Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Monday, June 29, 2015

  தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கை சீட்டு தரப்படாது


  01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மா நில பொறுப்பாளர்கள், ஜாக்டோ உயர்மட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

  படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?

  தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

  பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்

  அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.

  பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்

  கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சார்பான திருத்தம்


  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு, பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்பு சேர்த்து வட்டியுடன் திரும்ப அளிக்க அரசு உத்தரவு  அரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றிதழ்கள் தேவையில்லை; மத்திய அரசு தகவல்

  சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

  70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

  தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர் விவரங்கள், 'இ.எம்.ஐ.எஸ்.,' என்ற கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன. மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களில், ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

  சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

  தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள் உள்ளன.நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.

  நர்சு வேலைக்கு போட்டி தேர்வு

  தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,432 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான போட்டித்தேர்வு, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, மற்றும் திருச்சி நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில், அண்ணா பல்கலை, எத்திராஜ் கல்லுாரி உட்பட, 16 இடங்களில் நடைபெற்றது.

  Saturday, June 27, 2015

  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக் கலந்தாய்வு

  அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்திலும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள வழியாக ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 4 வரை நடைபெறவுள்ளது.

  பள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு

  யோகா பயிற்சிகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, யோகா பயிற்சியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  எம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கைக் கடிதம்

  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் விடிய விடிய வழங்கப்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது: எம்.பி.பி.எஸ். படிப்பில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை இல்லை என உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது. 

  100 சதவீத தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பு மாணவர்களை வெளியேற்றியது அம்பலம்: தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

  காஞ்சிபுரம், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்துக்குட்பட்ட அரசு உதவி பெறும் இரு தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி காட்டுவதற்காக 9-ம் வகுப்பில் குறைந்த மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களை வெளியேற்றியது தெரிய வந்துள்ளது.

  அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற்சி "ENRICHMENT TRAINING ON CCE IN SABL" என்ற தலைப்பில் 11.07.2015 அன்று நடைபெறவுள்ளது.

  பி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு: கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

  நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் தமிழக கல்வியியல் கல்லூரி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

  ‘இ-டிக்கெட்’ விரைவாக பெற நவீன சர்வர்கள்

  பயணிகளுக்கு இணையதளம் மூலம் எடுக்கும் ‘இ-டிக்கெட்’கள் விரைவாக கிடைப்பதற்கு வசதியாக ஐஆர்சிடிசி நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து ஐந்து சர்வர்களை வாங்கியுள்ளது.

  Friday, June 26, 2015

  பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

  பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  அகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு "ஆசிரியர் பயிற்றுநர்கள்" மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்களின் வழிக்காட்டுதல்கள்

  தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். இச்சந்திப்பில் மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம், துணைப் பொதுச் செயலாளர் திரு.மயில், STFI பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் மாத்யூ மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

  ஐபெட்டோ அகில இந்திய செயலாளராக திரு.வ.அண்ணாமலை அவர்களை இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  தமிழ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்களும் நிரம்பின

  தமிழ்நாட்டில் மொத்த 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் மொத்தம் உள்ள 2655 இடங்களில் 15 சதவீதம் (398 இடங்கள்) அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2257 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அரங்கில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி கவுன்சிலங்கை தொடங்கி வைத்தார்.

  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து; அடுத்த கல்வி ஆண்டு முதல் அமுலாகும்

  நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

  நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய்கிறார்கள்.

  அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

  குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

  பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., 2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

  அரசு மருத்துவக் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகளில் இரண்டு ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில் டிப்ளமோ முடித்தோர் நேரடியாக 2ம் ஆண்டில் சேரலாம்.இதற்கான விண்ணப்பத்தை www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று முதல் ஜூலை 5 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு

  மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான (2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன. இரண்டாண்டு படிப்பான இதற்கு தொடக்கக் கல்வியில் நேரடி பயிற்சிபெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் குளறுபடி

  அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு குளறுபடியை தொடர்ந்து, இன்ஜி., படிப்புக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதிலும், திடீர் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி நிறுவனங்களின் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

  GPF ACCOUNT SLIP FOR THE YEAR OF 2014-15

  அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

  உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டும் தவறிவிட்டன. கடந்த ஆண்டு 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இந்திய மருத்துவக் கழகம் அனுமதி மறுத்தது.

  அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்

  காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான, ஏப்.2015-ல், நடந்த அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவுகளுக் கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

  புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில் மாணவர் சேர்க்கை

  திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4 துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.

  ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்; சான்றிதழ் சரிபார்ப்பு

  ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், புதுச்சேரி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடந்தது. ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில், 1லட்சத்து 37 ஆயிரத்து 738 பேர் ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தனர்.அதற்கான நுழைவு தேர்வு,கடந்த 7ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.

  Thursday, June 25, 2015

  தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு : பணிநிரவல் கலந்தாய்வு குறித்து செய்தி

  அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை- 6 மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களின் செயல் முறைகள் PRO.RC.NO 175/PTI/A15/2015  தேதி 6/15  மேற்கண்ட செயல்முறையில் கூறியுள்ள தகவல்கள். அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரவல் என்பது 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை

  பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

  உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

  மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

  ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்

  தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக அந்த அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:  பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கில், தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் தவிர்த்துவிட்டு, பிளஸ் 2 பாடங்களை மட்டும் நடத்துவதால் பொறியியல் முதலாண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

  25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தம்

  மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவசமாக சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

  உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி

  தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10 முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்

  மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு

  பொது இ - சேவை மையங்களில், அடுத்த மாதம் முதல், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, நான்கு சேவைகளை சேர்க்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

  Wednesday, June 24, 2015

  புதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : அமைச்சரவை ஒப்புதல்

  மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் புதிதாக 6 ஐ.ஐ.எம்.கள் துவக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சம்பல்பூர் (ஒடிசா), அமிர்தசரஸ் (பஞ்சாப்), விசாகபட்டினம் (ஆந்திரா), நாக்பூர்

  அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி கட்டாயம்

  அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  ஆன்-லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை; சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்

  பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன்-லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது.

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது

  காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பரத்குமார், எம்.பாலாஜி, எம்.அபுதாகீர், அருண்குமார், 8-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ் ஆகியோர் தங்களது கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கணினிப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

  அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

  'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் சார்பில், அனைத்து அமைச்சக அலுவலகங்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன.

  அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்

  சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப, ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.

  இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே

  பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்.,படிக்க வேண்டும். யு.ஜி.சி., மற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பி.எட்., எம்.எட்., படிப்புக்காலம் இனி இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது.

  அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு

  6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

  அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

  கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு

  கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்க 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம்

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது.

  மத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று தேவையில்லை; மத்திய அரசின் உத்தரவு நகல்

  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்'?

  இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூலை, 1ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

  அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு

  தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.முதல் முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும் தகுதித் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  பருவநிலை மாறுதல் நம் வாழ்வின் முக்கிய அங்கம்


  நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் காற்றில் கரிப்புகை அதிகமாகி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதனால் புவி வெப்பம் அதிகரிக்கிறது; அவற்றின் விளைவாகப் பருவமழைப் பொழிவு குறைவது உட்படப் பல இயற்கை மாறுதல்கள் ஏற்படுகின்றன.

  மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

  இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.  பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும்.

  சத்துணவு மையங்களில் 42 ஆயிரம் பணியாளர் தேவை

  தமிழகத்தில், பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், காலியாக உள்ள, 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Tuesday, June 23, 2015

  விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு?


  அரசு பள்ளி ஆங்கில வகுப்பு மாணவர் சேர்க்கை சரிவு

  உடுமலையில், ஆங்கில வழி கல்வி துவங்கும் அரசு பள்ளி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 120 துவக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, 2013ல், ஒன்றியத்தில் உள்ள, 11 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டியதால், கடந்தாண்டு கூடுதலாக ஏழு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டன.

  அரசு பள்ளிகளிலும் யோகா கற்று கொடுக்கப்படும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேச்சு

  விரைவில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கும், ஈஷா மையம் சார்பில், யோகா கற்றுத் தரப்படும், என, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னையில், நேற்று, 25 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்து பேசியதாவது:

  மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்; கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி

  மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது, என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.

  அண்ணா பல்கலை படிப்புக்கு சிக்கல்; யு.ஜி.சி., அனுமதி கிடைக்காததால் குழப்பம்

  பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் கிடைக்காததால், அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வியில், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில், மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்; பழைய மாணவர்களுக்கு தடையில்லை; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

  இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  தவறான மதிப்பெண் பட்டியல் வழங்கல்; விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு கடிதம்

  தவறான மதிப்பெண் பட்டியல் கொடுத்த, தலைமைஆசிரியைக்கு, உதவி தொடக்க கல்வித்துறை அலுவலர் விளக்கம் கேட்டுகடிதம் அனுப்பியுள்ளார். மேற்கு ஆரணி யூனியனில், 77 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. புதுப்பாளையம், குன்னத்தூர்,அய்யம்பாளையம், ஒண்ணுபுரம் உட்பட, 36 பள்ளிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன்கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது

  காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

  பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? : சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

  பதவி உயர்வு குளறுபடியை நீக்க அரசு அமைத்த குழு, நான்கு ஆண்டுகளாகியும் செயல்படாமல் முடங்கி உள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு, சமூக நலத்துறையில், எழுத்தர், அலுவலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.

  தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் மாவட்ட கல்வி அதிகாரி பதவி உயர்வு

  பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

  ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

  பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளன.

  Monday, June 22, 2015

  தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

  2 வருடங்களாக உதவித் தொகை இல்லை; கிடப்பில் தேசிய திறனாய்வு தேர்வு ரிசல்ட்: மாணவ, மாணவிகள் அவதி

  தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு இரா. தாஸ் அவர்கள் கடலூர் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் சந்திப்பு

  Displaying cud.jpgகடலூர் மாவட்டத்தில் CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கடலூரில் CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு இதுவரை வழங்கப்படவில்லை, எனவே சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு ஆசிரியர்கள் எடுக்க உட்னே உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுமதிவழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு TPF ஆடிட் செய்து அலுவலகம் மூலம் அவர்கள் பணிபுரியும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

  குறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் முறையிட மாணவர்கள் முடிவு

  தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளிகள் ஒதுக்கி வருவதால் அவர்கள் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். வசதியுள்ள மாணவர்கள் எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர்.

  எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்

  பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

  பார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில் புதிய சலுகைகள்

  'பார்வைக்குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், சிவில் சர்வீஸ் முதல் நிலை மற்றும் பிரதான தேர்வெழுத, துணைக்கு ஆள்வைத்துக் கொள்ளலாம்' என, யு.பி.எஸ்.சி., கூறியுள்ளது. 

  தமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர் பணியிடம் காலி

  தமிழகத்தில் 13 அரசு கலைக் கல்லுாரிகளில் 61 புவியியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசு கலைக் கல்லுாரிகளில் புவியியல் பாடப்பிரிவு உள்ளது. இப்பிரிவில் 61 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

  தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு

  யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற உயர்மட்ட பட்டங்களை பெறும் வகையில் படிப்புகளை வழங்குவது குறித்து, யு.ஜி.சி., தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். 

  நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் சங்கர் அறிவித்துள்ளார்.

  வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை: வருமானவரி இலாகா எச்சரிக்கை

  அண்மையில் டெல்லியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தேசிய மாநாடு நடந்தது. இதில் வருமான வரி இலாகாவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் தலைமை தாங்கினார்.

  அண்ணா பல்கலை இன்ஜி. கலந்தாய்வு விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு சான்றிதழ் சரிபார்க்க 'அட்வைஸ்'

  அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை, சரிபார்த்துக் கொள்ள அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

  அரசு எம்.பி.பி.எஸ்.: 3 நாள்களில் 1,119 மாணவர்கள் தேர்வு

  தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை மொத்தம் 1,119 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,396 எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வருகிற 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. 

  சி.பி.எஸ்.சி பள்ளிகளை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகாரம்


  தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

  பி.எட் படிப்புக்கு 742 கல்லூரிகளுக்கு அனுமதி


  தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது

  இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Sunday, June 21, 2015

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித் துறை சலுகை

  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசியம்

  பருவகால மாற்றத்தின்போது குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது "இன்ஃப்ளூயன்சா' வைரஸ் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஃப்ளூ வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் பாலச்சந்திரன் பேசியது:

  இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது; தமிழக அரசு முடிவு

  ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

  பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அளித்துள்ளகோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

  கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

  அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு

  கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்கக நண்பர்கள் சார்பில், புதிய சங்கம் தொடக்க விழா, நிர்வாகிகள் தேர்வு மற்றும் பணி ஓய்வுப் பெற்றவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

  ஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்', இயக்குனர் தேவராஜன்

  பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். கோவையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: 

  Friday, June 19, 2015

  புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர் தாக்குதல்கள்

  தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 31.05.2009 வரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

  தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு .தாஸ் தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு
  மாநில பொது குழு தீர்மானங்கள் வழங்கப்பட்டது  தீர்மானங்கள்: 
  1 .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு இடை நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்.
  2 .பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் கை விட வேண்டும்.

  SSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரியர் பொது கலந்தாய்வு ஜூலை மாதம் ,CRC Spl Leave வழங்க மறுக்கப்படும் ஒன்றியங்கள், 3500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு!!!

  16.06.2015 SSTA -வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்,தொடக்கக் கல்வி இயக்குநர்,அரசு முதன்மை செயலாளர் நிதிதுறை,அரசு முதன்மை  செயலர் (செலவீனம் )ஆகியோர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது.

  SSTA சார்பாக நேற்று (16.06.2015) அன்று பள்ளிகல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனு!

   

  சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

  சென்னையில் நாளை தொடங்க உள்ள மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

  சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

  சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஓராண்டுக்குள் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை தகவல்

  அனைத்து தனியார் பள்ளிகளுக்கான, ஒருங்கிணைந்த சட்டத்தை கொண்டு வர, ஓராண்டு காலம் அவகாசம் தேவை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்தது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:விசாரணை' மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது' என, அறிவிக்க வேண்டும். சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழகங்களால், 1976 ஜூன் 1ம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.

  பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

  பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

  பிளஸ் 1 வகுப்புக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்'

  பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும், 30ம் தேதி வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில், பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.

  பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 2015-16 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.

  தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவு

  விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.

  2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

  சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை

  சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

  குரூப் - 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2 தேர்வு எழுத 6.2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு:ஜூலை 26ல் குரூப் - 2 நேர்முகத் தேர்வுக்குட்பட்ட பதவிக்கான 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 

  Thursday, June 18, 2015

  முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை: தமிழக அரசுக்கு உத்தரவு.

  தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் 2 மாதங்களில் நிரப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்

  உத்தரவிட்டுள்ளது.

  "நெட்" தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

  ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும்

  அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் செய்ய வேண்டும் என்று  அன்புமணி வலியுறுத்தினார்.இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

  மெட்ரிக்., பள்ளிகளுக்கு புதிய சட்டம் கொண்டு வருவோம் : நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு விளக்கம்

  அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக் குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான, ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது என, அறிவிக்க வேண்டும்.

  அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை, இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

  தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

  அரசு பள்ளிகளில் 64 வகை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்; கல்வித்துறை உத்தரவு


  பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு: அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலு வ லர் கள், அவர்களது ஆளுகை யின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் பள்ளித் தலை மை யா சி ரி யர் களின் ஓய் வூ திய கருத் து ருக் களை, 

  எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு : நாளை கலந்தாய்வு-கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்

  எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது; 4,800 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது;

  பி.ஆர்க். சேர்க்கை; இன்று முதல் இணையவழி பதிவு தொடக்கம்: விண்ணப்பிக்க ஜூன் 27 கடைசி

  ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு விண்ணப்பிக்க இணையவழி மூலம் பதிவு செய்யும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகம் இருக்காது. வியாழக்கிழமை (ஜூன் 18) முதல் இணையம் மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

  டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்

  அடுத்த மாதம், முதல் தேதி முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோர் மற்றும் உடன் பயணிப்போர், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது; பின் இருக்கையில், பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.

  Wednesday, June 17, 2015

  ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு

  இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் கூறியாதவது: 16.06.2015 அன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து கலந்தாய்வு குறித்து கோரிக்கையின் போது, பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இடைத்தேர்தல் முடிந்தபின் வெளியாகும் எனவும், அதன் பிறகு மாறுதல் கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும்,

  11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு மொத்தமாக புத்தகம் வாங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை

  11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் ஒன் வகுப்பு நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுவிடுகிறது.

  BRC Training list of 2015-16

  🌻Strengthening Reading Writing skills in Tamil-2 days
  🌻Maths usage of SLM kit box and solving Mental Maths- 3 days
  🌻Physical Education Activities linked with CCE -1day
  🌻Discussion on children's achievement- 2 days (Both primary and Upper primary)
  🌻Remedial Activities for late bloomers danguages & Maths)-1day

  ‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘; ஐகோர்ட்டு

  ‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2 பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

  கழிவறையைக் கழுவிய மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

  திருநெல்வேலியில், பள்ளி மாணவிகள் இரண்டு பேரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், இரண்டு மாணவிகளுக்கும் ஏன் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கூடாது என்று கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

  செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்

  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் செய்து கொள்ளவும்.

  454 புதிய ஆசிரியர் தேர்வுப்பட்டியல் வெளியீடு


  ஆதிதிராவிட பள்ளிகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான, 454 பேர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது.

  பள்ளிக்கல்வி - ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு

  பள்ளிக்கல்வி - சிறுபான்மை மொழி மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை பெற்றவர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வெளியீடு

  2015 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RH LIST)

  ஜூன்
  2-புத்த பூர்ணிமா /சாபே பராஅத்
  19-இரமலான் நோன்பு தொடக்கம் (வெள்ளி)
  ஜூலை
  14-சாபே காதர் (செவ்வாய்)
  ஆகஸ்டு
  3-ஆடிப் பெருக்கு(திங்)
  28-வரலட்சுமி நோன்பு, ஓணம் திருநாள் (வெள்ளி)

  10ம் வகுப்பில் தேறாத மாணவி, பிளஸ் 2 தேர்வு எழுதியது எப்படி?

  பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, அதே பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து, தேர்வு எழுதி தோல்வியடைந்த விவகாரம், கரூர் மாவட்ட கல்வித்துறையில் பெரும் பிரச்னையாக கிளம்பியுள்ளது. கரூர் மாவட்டம், சோழவரம் பஞ்சாயத்துக்குட்பட்ட, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2013ல், மீனா என்ற மாணவி, ௧௦ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு முடிவு வெளியான போது, தமிழில், 44, ஆங்கிலத்தில், 22, கணிதத்தில், 35, அறிவியலில், 53, சமூக அறிவியலில், 35 மதிப்பெண் எடுத்து, தோல்வி அடைந்தார்.

  பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் உண்டா?

  தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், வரும், 21ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், வரும், 22ம் தேதி தான் திறக்கப்படுகின்றன. எனவே, இந்த பள்ளி நிர்வாகிகளும் விழி பிதுங்கியுள்ளனர்.சர்வதேச யோகா தினம் குறித்து, தமிழக அரசிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு, இதுவரை அதிகாரபூர்வ வழிகாட்டுதல் வரவில்லை.

  இளம் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

  முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்று நவீன ஆராய்ச்சி உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக இளம் பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

  பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை தேர்வுத்துறை இணை இயக்குனரிடம் மாணவ-மாணவிகள் புகார்

  பிளஸ்-2 விடைத்தாள் மறு கூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை என்று மாணவ- மாணவிகள் நேற்று அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அமுதவல்லியிடம் புகார் தெரிவித்தனர்.

  ஆய்வக உதவியாளர் நியமனம்: அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

  பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம் தகுதிகாண் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  பள்ளிக்கு தாமதமாக வந்த எட்டு ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்டு முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை

  அரசு பள்ளிக்கு தாமதமாக வந்த எட்டு ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்டு முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்றார்.

  Tuesday, June 16, 2015

  அரசு பள்ளி ஆசிரியர்களின் காலில் விழுந்து பாராட்டிய தொழிலதிபர்

  மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

  2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் விவரம்


  எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தரவரிசை வெளியீடு 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்து 17 பேர் முதலிடம்

  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து 17 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தர வரிசையில் பழைய மாணவர்கள் 4,679 பேரும் இடம் பெற்றுள்ளனர்.தர வரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட செயலர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். 

  ‘செல்வ மகள்’ திட்ட சேமிப்புக்கு வருமான வரிச் சலுகை

  ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.

  இன்ஜி., விண்ணப்பதாரர்களுக்கு 'ரேண்டம்' எண் வெளியீடு: 30 விநாடிகளில் தயாரானது

  அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்த, 1.54 லட்சம் மாணவர்களுக்கு, நேற்று, 30 வினாடிகளில், 'ரேண்டம்' எண் என, அழைக்கப்படும், சமவாய்ப்பு எண் வெளியிடப் பட்டது.தானியங்கி முறையில்அண்ணா பல்கலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், பல்கலை துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் முன்னிலையில், 'ரேண்டம்' எண் உருவாக்குதலை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மேற்கொண்டார்.சிறப்பு, 'சாப்ட்வேர்' மூலம், 30 வினாடிகளில் அனைத்து விண்ணப்பங்களுக்கும் எண்கள் உருவாக்கப்பட்டன; 

  முதல் தலைமுறை பட்டதாரியாக விரும்புவோர் 80 ஆயிரம்

  அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.54 லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர், முதல் தலைமுறை பட்டதாரியாக ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்.மொத்த விண்ணப்பதாரர்களில், மாணவர்கள், 95,300 பேர்; மாணவியர், 58,938 பேர்; இதில், கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 1.51 லட்சம் பேர்; தொழிற்கல்வி பிரிவில், 3,104 பேர் இடம்பெற்று உள்ளனர்.

  பணப்பலனை திரும்ப ஒப்படைக்ககல்வித் துறை திடீர் உத்தரவு ஓய்வு தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி

  மதுரையில் தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்று பல ஆண்டுகளான நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணப் பலன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளனர்.மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி உட்பட 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன.

  வேளாண்மைப் படிப்புகளில் சேர 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 20-இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

  தமிழகத்தில் வேளாண்மைப் படிப்புகளில் சேர 29,825 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

  கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன

  பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

  தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...

  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் இரா.குருமூர்த்தி அவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் (கணிதம் தவிர) you tube லிருந்து பதிவிறக்கம் செய்து பாடபகுதிக்குரிய விளக்கங்களுடன் தொகுத்து குறுந்தகடுகளில் பதிவு செய்துள்ளார்.

  குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு


  குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். குரூப்1 பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

  Monday, June 15, 2015

  அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம்

  பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் முருகதாஸ் சிறப்புரையாற்றினார்.

  தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்

  தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பணி நிறைவு ஆசிரியர்கள் ராமசாமி, செங்கோட்டையன், விஸ்வநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளர் நேரு ஆகியோர் பேசினார்.

  பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்

  ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.அவர் கூறியதாவது: 

  அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் பல்வேறு புகார்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

  பள்ளிக்கல்வி - தணிக்கை - பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தணிக்கை சார்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பு

  தொடக்கக் கல்வி - வலைதளம் மூலம் சம்பள பட்டியலில் பதிவு செய்யாத ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

  12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


  விருது - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் பெண்களுக்கான "கல்பனா சாவ்லா" விருது 2015க்கான விண்ணப்பங்கள் அனுப்ப உத்தரவு

  மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு ஜுன்/ஜுலை 2015 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்

  எந்த வங்கியிலும் கல்வி கடன் கேட்கலாம்அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க உத்தரவு

  'சேவை எல்லைகளைக் கடந்து, கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.'கல்விக் கடனைப் பெற, பெற்றோர் அல்லது மாணவர் கள், கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளையே அணுக வேண்டும்; வங்கிக் கணக்கு இல்லாதோர், வீட்டிற்கு அருகே உள்ள கிளையைத் தான் அணுக வேண்டும்' என, வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

  தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்

  தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப் புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள் விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

  பிளஸ் 1 வகுப்புகள் இன்று துவக்கம்

  கோடை விடுமுறை மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி முடிவுகளுக்குப் பின், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்., 10ம் தேதி முடிந்தது; இதன் முடிவுகள், மே 21ம் தேதி வெளியாகின. இம்முறை, அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியலில், 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது; அதேபோல், மாநிலத்தில் முதல் மூன்று, 'ரேங்க்' பட்டியலில், 773 பேர் இடம் பெற்றனர்.

  தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

  தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

  தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,257 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில், 580 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 19ம் தேதி துவங்குகிறது.பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு கள் குறித்த, 'சிடி'யை, பள்ளிக் கல்வித் துறை, 12ம் தேதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் வழங்கியது. 

  அண்ணா பல்கலை 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு

  அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி களில், புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

  மறு கூட்டல், மறு மதிப்பீடு மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று வெளியீடு

  பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்பட உள்ளது. scan.tndge.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி முதல் மாணவர்கள் இந்தப் பட்டியலைக் காண முடியும்.

  சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது; உயர்நீதிமன்றம்

  தமிழகம் முழுவதும் ஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம் :அரசு ஊழியர் சங்கம் முடிவு

  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 2-இல் ஆர்ப்பாட்டமும், 22-இல் பேரணியும் நடைபெற உள்ளதாக, அதன் பொதுச்செயலர் ரா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

  Sunday, June 14, 2015

  தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசு; தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

  தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில் மாநில முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்பில் முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, தமிழகத் தமிழாசிரியர் கழக பொதுச் செயலர் இளங்கோ வெளியிட்ட அறிக்கை:

  வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு

  பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

  'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது

  கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.

  'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'

  'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும் சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

  போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு

  கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில், 'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித் துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன. 

  ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு

  ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362 உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத் தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.

  மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை

  புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில், மாணவர் சேர்க்கையின் போது, பிறப்புச் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ், இடைப்பட்ட வகுப்பாக இருந்தால் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கேட்கப்படுகின்றன.

  கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் கவுன்சிலிங் எப்போது?

  தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

  Saturday, June 13, 2015

  பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு

  தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

  24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

  தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

  ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்

  அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு:காரைக்குடியில் ஜூன் 21ல் நடக்கிறது

  இளநிலை ஆராய்ச்சியாளர்,விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் 21ம் தேதி காரைக்குடியில் 'சிக்ரி' சார்பில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் நடக்கிறது.

  ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா?; கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

  அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:

  எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களின் பங்கேற்பு இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது

  சென்னையில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை அனுமதித்து சேர்க்கைக் கடிதம் அளித்தால், அது வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 

  கல்லூரியில் காலியிடங்களுக்கு சீட்டு போடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இழுபறி

  அரசு அறிவியல் மற்றும் கலை கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

  பிளஸ் 2 மறு மதிப்பீடு வரும் 15ல் முடிவு வெளியீடு

  பிளஸ் 2 தேர்வில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், மறு கூட்டலுக்கு 2,835 பேர் விண்ணப்பித்ததில் 696 பேருக்கும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த 3,502 பேரில் 2,782 பேருக்கும் மதிப்பெண் மாற்றம் உள்ளது.

  Friday, June 12, 2015

  'இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'

  'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  முதல் கட்டக் கலந்தாய்வு: அரசு, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?

  தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  பத்தாம் வகுப்பு: 18, 19-இல் அறிவியல் செய்முறைத் தேர்வு

  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:

  பாரதியார் பல்கலை. ஆராய்ச்சிக்கு யு.ஜி.சி. ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு

  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 6 துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, சிறப்பு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஞா.ஜேம்ஸ் பிச்சை வியாழக்கிழமை தெரிவித்தார்.

  குவியும் கல்வி கட்டண புகார்:கண்டுகொள்ளாத அதிகாரிகள்

  தனியார் பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால், பல பள்ளிகளில் கட்டணப் பிரச்னை பூதாகரமாகிவருகிறது.ஆங்காங்கே, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் சாலைக்கு வந்தும், பள்ளி வளாகத்திற்குள்ளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மெட்ரிக் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் வேடிக்கை பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

  எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்

  இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  'கண்ணை கட்டுது' என்.எஸ்.எஸ்., திட்டம் 'கரையுது' பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி

  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்பாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) நிதி மற்றும் திட்ட அலுவலர் கையில் இருந்து பணம் செலவிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

  Directorate of Medical Education - MBBS / BDS 2015-16 Session - Random Number Released

  வேளாண்மைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

  தமிழகத்தில், வேளாண்மைப் படிப்புகளில் சேர விண்ணப்பங்களை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 13) கடைசி நாளாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில் நுட்பப் படிப்புகளில் உயிர் தொழில் நுட்பவியல், உயிர்த் தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

  என்.பி.டி.இ.எல். சார்பில் 24 புதிய இணைய வழி சான்றிதழ் படிப்புகள்

  தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் கீழ் (என்.பி.டி.இ.எல்.) புதிதாக 24 இணைய வழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
  ஏற்கெனவே, இந்தத் திட்டத்தின் மூலம் 30 படிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். இப்போது 28 சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

  காஞ்சிபுரம் இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலைகளின் பிறப்பிடமான காஞ்சி நகரில் இசைக்கலை வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மாவட்ட அரசு இசைப் பள்ளி தொடங்கப்பட்டு இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கும் பணியைச் செய்து வருகிறது. 

  பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு

  பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்து விட்டனர்.

  Thursday, June 11, 2015

  ஊழியர்களை ஏமாற்றும் மோசடி ஓய்வூதியத் திட்டம்; பிரெடிரிக் ஏங்கெல்ஸ்


  தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மேற்கொள்ளவும், 12 பள்ளிகள் பார்வையிடவும் இயக்குனர் உத்தரவு

  அக இ - 20.06.2015 மற்றும் 27.06.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க இயக்குனர் உத்தரவு


  பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

  கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவிக்கு விடைத்தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

  கல்விக் கடன் வழங்க அலைக்கழிக்கும் வங்கிகள்!

  மேற்படிப்புக்கான கல்விக் கடன் வழங்குவதில், வங்கிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின், மேற்படிப்பு கனவு, கல்விக் கடன் வாயிலாக, நிறைவேறி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், கலை மற்றும் அறிவியல் உட்பட துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏதுவாக, கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த, 2013 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 பேரிடம் 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருந்தது.

  தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுத்தடிப்பு?

  ’தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு, மறு கூட்டல் முடிவு வெளியாவதில் காலதாமதம், வணிகவியல் பள்ளிகள் ஆசிரியர் பயிற்சி மையம் அமைவதில் முறைகேடு நடந்துள்ளது’ என, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.