உடுமலை:
தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி,
மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி
நிறுவனம்
தெரிவித்துள்ளது.
தொடக்க
கல்வி பட்டயத் தேர்விற்கான முதல்
மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு நாட்கள்
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை மாவட்ட கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கை: ஜூன் 11ம் தேதி
துவங்க இருந்த இரண்டாம் ஆண்டு
தேர்வுகள், ஜூன் 26ம் தேதி
துவங்கி; ஜூலை 3ம் தேதி
முடிகிறது.
இதன்படி
26ம்தேதி-இந்திய கல்வி முறை,
27-கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 28- தமிழ் மொழிக்கல்வி, 30- ஆங்கில
மொழிக் கல்வி, ஜூலை 1ம்
தேதி- கணிதவியல், 2- அறிவியல், 3- சமூக அறிவியல்.
ஜூன்
20ம் தேதி நடக்கயிருந்த முதலாண்டு
பட்டயத் தேர்வுகள் ஜூலை 7 ம்தேதி துவங்கி;
14ம் தேதி வரை நடக்கிறது.
ஜூலை 7 ம்தேதி- கற்கும் குழந்தை,
8- கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 9-இளஞ்சிறார் கல்வி மொழிக் கல்வி,
10-கணிதவியல், 11- அறிவியல், 12- சமூக அறிவியல், 14- ஆங்கில
மொழிக் கல்வி. தேர்வுகள் காலை
10.00 மணி முதல் 1.00 மணி வரை நடக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment