Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Sunday, May 31, 2015

  PAY CONTINUATION ORDER FOR THE MONTH OF MAY 2015 FOR THE VARIOUS TEACHING & NON-TEACHING POST

  ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

  மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.

  'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

  ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

  பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு

  தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.  தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக  உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

  இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி

  தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

  தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் (DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

  100 சதவீத தேர்ச்சி பெறும் ஆசையில் மாணவர்களிடம் பணம் வாங்கி பிட் வினியோகம்

  ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு அருகே வியாச ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆசிரமத்திற்குள் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

  10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு

  பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

  பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

  நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம்.

  Saturday, May 30, 2015

  பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல

  அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு: தேர்வர், கண்காணிப்பாளர் மொபைல் ஃபோனுக்கு தடை!

  அறை கண்காணிப்பாளர்கள், மொபைல் ஃபோன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.

  இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்

  அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.

  2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்

  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.

  எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்

  தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த பலரும், புதிதாக இணைய வாய்ப்பு வருகிறது. தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

  மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

  மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால் : வேலூர் சிஇஓ அலுவலகம் முற்றுகை

  பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’ மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.

  அரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

  அரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து புதன்கிழமை நடத்திய அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச்சான்றுகள் வழங்கி மேலும் அவர் பேசியது:

  ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

  ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட்டார்கள் எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

  Recruitment to the post of Primary School Teacher-2015 - 17/06/2015 @ 5.00 P.M.
  TO DOWNLOAD NOTIFICATION CLICK HERE...
  TO DOWNLOAD PROSPECTUS CLICK HERE...
  TO DOWNLOAD APPLICATION CLICK HERE...

  Friday, May 29, 2015

  திட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்: இயக்குநர்


  பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.

  தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? விரக்தியில் ஆசிரியர்கள்

  ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?


  தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

  சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்


  சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

  குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா கூறியுள்ளார்.

  பிளஸ் 2 பிற பாடங்களின் விடைத்தாள் நகலையும் பதிவிறக்கம் செய்யலாம்


  இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

  கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டுஅரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்


  தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

  Thursday, May 28, 2015

  ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு


  27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

  Wednesday, May 27, 2015

  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி! பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்


  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை


  பள்ளிகளை ஜுன் 1-ம் தேதி திறக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க JACTTA கோரிக்கை விடுத்துள்ளது.

  தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

  நேற்று காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு

  விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை

  காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்குட்பட்ட இணைப்பு கல்லுாரிகளில், கடந்த ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு நடந்தது.

  எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி

  தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.

  சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு

  மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம், புதிய முறையில், இணையதளம் வழியே நடந்துள்ளது. 

  இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு

  கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு புதிய முடிவு எடுக்க வேண்டியசூழல்எழுந்துள்ளது.

  சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்

  சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

  பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?


  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

  இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்


  தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

  Tuesday, May 26, 2015

  திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல்

  திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது மேலும் சென்னையில் நேற்று மட்டும் 108.3 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

  உஷாரய்யா உஷாரு...

  அதிகாலையிலே எழுந்து, சமையல் வேலைகளை எல்லாம் பார்த்து, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, நாளிதழை பிரித்து அவள் படிக்கத் தொடங்கியபோது செல்போன் சினுங்கியது. 

  பார்த்தால் அறிமுகமற்ற எண். 9111 என்று தொடங்கி, 100–ல் முடிவடைந்திருந்தது. மொத்தம் 12 எண்கள். ‘யாராக இருக்கும்?’ என்ற கேள்வியோடு அவள் போனை ‘ஆன்’ செய்தாள். பிரபலமான செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் பேசியவன் அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘நீங்கள் எத்தனை வருடமாக இந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். இந்த பெண், ‘ஐந்து வருடங்களாக..’ என்றாள்.

  வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

  'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது' என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்:

  பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?


  பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்

  பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 525 இணைப்புப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். 

  அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

  அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

  சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்

  சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

  பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

  புதுக்கோட்டை காமராஜபுரம் 25–ம் வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் கீழ 2–ம் வீதியில் சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25).

  விருது - வீர தீர செயலுக்கான நடுவண் அரசின் மிக உயரிய விருதான "அசோக சக்ரா விருதுகள்" விண்ணப்பங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

  தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தனி ஊதியம் ரூ.750/- சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்து உத்தரவு

  பள்ளித் தலைமை ஆசிரியை மூளைச்சாவு: 6 உடலுறுப்புகள் தானம்

  மூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன.  சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

  "டிஸ்டோனியா' குறைபாடு காரணமாக நீண்ட நேரம் எழுத முடியாத நிலையிலும் சென்னை மாணவி சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார்.

  மாற்றுத்திறனுடைய மாணவர்களில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த மாணவி விதி மகேஷ்வரி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

  இவருக்கு "டிஸ்டோனியா' என்ற குறைபாடு காரணமாக இவரது விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவரால் நீண்ட நேரம் எழுத முடியாது. இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால் கடந்த ஆண்டு இவரால் தேர்வு எழுத முடியவில்லை. இந்த ஆண்டு கூடுதல் நேரத்துடன் அவர் தேர்வு எழுதினார்.

  சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

  சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

  ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்

  வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

  பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்


  நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

  அரசு பள்ளிகள் ,தனியார் பள்ளிகளை விட மேலானது...

  Monday, May 25, 2015

  பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

  தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்

  தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

  தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின்   மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015)   மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.

  பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம்; "ஸ்டாக்" இல்லாமல் பள்ளிகள் காத்திருப்பு

  வருகிறது "மெய்நிகர்" வகுப்பறை! வரிசை கட்டும் புதிய திட்டங்கள்

  கலக்கம்! அரசு பள்ளி தேர்ச்சி சரிந்ததால்.. விசாரணை நடத்த அதிரடி உத்தரவு

  ஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.

  கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

  ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை.  அனைவருக்கும் உரிய, உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம், மன வளம், கற்கும் திறன், தனியாள் வேற்றுமை, அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் உருவாக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டத்தை நாடு முழுமைக்கும் மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய அறிவுறுத்துவதும், எதிர்நோக்குவதும் தவறானவை. எல்லோருக்குமான இலவச, கட்டாய, சமச்சீர் பொதுக் கல்வி முறையில் தக்க திருத்தம் மேற்கொள்வது அவசியம்.

  ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு

  LAB ASSISTANT EXAM MAY 2015 - IMPORTANT INSTRUCTIONS TO THE CANDIDATE

  45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?

  தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

  அறிவியல், வணிகவியல் படிக்க ஆர்வம்; பிளஸ் 1 வகுப்பில் மாணவர் விரும்பும் பிரிவில் சேர்க்க வேண்டும்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

  தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால், வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம். வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிற பகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது. 

  பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு

  புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.

  ஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை

  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகபட்சமாக உச்சரிக்கும் வார்த்தைகள் தான், படி... படி... படி... மாணவர்களை சிந்திக்க விடாமல், சுதந்திரமாக நடக்கவிடாமல் எந்நேரமும் படிக்கச் சொன்னால் படிப்பு வராது. விரும்பி படித்தால் பாடம் மனதில் ஏறும். மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன்.

  அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

  அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது.

  மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

  தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

  கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

  சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்;

  தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு

  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்

  பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல், தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்

  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. 

  மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

  பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.

  பள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு


  'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்ளார்.

  Sunday, May 24, 2015

  நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு


  கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடை நிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவரின் விவffh xgjnnx;;[////lkkmvdrgnbyyyyyyyyyyyyyyyvgvnv mn gfyt9 nbm, xfup ரம் பதவி உயர்விற்காக அரசு உத்தரவுcjuty798drt88hbxx`27utw7mde


  மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு

  'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு

  பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

  அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை

  பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

  10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நாளை முதல் தொடக்கம்

  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 7ம் தேதி பிளஸ் 2, 22ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

  1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியையே பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

  1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது, பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே பள்ளி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

  எம்.பி.பி.எஸ்.: 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

  தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு சனிக்கிழமை வரை 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 9,763 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

  பொது சொத்து சேதப்படுத்தினால் 'பத்தாண்டு': விரைவில் வருகிறது புதுச்சட்டம்


  ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு


  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Saturday, May 23, 2015

  பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடவும், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனத் தேதியிலிருந்து காலமுறை ஊதிய வழங்கிட கோரிக்கை

  TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை

  ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு. அதன் பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இறுப்பினும் இவை தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவற்றில் நாம் எந்த கருத்தும் கூற இயலாது நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இருப்பினும் சில அடிப்படை ஆதரங்களுடன் கூடிய விவதம் மற்றும் பேச்சு சுகந்திரத்தின் அடிப்பையில் கருத்துக்களை வெளியிடலாம்.

  அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.

  ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

  மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.

  தொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தொடககக்கல்வி இயக்குனர் உத்தரவு.

  குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

  பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52; தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர், 331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.

  இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்

  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடக்கிறது. பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு இன்றும், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நாளையும் தேர்வு நடக்கிறது.

  ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

  மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.

  ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

  சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

  சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது. கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261 பள்ளிகளை சேர்ந்த 20,684 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழில் 304 பேரும், ஆங்கிலத்தில்584 பேரும், கணக்கில் 253 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக அறிவியலில் 168 பேரும் தோல்வியை தழுவினர். அதிக பட்சமாக ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில்தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 127 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

  பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

  தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும்

  புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டேன். நோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குநராக 2012ல் பதவி உயர்வு பெற்றேன்.

  அரசு பள்ளிகளில் கல்விச்சூழலை மேம்படுத்த வைகோ வலியுறுத்தல்!

  அரசு பள்ளிகளில் கல்விச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு

  மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது.

  Friday, May 22, 2015

  TNPSC - GROUP-IV MARKS RELEASED

  Posts included in GROUP-IV Services, 2013–14 & 2014–15
  (Date of Written Examination: 21.12.2014)
  MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

             Enter Your Register Number :                                      

  ஜெயலலிதாவுடன் பதவியேற்க உள்ள துறைவாரியான அமைச்சர்கள் பட்டியல்

  தமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள புதிய தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான  பெயர் பட்டியல்கள் கீழ்வருமாறு:

  * டாக்டர். கே. ரோசைய்யா, மேதகு ஆளுநர், தமிழ்நாடு

  * மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா

  முதல்வர் ஜெயலலிதா--பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை.

   * மாண்புமிகு நீதியரசர் திரு சஞ்சய் கிஷன் கவுல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்  தமிழக அமைச்சர்கள்

  1. திரு ஒ .பன்னீர்செல்வம்

  நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை)

  2. திரு ஆர்.வைத்திலிங்கம்

  வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை

  தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் ஜெயலலிதா

  தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை காலை 11 மணியளவில் பதவியேற்கிறார்.

  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், தமிழக அமைச்சர்களாக ஓ.பன்னீரசெல்வம், ஆர். வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், உள்ளிட்ட பலர் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தமிழக அமைச்சரவை புதிய பட்டியல்

  ஜெயலலிதா தலைமையில் நாளை புதிதாக பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, செல்லூர் ராஜூ, , கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன், மோகன், பி.பழனியப்பன், செந்தில் பாலாஜி, சின்னையா,

  காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி

  பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல் போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

  1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'

  பத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்' வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

  அரசு பள்ளிகளுக்கு 15ம் இடம் 11 சதவீத மாணவர்கள் 'பெயில்'

  கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை: கல்வியாளர்கள் கவலை

  'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது. கற்பித்தல் முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் கட்டாயம் மாற்றம் அவசியம்' என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

  ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்; ஜி.கே.வாசன்

  ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பள்ளிகளில் சுமார் 5.8 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் மட்டும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

  விடுப்பில் சென்றுவிட்ட அதிகாரிகள்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டாத தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்

  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தபோதிலும், அவர்களைப் பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் யாருமே வியாழக்கிழமை ஊரில் இல்லாதது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள்

  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். மாணவிகளைக் காட்டிலும் மாணவர்களே அதிக அளவில் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தமிழ் வழியில் படித்த "முதல்வன்"

  பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர். அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். கங்கைகொண்டசோழபுரம் கோயில் கட்டப்பட்ட நேரத்தில் இங்கு கோயில் பணிக்காக பரண் அமைக்கப்பட்டதால் இந்த கிராமம் பரணம் என்று பெயர்பெற்றது. 

  எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

  எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த பி.முத்தழகு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.

  தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான விளக்கம்

  Direct Recruitment of B.T Assistant 2012 - 13 - List of Urdu List of Candidates

  தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் என இயக்குனர் உத்தரவு

  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 2014ம் ஆண்டுடன் ஒரு ஒப்பீடு

  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு பல வகையிலும் மாணவர்களின் சாதனை கூடியுள்ளது. அதைப்பற்றிய ஒரு மதிப்பீடு
  * 2014ம் ஆண்டு தேர்வெழுதியோர் - 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர்.
  2015ம் ஆண்டு தேர்வெழுதியோர் - 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 பேர்.
  * 2014ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை - 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேர்

  Thursday, May 21, 2015

  SSLC RESULTS COMPARATIVE ANALYSIS WITH PREVIOUS YEAR


  தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா?

  இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  அரசு பள்ளிகளில் 19பேர் சாதனை

  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

  பாட வாரியாக 100/100 பெற்றவர்கள்

  10ம் வகுப்பு தேர்வில் தமிழில் 586 பேர் (95.37%) நூற்று நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியான மதிப்பீடு

  மாவட்டம் - தேர்வு எழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் - தேர்ச்சி விகிதம் -  பள்ளிகளின் எண்ணிக்கை

  1-ஈரோடு  - 30014 - 29425 - 98.04 - 342

  2-விருதுநகர் - 30534 - 29918 - 97.98 - 333

  3-திருச்சி - 39315 - 38379 - 97.62 - 407

  4-கண்ணி்யாகுமரி - 27979 - 27215 - 97.27 - 407

  5-பெரம்பலூர் - 9714 - 9447 - 97.25 - 133

  10ம் வகுப்பு தேர்வு: 92.9 சதவீத தேர்ச்சி

  10ம் வகுப்பு தேர்வு முடிகளை வௌியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது: இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  ஈரோடு மாவட்டம் முதலிடம்

  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 97.98 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம்

  10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

  வாழப்பாடி அரசு பள்ளி சாதனை

  சேலம் மாவட்டம் வாழப்பாடியை அரசு பள்ளி மாணவி ஜெயநந்தனா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா என்ற மாணவி 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

  முதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை

  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா, பெரம்பலூர், காரணை, அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா, பட்டுக்கோட்டை

  10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 41 மாணவர்கள் முதலிடம்

  சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று  காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர். 

  பத்தாம் வகுப்புத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பம்; தேதி மற்றும் கட்டண விவரம்

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

  2 வருட பி.எட்., பாடங்கள் விவரம்; 4 செமஸ்டர் முறை

  Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the Courses 
  Semester 1
  *Course 1 Childhood and Growing Up 100 marks
  *Course 2 Contemporary India and Education 100 marks
  *Course 4 Language across the Curriculum (1/2)50 marks
  *Course 5 Understanding Disciplines and Subjects-(1/2) 50 marks
  *Course EPC1 Reading and Reflecting on Texts (1/2)50 marks
  *Engagement with the Field: Tasks and Assignments for
  *Courses 1,2,4 & 5 2-Year B.Ed Curriculum

  இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?

  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 3 கல்வியாண்டுகளாக இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் திரும்ப பெறுமா?

  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (21-ம்தேதி) வெளியாக இருப்பதால், அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு; மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு

  பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

  'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு

  மத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனை வரும், 

  அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு

  'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும், மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  சிவில் சர்வீசஸ் தேர்வு மே 23ல் அறிவிப்பு

  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, கடந்த 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 23ம்

  தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை

  பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.

  7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி

  அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

  இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?

  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

  பத்தாம் வகுப்புத் தேர்வு; தற்காலிகச் சான்றிதழ் மே 29ஆம் தேதி பயின்ற பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்

  பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

  Wednesday, May 20, 2015

  காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இயக்குனருக்கு கோரிக்கை

  தனது உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென நினைக்கும் தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?

  தனது உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம், இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்ட விதிகளின் நோக்கங்களை கவனத்தில் கொள்ளாமல், ஆசிரியர்களின் Classroom responsibilities -களில் இருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
  இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 27-ன் அடிப்படை நோக்கமே நிறைவேற்றப்படாமல் சிதைக்கப்பட்டுள்ளது. பிரிவு 27-ல் "No teacher shall be deployed for any non-educational purposes other than the decennial population census, disaster relief duties or duties relating to elections to the local authority ........

  தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும்


  பெங்களூரு மாநகரில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள்

  பெங்களூரு மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதியில் வாகன போக்குவரத்து இயக்குவதில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் தினமும் வேகமாக வாகன இயக்கம் அதிகரித்து வருகிறது. மாநகரில் உள்ள பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனியார் வாகனம் பயன்படுத்துவது சாமானியமாகி விட்டது.

  ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

  ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 

  இக்னோ தொலைதூரக் கல்விக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்

  இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) தொலைதூரக் கல்வி அடிப்படையில் கல்வி கற்க விரும்புவோர் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பல்கலைக்கழகத்தின் கொங்கு பொறியியல் கல்லூரி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குப்புசாமி வெளியிட்ட அறிக்கை:

  ஜெயலலிதா வருகிற 23ம் தேதி காலை முதல்வராக பதவி ஏற்கிறார்!!

  முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 22ம் தேதி காலை முடிந்ததும், பிற்பகல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் விடுதலை ஆனார்கள். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பிற்கு பிறகு தமிழக முதல்வராக ஜெயலலிதா உடனடியாக பதவி ஏற்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

  பீகாரில் 40 ஆயிரம் போலி ஆசிரியர்கள்; விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  பீகாரில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அவர்களின் பட்டப்படிப்பு குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

  பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது! நீதிமன்ற உத்தரவு எதிரொலி

  நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில் இந்தப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

  ஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்

  ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்தது.

  சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்

  மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

  பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

  'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

  தொடக்கக் கல்வி - அரசு உதவிப்பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் நிர்ணயம் செய்து உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய உத்தரவு

  பிளஸ் 2 தேர்ச்சி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்'

  அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்' நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  10-ஆம் வகுப்புத் தேர்வு; தற்காலிகச் சான்றிதழ்

  பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

  10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு

  TO DOWNLOAD SSLC SUPPLEMENTARY EXAM CLICK HERE...

  பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

  இந்தத் தேர்வுக்கு மே 22 முதல் 27-ஆம் தேதி வரை பள்ளிகள் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125.பதிவுக் கட்டணம் ரூ.50.

  வரும் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியா?

  நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை உள்ளது.

  திருப்பூர் TNPTF ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்

  *காலை 10.30முதல் 11.30வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 11மணிக்கு சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

  *சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தனர்


  *பின்னர் ஆசிரியர்கள் ஓரிருவராக கலைந்து மா.தொ.அலுவலக வளாகத்திற்கு நடந்து சென்றனர்.

  ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?

  ‘ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...

  Tuesday, May 19, 2015

  பிளஸ் 2-க்கு பிறகு: வரவேற்பு குறையாத ஆசிரியர் படிப்புகள்


  வேலைவாய்ப்புச் சந்தையில் பல தலை முறைகளாக ஆசிரியர் பணிக்கான வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆத்மார்த்தமான வேலை, திருப்தியான ஊதியம், வரையறுத்த வேலை நேரம், பாதுகாப்பான பணிச் சூழல், போதுமான விடுமுறை என்று அரசுப் பணிகளில் ஆசிரியர் உத்தியோகத்துக்கு இன்னமும் மவுசு குறைந்தபாடில்லை.

  இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

  தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

  பள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


  ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து

  அனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில், டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  9 வயது சிறுவன் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று சாதனை!

  ஐதராபாத்தைச் சேர்ந்த, 9 வயது சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். தெலுங்கானா உயர்நிலை கல்வி வாரியத்தின், உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எஸ்.எஸ்.சி.,) தேர்வில், மிகக் குறைந்த வயதில் 7.5 தரத்தில் தேர்ச்சி பெற்ற இளம் சிறுவன் என்ற சாதனையை இவன் படைத்துள்ளான்.

  வகைப்பிரித்து கற்பிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிகளவில் தோல்வி!

  அரசு பள்ளிகளில் ஏற்கனவே, ஸ்லோ லேர்னர் என பிரித்து, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சிபெற தவறியது தெரியவந்துள்ளது.

  சிறப்பு வகுப்பு, ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாததால், கல்வித்துறை அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் கடந்தும் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி

  சித்தேரிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  திறமையான ஊழியர்கள் கிடைக்காமல் சர்வதேச நிறுவனங்கள் திணறல்: ஆய்வு

  இந்தியாவில் செயல்படும் பல சர்வதேச நிறுவனங்கள், திறமையான ஊழியர்கள் கிடைக்காததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Departmental Examinations, May 2015 Memorandum of Admission (Hall Ticket)

   

  Departmental Examinations, May 2015
  Memorandum of Admission (Hall Ticket)
  (Dates of Examinations: 24.05.2015 to 31.05.2015)

             Enter Your Application Number :DEM15                                 
                                                                                            Date                  Month             Year
                  Enter Your Date of Birth :             /                         /   
                                                                                                 
  NOTE :
  Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

  மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு

  அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய சிடி போன்ற மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

  ஆங்கிலம் கற்று தராததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா? மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கெஞ்சும் ஆசிரியர்கள்

  அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில ஆசிரியர்களே இல்லாத காரணத்தால், பெற்றோர் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வரவில்லை. ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று பெற்றோரைச் சந்தித்து மாணவர்களை சேர்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 

  1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மூடல்

  தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களுடன், ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும், 1,800, 'டுபாக்கூர்' நர்சிங் பயிற்சி பள்ளிகளை, தமிழக அரசு இழுத்து மூடுகிறது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.

  இலவச மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

  தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் பிச்சை கூறியுள்ளதாவது:

  ஜூன் 21ல் பள்ளி, கல்லூரிகளில்யோகா பயிற்சி நடத்த உத்தரவு

  அனைத்து கல்லுாரிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஜூன் 21ல், யோகா பயிற்சி காட்சி நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பிரதமர் மோடி ஐ.நா., சபை சென்றபோது, 'ஜூன் 21ம் தேதியை, யோகா தினமாக அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். இதையொட்டி, ஜூன் 21ம் தேதி யோகாதினமாக அறிவிக்கப்பட்டது.

  அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

  அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜாகுல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

  ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு

  தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.

  கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்

  கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

  கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு கூறி இருந்ததாவது:- என் மனைவி அல்போன்ஸ், நட்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால், அவரை பணியில் இருந்து விடுவித்து, பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன்.

  தேர்வு நடைமுறையில் குழப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு

  தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  பள்ளிகளுக்கு இலவச 'சிடி'

  'தமிழக அருங்காட்சியகங்கள் விவரம் அடங்கிய, 'சிடி,' அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்,'' என, தொல்லியல் துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, கோட்டை அருங்காட்சியகம் சார்பில், 'தமிழக அருங்காட்சியகங்கள்' என்ற தலைப்பில், 'சிடி' தயாரிக்கப்பட்டு உள்ளது.

  ஐ.சி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு

  மத்திய அரசின், இந்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,க்கான, 10ம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் - ஐ.எஸ்.சி., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 

  25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு

  அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். 

  மருத்துவதகவல் நலம் வாழ நூலகம் - ரத்த அழுத்தக் கட்டுப்பாடு பின்பற்ற 5 ஆலோசனைகள்

  1. ரத்தக்கொதிப்பை அதாவது உயர் ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இதயக் கோளாறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில பொதுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தொடர்பாக ‘இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும் ‘ நூல் தரும் ஆலோசனைகள்:

  வீட்டைக் காக்கும் காப்பீடு


  சொந்த வீடு என்பது எல்லோருக்குமே வாழ்வில் ஒsரு பெருங்கனவு. அந்தக் கனவை அடைய ஒவ்வொருவரும் படும் கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். கடனை வாங்கி, வீட்டில் உள்ள நகைகளை விற்று, கையைக் கட்டி வாயைக் கட்டிதான் சொந்த வீடு என்ற கனவைப் பலரும் அடைகிறார்கள்.

  மத்திய அரசு பணிக்கான தேர்வு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

  குரூப் - பி மற்றும் குரூப் - சி' பணிகளுக்காக, இந்தாண்டு நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான (சி.ஜி.எல்.இ.,) வயது வரம்பை, தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தேர்வு குறித்து, பணியாளர் தேர்வு ஆணையமான - எஸ்.எஸ்.சி., ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2015 ஆக., 1ம் தேதி அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. 

  Monday, May 18, 2015

  22ம் தேதி பதவிஏற்க உள்ள புதிய தமிழக அமைச்சர்கள்

  1. ஜெயபால் 
  2. வேலுமணி 
  3. தோப்பு வெங்கடாசலம் 
  4. வளர்மதி 
  5. கோகுலஇந்திரா

  குழந்தைப் பருவத்தை ஒடுக்கும் சட்டத் திருத்தம்; தமிழ் நேசன்


  சிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.

  புத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்

  கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.

  பாடப்புத்தகம் தாண்டி பயில்வோம்


  எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததை கண்டுபிடித்து அதை இங்குள்ள  நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே.

  பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு

  'கட் ஆப்' குறைந்தவர்களுக்கு கலை அறிவியல் 'பெஸ்ட்'

  இன்ஜினியரிங் கட் ஆப் கடந்த ஆண்டை விடவும், அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கும் நிலையில், குறைந்த, கட் ஆப் வைத்திருக்கும் மாணவர்கள், கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்வது நல்லது என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  அரசு மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள்: நடப்பாண்டில் அனுமதி கிடைக்குமா?

  அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக, 450 எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பெற, அரசு முயற்சித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது. தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ், 19 அரசு மருத்துவக் கல்லூரி களில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.

  எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கு அரசு உதவி மறுப்பு : 1 முதல் 9ம் வகுப்பு வரையே சேர்க்க முடியும்

  'தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டும், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

  முதுநிலை பொறியியல் படிப்புகள் மீது குறைந்து வரும் ஆர்வம்: டான்செட் தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு

  முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.இதில் 19 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

  சத்துணவுப் பணியாளர் காலியிடங்களை இந்த மாத இறுதிக்குள் நிரப்ப திட்டம்

  இந்த மாத இறுதிக்குள் சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சமூக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

  சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு; ஒத்திவைப்பு

  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 36 வகை மத்திய அரசு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் அறிவிக்கப்படும்.

  மாநகர பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

  பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

  மீன்வள படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  இந்த ஆண்டுக்கான (2015-16) இளங்கலை மீன்வள பட்டப் படிப்பு (பி.எஃப்.எஸ்சி) மற்றும் மீன்வள பொறியியல் (பிஇ) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப் பினை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டிருக் கிறது. அதன்படி, மீன்வள படிப்பு களுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தின் (www.tnfu.ac.in) மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். (தாள் வடிவிலான விண்ணப்பம் வழங