரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த ராகிங் தடுப்புக் குழு அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், புகாருக்குள்ளாகும் மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் எச்சரித்துள்ளது. 

    23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

    தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். 

    உயர்கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர்வா மாற்றம்

    உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்களை தொடர்ந்து, செயலர் அபூர்வா மாற்றப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வா, 2014 டிசம்பரில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், உயர் கல்வித் துறையில் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் செயலர் மீது, பேராசிரியர்களும், கல்லுாரி நிர்வாகங்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

    கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

    பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    குரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததால் மாணவர்களுக்கு சிக்கல்

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர். சார்பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், இளைநிலைவேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,241 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 எழுத்துதேர்வு கடந்தாண்டு ஜூலையில் நடந்தது.

    சி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவுகள் வெளியீடு

    சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் சேருவதற்காக, சென்னை, ஆவடியில் நடந்த எழுத்துத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. சி.ஆர்.பி.எப்., தொழில்நுட்பம் மற்றும், 'டிரேட்ஸ்மென்' பணியிடங்களில் சேர, ஆண், பெண் ஆகிய இரு பிரிவினருக்காக, கடந்த மே, 29ல் எழுத்துத்தேர்வு நடந்தது.

    பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'

    பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.33 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், ஒரு லட்சத்து, 751 பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில், 3,344 பேர் மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தனர்; 3,422 பேர் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் தேர்வு பதிவெண் பட்டியல், இன்று வெளியாகிறது.

    தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை நீட்டிப்பு

    காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:  

    மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

    மேல்நிலை பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:

    கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்

    ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு தாமதமாகும் நிலையில், பல இடங்களில் இடமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. ஆசிரியர்களின் இடமாறுதல், பணி உயர்வு உத்தரவுகள், முதன்மைக் கல்வி அலுவலகங்களின் வழியே, 'ஆன்லைனில்' வழங்கப்படும். முதலில், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது; இப்போது, அதிகாரிகள், அமைச்சர்கள், ஆசிரியர் சங்கங்களின் சிபாரிசு அடிப்படையிலான இடமாறுதலாக மாறிவிட்டது.

    Thursday, June 16, 2016

    தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

    1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை

    2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை


    3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

    பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்திரம் செய்யக் கோரி முதல்வருக்கு கருணை மனு

    7th Pay Commission – NJCA Writes to PM on 7th CPC issues – “Strike Cannot be Avoided if Demands are not met”

    7th Pay Commission – NJCA Writes to PM on 7th Pay Commission related issues and regarding NPS – He reports that the central government employees are very much disappointed with the recommendations of the 7th pay commission.

    7th pay commission Here is the excerpt of the letter which Com. Shiva Gopal Mishra, Secretary/Staff side wrote to the Prime Minister on the 14th of June 2016 regarding 7th Pay Commission recommendations. ‘With Great regret I bring to your notice that the central government employees demands have no ears to hear, hence we are forced to go on an indefinite strike from 11th July 2016.

    சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை தமிழ் வழியில் படிக்க வாய்ப்பு!

    பள்ளிகளில் நேரடியாக படிக்க முடியாதவர்களுக்கான, தேசிய திறந்தவெளி பள்ளி கல்வி நிறுவனமான, என்.ஐ.ஓ.எஸ்., இந்த கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பில், தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி கல்வியை தொடர முடியாதவர்கள், என்.ஐ.ஓ.எஸ்., மூலம், பள்ளி கல்வியை தொடரலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில், பள்ளி கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரியம் வழங்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களுக்கு இணையான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

    இங்கிலீஷ் மீடியத்தில் சேர ’சம்திங்’; ஆசிரியர்களுக்கு ’மெமோ’

    அரசு பள்ளியில், ஆங்கில வழிக்கல்விக்கு பணம் வசூலித்த மூன்று தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர், மெமோ அனுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதியான நபர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்புதல் சார்பு

    சத்துணவு மையங்களில் வழங்க 950 டன் பயறு வகைகள் கொள்முதல்

    சத்துணவு மையங்களில் வழங்க, 950 டன் பயறு வகைகள் வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு, வேக வைத்த கருப்பு கொண்டை கடலை, பச்சை பயறு வகைகள், ஒருவருக்கு தலா, 20 கிராம் வழங்கப்படுகிறது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.

    வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை!

    தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'

    பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.

    191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை

    அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

    வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!

    சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்' பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வேலுாரில், ஆபீசர்ஸ் லேன் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, 1972ல் தொடங்கப்பட்டது. இந்த பள்ளிக்கு, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. பள்ளி உள்ள இடம், வேறு ஒருவருக்கு சொந்தமானது என, பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிய வந்தது.

    பி.எட்., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்

    தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 2015 முதல், பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில், பி.எட்., முதலாம் ஆண்டு
    மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமானது. 

    கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை

    'தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது:

    பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட்'

    பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்

    பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

    நெல்லை மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான மின் கட்டணம் கடந்த 9 மாதங்களாக செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக நாங்குநேரி ஒன்றியத்தில் முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி, இட்டமொழி மின்பகிர்மானத்திற்கு உட்பட்டசில பள்ளிகளில் மின் கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படவில்லை.

    AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு

    அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

    பள்ளி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை குறித்து பள்ளிகளுக்கு மீண்டும் நினைவூட்டுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    Wednesday, June 15, 2016

    உயர் கல்வியில் அதிகார போட்டி: செயலகம் சென்ற பைல்கள் மாயம்?

    தமிழக உயர்கல்வித்துறை மற்றும் பல்கலை, கல்லுாரிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள் எல்லாம், உயர் கல்வித்துறை மூலம் நிர்வாகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசின் உயர் கல்வி திட்டங்கள், உயர் கல்வி மன்றத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

    50 சதவீதம் அதிகாரிகள் பணியிடம் காலி 'காற்றாடுது' கல்வித்துறை

    தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன.

    தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன?

    தமிழகத்தில், மீண்டும் வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. அதிகபட்சமாக, மதுரையில், 40 டிகிரி, 'செல்சியஸ்' பதிவாகி உள்ளது. சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் நகரங்களில், 38 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. 'ஜூன் முழுவதும் இந்த வெப்ப அளவே நீடிக்கும்' என, வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

    Tuesday, June 14, 2016

    அரசுக்காக உழைத்தவர்கள் அலைந்து புலம்பும் அவலம்; புதிய பென்ஷன் திட்டத்தில் பணபலன் கிடைக்குமா?


    SSTA வின் 09/06/2016 சந்திப்பின் வெற்றிகள்!!

    SSTA வின் மாநில நிர்வாகிகள் நேற்று(09/06/2016) மரியாதை நிமிர்த்தமாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து புதிதாக பொறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அடுத்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து புதிய கல்வியாண்டிற்கான வாழ்த்துக்களை கூறியதோடு SSTA வின்  பல்வேறு கோரிக்கைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டது.

    வேலைவாய்ப்பு முகாம் நடத்தி சுருட்டல்!

    சிவகங்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பட்டதாரிகளிடம் பல லட்சம் ரூபாய் சுருட்டிய தனியார் சாப்ட்வேர் நிறுவனம் குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்

    அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்!

    தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. 

    TANGEDCO HALL TICKET RELEASE (DATE OF EXAM : 19.06.2016)

    Sl. No.  NAME OF THE POST DATE OF EXAM HALL TICKET
    1  Typist 19.06.2016 FN  CLICK HERE TO DOWNLOAD
    2  Junior Auditor 19.06.2016 AN   CLICK HERE TO DOWNLOAD
    3  Assistant Draughtsman 19.06.2016 AN   CLICK HERE TO DOWNLOAD
    4  Junior Assistant /Accounts 27.08.2016 FN will be updated

    4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.

    இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.

    சிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

    'பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு, ஜூன், 20, 21ம் தேதிகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்பிற்கு, 80 சதவீதம் வருகை புரிந்து, செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள், தனித்தேர்வராக செய்முறைத் தேர்வில் பங்கேற்கலாம்.

    சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் எப்போது?

    தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 20 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. 

    மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Monday, June 13, 2016

    மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை!

    தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன.

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர தமிழில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா?

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை, தமிழில் நடத்தக்கோரிய மனுவை, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனு:

    தமிழகத்தில் 1,800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்படுகிறது

    தமிழகத்தில் 650 பேர்:ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், தேசிய அளவில், மொத்தம், ஏழு மண்டலங்கள் மூலம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தில் தேர்வு எழுதிய, 650 பேர் மற்றும் புதுச்சேரியில், 38 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.

    இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி; அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

    பள்ளி மாணவர்களுக்கான அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற, தனியாக மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கத் தலைவர் சிவா.தமிழ்மணி, அமைப்பு செயலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் கிருபாகரன், தலைமையிடச் செயலர் இஸ்மாயில் உள்ளிட்டோர், பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை சந்தித்து மனு அளித்தனர்.

    வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?

    சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக் கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடு கட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக வேண்டும் என்று பார்ப்போம்.

    தினமும் அரைமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி

    பணி நிரந்தரம் கோரி கடிதம் அனுப்பும் போராட்டம்

    பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, 1.65 லட்சம் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்த, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி அறிவியல் என, பல பாடங்களுக்கு, 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, கடந்த ஆட்சியில் பல கட்ட போராட்டம் நடத்தினர்.

    பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை கிடுக்கிப்பிடி: மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை

    தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர தமிழில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா?

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை, தமிழில் நடத்தக்கோரிய மனுவை, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் 36 ஆயிரம் பேர் தேர்ச்சி

    தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், மொத்தம் உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், 36 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

    பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை

    நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக ஆய்வுக் குழு அமைத்து பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. 

    தகுதிகாண் பருவத்தில் பணிபுரியும் ஆசிரியகளுக்கு தற்செயல் விடுப்பு, மத விடுப்பு & வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு அனுமதி உண்டு

    Sunday, June 12, 2016

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

    சி.பி.எஸ்.இ., துவக்குவதில் சிக்கல் நீக்கக் கோரிக்கை

    கல்வித் துறையில், தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழக மாணவ, மாணவியர், மெதுவாக, மாநில அரசு பாட முறைகளை கைவிட்டு, மத்திய அரசு பாட முறைகளைப் படிக்கத் தயாராகி வருகின்றனர். இதை உணர்ந்து விட்ட, தனியார் பள்ளிகள்,
    இந்தாண்டு முதலே, தங்கள் பாட முறையை, மத்திய அரசு கல்வி முறையான, சி.பி.எஸ்.இ.,க்கு மாறத் தயாராகி விட்டன. ஆனால் இதற்கு, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை நீக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன.

    பி.எட்., தேர்வு மாற்றப்பட்டது ஏன்?

    ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு இந்தஆண்டு முதல் ஓர் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. முதலாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, பல்கலை வெளியிட்டது. அதில், ஜூன், 18ம் தேதி துவங்கும் தேர்வுகள், ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்த போவதாக அறிவித்துள்ளது.

    ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்

    மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்

    அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்த வேண்டும்என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி அறிவுறுத்தினார்.

    Saturday, June 11, 2016

    விரைவில் வருகிறது 7வது சம்பள கமிஷன்?

    மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்கா தலைமையிலான செயலாளர்கள் குழு கூட்டம் இன்று கூட உள்ளது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையாக கொண்டு பெறப்பட்ட பரிந்துரைகளைக் கொண்டு 7வது சம்பள கமிஷனுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:ஆக., மாத இறுதியில் வெளியீடு

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை, ஆக., மாத இறுதியில் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.

    உண்மைத் தன்மை அறிக்கை ஆசிரியர் ஊதிய உயர்வில் சிக்கல்

    ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது. அரசு பள்ளிகளில், 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலையும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு சிறப்புநிலை அந்தஸ்தும் வழங்கப்படும். இந்த அந்தஸ்து பெறும் ஆசிரியர்களுக்கு, இரட்டை ஊதிய உயர்வு கிடைக்கும்.

    கலை, அறிவியல் கல்லூரிகளில் 'பிரிட்ஜ் கோர்ஸ்' கட்டாயம்

    தமிழகத்தில், வரும் 16ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற அணுகுமுறை பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 83 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலாமாண்டு சேர்க்கை நடந்து வருகிறது.

    கிராமப்புற பள்ளி கழிப்பறைகளுக்கு விடிவு:பராமரிக்க நிதி ஒதுக்கீடு

    கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை தினமும் இருவேளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அவதி நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சர்வ சிக் ஷா அபியான், ஆர்.எம்.எஸ்.ஏ ., நபார்டு மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் கழிப்பறைகள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

    நோட்டு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

    தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

    4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு

    பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில், பல கல்லுாரிகளில், இரண்டு வித பட்டப் படிப்புகள் ஒரே முறையில் கற்றுத் தரப்படுகின்றன. உதாரணமாக, சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., படிப்புடன் எல்.எல்.பி.,யும் சேர்த்து, ஐந்து ஆண்டு படிப்பாக நடத்தப்படுகிறது. இதே படிப்பை தனித்தனியாக படித்தால், ஆறு ஆண்டுகளாகும். ஆனால், இரண்டையும் இணைத்து படிக்கும் போது, ஒரு ஆண்டு குறையும்.

    கல்வித்தரத்தை அறிவதில் குழப்பம்:அடைவுத் தேர்வு முறையில் மாற்றம்

    மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது. அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் 3, 5, 8 ம் வகுப்புகளில் தலா 15 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் 3, 5 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களிலும், 8 ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட்டன.

    இன்ஜி., கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட தயக்கம்!

    தமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது. தனியார் கல்லுாரிகளின் நெருக்கடி மற்றும் தமிழக உயர் கல்வித்துறை வற்புறுத்தலால், இந்த விஷயத்தில் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    Friday, June 10, 2016

    தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதரப்பலங்கள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு 13.06.2016 முதல் 21.06.2016க்குள் முடிக்க இயக்குனர் உத்தரவு

    10ம் வகுப்பு துணைத்தேர்வு; ’தட்கல்’ விண்ணப்பம்

    பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2016 பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருயது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    துணைவேந்தர் நியமனம்; அமைச்சரிடம் முறையீடு

    தமிழக உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், மதுரை காமராஜர், சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு துணை வேந்தர்கள் இல்லை.

    பொதுத்தேர்வு தேர்ச்சி குறைவு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

    மதுரை மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    7th Pay Commission – CG Employees Serve Indefinite Strike Notice to Cabinet Secretary

    As per the decision taken by the NJCA (National Joint Council of Action of Central Government Employees Organisations), Confederation of Central Government employees and workers and all its constituent Associations/Federations in the Postal, Income Tax, Audit, Accounts, Ground Water Board, Printing and Stationery, Survey Departments, Atomic Energy, Central Secretariat, Central Excise and Customs etc. served the strike notice on their respective head of Departments yesterday the 9th June, 2016 protesting against the recommendations of the 7th pay commission.

    அரசாணை வெளியிட்டும் பலனில்லை-புது பென்ஷன் பலன்களை பெறமுடியாமல் ஓய்வூதியர்கள் பரிதவிப்பு - திரு.பிரடெரிக் ஏங்கல்ஸ்

    அரசாணை வெளியிட்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு புது பென்சன் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2003 ஏப்ரல் முதல் தேதி யில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி இத்தேதியில் இருந்து பணிக்கு சேர்ந்த வர்களுக்கு பழைய பென் ஷன் திட் டம் பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். இத் திட் டத் தி னால் ஓய்வூதியம் பாதிக் கப் பட் ட தோடு பணிக் கொடை, வருங் கால வைப் பு நி திக் க டன், கமிட்டேசன் உள் ளிட்ட ஏரா ள மான சலுகைகள் பறி போனது.

    பாட புத்தகம் இல்லை; பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு

    தமிழகத்தில், ஜூன், 1ம் தேதி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்றே, மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை; தனியார் பள்ளிகளுக்கும் கிடைக்கவில்லை. 

    ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ மத்திய அரசு அதிரடி உத்தரவு

    ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நாளை 'டான்செட்'நுழைவு தேர்வு

    அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20 இடங்களில் நடக்கிறது.

    ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்

    ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு, இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி சார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 2015 நவ., 19ம் தேதி, ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.

    பள்ளி மாணவர்களுக்கு 31 லட்சம் 'பஸ் பாஸ்'

    இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக, 31.11 லட்சம், 'பஸ் பாஸ்' தயாரிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு பஸ் பாஸ் தயாரிக்கும் பணி இன்னும் துவங்காததால், பழைய பஸ் பாசை மாணவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தங்கள் எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து கழகங்களுக்கு நேரடியாகச் சென்று, விண்ணப்பங்களை பெற்று, அதில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தரும் பணியை, பள்ளி நிர்வாகங்கள் துவக்கி உள்ளன.

    முதுநிலை தேர்வில் அரசு டாக்டர்கள் தோல்வி

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை யின் கீழ், எம்.எஸ்., - எம்.டி., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிய டாக்டர்களில், 111 பேர் தோல்வி அடைந்துள்ளனர். சென்னையில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, மீட்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டதே, தேர்வில் தோல்வி அடைந்ததற்கு காரணம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்தரநாத் கூறியதாவது:

    ஜூன் 12ல் பல்கலை தேர்வு

    மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டது.

    10ம் வகுப்பு அசல் சான்றிதழ்பிழை திருத்த இறுதி கெடு

    பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, சான்றிதழில் பிழை திருத்த, கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.ஏப்ரலில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழின் படி, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் ஏதாவது எழுத்து பிழை, எண் பிழை இருந்தால், அதை சரி செய்ய, இறுதி கட்ட வாய்ப்பு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மொபைல் போன் எடுத்துவர அரசு பள்ளிகளில் தடை

    'மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களிடம் மொபைல் போனை கொடுத்து விடக்கூடாது,'' என பெற்றோருக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மறு மதிப்பீடுக்கு கூடுதல் அவகாசம்

    பிளஸ் 2 மறு மதிப்பீட்டுக்கான, 'ஆன்லைன்' பதிவை, இன்று ஒரு நாள் மட்டும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நீட்டித்துள்ளது.'சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்வுக்கான மறு மதிப்பீட்டுக்கு, ஆன்லைன் மூலம், ஜூன் 9 வரை பதிவு செய்யலாம்' என அறிவிக்கப்பட்டிருந்தது.

    10 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம்!

    தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது. அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த வாகனங்களின் உரிமங்களும், போக்குவரத்து துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர். அத்துடன், பல லட்சம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?

    தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

    Thursday, June 9, 2016

    ஆங்கில வழி கல்வி மோகம் மாறும் : பள்ளி தாளாளர் பேச்சு

    தமிழ்வழி கல்வி பள்ளியில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழி கல்வி மோகம் மாறும்

    பள்ளி தாளாளர் பேச்சு

    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமை பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி   அகோமு (AGM) அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  மனோகரன் தமிழ்வழி கல்வி பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும். ஆங்கில வழி கல்வி மோகம் மாறும் என்று பேசினார்.

    பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.

    பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு. 

    அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் 39019க்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை:

    1). அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு நிகராக).

    சிபாரிசு இருந்தால் ’சீட்’ விதி மீறும் கல்லூரிகள்

    தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளும் உள்ளன.

    மாறாத பாடத்திட்டம்; நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்!

    மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 2011ல், மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தது. 

    இ.எஸ்.ஐ., கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி

    இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், நடப்பு ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.

    ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங் எப்போது?

    ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும், பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

    தொடக்கக் கல்வி - உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School Visits) அறிவுரைகள் வழங்குதல் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

    அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.

    அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு. அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. 7வது ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுகுறித்து பரிந்துரைக்க முடிவுசெய்துள்ளது. 

    த.அ.உ.சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 50% நேரடி நியமனமும், 50% பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது என தகவல்