To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, September 30, 2012
வி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு, தேர்வு விடைகள் இன்று மாலையே வெளியிடப்படும் - நட்ராஜ்
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.
4 ஆண்டுகளாகியும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ! சம்பள வேறுபாட்டையும் களைய கோரிக்கை.
மதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.
தட்கல் முறையில் நுழைவுச்சீட்டு பெறுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி
பிளஸ் 2 தனித் தேர்வுக்கு, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.
7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
மத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு : 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்
டி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
வி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
Saturday, September 29, 2012
வி.ஏ.ஓ. தேர்வு: ஹால் டிக்கெட் வழங்குவதில் குழப்பம்
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்களை,ஆன்-லைனில் தேர்வு எழுதுபவர்கள் பெற்று வருகின்றனர். வயதை காரணம்காட்டி, பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.
அண்ணாமலை பல்கலையில் தமிழ் இணைய மாநாடு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு, டிசம்பர் 28ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), மொழியியல் உயராய்வு மையம் ஆகியன நடத்துகின்றன.
Friday, September 28, 2012
தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு ஹால் டிக்கெட்: எங்கு பெறலாம்?
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு பெறலாம் என அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வெள்ளி, சனி, திங்கள்கிழமை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.
டி.இ.டி. மறுதேர்வு: விண்ணப்பிக்க இன்று இறுதிநாள்
டி.இ.டி., மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 2,600 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது : கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
Thursday, September 27, 2012
பிளஸ் 2 தனி தேர்வு: 28ல் ஹால் டிக்கெட்
பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வும் அக்டோபர் 14ம் தேதி நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித் துறை
காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்டோபர் 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு
கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் சிம்கார்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, September 26, 2012
SCERT - RTE பயிற்சி தேதிகளில் மாற்றம் செய்து அமைத்து இயக்குனர் உத்தரவு
27.09.2012 அன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
28.09.2012 அன்று நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
29.09.2012 அன்று உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு (6 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள்) நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
28.09.2012 அன்று நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
29.09.2012 அன்று உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு (6 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள்) நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: 1093 பேர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், லோகேஷ், கார்த்திகேயன், பகுத்தறிவன் உள்பட 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது :- சர்வ சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த 1.30 கோடி மாணவர் களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு : பள்ளிக் கல்வித் துறை
தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்களும் இதில் தொகுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்களும் இதில் தொகுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
திறந்தநிலை பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு அக்டோபர் 21-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் கி.முருகன் அறிவித்துள்ளார்.
Tuesday, September 25, 2012
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களை திருத்த நேரில் வர வேண்டாம்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை; தேர்வு நாளன்று அவர்கள் குறிப்பிடும் விருப்பப் பாடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு : ரூ. 7ஆயிரத்து 400 கோடி தான் கூடுதல் செலவு - தினமலர் செய்தி
சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
பள்ளி பாடப்புத்தகத்தில் பென்னிக் குக்: பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை
பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிக் குக் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
10ம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் படி தனித்தேர்வு அக்டோபர் 15ல் துவங்கி 26 ஆம் தேதி வரை நடக்கிறது.
அடுத்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான தனித்தேர்வு, அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.
பொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.
இந்த, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரி மற்றும் ஒன்பது மாணவர்கள், "69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், தமிழக அரசின் சட்டம், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா" எனக் கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.
இந்த, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரி மற்றும் ஒன்பது மாணவர்கள், "69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், தமிழக அரசின் சட்டம், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா" எனக் கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஊழியர் பற்றாக்குறையால் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பாதிப்பு
தேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், ஆன்-லைன் மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.
பள்ளிப் பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்கத் திட்டம்
பள்ளி மாணவ- மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓட்டுனர்கள் மட்டுமின்றி, பள்ளி பேருந்தின் உதவியாளர்களுக்கும், லைசென்ஸ் கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
Monday, September 24, 2012
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இன்று நடந்த
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம்
அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த
அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்
பயனடைவார்கள்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடப் பிரிவிற்கு, விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என, பதிவாளர் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
2013 முதல் செல்பேசிகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது : கபில் சிபல்
2013ம் ஆண்டு முதல் செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
Sunday, September 23, 2012
ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு பின் ஆசிரியர் பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள் - பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர், TRB தலைவர் மற்றும் இயக்குநர் அடங்கிய குழு அமைப்பு
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர்.
மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளையடிக்கும் நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள்!
தமிழக அரசின் முப்பருவ தேர்வு முறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், ஒன்றுக்கு பதில், மூன்று பதிப்புகளாக நோட்ஸ்களை வெளியிட்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: தற்போது பி.எட்., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: சுர்ஜித் கே.சௌத்ரி தகவல்
ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக 6 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி கூறினார்.
ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு
தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு 2012-13 கல்வியாண்டு முதல், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக ரூ.500 உதவித்தொகை உயர்த்தி வழங்க தமிழக முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை
மாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் கல்விக் கடன் வழங்க, நிதி அமைச்சரகம் வலியுறுத்தி வருகிறது. அனைத்துப் படிப்புகளுக்கும், கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
Saturday, September 22, 2012
புதிதாக பி.எட். படித்தவர்களும் டி.இ.டி மறுதேர்வு எழுத அனுமதி
"தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் மறுதேர்வில்(டி.இ.டி.,), புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வு எழுதலாம் என்று, அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Friday, September 21, 2012
அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் - Dinamani News
தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ந் தேதிக்கு ஒத்திவைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-க்கு பதிலாக அக்டோபர் 14ந் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக இந்த வருடம் முடித்தவர்களையும் சேர்த்து
விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான இலவச 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் நடக்கிறது.
விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான இலவச 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக காஜா மலை வளாகத்தில் உள்ள பொருளாதார துறையில் வரும் 22, 23 ஆகிய தேதிக ளில் நடக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவைக் கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்விக் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான சிபிஎஸ்இ பள்ளிகளின் மனுக்கள் தள்ளுபடி
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்விக் கட்ட நிர்ணயக் குழுக்கு எதிராக சிபிஎஸ்இ பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தனித்தேர்வு எழுதத் தவறியவர்கள், தத்கால் திட்டத்தில், இன்றும், நாளையும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, September 20, 2012
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகம் விநியோகத்தை நேற்று அமைச்சர் துவக்கி வைத்தார்.
நடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
அண்ணாமலை பல்கலையில் தொடரும் உண்ணாவிரதம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால பாடப் பிரிவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நேற்று மூன்றாம் நாளாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது.
பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி புதிய இணை இயக்குனர் பதவியேற்பு!!!
பள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.
Wednesday, September 19, 2012
2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி - Dinamalar News
கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அண்ணாவின் ஆட்சி - இரா. செழியன் அவர்களின் கட்டுரை
ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாள் விழாவாக தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு பலர் என்னைக் கேட்டுக்கொள்வது உண்டு. அதில் பெரிய சிக்கல் இருக்கிறது. அவருடைய வாழ்க்கை, தமிழக அரசியலுடன் இரண்டறக் கலந்திருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை (20.09.2012) வியாழன் அன்று வழக்கம் போல் செயல்படும்.
தமிழகத்தில்
உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று
பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக,
வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை
என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் மீண்டும் தேர்வு எழுத கோரி வழக்கு
திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73ஆயிரம் பேர் கலந்து கொண்டுதகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம்
இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு வழங்கப்படும்
இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.015224 / கே2 / 2012, நாள். 18.09.2012
அரசுக் கடித எண்.32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தொடக்கக்கல்வித்துறை அறிவிப்பு.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.015224 / கே2 / 2012, நாள். 18.09.2012
அரசுக் கடித எண்.32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தொடக்கக்கல்வித்துறை அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் சரியும் மாணவர் எண்ணிக்கை
தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.
உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை அரசு காக்க வேண்டும் என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tuesday, September 18, 2012
Monday, September 17, 2012
சிறுபான்மையின நல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ஒவ்வொரு வருடமும் சிறுபான்மையினத்தை சேர்ந்த சுமார் 20,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த கல்வி உதவித்தொகையானது வழங்கப்படுகின்றது.
சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு ?
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள், எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பினால் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள டீசல் விலை உயர்வு,
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உதவ புதிய முறை
பள்ளிப் படிப்பிற்கு பின்னர் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை கலந்தாய்வின் போதே கண்டறிந்து உதவித்தொகை வழங்க மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முடிவு செய்துள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு: ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளி போகுமா?
டி.இ.டி., மறுதேர்வு, அக்டோபர் 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு, அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Sunday, September 16, 2012
அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளில் காலியாக உள்ள, 243 இடங்களுக்கு, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.
6,000 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு தமிழக அரசு அனுமதி
காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: சிவபதி
திருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிஇடங்களுக்கான
மாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு
தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு
மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், 396 பேர், உத்தரவுகளை பெற்றனர். மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 1,080 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்&' வழியாக, மாவட்ட தலைநகரங்களில் உள்ள சி.இ.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தன.
Saturday, September 15, 2012
சி.பி.எஸ்.இ: இந்த ஆண்டு 60பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ்
சமச்சீர் கல்விக்குப் பிறகு ஏராளமான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சி.பி.எஸ்.இ.யுடன் இணைப்புப் பெற 60 பள்ளிகள் தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுள்ளன.
அமெரிக்க ராணுவம் பாராட்டிய அண்ணா பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம்!!!
மதுரையில் கிரானைட் கற்களை அளவெடுக்கும் பணியில், அண்ணா பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின், "ஆளில்லா விமானம்' ஈடுபட்டு வருகிறது. இதை விவசாயம், தீயணைப்பு, அளவீடு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.
அன்று ஆசிரியை... இன்று ஊராட்சி மன்றத் தலைவி!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவி சுமதி பாலமுருகன். அதுமட்டுமல்ல, அவர் இப்போது ஆராய்ச்சி மாணவியும் கூட. 10ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கும், 6ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கும் தாயான இவருக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வம்.
அக்டோபரில் நடைபெறும் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஒ.எஸ்.எல்.சி. (பழைய பாடத் திட்டம்) ஆகியவற்றுக்கு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18-ம் தேதி கடைசி நாளாகும்.
அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை
ஆசிரியர் தகுதித் தேர்வு - வருடம், கிழமையில் தவறு, ஹால்டிக்கெட்டில் குழப்பம்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், தேர்வு நாள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வுஎழுத விண்ணப்பித்தனர். தேர்வில் 2700 பேர் தான் தேர்ச்சி பெற்றனர். புதுச் சேரியில் ஒரு பட்ட தாரி கூட தேர்ச்சி பெற
ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்
சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்டப்படிப்பை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
Friday, September 14, 2012
அரசு கலை கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்
அரசு கலை கல்லூரிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால், ஏற்கனவே உள்ள பட்டப்படிப்புகளுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கும் ஆசிரியர் இல்லாததால், வகுப்புகள் நடைபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலை: நியமன முறைகேடு விசாரணை முடிந்தது
திருவள்ளுவர் பல்கலையில், பணி நியமன முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை முடிவடைந்தது. வேலூர், திருவள்ளுவர் பல்கலையில், 2010- 11ம் ஆண்டு துணைவேந்தராக ஜோதிமுருகன் இருந்தார். அப்போது, 7 பேராசிரியர்காள், 3 இணை பேராசிரியர்கள், 11 உதவி பேராசிரியர்கள் உட்பட, 31 பேர் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, பல்கலை பேராசிரியர்கள் சங்க தலைவர் பேராசிரியர் இளங்கோவன் உட்பட பலர், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் ஊதியம் வழங்க முடிவு
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியகளுக்கு, முதுகலை ஆசிரியருக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்கள் எழத முதுகலை ஆசிரியர்கள் வரவேற்பு
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி தேர்வு: விரைவில் டெண்டர்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், ஆன்-லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில், டெண்டர் வெளியிடப்பட உள்ளது என தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.
பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் தனித் தேர்வுகள், அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன.
Thursday, September 13, 2012
புத்தகங்கள் பெறுவதில் ஆர்வம் காட்டாத பள்ளிகள்
சமச்சீர் கல்வி முறையில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை பெறுவதில், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டு முதல் முப்பருவ பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், மூன்று பிரிவுகளாக பாடப்புத்தகம் பிரிக்கப்பட்டது.
நீண்ட விடுப்பில் ஆசிரியர்கள் - அரசு அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கு செல்லாமல் நீண்ட நாள் விடுமுறையில் இருந்து வந்த பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில அரசு ஆசிரியர்கள் நீண்ட நாள் விடுப்பு எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று வர அனுமதியளித்து வருகிறது. இதனை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பாமல் இருப்பதை மாநில அரசு சமீபத்தில் கண்டறிந்தது.
நவம்பர் 4ம் தேதி குரூப்-2 மறுதேர்வு!
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வு, நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வை, 6.50 லட்சம் பேர் எழுதினர். இதன் கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான தகவல், தேர்வு நடந்த அன்றே வெளியானது. இதையடுத்து, குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மறுத்தேர்விற்க்கான நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு மையம் தெரிந்துகொள்ள தகவல் வெளியீடு.
Tamil Nadu Teacher
Eligiblity Test 2012 including Puducherry (TN-Region)
Teachers Eligiblity Test (Supplementary Examination)
I.
List of Admitted candidates (Tamil Nadu)
- 655350
II. List of Admitted Candidates Puducherry (TN-Region) - 8787
Date of Examination: 03.10.2012
Wednesday
Paper I Timing: 10:00 A.M to 01:00
P.M
Paper II Timing: 02:00 P.M to 05:00
P.M
Paper Both : (Paper I Timing and
Paper II Timing)
|
|
|
Wednesday, September 12, 2012
தேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
வனச்சரகர் பணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண்களை வெளியிட, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நடைமுறை - துவங்கியது காலாண்டு தேர்வு
கடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.
Tuesday, September 11, 2012
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கோவை 07.09.2012 அன்று கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நடவடிக்கை குறிப்பு
*அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழாக்களை கட்டாயம் நடத்த வேண்டும்.
*உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதம் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் 25 பள்ளிகளை ஆய்வு செய்தல் வேண்டும்.
*அரசின் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*அரசின் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருகைபுரிய வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் உரிய ஆவணங்களின்றி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்
ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.
மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை முதல்வர் வழங்கினார்
நடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
டிப்ளமோ படிக்க ஆளில்லை...பி.எட் படிப்பிற்கு கூடும் மவுசு!
கடினமான பாடத்திட்டம், குறைந்து வரும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பி.எட்., படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
நல்லாசிரியர் விருதுகளை குவிக்கும் மேலூர் கல்வி மாவட்டம்
மதுரையில், மேலூர் கல்வி மாவட்டத்தில், கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், 7 ஆண்டுகளாக தொடர்ந்து நல்லாசிரியர் விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
Monday, September 10, 2012
ஒவ்வொரு மாதமும் 20 பள்ளிக்கூடங்களில் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் - முதன்மை செயலர் சபீதா
மாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.
Sunday, September 9, 2012
உள்ளூர் பள்ளிகளை உயரச் செய்வோம்! வி.குமாரமுருகன் அவர்களின் கட்டுரை
ஓன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் அவர்களுடைய வசிப்பிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள்ளும் அமைந்திருக்க வேண்டும் என புதிய கல்வி உறுதிச்சட்டம் கூறுகிறது. இப்படி பள்ளிகள் வீட்டுப் பக்கத்தில் இருந்தாலும் கூட அவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை என்னவோ இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாத நிலையில்தான் உள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டண விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு
கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.
பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை சான்று: தமிழக அரசு
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு, அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், கண் பரிசோதனை செய்து, சான்று பெற வேண்டும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)