எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம் பலமணி நேரம் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளியில் கவனம் செலுத்தி கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில் குறைபாடு உண்டாகிறது.
கண்பார்வை குறைபாட்டின் ஆரம்ப காலக்கட்டத்திலேயே இவற்றை நீங்கள் பின்பற்றினால் இயற்கையான முறையில் கண்பார்வையை மேம்படுத்த முடியும்.
* தொடர்ந்து 2 -3 மணிநேரம் கண்களுக்கு அழுத்தம் தரும் வகையிலான வேலைகள் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* சாலையில் நடக்கும் போது, மொபைலை நோண்டாமல், சற்று தொலைவில் பார்த்து நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
* கேரட் ஜூஸுடன் ஓரிரு துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து குடியுங்கள்.
* அடிக்கடி கண்களை இதமான நீர் ஊற்றி கழுவ வேண்டும்.
* உறங்க செல்வதற்கு இரண்டு மணிநேரம் முன்பே கணினி பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும்.
* தினமும் 2 முறை கண்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இவற்றை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஆரம்பக் கட்டத்திலேயே உங்கள் கண்பார்வை குறைப்பாட்டை சரிசெய்ய முடியும். இது, உங்கள் கண்பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கக் கூடியவை.
No comments:
Post a Comment