பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை விவரம்:
நாள் / பாடம்
பிளஸ் 2
ஜூன் 18 மொழி முதல் தாள்
ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்