மத்தியப் பிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 14 ஆயிரம் காவலர் காலிப்பணியிடங்களுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மாநிலத்தில் காவலர்களுக்கான 14 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மத்தியப் பிரதேச தொழில்துறை தேர்வு ஆணையம் வெளியிட்டது.
அதில் குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சியாகும். தேர்வு நடத்தப்படவுள்ள நாள் ஜூலை 17-ஆம் தேதி ஆகும்.
இந்நிலையில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பின்னர் தேர்வாணைய அதிகாரிகள் அவற்றை ஆராய்ந்தனர்.
மொத்தம் 9.24 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 1.19 லட்சம் பேர் இளங்கலைப் பட்டதாரிகள், 14,562 முதுகலைப் பட்டதாரிகள், 9,629 பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற 12 பட்டதாரிகள் ஆவர்.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவர்களாவர்.
ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்களும், பொறியாளர்களும் அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment