பங்குச்சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வரம்பை 10 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இபிஎப் நிதி ரூ.13,000 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, September 30, 2016
Wednesday, September 28, 2016
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும். ஏழை குடும்பங்களை சேர்ந்த, ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும்.
3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளி களை ஒட்டிய பகுதிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆசிரியர் குழுக்கள் பிரசாரம் செய்கின்றன; ஆனாலும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் முன்வருவது இல்லை.
வகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவர்கள் , டெல்லியில் பயங்கரம்
டெல்லி நங்கலா பகுதியை சேர்ந்த அரசு பள்ளி இந்தி ஆசிரியர் முகேஷ்குமாருக்கும், 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குமிடையே வகுப்பறையில் வைத்து நேற்று பலத்த வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்தின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முகேஷ்குமாரை மூன்று முறை குத்தினர்.
Tuesday, September 27, 2016
Payment of Allowances in Revised pay may satisfy the Government Staff
It is believed that Payment of Allowances in Revised pay may at least satisfy the Government Staff, despite the fact that the Pay Hike is not sufficient.
Bapus are annoyed about the inordinate delay in announcing Allowances. Talks are doing rounds that the government is deliberately playing the delaying tactics to make the CG Staff to accept the decisions of Allowance Committee.
முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'
பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை
'புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார். மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்
கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தற்போது வழங்கப்பட உள்ளது.
சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்
சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் வாக்குபதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.
பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு.
பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim Measure
Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim MeasureThe Sources Close to the Ministry of finance informed that there is proposal to Pay 1% DA from July as an interim Measure.It is said that the Central Government has not yet decided about the DA rates in Revised Pay scale.
தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்
உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது.
தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக்குனர் பதவி பந்தாடப்படும்
தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு, கூடுதலாக தரப்பட்டுள்ளது.
யாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6 மாதம் சிறை
'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளர்களின், பூத் ஏஜன்ட்டுகள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், உறுதிமொழி ஏற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை 'ஸ்டாப்'
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பராமரிப்பு மின் தடையை, வாரியம் நிறுத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், மின் கம்பம், டிரான்ஸ்பார்மர், கேபிள், பில்லர் பாக்ஸ் போன்ற சாதனங்கள் வழியாக, மின் வினியோகம் செய்கிறது. இவற்றில், எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். இதனால், மின் சாதனங்களில், பழுது ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது, பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.
அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!
முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் நோக்கில், பத்தாம், பிளஸ் 2மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்,மாலை நேர வகுப்புகள் எடுப்பது வழக்கம். சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்திய பின், அரசுப்பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாநில,மாவட்ட தரத்தில் மதிப்பெண்கள் பெறுகின்றனர்.
Monday, September 26, 2016
'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்
'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.
'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்
மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர்பு தொலைபேசி எண்கள்
பொது் 044 23635010 044- 2363 5011
மின்னஞ்சல் முகவரி tnsec.tn@nic.in
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
செயலாளர்
நேரடி 044 2363 5050
044 23635010 விரிவு 2005
முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)
நேரடி 044-2363 5014
044-2363 5010 விரிவு 3000
முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)
நேரடி 044-2363 5015
அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி
மதுரை:இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன. இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது. கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுக்கப்படும் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீதும், அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.
91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு
மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது. இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 91 இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப கிடைத்து உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 82 இடங்களும்; கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், ஒன்பது இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.
Friday, September 23, 2016
தனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த முடியாது’!
மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுகள் மட்டுமே கவுன்சிலிங் நடத்த முடியும்; தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், கவுன்சிலிங் நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.
7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு!
7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும். இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: 7 கல்லூரிகள் மூலம் கூடுதலாக 593 இடங்கள்
தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு புதன்கிழமை (செப்.21) தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.
’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும்
நவீன ஆன்லைன் கற்றல் முறையில் தன்னை இணைத்துக் கொண்டு, போட்டி தேர்வுகளுக்கான வினா- விடைகளை படித்து, தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், என, காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் பேசினார்.
பள்ளிகளில் ’பதுங்கும்’ டெங்கு! கல்வித்துறை எச்சரிக்கை
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை:
மாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி!
கீழக்கரை, பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஜொலித்து வருகிறது. பெரியபட்டினத்தில் சேகு ஜலாலுதீன் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 77 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் 5வது வகுப்பு வரை 175 மாணவர்கள் படிக்கின்றனர்.
அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம்!
அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.
வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை
ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1ல் மாநில அரசு பணியில் உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும்.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை
* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு: உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு
ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Monday, September 19, 2016
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!
மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.
80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி!
51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51 கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது.
’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,2016,10:16 IST
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பார்கோடு விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வை, ஒவ்வொரு ஆண்டும், 18 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். ஒரு மதிப்பெண் வினாக்கள் திருத்தும் போது, தவறுகள் ஏற்படுவதாக மாணவர், பெற்றோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கணிணி அறிவியல் வினாத்தாளின் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பார்கேடு சீட் வழங்கப்பட்டது.
பட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோர் கண்ணீர்
தமிழகத்தில், அரசின் உயர் கல்வித் துறையின் கீழ், 13 பல்கலைகள், அதன் கீழ், 1,464 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 4.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். படிப்பை முடிப்போருக்கு, ஆண்டுதோறும், இரண்டு முறை பட்டமளிப்பு விழாக்கள் நடத்தி, பட்டங்கள் வழங்கப்படும். தொலை நிலை கல்வியில் படிக்கும், இரண்டு லட்சத்திற்கும் மேலானோருக்கும், ஆண்டு தோறும் பட்டங்கள் வழங்கப்படும்.
'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு
பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.
பி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்
தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, 2014 - 15 வரை, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சார்பில், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
வினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வு?
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல், 'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. சில பள்ளிகளில் மட்டும் பெயரளவில் பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. பருவத்தேர்வு வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்கின்றன; சில இடங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தயாரிக்கின்றன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?
'வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 21ல் துவங்கி, 24 வரை நடக்கிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன் இறுதியில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்
விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்டதாரி பெண் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.,டி.,யில், ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டி.ஆர்.பி., சார்பில், நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.
Thursday, September 15, 2016
’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு
ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை
திண்டுக்கல், நான்கு மாதமாக பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என, பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிகள்!
தமிழக அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் பி.எட்., எம்.எட்., ஆசிரியர் கல்வி படிப்புகளின் படிப்பு காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அதன்படி, முதல் செட் மாணவர்களுக்கான, இரண்டமாண்டு வகுப்புகள், ஆக., 23ம் தேதி முதலும், முதலாமாண்டு பி.எட்., மாணவர்களுக்கு 7ம் தேதியும் வகுப்புகள் துவங்கின.
பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை!
பாடத் திட்டத்தில் இடம் பெறாத புத்தகங்களை வாங்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. அதிக சுமை கொண்ட புத்தக பையை சுமப்பதால், மாணவர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் ஏற்படும். கூடுதல் புத்தகங்களை, மாணவர்கள் சுமக்காமல் இருக்க, சரியான திட்டமிடலுடன், பாட அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப புத்தகங்களை கொண்டு வர, அறிவுறுத்த வேண்டும்.
புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளாட்சித் தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத் தேர்தல் வாக்காளர்கள் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் மூலமே சேர்க்க முடியும்.
அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண்டனம்
''அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அழைத்து பேசாதது கண்டனத்திற்கு உரியது,'' என சங்க மாநிலத் தலைவர் மோசஸ் தெரிவித்தார்.
கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜிசி புதிய அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகளை பெற ஆதார் எண் கட்டாயமில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆதார் எண்ணை அறிமுகம் செய்ததோடு, அனைத்துத் திட்டங்களுக்கும் அதை கட்டாயமாக்க முனைந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் மானியத் திட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட முக்கியத் திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண் முறையை நடைமுறைப்படுத்தலாம் என உத்தரவிட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரை
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. வழக்கு தாக்கல் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு
புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடு கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இக்கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை வகித்தார். மாவட்ட நிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
Wednesday, September 14, 2016
ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இன்று 14.09.2016 ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.
கணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி!
தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு;எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, விடைத்தாள்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கின்றன.
Monday, September 12, 2016
7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !
புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்திய உள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள்.
Saturday, September 10, 2016
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓர் ஆண்டு ஆகியும், பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியாகாததால், தேர்வு எழுதியோர் அச்சம் அடைந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டுலட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களின் தானியங்கி வேகத்தடை!
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதற்குக் முக்கியக் காரணம் சாலைகளில் சரியான இடங்களில் வேகத்தடை இல்லாததே. இதை உணர்ந்த மாணவர்கள் தானாக இயங்கும் வேகத்தடை கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், பழைய பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்று வருகின்றனர். அதே பள்ளியில் பயின்று வரும் சவுந்தர்யா மற்றும் ஜீவா ஆகியோர் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்குடன் தானியங்கி வேகத்தடை கருவியை உருவாக்கியுள்ளனர்.
கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி
மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:
8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடம் கற்பித்தல், பாலியல் பாகுபாடு களைதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி
கவுண்டம்பாளையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த முகாமை, பெரியநாயக்கன்பாளையம் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை?
ஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனித் தனியே விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய விருதுக்காக, தமிழகத்தில் தேர்வான, 23 பேரில்,சென்னையில்,ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட இல்லை.
மாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத்திய அரசு திட்டம்
அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, டிஜிட்டல் எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும், என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். டில்லியில் நடந்த, தேசிய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:
5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’
தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, லேப் - டாப் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு இலவசமாக, இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என, அ.தி.மு.க., அறிவித்தது.
Friday, September 9, 2016
REVISED - X STANDARD QUARTERLY COMMON EXAMINATIONS SEPTEMBER 2016
X STANDARD QUARTERLY
COMMON EXAMINATIONS
SEPTEMBER 2016
DATE
|
DAY
|
SUBJECT
|
08.09.2016
|
THRUSDAY
|
LANGUAGE
PAPER - I
|
10.09.2016
|
SATURDAY
|
LANGUAGE
PAPER – II
|
15.09.2016
|
THRUSDAY
|
ENGLISH
PAPER – I
|
16.09.2016
|
FRIDAY
|
ENGLISH
PAPER –II
|
REVISED - HIGHER SECONDARY +2 QUARTERLY COMMON EXAMINATIONS SEPTEMBER 2016
DATE
|
DAY
|
|
SUBJECT
|
|
08.09.2016
|
THRUSDAY
|
PART - I
|
LANGUAGE PAPER – I
|
|
09.09.2016
|
FRIDAY
|
PART – I
|
LANGUAGE PAPER –
II
|
|
10.09.2016
|
SATURDAY
|
PART – II
|
ENGLISH PAPER – I
|
|
13.09.2016
|
TUESDAY
|
|
BAKRID HOLIDAY
|
|
15.09.2016
|
THURSDAY
|
PART –III
|
MATHEMATICS /
MICRO BIOLOGY / ZOOLOGY / NUTRITION & DIETETICS / TEXTILES DESIGNING /
FOOD MANAGEMENT & CHILD CARE / AGRICULTURE PRACTICES / POLITICAL SCIENCE
/ NURSING (VOCATIONAL) / NURSING (GENERAL) / ACCOUNTANCY & AUDITING
|
கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற தடை
பிற மொழி பள்ளிகளில் பணி மாறுதல் பெற்ற, தமிழ் ஆசிரியர்கள், இடம்மாற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த வாரம் முடிந்தது. இதில், இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடம்மாறி வருகின்றனர். ஆசிரியர்கள், புதிய இடங்களுக்கு மாற, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்
தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது.
சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு
சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது. சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., - ஐ.டி., படிப்புகளுக்கு, மே, ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடந்தன. இதற்கான முடிவு, நாளை இரவு, 8:00 மணிக்கு, பல்கலை இணையதளத்தில் வெளியாகிறது.
1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்., இன்று அறிமுகம்
ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி., பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது. இது குறித்து, தமிழ்நாடு வட்ட மற்றும் சென்னை வட்ட பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே, திட்டத்தின் நோக்கம். அதனால் தான், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் - 249' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு
'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தெரிவிக்கும் குறைகளை களைய, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில், கருவூல கணக்கு துறை இயக்குனர் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் - செலவினம் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி
முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் சட்ட சபையில் வெளியிட்டார்.
Thursday, September 8, 2016
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர்தலால் முன்னதாக பேச்சு
உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தீபாவளி போனஸ் சம்பந்தமாக, தொழிற்சங்கங்களுடன், முன்கூட்டியே பேச்சு நடத்த, அரசு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. தமிழக அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அதிகாரிகள் தவிர்த்து, மற்ற பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
DA from July 2016 will be 3% - NC JCM Secretary writes to Finance Secretary
Future computation of Dearness Allowance and adoption base index figure to Revised Minimum Wage – Regarding
“The next instalment of DA, which has become due as on 1.07.2016 if computed on the above basis of 260.46, shall work out to 3.28%. On ignoring the faction, the DA with effect from 01.07.2016 shall be 3%. We, request you to kindly take the above into account and issue orders for grant of 3% DA w.e.f. 01.07.2016.”
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது. காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள் காலியாக உள்ளன.
7-வது சம்பள கமிஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்
சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ‘’கடந்த 25.7.16 அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. இதில் ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள்.
ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு
'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கோட்டையில், பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, மனு அளித்தனர்.
வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் - அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆசிரியர் தின விழாவில் பட்டியலிட்ட அமைச்சர்
கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது. தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா நேற்று, சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 379 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விருதுகளை வழங்கி பேசியதாவது:
Wednesday, September 7, 2016
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.
இது ஆசிரியர்களின் மறுபக்கம்!
'அ' என்ற உயிரெழுத்தை முதன் முதலில் கைப்பிடித்து கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மூலம் ஒவ்வொருவரின் கல்வியும் உயிர்பெறுகிறது. ஆசிரியர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஆசிரியர்கள் மறுபக்கத்தை ஆலோசிக்க வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கையும் ஒரே நிலையில் இருப்பதாக கொந்தளிக்கின்றனர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜ், துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார்.
Monday, September 5, 2016
கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!
ஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!
பூனை - நரிக் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கதை இல்லாத நாடு கிடையாது. கீழை நாடுகளில் பூனை நரி. மேற்கு நாடுகளில் முள்ளம்பன்றி - நரி!
கதை இதுதான். பூனையும் நரியும் நண்பர்கள். ஒருநாள், ‘உனக்கென்ன தெரியும்? எனக்கென்ன தெரியும்?’ என்று இரண்டும் பேசிக்கொள்கின்றன. ‘எனக்குச் சிறுசிறு உபாயங்கள் பல தெரியும்’ என்றது நரி. ‘எனக்கு ஒரே ஒரு பெரிய உபாயம் தெரியும்’ என்கிறது பூனை.
அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு
கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதியானவர்களிடமிருந்து இன சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கவுன்சிலிங்; ஆசிரியர்கள் அதிருப்தி
கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை காரணமாக, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் விடிய, விடிய நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கான இட மாறுதல், கவுன்சிலிங், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு, 41 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மாவட்டங்களில் உடற்கல்வி அதிகாரிகள் இல்லை!
தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், பள்ளிக்கல்வி சார்ந்த, விளையாட்டு துறையில், உடற்கல்வி அதிகாரி பணி இடங்கள் காலியாக உள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள், போட்டிகளில் பின்தங்கி உள்ளனர்.
பள்ளிக்கல்வியில் காலியிடம் அதிகரிப்பு! திணறும் ஊழியர்கள்
இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர் பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 39 பேருக்கு மாறுதல் நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்
மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றுபவர்களின் ஆசிரியர் பணியைப் பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து!
ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
ஆவணியில் சதுர்த்தி கொண்டாட காரணம்
ஒரு காலத்தில் ஆவணியே மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாக உள்ளது. இம்மாதத்தில் தான் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்தார் என்பதால் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான், நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.
இனி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்பு படிக்கலாம்
நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆம் ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்:
1. ந.பாஸ்கரன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இருசனாம்பட்டி, வீரபாண்டி.
2. யா. ஜான் லூர்தாஸ், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி.
Saturday, September 3, 2016
ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி: இளைஞர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆசிரியை உள்பட பலரிடன் ஏடிஎம் அட்டையை நூதன முறையில் பறித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர். செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை மகாலட்சுமி (35) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 1-ஆம் தேதி செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அவர் பணம் எடுத்த போது ரசீது மட்டுமே வந்துள்ளது.
கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு
கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகளை அமைக்க போதிய அளவில் நிலம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது கிராமப் பகுதிகளில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் 8 ஏக்கர் நிலமும், பெருநகரங்களில் 4 ஏக்கர் நிலமும் தேவை என்று விதி உள்ளது.
21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்
திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.
Friday, September 2, 2016
மனிதனுக்கு 98 % நோய்கள் தவறான உணவுப் பழக்கங்களால் தான் வருகிறது: இயற்கை மருத்துவர்
மனிதனுக்கு 98 சதம் நோய்கள் தவறான உணவுப்பழக்கங்களால்தான் வருகிறது என சென்னை இயற்கை மருத்துவர் யுவபாரத் கூறினார். சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வியாழக்கிழமை இயற்கை மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மேலும் பேசியதாவது: நாகரீகம் என்ற பெயரில் நாம் பலவகையான உணவுகளை உண்டு வருகிறோம். மனித உடலில் கழிவுகள் தேங்கினால் அதில் கிருமிகள் உருவாகி நோய்தாக்கும்.நம் தவறான உணவுபழக்கங்களால்தான் 98 சதம் நோய்கள் வருகிறது.
11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் : செப்.12 வரை நடக்கிறது
மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. மொத்தம், 250 ஸ்டால்களில் ஐந்து லட்சம் தலைப்புகளில், புத்தகங்கள் இடம் பெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்களின் புத்தகங்கள் மற்றும் மாணவர், சிறுவர்களுக்கான புத்தகங்கள் கிடைக்கும். தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்; அனுமதி இலவசம்.
ஆசிரியர்கள் பேட்டி அளிக்க தடை
அரசு பள்ளி ஆசிரியர்கள் பேட்டி அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், பல செயல்முறை பயிற்சிகளை வழங்குகின்றனர்.
எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது. எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது.
ஆசிய பல்கலை., பட்டியலில் இந்தியாவின் நிலை
ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணியில் இருப்பது ஐ.ஐ.டி., எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். தற்போது நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ ‘4ஜி’ சேவை அறிமுகமாகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 42வது ஆண்டு பொதுக்கூட்டம், மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆர்ஜியோ மொபைல் போன் சேவை, வரும், 5ம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்தார் முகேஷ் அம்பானி. கூடவே, ஆர்ஜியோ சந்தாதாரர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளையும் பட்டியலிட்டார்.-முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
Thursday, September 1, 2016
மகப்பேறு விடுமுறை: 9 மாதமாக அதிகரிப்பு
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் மகப்பேறு கால விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது. பெண் ஊழியர்கள் நலனிலும் அரசு அக்கறை செலுத்தி வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு
பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.
தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.
மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும்?நாளை பள்ளிகள் இயங்குமா?
அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கக் கூடாது; புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., - சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, பல தொழிற்சங்கங்கள் இணைந்து, நாளை, நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்
மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
நூற்றுக்கு நூறு எடுத்தால் பரிசு : அமைச்சர் வளர்மதி அறிவிப்பு
''பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் பாடங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தொந்தரவு: மாறுதல் கேட்டு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மனு
சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுப்பதால், தங்களை பணிமாறுதல் செய்யும்படி, அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன். அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பணிபுரியும், ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை வேறுபள்ளிக்கு மாறுதல் செய்யும்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.
பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'
''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)