Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 31, 2015

    ஜன.30ல் ராமநாதபுரத்தில் தேசிய மாணவர் கேரம் போட்டி

    ராமநாதபுரத்தில் ஜன., 30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி துவங்குகிறது.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தடகளம், ஒற்றையர், இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன. ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. 

    பெண்கள் விடுதி காப்பாளர் நியமனம் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

    பெண்கள் விடுதிகளுக்கு பெண்களை மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க வேண்டும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.
    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் கூட்டம், அமைச்சர் சுந்தர்ராஜ் தலைமையில், சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள் கலந்து கொண்டனர். 

    "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்': புத்தாண்டில் இடைவிடாத புத்தக விற்பனை

    புத்தாண்டு விழாவை முன்னிட்டு வியாழன் (டிச.31), வெள்ளி (ஜன.1) ஆகிய இரண்டு நாள்கள் 10 சதவீத தள்ளுபடியுடன் இடைவிடாது புத்தகங்களை விற்பனை செய்ய "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஜனவரி - 2016 நாட்காட்டி



    02-பள்ளி திறக்கும் நாள் மற்றும் குறைதீர்க்கும் நாள்
    5, 6, 7, 8 - SLAS தேர்வு
    14 - போகி R/L

    15 - பொங்கல் விடுமுறை

    தொடக்கக் கல்வி - இளம் மழலையர் பள்ளிகளுக்கான விதி தொகுப்பு (Code of Regulations for Play Schools - 2015) - அரசாணை இயற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

    த.அ.உ.சட்டம் 2005 - அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 2 நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம் என தகவல்

    மின் ஊழியருக்கு தேர்தல் பணி

    மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 2016 சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. 

    ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31 வரை நீட்டிக்க வாய்ப்பு

    ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு, அரசு நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடையும் நோக்கில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவு எண்களை வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    Wednesday, December 30, 2015

    'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு

    கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,

    தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் கருத்துருக்கள் அனுப்பி வைக்க இயக்குனர் உத்தரவு

    அரசு விடுதி கட்டுமானப் பணிகள்: பள்ளி மாணவிகள் பரிதவிப்பு

    அரசு விடுதி கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடியில் சீர்மரபினர், பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கான விடுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது.

    மகப்பேறு விடுமுறை 26 வாரம்?

    அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது. மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

    ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை

    கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

    Tuesday, December 29, 2015

    வனத்துறை - ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு

    TO DOWNLOAD G.O NO113 DT.18.09.2015 EF DEPARTMENT Click here...

    தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம்செய்யப்பட்டு 01.04.2003 க்குப் பின் நிரந்தரம் செய்துபணிவரன்முறை செய்யப்பட்டஅரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும்  மரணம்அடைந்தவர்களுக்கு  உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம்,

    தொடக்கல்வித்துறையில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு, 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின்படி பதவி உயர்வு அளிக்க முடிவு

    தொடக்கல்வித்துறையில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2015 முன்னுரிமைப்  பட்டியலின் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி

    உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை; 13 வகை விளையாட்டுகள் மாயம்

    அரசு பள்ளிகளில் தொடரும், உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த கல்வியாண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, 13 வகையான விளையாட்டுகள் காணாமல் போனதாகவும், மாணவர்களின் திறமைகளை முடக்கப்படுவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    அரையாண்டு விடுமுறைக்கு பின் சிறப்பு கவுன்சிலிங் துவக்கம்

    பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவுன்சிலிங் வழங்கவுள்ளதாக, மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் வளர் இளம் பருவம் சார்ந்த உளவியல் பிரச்னைகளை களையும் விதத்தில், நடமாடும் உளவியல் ஆலோசனை மைய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தனி மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

    சீர்மிகு பல்கலை அங்கீகாரம் அண்ணா பல்கலைக்கு கவுரவம்

    அண்ணா பல்கலையின் ஆராய்ச்சி பணிகளுக்காக, சீர்மிகு பல்கலை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி மையம், ஊடக அறிவியல் துறை ஆகியவை, உலக சுகாதார மையத்துடன் இணைந்து, கை கழுவும் முறை மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தியது. 

    வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு!

    மத்திய அரசின்கீழ் செயல்படும், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் (எஸ்.ஐ.டி.பி.ஐ.,) கிரேடு ’ஏ’ பிரிவில் அதிகாரியாக பணிபுரிய ஓர் வாய்ப்பு!

    பணியிடம்: உதவி மேலாளர்

    காலிப்பணியிடங்கள்: 100

    மாத ஊதியம்: தோரயமாக 36 ஆயிரம் ரூபாய்.

    ஜனவரி 1 முதல் எந்தெந்த துறைகளுக்கு "பான் கார்டு" கட்டாயமாகிறது; வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதி கெடு! நவம்பர் 2016க்குள் "பாஸ்" செய்ய உத்தரவு

    சம்பளமின்றி 18 ஆயிரம் ஆசிரியர்கள் திண்டாட்டம்: 7 மாதமாக தொடரும் அவலம்

    தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட 18,205 ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்குவதால் அவதிக்கு உள்ளாகின்றனர்.திண்டுக்கல்லில் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், செயலாளர் ஜெகதீஷ்குமார், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 7,979 பட்டதாரி ஆசிரியர்களும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலமாக 6,872 பட்டதாரி ஆசிரியர்களும், 1,590 முதுகலை ஆசிரியர்களும், 1,764 ஆய்வக உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    உதவி பொறியாளர் பணியிடம் நிரப்ப மின் வாரியம் அறிவிப்பு

    மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து, உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 1,650 பணியிடங்களை நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிகல், 300; மெக்கானிக்கல், 25; சிவில், 50 என மொத்தம், 375 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. 

    பேராசிரியர் நியமனம் யு.ஜி.சி., அறிவுரை

    'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:பல்கலைகளில், யு.ஜி.சி., விதிகளின் படி, தகுதியான பேராசிரியர்களை நியமிக்க, பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்.

    பொதுத் தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

    பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், கல்வி ஆண்டின் இறுதியில், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

    மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

    அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.அதே சமயத்தில், ஊர்திப்படி பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் வழங்கிய, தேசிய அடையாள சான்றையே ஏற்க வேண்டும் என, மாநில ஆணையர் கூறியிருந்தார். 

    Monday, December 28, 2015

    'கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்'.

    'பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்.

    ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் ரத்து

    அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்லை.  முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. 

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியா? அதிகாரிகளை இடம் மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

    சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    விடுதிகளில் இரவு காவலர்கள் பணி காலி மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

    அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 450 இரவு காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

    மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு

    IT 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees

    Salaried Employees are a relieved lot now after fulfiling all the formalities for Income Tax 2014-15. But, by that time six months in the new financial year 2015-16 is already over.
    So, preparation of statement for salary income, deductions and saving under various clauses of Income Tax Act in respect of Financial year 2015-16 is already due for submission to the employer.
    Tax Planning and submisstion of statement to that effect to the employer would be mainly useful to avoid additional deduction of Income Tax by the employer over and above income tax estimated by an individual on the basis of his / her savings or deductions.
    This article summarises Income Tax Structure for the year 2015-16 (Assessment Year 2016-17) and also the Tax exemptions available to salaried class employees in the form of Exempt Income, Deductions and Savings.

    திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    Sunday, December 27, 2015

    15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?

    சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.

    எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு

    மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய பாடத் திட்டங்களின் படி, செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் ஓவியம், இசை, தையல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை 6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு

    தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஆட்கள் நியமிக்க உத்தரவு

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

    வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோஅல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

    ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு

    நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது. 

    'நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு

    இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.நாட்டிலுள்ள 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். 

    சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி: ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது.

    சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. 

    பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்

    தொழிற்சாலையில் பொருட்களை தயாரிப்பது போல இந்தியாவில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.

    Saturday, December 26, 2015

    7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

    ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.

    'ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு

    அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன.

    ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

    தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.

    மாற்றுத்திறனாளிகளின் ஊர்திப்படி மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம்

    தாமதத்தை தவிர்க்க மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊர்திப்படி வழங்கப்படுகிறது. இதனை பெற அவர்கள் தேசிய அடையாள அட்டை, அரசு மருத்துவ குழு அளிக்கும் மாற்றுத்திறன் தன்மை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை பெற வேண்டும்.

    Discontinue The Practice Of Appointing Pay Commissions Every 10 Years – AK Mathur

    Discontinue the Practice of Appointing Pay Commissions every 10 years – According to Mathur, this could be avoided if a system of annual salary hikes — as in the private sector — is implemented for government staff as well.

    The Centre could discontinue the practice of appointing pay commissions every 10 years to suggest salary revisions for its staff, justice AK Mathur, chairman of the Seventh Central Pay Commission (7th CPC), said. Instead, he said, the government could have a mechanism for annual increment in salaries, taking into account all aspects including the consumer prices. While the dearness allowance offsets the impact of retail inflation on the salaries of government employees, the salary increases are now accorded by way of the pay commission-awarded “fitment” factor and annual increment.

    அரசு கல்லூரிகளில் மீண்டும் சிறப்பு வகுப்பு

    அரசு கல்லுாரிகளில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மீண்டும் நடத்த உயர் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது.இதையடுத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, அந்த மாணவர்களை முன்னேற்ற, பேராசிரியர்களுக்கு கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் அளிக்க அரசு உத்தரவிட்டது.

    6ல் 4 ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின்கல்வி பாதிப்பு!மேல்நிலை பள்ளி சுகாதாரமும் கேள்விக்குறி

    ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காததால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.பொன்னேரி ரயில் நிலைய சாலையில், 1932ல் துவங்கப்பட்ட, ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, 84 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், இரு பட்டதாரி ஆசிரியர்கள், மூன்று இளநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், ஆறு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். கடந்த மார்ச் மாதம், பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடமாற்றம் பெற்று சென்றார்.

    விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்

    1வது முதல் 9வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன.

    பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்

    நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள்,தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள்,கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்,இன்றைய காலகட்டத்தில் கணவரும்,மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள் ,பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது,கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு,புட்டு வைக்கின்றனர்.

    Friday, December 25, 2015

    "சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."

    நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

    இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். 

    Thursday, December 24, 2015

    புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான உண்டு,உறைவிட சிறப்புப்பயிற்சி முகாமில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி. திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையா் திரு வி. நந்தகுமார் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.


    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களை தோ்ந்தெடுத்து வருகிற ஆண்டில் உயா் கல்வியினை அடையும் வகையிலும். அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை பெறும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உண்டு. உறைவிட சிறப்புப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இப்பயிற்சி முகாமில் கணிதம், இயற்பியல். வேதியியல். உயிரியல். மற்றும் தமிழ், ஆங்கிலம் ஆகியப் பாடங்களுக்கு சிறந்த பாட நிபுணா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    த.அ.உ.சட்டம் 2005 - ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என தகவல்


    ஆணை பகிர்வு : பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்

    INSPIRE AWARD - 2015-16 - LIST OF SELECTED STUDENTS

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

    கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    எளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

    ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைக்காக வெளிநாடு செல்லும் பொதுமக்களிடம் ஈ.சி.என்.ஆர். (குடியுரிமை ஆய்வுச்சான்று அவசியம் இல்லை) பாஸ்போர்ட் பெறுவதற்கு தனியார் முகவர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.   அவ்வாறு ஏமாற்றப்படும்பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம்.

    மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

    அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;

    1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.

    Wednesday, December 23, 2015

    மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் துப்புரவு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு TNPTF வேண்டுகோள்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளியை துப்பரவு செய்யவோ, கழிப்பிடங்களை சுத்தம் செய்யவோ பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் பல காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் விளைவாக உள்ளாட்சி துறையில் உள்ள பணியாளர்களை சுழற்சி அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டது.

    அரசுப்பள்ளிகளின் அரை நாள் ஆசிரியர்களின் ஆழ்ந்த கவலைகள்! கலைந்திடுமா அரசு!!!


    தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 2015-16ம் கல்வியாண்டில் தற்போது காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியல்

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு - உச்ச நீதிமன்றம் - அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு

    தமிழ்நாட்டில் 6வது ஊதிய குழு ஊதியம் 1.6.2009 முதல் நடைமுறைபடுத்தபட்டது. அப்போது இடைநிலை ஆசிரியர் பெற்று வந்த ஊதியம்ரூ.8370 /-ஆகும் ஆனால் 6 வது ஊதிய குழு 5200 + 2800 = 8000 எனநிர்ணயம் செய்ததது .அதாவது பெற்று வந்ததை விட குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த பிரச்சணை யை போக்க தற்காலிக தீர்வாக பழைய ஊதியம் 4500ஐ 1.86 ஆல் பெருக்கி 11170 என நிர்ணயம் 31.5.2009 க்கு முன்னர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு மட்டும் வழங்க பட்டது.ஆனால் மத்தியஅரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 6 வது ஊதியகுழுவில் 9300 + 4200 = 13,500 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க 10 லட்சம் கையேடு இந்த வார இறுதிக்குள் விலையின்றி வழங்க ஏற்பாடு

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு 10 லட்சம் கையேடுகள் இந்த வாரத்திற்குள் விலை இன்றி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் கிடையாது

    தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. மத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழு மிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை. 

    பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு

    அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது. இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

    மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

    சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 29–ந் தேதி வரை நீட்டிப்பு அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 29–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் கா.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

    தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம்!

    தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 20–ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்,
    முகவரி மாறியவர்கள், திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    Tuesday, December 22, 2015

    தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கு 11.01.2015 முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு நடத்த இயக்குனர் உத்தரவு

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் செய்யப்பட்டு மரணமடைந்த ஆசிரியரின் கணவருக்கு 2மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.சுந்தரேஸ்வரி அவர்கள்  CPSல் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.

    தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளுக்கு 2ஆம் பருவ விடுமுறை முடிந்து 02.01.2016 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளில் ஆயுத்தப் பணிகள் மேற்கொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்

    தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடப்படுகிறது

    தொடக்கக் கல்வித் துறையின் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆசிரியர்களுக்கு 20 கி.மீ., தூரத்துக்குள் தேர்வு பணியை வழங்கணும்

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் புஷ்பராசு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் புதிதாக வளர்ந்து வரும் விரும்பதகாத செயல்களில் இருந்து மாணவர்களை மீட்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசகரை அரசு நியமித்துள்ளது. இருந்தும் தவிர்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகிறது. 

    தனியார் பள்ளிக்கு 40 நாள் விடுமுறை; கொதிப்படைந்த பெற்றோர்

    வெள்ளநீர் தேங்கிய தனியார் பள்ளிக்கு, 40 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி பாதிப்பால் கொதிப்படைந்த பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

    வீட்டில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தணும்

    வீடுகளில் புத்தகம் வாசிக்கும் சூழலை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். நல்ல புத்தகங்களை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், என, வாழ்வியல் ஆலோசகர் சிவக்குமார் பழனியப்பன் அறிவுறுத்தினார். 

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

    நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,).

    'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்

    ''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது. 

    வாக்காளர் நீக்கம் வெளியீடு

    தேர்தல் கமிஷன் சார்பில், சமீபத்தில், ஒருவருடைய பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவர் தற்போது வசிக்கும் பகுதி தவிர, பிற இடங்களில் இருந்து பெயர் நீக்கப்பட்டது. அதே போல் இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் பெயரும் நீக்கப்பட்டன.

    இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்

    உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

    பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் கவனத்துக்கு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் புதன்கிழமை (டிசம்பர் 23) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டிசம்பர் 24-ம் தேதி மிலாடி நபியையொட்டி, அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்

    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை. இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாணவர்கள் போராட்டம் வாபஸ்: கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலை. உறுதி

    கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் பேசிக் கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாணவரை பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும் அரங்கிலிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த மாணவரை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்

    பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

    டிசம்பர் -22 கணிதமேதை இராமானுஜத்தின் 128ஆவது பிறந்த நாள்

    சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22,1887 - ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.

    Monday, December 21, 2015

    அகஇ - அடைவுச் சோதனை (SLAS) 05.01.2015 முதல் 08.01.2015 வரை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

    அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி

    அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

    கோயம்புத்தூரில் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பைகளும். சான்றிதழ்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

     
    மாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் கோயம்புத்தூா் மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 2015 டிசம்பா் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் திரு கே.சி.வீரமணி, மாண்புமிகு நகராட்சி, ஊரக வளா்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவா் திரு பொள்ளாட்சி வ. ஜெயராமன், மாண்புமிகு கோயம்புத்தூா் மாநகராட்சி மேயா் திரு கணபதி ப.ராஜ்குமார், கோயம்புத்தூா் மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி அா்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப, பாராளுமன்ற உறுப்பினா்கள். சட்டமன்ற உறுப்பினா்கள் திரு ஆா். துரைச்சாமி(எ) சேலஞ்சா் துரை, திரு வி.சி. ஆறுகுட்டி, திரு தா. மலரவன் உள்ளிட்ட சான்றோர்கள் பலா் கலந்துகொண்டனா்.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழு கூட்டம்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் சனிக்கிழமை (19.12.15) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச்செயற்குழு உறுப்பினர் வேதராஜசேகரன், வட்டாரச் செயராளர்கள் ஜெயக்குமார், சகாயதைனேஸ், ஜேம்ஸ் கென்னடி, சத்தியேந்திரன், பால்துரை மற்றும் சாஸ்தா சுந்தரம், அதிசயராஜ் உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களைச்சார்ந்த மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குடியரசு தின மாநில தடகளப் போட்டிகள் கோவையில் தொடக்கம்


    நன்கொடை வசூலிக்கும் இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ரத்து

    மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை கட்டணம் வசூலிக்கும் இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், எட்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனினும், பல அரசு கல்லுாரிகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகளில் இடங்கள் இல்லாமல், மாணவர்கள் வேறு கல்லுாரிகளை தேடும் நிலை உள்ளது.

    ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!

    அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன. இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது. இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர் மாத ஊதியத்தில் நிவாரண நிதியை பிடித்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தலைமை ஆசிரியரை தாக்கியதாக ஊராட்சித் தலைவர் மீது வழக்கு

    ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தலைமை ஆசிரியரைத் தாக்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெசல் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் அருகருகே ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு நெசல் அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு தற்போது அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ், ரூ1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட கோரிக்கை

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    கணிதத் திறனறிவுத் தேர்வு: 1,100 மாணவர்கள் பங்கேற்பு

    வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணிதத் திறனறிவுத் தேர்வை பள்ளி மாணவர்கள் 1,100 பேர் எழுதினர். மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடம் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான கணிதத் திறனறிவுத் தேர்வுப் போட்டிகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

    அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் தொடக்கம்: செல்லிடப்பேசிக்கு தடை

    மாவட்ட அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்த துறைத் தேர்வுகளில் அரசு ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

    விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

    பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

    "தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது"

    மாணவ, மாணவிகளுக்காக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் தெரிவித்தார்.

    சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதி இரானி

    மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

    பட்டாசுகள் வேண்டாமே! மாணவர்களுக்கு அறிவுரை

    'பட்டாசால் ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்து, மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும்; பட்டாசு பயன்படுத்த வேண்டாம் என, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    Sunday, December 20, 2015

    16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    பள்ளிக்கல்வி - 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு

    01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    "எட்டு" போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

    மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
    அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
    வருகிறது "நோய்". 

    நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

    சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
    தெளிவான விடைகளை தருகிறது.

    சித்தர்கள் :

    "எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"

    என்கிறார்கள்.

    Saturday, December 19, 2015

    கூட்டுறவு சங்க தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் 30 மாதங்களாக இழுதடிப்பு; உடனடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியாற்றியதற்கான மதிப்பூதியம் வழங்காமல் இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். எனவே உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

    புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம்

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2015-2015 கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம் தொடக்கவிழா புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் இன்று 19-12-2015(சனிக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

    ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு


    மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

    மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். மழை வெள்ள பாதிப்புமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி?

    காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஆணுக்கு ஒரு யூனிட், பெண்ணுக்கு 0.80 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.60 யூனிட் என, குடும்பத்திற்கு மொத்தம் 3 யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. 

    வருங்கால வைப்பு நிதி: செலவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

    வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொது வருங்கால வைப்பு நிதியாக, மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மொத்தமாகச் சேரும் பணம், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வழங்கப்படுகிறது.

    நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல்

    கருவூல 'சாப்ட்வேர்' குளறுபடியால் வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'இ.சி.எஸ்.,' முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக கருவூலங்களில் 'வெப் பேரோல் சாப்ட்வேர்' பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

    2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு

    2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை

    4 மாவட்டங்களுக்கு தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு

    வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 29 முதல் தொடங்க உள்ளன. தொடர் மழை- வெள்ள பாதிப்புகள் காரணமாக, பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகமும் ஒத்திவைத்தது. மழை ஓய்ந்தவுடன் பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அறிவித்தது. அதில் இணைப்புக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு (2013 நடைமுறை) முதல் பருவத் தேர்வுகளை இடைவெளிகள் எதுவுமின்றி டிசம்பர் 15 முதல் 21 வரை 6 பாடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    கருவூலகத்தில் "இன்டர்நெட்' சேவை... முடக்கம் :ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

    கருவூலக அலுவல கத்தில் 15 நாள்களாக "இன்டர்நெட்' சேவை முடங்கியுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு டிச. மாதத்திற்குரிய சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வருவாய், கல்வி, ஊரக வளர்ச்சி, சத்துணவு, அங்கன்வாடி, புள்ளியியல், வணிகவரித்துறை உட்பட 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முதுகுளத்தூர் கருவூலக அலுவலகத்தால் மாதந்தோறும் சம்பளம் பட்டுவாடா செய்யபட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கபடுகிறது.

    பள்ளி வயது வளர் இளம் பெண்கள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும்? மருத்துவர் அறிவுரை

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6,7,8 வகுப்பு மாணவிகளுடன் மருத்துவர் பார்கவி மணிவண்ணன் வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தினார்.

    Friday, December 18, 2015

    டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு

    டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு

    ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு: 15 ஆயிரம் பேர் எழுதினர்

    ஐஏஎஸ்,. ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற   நிலையில், முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 153 தேர்வு மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதினர்.

    10ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

    11.01.2016-மொழி பாடம் I
    13.01.2016-மொழி பாடம் ll
    18.01.2016-ஆங்கிலம் l
    20.01.2016-ஆங்கிலம் ll
    22.01.2016-கணிதம் 

    12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

    11.01.2016-மொழிப்பாடம் I
    12.01.2016 -மொழிப்பாடம் ll
    13.01.2016-ஆங்கிலம் l
    14.01.2016 -ஆங்கிலம் ll

    18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல்

    பள்ளிக்கல்வி - அரையாண்டு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பான அறிவுரைகள்

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற தேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி, சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓய்வூதியம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

    தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக முதற்கட்டமாக 10 லட்சத்திற்கும் மேலான நிவாரண பொருட்கள் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது


    ஜனவரி 11-ல் அரையாண்டு தேர்வு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11-ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இனி ஒரு விதி செய்வோம்... மனிதவளத்தை ஒன்று திரட்டி பேரிடரிலிருந்து நம்மை நாமே காப்போம்..

    தோழர்களே இனிவரும் காலங்களில் விபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படின் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்ய தன்னார்வம் உள்ளவர்களை ஒன்றிக்கும் முயற்சியில் ஒரு குழுவினை உருவாக்க உள்ளேன்.

    தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

    தமிழக பள்ளிகளில் ஜனவரி 11ந் தேதி தொடங்கி 27ம் தேதி வரை

    தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அரையாண்டு தேர்வு ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

    தமிழ்நாட்டில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய முடியாது எனவும், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க

    மத்திய அரசு ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண உதவி?

    மத்திய அரசின் சேவை வரித்துறை தலைமையகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊழியர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க பரிசீலித்து வருகிறது. ஊழியர்களிடம், பாதிக்கப்பட்ட உடைமைகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. 

    புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்

    சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது

    எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் உதவி பெற, தகுதித் தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.

    அரசு தேர்வுத் துறைக்கு புதிய இயக்குனர்

    தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

    நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ் விடுமுறை பள்ளிகளுக்கு உண்டா?

    சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில், நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன. எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா என, பள்ளிகள் எதிர்பார்ப்பில் உள்ளன. ஏற்கனவே, மழை விடுமுறை அறிவிப்பில், முன்கூட்டியே திட்டமிடாமல், தினமும் விடுமுறை அறிவித்த கல்வித்துறை, தற்போது, திட்டமிடப்பட்ட பண்டிகை கால விடுமுறை அறிவிப்பிலும், மெத்தனமாக உள்ளது.

    எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் உதவித்தொகை ரூ.1,549 கோடி நிலுவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவர்கள் உயர்கல்வி பயில வழங்கப்படும் மத்திய அரசின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையான ரூ.1,549 கோடியே 76 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

    நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க தமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. 

    Thursday, December 17, 2015

    நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்; மத்திய அரசு

    நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 133 மாணவர்கள் நாட்டிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் திருக்குறள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 133 மாணவர்களும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் திருக்குறளை ஒப்புவித்தனர்.

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை; மத்திய அரசு

    மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.

    அனைத்து வகையான வங்கி கணக்கு தொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயம்

    அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற துணைமானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''உணவு கட்டணம், வெளிநாட்டு பயண டிக்கெட் போன்றவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

    பயிற்சி முக்கியம் பாடம் முக்கியமல்ல!

    அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற, எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், செயல்முறை கற்றலை ஊக்குவிக்கவும், இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சமீப காலமாக, பயிற்சி என்ற பெயரில், கருத்தரங்கு நடத்தி, மதிய சாப்பாடு கொடுத்து, பயண செலவுக்கு, 50 ரூபாயும் கொடுத்து அனுப்பும் சடங்காக, இது நடத்தப்படுகிறது.

    பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

    பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. நாட்டில், நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., அளிக்கப்பட்டு உள்ளது.

    சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    CPSல் பணம்பிடிக்க மட்டுமே அரசாணை உள்ளது; திரும்ப வழங்க எந்த அரசாணையும் இல்லை.!!!

    வீட்டு முகவரிக்கே பாடப் புத்தகங்கள்: தமிழக அரசு புதிய ஏற்பாடு

    மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
     இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
    கடுமையான வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, பாடநூல்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

    ஜனவரி 27,28 மற்றும் 29 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

    இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 27, 28 மற்றும் 29 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமெனவும்,

    கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜாக்டோ முடிவு

    இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது. 

    TNPSC - Departmental Examinations, December 2015 Memorandum of Admission (Hall Ticket)

    வெள்ள நிவாரணம் வசூல் பணியில்மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்: தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

    வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,'என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பொருள் உதவி, முதல்வர் பெயரில் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களை, மக்கள் மற்றும் கடைகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி வசூலித்து தர பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், ஆனால் அதற்கான வழங்கப்பட்ட ரசீதில் பள்ளி பெயர் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

    அரையாண்டு தேர்வு வேண்டாம் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

    பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க ஜன.12 கடைசி

    அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 கடைசித் தேதியாகும். அபராத கட்டணத்துடன் பிப்ரவரி10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    உதவிப் பொறியாளர் காலியிடம்; வரும் 28 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி.

    நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 28-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    சான்றிதழ் சிறப்பு முகாம்

    வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த வெளி மாவட்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் சென்னை சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க முடியாது என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் படித்துவிட்டு சென்னையில் பணிபுரிபவர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பட்டப் படிப்பு சான்றிதழ்களுக்கு மறு சான்றிதழ் பெற அவர்கள் படித்த கல்லூரி அல்லது பல்கலைக்கழத்துக்க சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    Wednesday, December 16, 2015

    நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

    குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்

    நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார்.

    'பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'

    'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்: பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைக்க மறுப்பு

    வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

    வெள்ள பாதிப்புக்கு உள்ளான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள், டிசம்பர், 28க்கு தள்ளிவைக்கப்பட்டன. 'மற்ற கல்லுாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தேர்வு நடைபெறும்' என, உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்திற்கு 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

    குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

    ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியில் முறைகேடு: அமைச்சர்கள் பெயரில் அதிகாரிகளுக்கு மிரட்டல்

    தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நிதியில், ரூ.பல லட்சம் முறைகேடு நடப்பதை தடுக்க கல்வித்துறை செயலாளர் சபீதா நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும் பள்ளி பராமரிப்பு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து மாணவர் நலன் கருதி பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7,500க்கு புத்தகங்கள், அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு அறிவியல் உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்று

    மதுரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,11 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    புதிய பென்ஷன் திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி

    புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.

    திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள்

    திண்டுக்கல்லில் இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலை குறித்தும், பள்ளி மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

    அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு 14 வகை நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது. இதில், இலவச 'லேப்டாப்' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்களில்' ஓ.எஸ்., வசதியை அதிகரிக்க தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் 2015 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களில் 'விண்டோஸ் 8.1' வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    பள்ளி லேப்-டாப் திருட்டு ஆறு மாணவர்கள் கைது

    அரசு பள்ளியில், லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் திருடிய, ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவருக்கு, கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 166 லேப்-டாப்கள், கணினி அறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம், 13ம் தேதி இரவு, அறையின் பூட்டை உடைத்து, 23 லேப்-டாப்களை, யாரோ திருடிச் சென்று விட்டனர். 

    Tuesday, December 15, 2015

    வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை


    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    7வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. 

    தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு

    அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு

    வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. மழையில் சான்றிதழ்களை இழந்தோருக்கு, மறுபிரதி வழங்கும் முகாம்கள் நேற்று துவங்கின. உயர்கல்வித் துறைக்கான முகாமை, சென்னை, எழும்பூர் காயிதே மில்லத் கல்லுாரியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார். பின், அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா ஆகியோர், கல்லுாரி விடுதி, நுாலகம், கணினி ஆய்வகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.

    ஆர்.எம்.எஸ்.ஏ., புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய் கூட இருக்காது

    தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ரூ.7500 மதிப்பிலான புத்தகங்களின் உண்மை மதிப்பு ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது.

    மாணவர்களை சேர்க்க மறுக்கும் அரசு பள்ளிகள்!

    பல்வேறு காரணங்களுக்காக, தனியார் பள்ளிகளிலிருந்து இடையில் நிற்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதால், அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. 

    கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது

    சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு, கல்லுாரிகள் வற்புறுத்தக்கூடாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார். காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் சென்டாக் மூலம் தேர்வாகி, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, 2015--16ம் நிதியாண்டில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதில், ஏற்கனவே ரூ.26.56 கோடி வழங்கிய நிலையில், ரூ.13.43 கோடி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.

    டி.என்.பி.எஸ்.சி., பணியிடங்களுக்கு பணம் வசூல்; மாணவர்களே ‘உஷார்’

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலை வாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம், மேல்அதிகாரிகள், அமைச்சர்களை தெரியும் எனக்கூறி குரூப்-2ஏ, வி.ஏ.ஓ., வேலைவாங்கித் தருகிறோம் அதற்காக ரூ. 8லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதில் கிராமப்புற மாணவர்கள் தான் அதிகமாக மூளை சலவை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

    லஞ்சம்; கல்வி அதிகாரி கைது

    மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், தனியார் பள்ளி முதல்வரிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாவட்ட கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டார். 

    இன்ஜினியரிங் தேர்வுகள் 28க்கு தள்ளிவைப்பு

    அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, 10ம் தேதி முதல் தேர்வுகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டது.

    பள்ளிகள் திறந்தன : சனிக்கிழமைகளிலும் இயக்க போவதாக தகவல்

    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் 33 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறந்தன. ஒரு மாத காலமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இத்தகவலை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    'திரு சிம்பு அவர்களே... "உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது", இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?'

    தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே...

    திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, 

    தேர்வு பயம் வேண்டாம்; முதன்மை செயலர் சபிதா

    நீண்ட விடுமுறைக்கு பின், சென்னை, திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்கும் முகாமும் நேற்று துவங்கியது. சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது:

    அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை!!

    வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், இன்று 
    செயல்பட துவங்கின.
    இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது.

    உயர் கல்வியை கேள்விக்குறியாக்கும் உத்தேச வர்த்தக ஒப்பந்தம்

    நைரோபியில் செவ்வாய்க்கிழமை (டிச.15) முதல் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் (WTO-​GA​TS) இந்தியா கையொப்பமிட்டால் உயர் கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும், கல்வியின் நோக்கமே சிதைந்து விடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    அண்ணா பல்கலை மூலம் மின் வாரிய ஊழியர் தேர்வு

    தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது. 

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம்: தமிழக அரசு

    முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தன்னார்வமாக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பளம் வழங்கும் அலுவலர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை 31 நாள்களைக் கொண்டு வகுத்து ஒரு நாள் ஊதியத்தை கணக்கிடுவார்.

    பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

    பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: