Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Saturday, November 22, 2014

  மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது அடியாட்களை அழைத்துவந்து கொடூர தாக்குதல்!

  வகுப்பறையில் மாணவனை கண்டித்ததற்காக, அடியாட்களை அழைத்து வந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வருகிறது லயோலா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி. இங்கு பாஸ்கர் என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அர்னால்டு என்ற மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனுடன் அரட்டை அடித்தபடி விசில் அடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.  இதை கவனித்த பாஸ்கரன் அந்த மாணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

  டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்

  2015 அரசு பொது விடுமுறை நாட்கள்

  இடைநிற்றலை குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்: ஆன்லைன் குளறுபடியால் மீண்டும் "பாண்டு முறை"

  மானவர்களின் ஆர்வத்துக்கு தடை!

  முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்

  அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

  Friday, November 21, 2014

  தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை கூட்டம்

  உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் கல்வித்துறை திடீர் ஆய்வு

  மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மாணவியை பிரம்பால் அடித்த விவகாரம்: ஆசிரியர்களிடம் தாசில்தார் விசாரணை

  தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. இவருடைய பேத்தி சிந்துஜா (வயது14). இவருடைய அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்து வருவதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

  ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு

  ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக

  IGNOU: BEd-2015 Admission Counselling Schedule

  பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்கள் சந்திப்பு


  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவு

  அதிக கட்டணத்தால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியாத, 28 மாணவர்கள், உச்சநீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  பகுதிநேர ஆசிரியர் சம்பளம் இனி மாதம் ரூ.7000: அரசு உத்தரவு

  பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

  தகுதித் தேர்வு மூலமாக மட்டுமே சிறப்பாசிரியர்கள் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை

  உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2014-செப்டம்பர் மாதம் நடைபெற்ற FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்கி பாராட்டுதல் விழா நடைபெற்றது.

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

  அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை

  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  அண்ணாமலை பல்கலை 2 பேராசிரியர்கள் உள்பட 6 பேர் பணி நீக்கம்

  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ல் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் முறைகோடாக பதவி உயர்வு பெற்றவர்கள், போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆகியோர் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், விசாரணையும் நடத்தப்பட்டது. 

  கல்வி உதவித்தொகை முறைகேடு:16 பேருக்கு சிக்கல்

  நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்த மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோரின், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், கடந்த சில ஆண்டுக்கு முன், 68.46 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது.

  மதிய உணவில் அழுகிய முட்டை?பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

  இளையனார்குப்பம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், நேற்று மாலை, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று மதியம், 400 மாணவ, மாணவியர், மதிய உணவு சாப்பிட்டனர். மாலை, 3:00 மணியளவில், நான்கு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் என, எட்டு பேர் மயங்கி விழுந்தனர்.

  விடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

  ஆசிரியர் தேர்வு வாரியம் - சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை) நியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி புதிய வழிக்காட்டுதல்கள் வழங்கி அரசு உத்தரவு

  Thursday, November 20, 2014

  பள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

  தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு


  தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.

  அகஇ - "பயிற்சிகளின் தாக்கம்" சார்பான பயிற்சி கட்டகம்

  மானியம் விலை சிலிண்டர் பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜன. 1 முதல் அமல்!


  மானியவிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வங்கிக் கணக்கு கட்டாயம் என்பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

  உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்


  ஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு...

  2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


  ’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

  ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


  மதுரையை சேர்ந்தவர் தமிழரசன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுப்பதை தவிர்க்கவே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.

  தர மதிப்பீடுகள் அவசியமே!


  மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) என்ற, புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை, ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது, அரசின் முடிவு. இதைக் கருத்தில் கொண்டே, எட்டாம் வகுப்பு வரை, கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு சட்டமாக்கியது.

  10, பிளஸ் 2 தேர்வில் நஷ்டத்தை சமாளிக்க விடைத்தாளில் 12 பக்கங்கள் வரை குறைக்க தேர்வு துறை உத்தரவு


  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு தேர்வுத் துறை வழங்கும் விடைத்தாளில் 8 முதல் 12 பக்கங்கள் வரை குறைத்து வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கிறது. இதற்கான கேள்வித்தாள் தயாரிப்பது மட்டும் அல்லாமல் விடைத்தாளையும் தேர்வுத்துறையே வழங்கி வருகிறது.

  மாணவர்களின் அடைவுத்திறன் மேம்பட வலியுறுத்தல்


  பொள்ளாச்சியில், மாணவர்களின் அடைவுத்திறன் மேம்பட பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

  ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை


  ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.

  ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


  அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம் செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்


  உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது இண்டெர்நெட்டை பயன்படுத்துவோரின் எணணிக்கை 213 மில்லியனாக உள்ளது.

  மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு

  இரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர் கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

  பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி

  அநைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட அறிக்கையில் வெளியான பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்பு. நிலுவைத் தொகையும் ECS முறையில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

  மொழிப்பாடத்திற்கும் பேசுதல், கேட்டல், படித்தல் திறனுக்கு 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் : தமிழாசிரியர் கழகத்தினர் வலியுறுத்தல்


  Very good happy news to Part time instructors????

  Very good happy news to Part time instructors to Government Schools under SSA appointment Salary is increased from Rs.5000/- to Rs.7000/- from April 2014 on wards G.O. No. (Ms) 186 Dated:18.11.2014.

  Wednesday, November 19, 2014

  பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு

  பாட நேரம் அதிகரிப்பிற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு


  அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது பாட நேரம் வாரத்திற்கு 16 மணிநேரமாக உள்ளது. இதை 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  ஆங்கில பள்ளி மூடப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு


  உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்.

  வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்கு விடிவு காலம்!


  அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படுத்தப்பட்டால், அவர்கள் கொத்தடிமைகளாக உருவாகும் நிலை தடுக்கப்படலாம்.

  அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு


  அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

  சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு?


  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 மற்றும் 25.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது


  பள்ளிக்கல்வி - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் அரியலூர் மாவட்டம்


  புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் அரியலூர்   மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

  பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு

  பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது.

  அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட்

  தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது.