Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Wednesday, October 31, 2012

  புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடைசியாக வேலூர், கரூர், உதகை, ஈரோடு, திருச்சி, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி கோவை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை  தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்  

  சென்னை - பள்ளிகள், கல்லூரிகள் 
  காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
  திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்

  திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
  நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்

  நீலம் புயல் : கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று மதியம் விடுமுறையும், சென்னை விமானம் நிலையம், துறைமுகம் இன்று பிற்பகல் மூடப்பட்டுள்ளது.

  சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உடனடியாக வீடு திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தல். கடற்கரை, வேளச்சேரி பறக்கும் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
  சென்னை பொதுமக்கள் புயல் மற்றும் கனமழை சார்பான அவசர உதவிக்கு 1913 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நீலம் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையம் இன்று பிற்பகல் மூடப்படுகிறது. சென்னைக்கு வரவுள்ள விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, மதுரை மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக  தகவல்கள் தெர்விக்கின்றன. கடற்கரை, வேளச்சேரி பறக்கும் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

  மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக திரு.இளங்கோவன் நியமனம் - Dinamalar News

   மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  ஆசிரியரை கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன்

  விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான். விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை

  முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்

  முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது. 23 கேள்விகளுக்கான விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

  இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு திட்டம்!

  இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: சனிக்கிழமைகளில் நடக்குமா?

  நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு

  நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.

  TNPSC GROUP - II HALL TICKET AVAILABLE

  Tuesday, October 30, 2012

  கனமழை மற்றும் புயல் காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு இன்று (31.10.2012) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடைசியாக  சேலம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட   பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  சென்னை - பள்ளி, கல்லூரிகள் 
  திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள்
  காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள்
  திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
  பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள்

  பள்ளிக்கல்வி - தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் குறித்த செயல்முறைகள்

  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் வரும் 3ஆம் தேதி நாமக்கல்லில் நடக்கவுள்ளது.

  மாநில தலைவர் திரு.மணி அவர்கள் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் திரு.பழனியப்பன் வரவேற்கிறார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் திரு.முத்துச்சாமி அவர்கள் பங்கேற்று பேச உள்ளார். மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர் உள்பட மாநில, மாவட்ட, வட்டார, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

  II MID TERM TIME TABLE FOR IX TO XII STD

  பாடநூல் தயாரிப்பு குழு - புதிதாக சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய 10ஆம் வகுப்புக்கான சமூகவியல் முதல் பருவ பாடப்புத்தக செயல்பாடுகளுக்கான ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் பணிமனை 05.11.2012 அன்று சென்னையில் நடைபெறுவது குறித்த செயல்முறைகள்

  ஆசிரியர்த் தகுதித் மறுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரம் தள்ளி வைப்பு

  சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர்.

  மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்


  அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

  ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

  ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆவடி சத்தியமூர்த்தி நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டுதான், இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. "மேல்நிலை பாடப் பிரிவுகளுக்கு, ஒன்பது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, அரசு அறிவித்தது. இப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில் உள்ள மூன்று பிரிவுகளில், மொத்தம், 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், கணித பிரிவில் மட்டும், 40 மாணவர்கள் படிக்கின்றனர்.

  ஆசிரியர்த் தகுத் தேர்வு முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்

  ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

  Monday, October 29, 2012

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - "Shiksha Ka Haq Abhiyan" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும்  விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளி / வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் அனைத்து மாவட்டத்திலும் வட்டார அளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று சென்னை மாநிலத் திட்ட

  ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 65 ஆக உயர்வு

  ஜார்க்கண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் அர்ஜூன் முன்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநில பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது 62யிலிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  +2 தனித்தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்

  பிளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல்லில் துவங்கியது. இம்மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு அக்.,30ம் தேதி வரை நடக்கும்.

  ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாவட்ட அளவிலான விழிப்பு குழு மற்றும் SC / ST பிரிவினருக்கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க மாநிலம் / மாவட்ட அளவிலான விழிப்பு குழு ஏற்படுத்துதல் சார்பு.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆங்கில மொழித் திறன் பயிற்சி கட்டகம் திருத்தம் மேற்கொள்ளுதல் - பணிமனை - சேலம் மாவட்டத்தில் நடைபெறுதல் சார்பு.

  Sunday, October 28, 2012

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000/- க்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பும் பணி நிறுத்தி வைக்க மாநில திட்ட அலுவலகம் உத்தரவு.

  அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.10000/-மும் அதிகபட்சம் ரூ.15000/-மும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000 /- க்கான

  உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  தமிழகத்தில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், அலுவலகத்தில் ஆசிரியர்களை அலுவலக வேலை வாங்குவதை தடுக்க கோரி தமிழக

  பணிமாற்றம் கிடைக்காததால் ஆசிரியை தற்கெலை

  உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று பரிதாபமாக இறந்தார்.உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.

  புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  கனமழை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் , புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக , கல்வித்துறை இயக்குனர் தெரிவித்தார்.

  RTE ACT 2009 - NORMS AND STANDARDS OF TEACHER APPOINTMENT & TEACHER STUDENTS RATIO, BUILDING & INFRASTRUCTURE

  மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

  பரபரப்பான அரசியல் திருப்பங்களுடன் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. 7 பேர் கேபினட் அந்தஸ்துடனும்,22 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். மிகவும் எதிர்பார்த்த ராகுல் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நடிகர் சிரஞ்சீவி தனிப்பொறுப்புடன் அ‌மைச்சரானார்.

  Saturday, October 27, 2012

  ஆசிரியர்த் தகுதித் மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

  டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  ஆசிரியர் தகுதி தேர்வு 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

  ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

  Friday, October 26, 2012

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

  தொடக்கக் கல்வி - மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் நடைமுறை படுத்தப்படுகிறதா என்பதை இருவர் குழு கொண்டு ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு.

  தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக் கான பணி இலக்குகள் மற்றும் பணிச் சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பு.

  DEE - RIESI TRAINING AT BENGALURU - VENUE REGARDING

  தொடக்கக் கல்வி - RTI 2005 நேர்முக உதவியாளர், பிரிவு உதவியாளர் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி 06.11.2012 முதல் 10.01.2013 வரை நடத்துதல்

  தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை கூட்டமர்வு 15 மற்றும் 16.11.2012 அன்று நடத்துதல் சார்பு.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு - சிறப்பாக செயல்படுத்துதல் குறித்து இயக்குனரின் செயல்முறைகள்

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல் குறித்து இயக்குனரின் செயல்முறைகள்

  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் "பக்ரீத்" திருநாள் வாழ்த்துச் செய்தி

  EMIS - TEACHERS PROFILE FILLING INSTRUCTIONS - EASY FILLING GUIDELINES

  அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் 01.01.2012 முதல் புதிய ஊதிய நிர்ணயப் பட்டியல்

  ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்

  குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்ஆங்கிலத்தில் கேள்வித்தாளைத் தயாரித்து தமிழாக்கம் செய்யும்போது ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை குழப்பிவிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.உதாரணமாக குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதியில்
  1.பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது? என்ற வினாவில் Sentence completion test என்பதை வாக்கியம் நிறைவு செய்தல் சோதனை என்று மொழிபெயர்க்காமல் வெறுமனே வாக்கியம் நிறைவு செய்தல் என்று மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

  Thursday, October 25, 2012

  பள்ளிக்கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவி யரின் பாதுகாப்பு, பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் போன்றவற்றில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

  தொடக்கக் கல்வி - RIEST ஆங்கிலப் பயிற்சி - 02.11.2012 முதல் 30.11.2012 முடிய 30 நாட்களுக்கு 75 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்க உத்தரவு.

  தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் களின் பணி அறிக்கையினை (JOB CHART) ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவு.

  தொடக்கக் கல்வி - RTE, அரசின் விலையில்லா திட்டங்கள் மற்றும் தரமான கல்வி வழங்குதல் குறித்து மண்டல வாரியாக மாதந்தோறும் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவு.

  தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - அரசு / அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இடப்பரப்பளவுடன் இயங்கும் பள்ளிகளின் விவரம் கோருதல்

  முதுகலை ஆசிரியர் தேர்வு: நவம்பர் 10க்குள் புதிய பட்டியல்


  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஆர்.பி. நடத்துகிறது.

  நவம்பர் 4ல் குரூப்-2 மறுதேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

  தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை டி.என்.பி.எஸ். ரத்து செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Wednesday, October 24, 2012

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர் களில் இறந்த / இயலாமை ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் நிவாரணம் (DCRG, COMMUTATION, FAMILY PENSION & DEARNESS RELIEF) வழங்கி மத்திய அரசு உத்தரவு.

  உழைப்பால் உயர்ந்த பார்வையற்ற பேராசிரியை!

  நினைத்ததை உழைப்பினால் சாதிக்கலாம்" என்கிறார், பார்வையற்ற கல்லூரி உதவி பேராசிரியை ஹேமலதா. விழி இல்லாவிட்டாலும் தனது மனக்கண்ணாலும், முயற்சியாலும், திண்டுக்கல் எம்.வி.எம்., கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறார், உதவிபேராசிரியை ஹேமலதா, 36.

  சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க பள்ளிகளுக்கு நிதி

  மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க, 59 பள்ளிகளுக்கு ரூ.1.47 லட்சம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மரம் நடுதல், விழிப்புணர்வு கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்துவது, களப்பணிகளில் ஈடுபடுவதற்காக, பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.1.47 லட்சம் ஒதுக்கப்பட்டது.

  Tuesday, October 23, 2012

  Recruitment of Post Graduate Assistants - Called for C.V Individual Query and Tentative list of Candidates Called for C.V

  அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு

  அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில், எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

  Teacher Eligibility Test 2012 (Supplementary) Initial Key answers for Minority Languages

  Monday, October 22, 2012

  PLUS 2 BIOLOGY, BOTANY MODEL QNS, PREVIOUSLY ASKED QNS - TAMIL & ENGLISH MEDIUM


  அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வு - +2 மாணவர்களின் புகைப்படம் மற்றும் விவரம் அடங்கிய பெயர்ப்பட்டியல் தயாரித்தல் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்.

  தொடக்கக் கல்வி - விஜயதசமியையொட்டி 2012 அக்டோபர் மாதம் முழுவதுமாக சேர்க்கை மாதமாக அறிவித்து சிறப்பு நடவடிக்கை எடுத்து மாணவர்களை சேர்க்க இயக்குநர் உத்தரவு

  EMIS - TEACHERS PROFILE ADDITIONAL FILLING INSTRUCTIONS & CODES

  ஆறாவது ஊதியக் குழு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் காலக்கெடு அக்டோபர் 31 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு.

  அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 9 மற்றும் 11 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2நாள் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி அளித்தால் சார்பாக

  50 ஆண்டுகளுக்கு பின் நிரப்பப்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள்

  தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக இருந்த தலைமையாசிரியர் பணியிடங்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இரு நாட்களில் நிரப்பப்பட்டன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் "ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி" வாழ்த்துச் செய்தி

  பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 1023 உடற்கல்வி உட்பட சிறப்பாசிரியர்களின் நியமனம் இணையதளத்தின் வழியாக கலந்தாய்வின் மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து பணியிடங்களையும் விரைவாக நிரப்பப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர்

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக் கருத்துருக்கள் குறித்து அரசால் எவ்விதமான விதிகளோ அல்லது அரசாணையோ நாளதுவரை பிறப்பிக்கப்பட வில்லை, அதுநாள் வரை காத்திருக்கவும் என மாநிலக் கணக்காயர் விளக்கம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடிதம் மூலம் விளக்கம்.

  Sunday, October 21, 2012

  தொடர் மழை மற்றும் கனமழை காரணமாக கீழ்காணும் மாவட்டங்களுக்கு இன்று 22.10.2012 பள்ளிகள் / கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

  சென்னை - பள்ளிகள் 
  காஞ்சிபுரம் - பள்ளிகள்
  திருவண்ணாமலை - பள்ளிகள்
  திருச்சி -  பள்ளிகள்
  ஊட்டி - பள்ளிகள்
  தஞ்சை - பள்ளிகள்

  அரியலூர்  - பள்ளிகள் / கல்லூரிகள் 

  ஆசிரியர் தகுதி மறுதேர்வு விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

  விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம். 
  ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

  குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை

  குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.

  இடைநிற்றலை தடுக்க தமிழகம், ஒடிசாவில் முன்னோடி திட்டம்

  இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்கும் பணியை, தமிழகம், ஒடிசா மாநிலங்களில், சோதனை முயற்சியாக செயல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு

  கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில், 660 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன; இவற்றில், 2010- 11ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர், பி.எட்., படிப்பை முடித்தனர். இவர்களுக்கு, இதுவரை பட்டம் வழங்கவில்லை.ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழை மட்டும் வழங்கியது.

  கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை

  கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  தமிழகத்தில் B.SC., BIO-CHEMISTRY படித்து விட்டு வேலை வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் B.Ed., முடித்த ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள BIO-CHEMISTRY TEACHER'S ASSOCIATION கடிதம்.

  Saturday, October 20, 2012

  Teacher Eligibility Test 2012 (Supplementary) Initial Key answers for both Paper I and Paper II (Except Minority Languages)

  தமிழக பள்ளிகளுக்கு 6 மாதத்தில் கழிப்பிட வசதி - பள்ளிக் கல்வித்துறை செயலர்

  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்னும் 6 மாதத்தில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.

  மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை

  மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாநிலத் திட்ட இயக்ககம் / மாவட்டத் திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் தொகுப்பூதியம் 01.01.2012 முதல் 15% உயர்த்தி வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களே மேற்கொள்ளலாம் - தமிழக அரசு

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, தூத்துக்குடி,

  தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்: 224 பேர் நியமனம்

  அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

  Friday, October 19, 2012

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, தூத்துக்குடி, அரியலூர், சிவகங்கை மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவு.

  சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை 20.10.2012 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்

  தொடக்கக் கல்வி - மதிப்பிற்குரிய முதன்மை செயலாளர் அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களால் கொண்டு வர வேண்டிய விவரங்கள்.

  2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  கடந்த 2011-12  நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலத்தில் 2011-12 நிதி ஆண்டில் சதவீதம் 8.25

  இடைநிலை ஆசிரியர்களுக்கும், மத்தியஅரசு வழங்கிய ஊதியத்தை வழங்கும் வரை போராட்டம்

  இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை வழங்கும் வரை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் காமராஜ் கூறியுள்ளார்.

  அரசு தேர்வுகள் இயக்கம் - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டம் "NATIONAL MEANS CUM MERITS SCHOLARSHIP" SCHEME டிசம்பர்-2012 விண்ணபங்கள் வரவேற்பது சார்பாக

  கற்றல், கேட்டல் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய விருப்பமா?

  மாணவர் பருவத்தில் அல்லது இளைஞர் பருவத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு, கீச்சு குரல் இருக்கும். பெண்களைப் போல் இருக்கும் அந்த குரலால், அவர்கள் பல இடங்களில் கிண்டலுக்கு ஆளாகி, அவமானமாக உணர்வர். இதுபோன்ற நபர்களுக்கு வாய்ஸ் தெரபி சிகிச்சை தேவைப்படுகிறது.

  கல்வி உதவித்தொகை: டிசம்பர் 30ல் போட்டித் தேர்வு

  மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1ம் தேதி முதல், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  TRB - PG RESULTS / FINAL SPECIAL TRS SELECTION LIST / POLYTECHNIC LECTURERS / ASST PROFESSORS LIST CERTIFICATE VERIFICATION RELEASED

  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் விவரம்.

  திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  Thursday, October 18, 2012

  மேட்டுப்பாளையம் அருகில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் "JOY OF GIVING WEEK " விழா தொகுப்பு.

  தொடக்கக் கல்வி-அனைத்து CEO/DEEOs கலந்து கொள்ளும் ஆய்வுகூட்டம் 22.10.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களால் நடத்தவுள்ளது குறித்த இயக்குனரின் செயல்முறைகள்.

  DEE - EMIS - TEACHERS PROFILE FORMAT, FILLING INSTRUCTIONS MANUAL & POWERPOINT SLIDE SHOW - LATEST

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - பகுதி நேர பயிற்றுனர் இடமாறுதல் செய்ய வழிவகை இல்லை, முழு நேர பயிற்றுனர்களாக மாற்றுவது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என இயக்குனர் அறிவுரை வழங்கி உத்தரவு.

  அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பழைய ஊதிய விகிதத்தில் 151% அகவிலைப்படி 01.07.2012 முதற்கொண்டு உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு.

  மாற்றுத் திறனாளிகளை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து அக்.20-ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

  300 தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு: அதிகாரிகள் தவிப்பு

  மதுரை மாவட்டத்தில், 300 பள்ளிகளில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களை மீண்டும் பெற, பில் தொகை விவரங்களை பெற முடியாமல், கல்வி துறை அதிகாரிகள் தவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில், 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2009ல் இருந்து, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. பல லட்ச ரூபாய் நிலுவையானதால், மின்வாரியம், 2012, ஜனவரியில், பள்ளிகளின் இணைப்புக்களை துண்டித்தது.

  பேராசிரியராக பதவியிறக்கம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர்

  அரசு பி.எட்., கல்லூரியில், மாணவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முதல்வர், அதே கல்லூரியில், பேராசிரியராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரியில், முதல்வர் பணியிடம் காலியானதைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, அன்புச்செழியன் என்பவர், கல்லூரி முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

  தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்கும் உத்தரவு ரத்து

  தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்கும், கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.

  ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி: தேசிய ஆணையம் உத்தரவு

  அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.

  பள்ளிக்கல்வித்துறை - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.

  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் (17.10.2012 அன்று உள்ளவாறு) பதிவிறக்கம் செய்ய...

  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் (17.10.2012 அன்று உள்ளவாறு) பதிவிறக்கம் செய்ய... - CORRECTED PANEL

  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு ஆன்லைன் கவுன்சிலிங், அக்டோபர் 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் 430 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு

  Wednesday, October 17, 2012

  பள்ளிக்கல்வித்துறை - உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக காலி எற்படும் போது தகுதியின் அடிப்படையில் தேவையான பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றிக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு.

  தொடக்கக் கல்வி - அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளி களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளின் விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு.

  10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  பத்தாம் வகுப்பு தனிதேர்வர்கள் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அக்.,15ம் தேதி முதல் அக்.,31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் 46% பள்ளிகளில் கழிப்பிட வசதியில்லை

  அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பள்ளிப் படிப்பை தொடருவதற்கு தயக்கம் காட்டுவது, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு  செய்துள்ளதாகவும் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று

  டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

  சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

  தொடக்கக் கல்வி துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்

  தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த, 2008- 09, 2009- 10, 2010- 11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.

  ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாவிட்டால் பள்ளிகளை மூடுங்கள்

  துப்புரவு தொழிலாளர்களை விட, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது; நியாயமான சம்பளம் வழங்க முடியாவிட்டால், பள்ளிகளை மூடிவிடலாம்" என, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  கல்வித்துறையில் தகவல் மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை

  தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.

  தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களை தத்தெடுக்க உத்தரவு

  அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

  Tuesday, October 16, 2012

  முதன்மைக் கல்வி அலுவலர்கள் 6 பேர் இடமாற்றம் மற்றும் 3 மாவட்டக் கல்வி அலுவலர்கள் சி.இ.ஓ., களாக பதவி உயர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

  முதன்மைக் கல்வி அலுவலர்கள் 6 பேர் இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. கோவை மாவட்ட சி.இ.ஓ., திரு. இராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம்...

  மாற்றம் செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் விவரம் மற்றும் புதியதாக பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் பதிவிறக்கம் செய்ய...

  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு  செய்துள்ளதாகவும் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - 20.10.2012 அன்று நடைபெற உள்ள உள்ளடங்கிய கல்வி குறுவள மையப் பயிற்சிக்கான கால அட்டவணை, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் மற்றும் POWERPOINT பயிற்சி கட்டகம்

  ஊதியக் குழு - அரசு ஊழியரின் பழைய பதவியின் ஊதிய விகிதம், தர ஊதியமும் புதிய பணியிடத்தின் ஊதிய விகிதம், தர ஊதியமும் ஒத்த நிலையில் இருந்தாலும் 3% ஊதிய உயர்வு அளிக்க உத்தரவு.

  TNTET - OCTOBER - 2012 EXAMINATION PAPER - I & II TENTATIVE ANSWER KEYS RELEASED

  10 நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

  ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர்.

  அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக 143 பேர் பதவி உயர்வு

  பள்ளிக் கல்வித்துறை, நேற்று நடத்திய பதவி உயர்வு கலந்தாய்வில், 143 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். காலியாக உள்ள, 143 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை இணையதளம் வழியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், நேற்று கலந்தாய்வு நடந்தது.

  6 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இட மாற்றம், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

  முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன் சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 மாவட்ட கல்வி

  2012 ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்

  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பிறகே, ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

  TNTET - OCTOBER - 2012 EXAMINATION PAPER - I & II TENTATIVE ANSWER KEYS RELEASED

  நோபல் பரிசு - 1901ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல் துறை வாரியாக

  தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் விவரங்கள் (TEACHERS PROFILE) குறுந்தகட்டில் பதிவு செய்தல் சார்ந்த கூட்டம் 18.10.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

  தொடக்கக் கல்வி - 2011-12 ஆம் கல்வியாண்டு - 3 முதல் 5 வகுப்பு வரை ரூ.500/- மற்றும் 6ஆம் வகுப்பு ரூ.1000/- SC/ ST பெண் குழந்தைக்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரத்தை அளிக்க மாநில கணக்காயர் அலுவலகம் இயக்குனரிடம் கேட்டு கொண்டுள்ளது.

  Monday, October 15, 2012

  தொடக்கக் கல்வி - விலையில்லா புத்தகப் பைகள் வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை கோருதல்.

  தொடக்கக் கல்வி - மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப் பட்டியல் கோருதல்.

  தொடக்கக் கல்வி - பாடநூல்கள் விநியோகம் செய்த கூடுதல் செலவினம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் விவரம் கோருதல்.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர்களுக்கான உள்ளடங்கிய கல்வி ஒரு நாள் பயிற்சி கட்டகம்

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கட்டகம்

  தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்வது குறித்து கூட்டமர்வு (JOINT SITTING MEETING) நடத்துதல் சார்பு.

  அப்துல் கலாம் கடந்துவந்த பாதை...

  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், இந்தியாவின் ‘ஏவுகணை மனிதர்’ என அழைக்கபடுபவருமான அப்துல் கலாம், 1931ம் ஆண்டு அக்.,15ம் தேதி, தமிழகத்தின் தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ‘ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம்’.

  SCERT - D.TED., OBSERVATION & TEACHING PRACTICE FORMS

  2013 ஜூனில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தபடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு என்று 4 மாதங்களில் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

  ஆசிரியர் தகுதி மறுதேர்வு: எளிமையாக இருந்தது வினாத்தாள்!

  ஆசிரியர் தகுதி மறுதேர்வை தமிழகம் முழுவதும் 1,094 தேர்வு மையங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 11.8 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.

  நவம்பர் இறுதியில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள்

  ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கடுத்த ஒரு மாதத்தில் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

  தமிழ்நாடு முழுவதும் 6.5 லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர் 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

  தமிழ்நாடு முழுவதும் நேற்று 61/2 லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்கள். 86 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்தியா முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 150 மார்க்குக்கு கேள்வி கேட்கப்பட்டு அதில் 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி என்றும் கூறப்பட்டது.

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - 5 ஆண்டுக்கு மேல் ஆசிரியர் பயிற்றுநராக பணிபுரிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு இறந்து 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் எந்தவித பணப்பலங்களும் வழங்கப்படவில்லை.

  Sunday, October 14, 2012

  ஆசிரியர் தகுதித் தேர்வு: கணிதப்பிரிவு மாணவர்கள் ஏமாற்றம்

  இன்று நடந்த டி.இ.டி., தேர்வில் கணித பாடத்தில் கேள்விகள் குறைக்கப்பட்டதும், கடினமாக இருந்ததாலும் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

  SARVA SHIKSHA ABHIYAN - HANDWRITING SKILL TRAINING ON 21.11.2012 TO 28.11.2012 AT RAIPUR REG

  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றம்.

  வேலூர் மாவட்டத்தின்  முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்த வந்த திரு .பொன். குமார் அவர்கள் கிருஷ்ணகிரி அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். திரு.செங்குட்டவன் அவர்கள் வேலூர் புதிய முதன்மை

  Saturday, October 13, 2012

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - புதியதாக எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் மற்றும் ஏணிப்படிகள் மாற்றங்கள் குறித்து இரு நாள் முன் ஆயுத்த கூட்டம் அனைத்து DPC / ADPCக்களுக்கு 30 & 31.10.2012 திருச்சியில் நடத்த உத்தரவு.

  11.10.2012 அன்று நடைபெற்ற மதுரை ஆய்வு கூட்டத்தில் தெரிவித்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய தொடக்கக் கல்வி இயக்குநரின் 30 ஆலோசனைகள்

  SSA - 2 DAYS STATE LEVEL RESIDENTIAL SMC TRAINING FOR BRTEs FROM EACH DISTRICT ON 16.10.2012 & 17.10.2012

  TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET 12) SUPPLEMENTARY EXAMINATION OCTOBER - 2012 - LATEST INSTRUCTIONS

  ஆசிரியர் தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்

  ஆலோசனைகள்: * நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிப் பாடமான தமிழையும், விருப்பப் பாடமான, அறிவியல் அல்லது சமூக அறிவியல், விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நிழலிட்டு காட்டுவது அவசியம

  பத்தாம் வகுப்பு நேரடி தனி தேர்வர் விண்ணப்பங்கள் : ஆயிரக்கணக்கில் நிராகரிப்பு

  தமிழகம் முழுவதும், இம்மாதம், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்க உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, 10ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் செய்முறை பயிற்சியில் பங்கேற்காததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.

  அதே போல் மாணவர் சேர விரும்பும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் காரணமாக சேர்க்க மறுத்தாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு.

  தமிழக அரசின் கடித எண். 32388 / C2 / 2012, நாள்.05.10.2012 பதிவிறக்கம் செய்ய...

  தொடக்கக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி 4 ,5 மற்றும் 6ஆம் வகுப்பு மாநில அளவிலான ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விவரம் ஒன்றிய வாரியாக 15.10.2012க்குள் இணை இயக்குனருக்கு EMAIL மூலம் அனுப்ப உத்தரவு.

  தொடக்கக் கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2012 - 4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி விவரங்கள் 29.10.2012க்குள் நேரடியாக சமர்பிக்க இயக்குனர் உத்தரவு.

  தொடக்கக் கல்வி - தனியார் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பள்ளி பாதுகாப்பு மற்றும் நிரந்திர / தற்காலிக அங்கீகாரம் புதுபிக்கப்பட்ட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு.

  Friday, October 12, 2012

  அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு ஊட்டுப் பதவியிலிருந்து பதவிஉயர்வு அளிக்க 01012012 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் - தொடர்ச்சி சுழற்சிப் பட்டியல் வெளியீடு.

  பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

  பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார். மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

  அண்ணாமலை பல்கலைக்கழக பட்டப் படிப்பு: அரசு புதிய உத்தரவு

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

  மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் - குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு - கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க உத்தரவு.

  அறிவியல் செய்முறை பயிற்சி: பதிவு செய்ய அக்டோபர் 31 இறுதிநாள்

  அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள், மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பெற்று வந்த பயன்கள் அனைத்தும் பறிக்கப்பட்ட அவலநிலை ஆகியவை இந்த பட்டியல் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம் - வேறுபாடுகள்

  புதிய ஓய்வூதிய திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம் - வேறுபாடுகள் பதிவிறக்கம் செய்ய... 

  நண்பர்களே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த உங்களின் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கவும் உங்களின் கருத்துகள் எங்களுக்கு உதவும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  Thursday, October 11, 2012

  24.09.2012 அன்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற EMIS தொடர்பான கூட்ட நடவடிக்கை குறிப்பு

  Higher Education – Considering the P.G. Programmes M.Sc., Mathematics with Computer Application (CBCS) and Five Year Integrated M.Sc., Mathematics with Computer Application awarded by Annamalai University as equivalent to M.Sc., Mathematics for the purpose of Employment in Public Service – Resolution of the 34th Equivalence Committee Orders - Issued.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - உலக கை கழுவும் தினம் (Global Hand Washing Day) அக்டோபர் 15 அன்று கொண்டாட உத்தரவு.

  பள்ளிக்கல்வித்துறை - இளநிலை உதவியாளர் முதல் நேர்முக உதவியாளர் வரை உள்ள அனைத்து வித பதவியில் 30.09.2012 அன்று நிலவரப்படி பணியாற்று பவர்கள் விவரம் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய கோரப்பட்டுள்ளது.

  Higher Education – Considering the P.G. Programme M.A. (English and Communication) Five Year Integrated awarded by Annamalai University as equivalent to M.A., (English) for the purpose of employment in public service – Resolution of the 34th Equivalence Committee– Orders - Issued.

  Public Services – Equivalence of Degree for the purpose of appointment in Public Services – 35th Equivalence Committee meeting Resolution – Orders - Issued.

  ஆசிரியர் பணி நியமனத்திற்கு புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி

  இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு : அக்டோபர் 14ந் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் 28ஆம் தேதிக்கு மாற்றம்

  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த சிறப்பு முகாம் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

  குரூப் 2 தேர்வு: 3,472 பணியிடங்களுக்கு அக்டோபர் 15 முதல் கலந்தாய்வு

  குரூப் 2 தேர்வு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,472 பேருக்கு வரும் 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  அக்டோபர் 14ல் டி.இ.டி. மறுதேர்வு: 6.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்

  ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் 14ம் தேதி நடத்தப்பட உள்ள, டி.இ.டி. மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 20.10.2012 அன்று குறுவளமையப் பயிற்சி (CRC) நடத்துதல் சார்பு.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - SABL 1 முதல் 4 வகுப்புகள் நடத்துவதும் குறித்தும், ஏணிப்படிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் ஒரு நாள் பணிமனை 18.10.2012 அன்று சென்னையில் நடக்க உள்ளது.

  முறைகேடின்றி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்

  அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார். ஏற்கனவே நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, அவர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்.

  பள்ளிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் சேகரிப்பு: உண்மை நிலை வெளிவரும்

  தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

  ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று புத்தகங்கள்

  அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள் வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமலில் உள்ளது.

  மொழிப்பாடம் கற்பிப்பதில் முரண்பாடு: ஆங்கிலத்தில் தடுமாற்றம்

  தமிழக கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப் பாடங்கள் கற்பிப்பதில் முரண்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு உயர்கல்வி மன்றப் பரிந்துரைகளை, சில பல்கலைகள், நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

  அரை வேக்காடு சாதம், கேசரிப்பூ நிறத்தில் சாம்பார்: சத்துணவின் அவலநிலை

  பசை போல் அரைவேக்காடு சாதம், கேசரிப்பூ நிறத்தில் சாம்பார் ஆகியவை தான், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்றில், மாணவ, மாணவியருக்கு சத்துணவாக வழங்கப்பட்டு வருகிறது.

  திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறிய கிராமம் சாலை. அங்குள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒன்று முதல், ஐந்து வகுப்பில், எளாவூர், சாலை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த, 49 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

  மதியம், 12:45 மணிக்கு வழங்கபட வேண்டிய சத்துணவு அப்பள்ளியில், 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வழங்கப்படுகிறது. பசியில், தட்டுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு அந்த பள்ளியின் மாணவ, மாணவியர் தள்ளப்பட்டு உள்ளனர்.

  Wednesday, October 10, 2012

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - உச்சநீதிமன்ற உத்தரவின் படி அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய இயக்குனர் உத்தரவு.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் 20.10.2012 அன்று குறுவளமையப் பயிற்சி (CRC) நடத்துதல் சார்பு.

  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

  இரண்டு ஆண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடல்

  தொழில் முறை கல்விக்கு ‌ஒரு பொற்காலம் என்பதை குறிப்பிடுகையில் புதிதாக நூறு கல்வி நிறுவனங்கள் உருவாகின்றன. அதே வேளையில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் 2011லிருந்து 225 பி-கிரேடு பள்ளிகளும் 52 பொறியல் கல்லூரிகளும் மூ‌டிவிட்டன என தெரியவந்துள்ளது.

  தொடக்கக் கல்வி - மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லங்கள் மற்றும் பயனடையும் சிறார்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி போன்ற விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

  அனைவருக்கும் கல்வி இயக்கம் - RTE நடைமுறைப் படுத்தலுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் SC / ST மற்றும் நலிவுற்ற பிரிவினருக்கு மாவட்ட அளவிலான பணிமனை 15.10.2012 அன்று நடத்த உத்தரவு.

  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் "ரேங்க் பட்டியல்" புதிய வழிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படுகிறது.

  ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,' தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க் பட்டியல்" புதிய விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது.

  தொடக்கக் கல்வி - மதுரை மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் 11.10.2012 அன்று நடைபெறுவதுகுறித்த இயக்குநர் செயல்முறைகள்

  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

  நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்

  அக்டோபர் மூன்றாவது வாரத்தில் குரூப் 4-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

  குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை, தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடக்கிறது.

  ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழக அரசு ஊழியர்கள் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம்

  ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம்

  தொழிலாளர்களின் கோரிக்கையை அடுத்த ஆண்டு மே 31ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று ரயில்வே தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

  பள்ளிக்கல்வி - ITC போன்ற புகையிலை நிறுவனங்கள் நடத்தும் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் மாணவ / மானவவியர்கள் கலந்துகொள்ளக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.