Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 31, 2012

    SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி.

    மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012
    முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.
    இடம் : Karl Kubel Institute for Development of Education, ஆனைகட்டி ரோடு, மாங்கரை, கோவை.
    நாள் : 04.06.2012 முதல் 09.06.2012.

    போலிகளை உருவாக்க முடியாத சிறப்பம்சம் கொண்ட மதிப்பெண் சான்றிதழ்கள்!

    பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், சில சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், பள்ளிகளில், ஒரே நாளில் லட்சக்கணக்கான மாணவர்கள், பள்ளிகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கு முயன்றதால், இணையதளம் முடங்கியது.

    தொடக்கக் கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 15 க்கு பிறகு நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    2012 - 2013ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தமிழக அரசு கடந்த மே 18 ல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பொது மாறுதல் சார்பான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து முதற்கட்டமாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் தலைமையில் 8 மாவட்டங்களில் தனது நேரடி பார்வையின் கீழ் நடந்த தொடக்கக் கல்வி துறையை சார்ந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில்

    பதவி உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்புகள் மீது தமிழக அரசின் தெளிவுரை கேட்டு கடிதம்?

     தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த கல்வியாண்டில் தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவை அடுத்த சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தற்போது 38 உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசிடம் தெளிவுரை கேட்டு இருப்பதாகவும் அரசின் தெளிவுரை பெறப்பட்ட உடன், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும்  தொடக்கக் கல்வி துறையை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை.

    மே 29 முதல் 31 வரை நடைபெறுக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்.

    புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ஜூன் முதல் தேதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது ஜூன் 4 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னி வெயில் முடிந்த பிறகும் யூனியன் பிரதேசங்களில் வெப்பம் தணியாமல் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Teacher Eligibility Test - English Question Answer -2

    Choose the suitable collective nouns
    * A---------------- of birds flew high on the sky
    (a) group (b) Feather (c) number (d) flight
    * We saw a --------------- of sheep on our way home
    (a) Flock  (b)flight (c) fleet (d) herd
    * The---------------of pupils are listening attentively to the teacher.
    (a) School (b) unit  (c) club (d) class
    * Police have arrested a ---------------- of thieves.
    (a) Gang (b) gathering (c) crowd (d) group
    Form abstract nouns selecting from the alternatives below:
    * Brother

    IGNOU B.Ed Hall ticket June 2012 Term-End Examination.

    அனைத்து வகை மாநில அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறதா என கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு.

    தமிழ்நாடு அரசு கடித எண். 19032 / N / 2012 - 1, நாள். 29.5.2012.
    30.05.2012 மற்றும் 31.05.2012 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல் உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் மத்திய அலுவலகம் / மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட திட்டமிட்டு  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    எனவே அனைத்து மாநில அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறதா என கண்காணித்து அரசுக்கு அறிக்கை பள்ளிக்கல்வித் துறையை சார்ந்த அனைத்து இயக்குனரகங்களுக்கும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Wednesday, May 30, 2012

    Teacher Eligibility Test - English Question Answer -3

    * '' The train arrived'' is a -------------- sentence pattern
    (a) S+V (b) S+V+C+A (c) S+V+A (d) S+V+O
    * ''India won the match'' is a --------- sentence pattern
    (a) S+V (b) S+V+C  (c) S+V+O (d) S+V+O+C
    *  In hints development, give a sitable -----------------------
    (a) sub -division (b) title (c) name (d) division
    *  The second major elements of speech is ------------------
    (a) intonation (b) stress (c) pause (d) None of these

    1 முதல் 8ம் வகுப்பு வரை ஒரே புத்தகம்.

    தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் தேர்வு மற்றும் மதிப்பெண் விஷயத்தில் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்று 3 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதித்தேர்வில் ஆண்டு முழுவதும் படித்த அனைத்துப் பாடங்களையும் படித்து தேர்வு எழுத வேண்டும். இதனால், மாணவர்கள் அனைத்துப் புத்தகங்களையும் தினமும் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் தேர்வுச்சுமையும் இருந்தது. இந்நிலையை  போக்க இந்தக் கல்வி ஆண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன.

    ஏற்கனவே அறிவித்தபடி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு கிளம்ப மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.

    DME: Counselling for PG / MDS Courses in Self Financing Institutions.

    COUNSELLING FOR MEDICAL / DENTAL POST GRADUATE SEATS IN SELF FINANCING INSTITUTIONS 2012 - 2013 SESSION.
    To Download DME: Counselling for PG / MDS Courses in Self Financing Institutions Click Here...

    துப்புரவு பணியாளர் பணிக்குபதிவு மூப்பு விவரம் அறிவிப்பு.

    தேவகோட்டை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்ட துப்புரவு பணியாளருக்கான பதிவு மூப்பு விவரம்:எழுத படிக்க தெரிந்து, துப்புரவு பணிக்கு பதிவு செய்தவர்கள் மட்டும். 1.7.2012 ன்படி, எஸ்.சி.,க்கு 35 வயது, எஸ்.டி.,க்கு 32 ,பொது பிரிவினருக்கு 30, பணி விதிகள் 12 "டி' படி வயது சலுகை உண்டு.

    பொறியியல் கல்விக் கட்டணம் நிர்ணயம்.

    தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கட்டாயம் லேப்டாப் உண்டு!

    கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உறுதியாக "லேப்டாப்" வழங்கப்படும், என, முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
    கடந்த சட்டசபை தேர்தலின்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக "லேப்டாப்" வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அளவில், கடந்த ஆண்டு (2011) பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டது.

    சட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் - ஜூன் 30 ம் தேதி துவங்குகிறது!

    பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்புக்கு, மாணவர் சேர்க்கை "கவுன்சிலிங்", ஜூன் 30ம் தேதி துவங்குகிறது.
    இதுகுறித்து, அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் கூறியதாவது: சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012 - 13ம் கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., (ஹானர்ஸ்), பி.எல்., பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    Tuesday, May 29, 2012

    இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - முதன்மை பாடத்தினை கொண்டு பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - RTI கடிதம் மூலம் தெளிவுரை.

    பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
    ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011   

    பொருள் : இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு.
    பார்வை : உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                          **************
          பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.
    வினா எண்.1
                         அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள்.  என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?

    பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு : ஆன்லைனில் நாளை துவக்கம்.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தது. கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் மதிப்பெண் பட்டியில் வழங்கும் போது சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆன்லைன் பெயர் பதிவு செய்யும் முறை குறித்து பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

    தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.06.2012 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு.

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.
    01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
    மேலும் அரசாணை எண். 193-ன் படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியலை பதவி வாரியாகவும் பாடவாரியாகவும் கொண்டு வர உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலை ஆன்லைன் விண்ணப்பம் பெற

    அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் வழங்கும் முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் எம்.பி.ஏ., எம்சிஏ., எம்.எஸ்சி. (ஐடி), எம்.எஸ்சி (கணினி) உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணமான ரூ.650க்கான டிடியை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெறுபவர்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர். அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை. இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி-களில் சேர புதிய நடைமுறைகள்: சிபல்

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர, 2013ம் ஆண்டு முதல், புதிய முறையிலான பொது நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். மேலும், ஒருவரின் பிளஸ் 2 மதிப்பெண்களும் கணக்கில் எடுக்கப்படும்.
    இத்தகவலை தெரிவித்திருப்பவர், மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்கூறிய எந்த கவுன்சில்களிலிருந்தும், இந்த புதிய முடிவிற்கு எதிர்ப்பு வரவில்லை.

    டி.இ.டி. தேர்வு ஜுலை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    தேதி மாற்றம்
    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு: ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்" என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.

    Sunday, May 27, 2012

    பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மே 29 முதல் 31 வரை நடைபெறவிருக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் எட்வின் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

    மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பிளஸ் 2 மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக விடைத்தாள் நகலை முழுமையாக பாட ஆசிரியர்களிடம் கொடுத்து ஆராய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  மறுமதிப்பீடு என்பது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணை மட்டும் ஆராய்வதில்லை. முழு விடைத்தாளிலும் வழங்கப்பட்ட மதிப்பெண்ணை ஆராய்வது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    தீனபந்து ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை.

    வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரமத்தில் 2012-2013ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த ஆசிரமத்தில் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இங்கு ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    திருவண்ணாமலையில் டி.ஆர்.பி. தேர்வு மையங்கள் மாற்றம்.

    திருவண்ணாமலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன.  இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான் வெளியிட்டுள்ள செய்தி: ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடிப் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.

    Inauguration of the awareness campaign and exibition on HIV/AIDS in the Red Ribbon Express at Chennai Central Railway Station.


    பள்ளிக்கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - தமிழக அரசு ஆணை.

    அரசாணை (நிலை) எண்.121 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.17.05.2012. 
    1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.

    Saturday, May 26, 2012

    பாரதியார் பல்கலையின் எஸ்இடி தேர்வு முடிவு.

    கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய மாநில  தகுதித் தேர்வு (எஸ்இடி)க்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் பதிவு எண்களை பாரதியார் பல்கலைக்கழகம் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளது.

    பள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - ஜூன், ஜூலை 2012, மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு - மாணவர்களுக்கு SH படிவம் வழங்க உத்தரவு.

    அரசு தேர்வுகள் இயக்க இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 011936 / எச்1 / 2012, நாள். 16.05.2012
    பள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - ஜூன், ஜூலை 2012, மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு - மாணவர்களுக்கு SH படிவம் வழங்க உத்தரவு.
    தேர்வு கட்டணம் பின்வருமாறு.ஒரு பாடத்திற்கு                    : ரூ.85/-
    இரண்டு பாடங்களுக்கு       : ரூ. 135/-
    மூன்று  பாடங்களுக்கு        : ரூ. 185/-
    நான்கு  பாடங்களுக்கு         : ரூ. 235/-
    ஐந்து  பாடங்களுக்கு             : ரூ. 285/-
    ஆறு பாடங்களுக்கு               : ரூ. 335/-

    பள்ளிக்கல்வி - இலவச மடிக்கணினி - +2 மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் பதிவு செய்வது குறித்து அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 476 / வி2 / இ1 /2011, நாள். 21.5.2012.
    பள்ளிக்கல்வி - இலவச மடிக்கணினி - 2011 - 12ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது - +2 மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் பதிவு செய்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவக்கம்.

    தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் சட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியாகும் மாணவர்கள், கலந்தாய்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.சென்னையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    TO DOWNLOAD ADMISSION NOTIFICATION 2012 - 2013 CLICK HERE.... 

    CANDIDATES MAY ALSO APPLY THROUGH ONLINE CLICK HERE....

    திருவாரூரில் ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு - டிஆர்பி தேர்வு மையம் இட மாற்றம்.

    திருவாரூரில் ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் மையம் மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரும் 27}ம் தேதி நடத்தப்படவுள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடி போட்டித் தேர்வு நடைபெறும் திருவாரூர் மாவட்ட மையங்களில் ஒன்றான

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகம்.

    பொறியியல் படிக்க எந்த பிரிவில் இடம் கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

    ஜிப்மரில் 9 புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள் அறிமுகம்.

    புதுச்சேரி ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக, இயக்குனர் ரவிகுமார் கூறினார்.
    இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75லிருந்து 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பால், 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது, 40 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள், 88லிருந்து 124 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

    CCE பயிற்சி - விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - இயக்குநர் உத்தரவு.

    மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 25.05.2012.
    ஆசிரியர்கள்  எந்த  மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தற்போது எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால் அந்த மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்.
    தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

    Friday, May 25, 2012

    டி.இ.டி., தேர்வில் யாருக்கு விலக்கு? ஆசிரியர் பலரும் குழப்பம்.

    டி.இ.டி., தேர்வில் இருந்து,  யார், யாருக்கு விலக்கு என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான விளக்கம் அளிக்காததால், நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
    ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்த, அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும் என, டி.ஆர்.பி., ஆரம்பத்தில் தெரிவித்தது. அறிவிப்பு தற்போது, என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை என, 22ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

    தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 312 நாள். 25.05.2012
    2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர், சி றப்பு ஆசிரியர்கள், ஆரம்ப / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட மாறுதல் வழங்கும் பொது மாறுதல்  கலந்தாய்வுகள் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது. 
    இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை - 600 044
    நாள் : 02.06.2012 முதல் 07.06.2012.
    பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் வாரியாக அட்டவணையின் படி நடைபெறவுள்ளது. 
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு.  

    SCERT - CCE TRAINING PROGRAMME SCHEDULE FOR UPPER PRIMARY HMs & TRs.

    State Council of Educational Research and Training.
    2Days CCE Training for Upper Primary HMs & TRs.
    First Spell      : 28th and 29th of May.
    Second Spell : 30th and 31st of May.
    2 Days Programme :-
    Day I            : 9.30am to 5.30pm.
    Day II           : 10.00am to 5.00pm.

    எம்.பி.பி.எஸ்.: சுயநிதி அரசு ஒதுக்கீடு கட்-ஆஃப்.

    எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,460 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

    குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

    குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை 9.5 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை, ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
    எனவே, கடைசி தேதிக்குள், விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உயரலாம் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
    குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகளில், 10 ஆயிரத்து 718 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில் போட்டித் தேர்வு நடக்கிறது.

    Thursday, May 24, 2012

    பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக ஆணை வெளியீடு.

    அரசாணை (டி1) எண். 158 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.18.05.2012
     பள்ளிக்கல்வி -  2012 - 13 ஆசிரியர்  பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து  தமிழக ஆணை வெளியிட்டுள்ளது.
    உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்த பின்னரே பொது மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி நிரவல் செய்யும் போது தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

    6 பாடங்களில் தோல்வி அடைந்தாலும் துணை தேர்வு எழுதலாம் : அரசு.

    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஜுன் மாதத்திலேயே தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.பொதுவாக கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் இந்த துணைத் தேர்வை எழுதி வரும் கல்வியாண்டிலேயே உயர்கல்வியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால், இந்த ஆண்டில் இருந்து 6 பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும் துணைத் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பிளஸ் 2 உடனடித் தேர்வுகள் துவக்கம் - அரசு தேதி அறிவிப்பு.

    பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. ஒரு லட்சம் பேர், இத்தேர்வை எழுதுகின்றனர்.
    ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்கள் தேர்வெழுதியதில், 86.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 870 பேர் தோல்வி அடைந்தனர்.

    தொடக்கக்கல்வித் துறையை சார்ந்த தற்காலிக ஆசிரிய பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு ஆணை.

    அரசாணை எண். 130, பள்ளிக்கல்வித்துறை நாள்.17.04.2012
    தொடக்கக்கல்வித் துறையை சார்ந்த 21 தமிழ் பட்டதாரி, 25 பட்டதாரி தலைமை ஆசிரியர் மற்றும் 100 இடைநிலை ஆசிரியர் தற்காலிக ஆசிரிய பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    CCE பயிற்சி 6,7,8 வகுப்பு அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள தமிழக அரசு உத்தரவு.

    தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012.
    அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மாறும் முழுமையான மதீப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது. 
    எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
    தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. பதிவிறக்கம் செய்ய...
    இது குறித்து செய்தி நமது இணையதளத்தில் நேற்றே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நேற்றைய செய்தியை பார்க்கவும்.

    எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் 198.50.

    தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேர கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  சென்னை உள்பட மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,695 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர ஒவ்வொரு ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருந்தது.

    மனச்சுமை போக்கும் முப்பருவ பாடப் புத்தகங்கள் ஜுன் 1 முதல் விநியோகம்!

    பக்கத்துக்கு பக்கம் வண்ண கலரில், மாணவர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முப்பருவ முறை பாடத்திட்ட புத்தகங்கள், ஜூன் 1ம் தேதி முதல் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.
    ஜூன் முதல் பள்ளி கல்வி துறையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ முறை கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்படி மூன்று பருவங்களுக்கான பாடத்திட்டங்களில் தற்போது முதல் பருவத்துக்கான (ஜூன் முதல் செப்.,வரை) பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    பொறியியல் படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை...

    இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தால் போதும், கார்ப்பரேட் நிறுவனத்தில் எக்கச்சக்க சம்பளத்தில் வேலை கிடைத்தது போன்ற மனப்பாங்கு, இன்றைய மாணவர்களையும், பெற்றோரையும், இன்ஜினியரிங் படிப்பு மீது, அதீத மோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கடந்தாண்டில், இன்ஜினியரிங் முடித்த சுமார், 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை.

    Wednesday, May 23, 2012

    CCE TEACHERS' MANUAL FOR UPPER PRIMARY ENGLISH STD VI TO VIII - TERM 1

    தொடக்கக் கல்வி - ஆங்கில வழி இணைப்பள்ளிகள் - ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி தெரிவு செய்ய உத்தரவு.

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 11640 / இ1 / 2012, நாள். 21.05.2012
    முதல் வகுப்பில் அதிக மாணவர்களை எண்ணிக்கை கொண்ட ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி வீதம் பள்ளிகளை தெரிவு செய்து விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி 
    அலுவலர்களுக்கும்  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

    மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம்.

    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று முதல் மே 25ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் இடங்களில் நீண்ட

    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்வு.

    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயருகிறது. புதன்கிழமை இன்று கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் அரசு இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு புதன்கிழமை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இது குறித்து சூசகமாகச் சொல்லியுள்ளார். மேலும், விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்றும்

    ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவகாரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு ஆணை.

                                                                         திருத்தம்  
    நிதித்(ஓய்வூதியம்) துறை அரசாணை எண். 165 நாள்.21.05.2012
    ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவகாரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் இவ்வாணை வெளியிடப்படும் நாளிலிருந்து வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.

    மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 15.05.2012
    தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை  ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.
    பயிற்சி நடைபெறும் நாள். 28.05.2012 முதல் 31.05.2012 வரை
    பயிற்சி நடைபெறும் இடம் : நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம்.
    பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இடம் அனைத்து வசதிகளுடன் (குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமுள்ள பயிற்சியறை) உள்ளதாக இருத்தல் வேண்டும்.
    இப்பயிற்சிக்கு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிற்றுவிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாது அழைக்கப்பட வேண்டும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு : கணிதம் வினா-விடை.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது கணிதப் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.  
    இயல் எண்கள் :Natural Numbers 
    1. 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
    2. இயல் எண்களின் கணம் N என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
    3. N = {1,2,3,4,5... } என்பது இயல் எண்களின் கணமாகும். 
    முழு எண்கள் : Whole Numbers 
    4.        0 வுடன் இயல் எண்களைச் சேர்க்கக் கிடைப்பது முழு எண்களாகும். அனைத்து முழு எண்களின் கணத்தை W என்ற எழுத்தால் குறிப்பர்.
    5. W  = {0,1,2,3,4,5... } என்பது முழு எண்களின் கணமாகும். 
    முழுக்கள் : 
    6. முழு எண்கள் மற்றும் குறை எண்கள் சேர்ந்த தொகுப்பு முழுக்கள் என அழைக்கப்படும். 
    7. முழுக்கள் என்பது Z என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
    8.  Z = {.... -2, -1, 0, 1, 2,... } என்பது முழுக்களின் கணமாகும். 
    முழுக்களின் கூட்டல்
     9. இரு முழுக்களைக் கூட்ட கிடைப்பது ஒரு முழு கூட்டல் ஆகும்.
    10. முழுக் கூட்டலுக்கு உதாரணம் 8+4=126+0=6 
    முழுக்களின் கழித்தல்
    11. ஒரு முழுவிலிருந்து மற்றொரு முழுவைக் கழிக்க, இரண்டாவது முழுவின் கூட்டல் எதிர்மறையான முதல் எண்ணுடன் கூட்ட கிடைப்பது
    12. உதாரணம்:(-8) - (-5) = (-8) - (-5) = - 3 6-(-2) = 6-(-2) ன் எதிர்மறை = 6 + 2 = 8 
    முழுக்களின் பெருக்கல் 
    13. முழு எண்களின் கணத்தில் பெருக்கலானது தொடர் கூட்டலாகும். (-15) x3 = -(15x3) = - 45
    14. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ரூ.2400. 40 தொலைக்காட்சி பெட்டியின் விலை என்ன?2,400 x 40 = 96,000 
    15. பூஜ்ஜியப் பெருக்கல் : பூஜ்ஜியமில்லாத ஏதேனும் ஒரு எண்ணை பூஜ்ஜியத்தால் பெருக்கக் கிடைப்பது பூஜ்ஜியமாகும்.5 x 0 = 0
    16. பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்சுருக்குக 2 / 5 + 3 / 52 / 5 + 3 / 5 = (2+3) / 5 = 5 / 5 = 1
    17. கண்டுபிடி:(2 / 3) / (-5 / 10) = 2 / 3 / (-1 / 2)= 2 / 3 x ( - 2 / 1) =  2 / 3  x (-2)  =  -  4 / 3 
    18. மிகை முழுக்கள் = 1, 2, 3, 4, 5, 6..
    19.  குறை முழுக்கள் = -1, -2, -3, -4, -5, -6..
    20. எல்லாக் குறையற்ற முழு எண்களையும் பெருக்கலாம், கூட்டலாம்.
    21. பூஜ்ஜியத்தை தவிர எல்லாக் குறையற்ற முழு எண்களுக்கும் முன்னி உண்டு.
    22.ஒரு எண் 2 ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.
    23. 2, 4, 6, 8, 0ல் முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்
    24. 1, 3, 5, 7, 9,ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்
    25. பகு எண் : 2க்கும் மேற்பட்ட எண்களால் வகுக்கப்படும் எண் பகு எண். 4, 6, 8
    26. பகா எண்: 1, 2,க்கு மேற்பட்ட எண்களால் வகுக்கப்பட முடியாத எண்கள் பகா எண். 3, 5, 7, 11
    27. 1 மற்றும் அந்த எண்ணால் மட்டுமே வகுக்கப்படும் எண்கள் பகா எண்கள் ஆகும். மற்ற எண்கள் பகு எண்கள் ஆகும்.
    28. 1 என்பது பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல. 1 இயல் எண் ஆகும்.
    29. 1க்கும் 100க்கும் இடையே உள்ள பகா எண்கள் பின்வருமாறு 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 41, 43, 47, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97
    30.   பகு எண்ணா? பகா எண்ணா?
    31. 121 = 11 x 11க்கு கீழ் உள்ள பகா எண்கள்2, 3, 5, 7, 11 இதில் 121 ஐ 11 வகுக்கிறது. எனவே 121 பகா எண் அல்ல. 121 ஓர் பகு எண் ஆகும்.வாழ்வியல் கணிதம்
    32. 120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால் புத்தகத்தில் எத்தனை பக்கங்களிருக்கும்? (120  x  45 ) / 24  =  45 x 120  / 24  =  45 x 5 = 225   225 பக்கங்கள் இருக்கும்.
    33.ஒரு பணியாளர் ரூ.11,250 ஐ ஊக்கத் தொகையாகப் பெறுகிறார். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 15% எனில் அவரது மாத வருமானம் என்ன?மாதவருமானம் = x x =  ஊக்கத்தொகை x 100 / 15 x ( 1 / 12 மாதங்கள்) = 11250 x 100 / (15x12) = 6250எனவே மாத வருமானம் = ரூ.6250
    34. 250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும், மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250கூடைப் பந்து             = 55இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250x100=22%எறிபந்து = 6363/250  எனக் குறிப்பிடலாம்63/250x100=25.2%35. கொடுக்கப்பட்ட n எண்களில் (n>1) ஒரு எண் 1-1/n மற்ற எண்கள் அனைத்தும் ஒன்றுகள் எனில் n எண்களின் சராசரி = 1-1/n236. சார்பகா எண்ணுக்கு ஒரு உதாரணம் - (3,5)
    37. 2005ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000 அடுத்த ஆண்டில் அது 10% அதிகரிக்கும் என்றால் 2006ல் என்னவாக இருக்கும்.2005ல் - 1,50,000அதிகரிப்பது = 10/100x150000 = 15,0002006ல் மக்கள் தொகை = 1,50,000 + 15000 = 1,65,00038. விகித முறை எண்கள் : Q = [2,-3,-7...] 39. விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.40. எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.41. விகிதமுறு எண்கள் P/Q வடிவில் இருக்கும்.
    42. விகிதமுறா எண்கள் P/Q வடிவில்தான் இருக்கும். முடிந்துவிடாத புள்ளி வைத்த எண்களைக் கொண்டிருக்கும்.
    43. மெய் எண்கள் R என்ற எழுத்தால் குறிக்கலாம். Real Numbers
    44. இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.
    45. சிக்கல் எண்கள் - இதனை C என்ற எழுத்தால் குறிக்கலாம்.C= {z=x+1y/x, Y Er, i= -1] இந்த வடிவில் உள்ள எண்கள் சிக்கல் எண்கள் எனப்படும்.
    46. 500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = ?5 கிமீ = 5000 மீ 500 செ.மீ = 5 மீவிடை = 5055 மீ.
    47. 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் என்றால் லாபம் அல்லது நட்டம் 10% ஆக இருக்கும்.
    48. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. இந்த எண்ணில் இருந்து 18 ஐக் கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் என்ன?ஒரு ஈரிலக்க எண்ணின் இரு இலக்கங்களின் கூடுதல் 6 என்பதால், 1+5 =6; 2+4 = 6; 3+3 =6 என வாய்ப்புகள் உள்ளன. இதில் 1+5 என்பது 15ம் 51ம் ஆகும், 2+4 என்பதில், 24ம் 42ம் ஆகும். 3+3 என்பதில் 33ம் 33ம் ஆகும். இரண்டாவதாக வரும் 24, 42 என்பதில் 42ல் இருந்து 24ஐக் கழித்தால் 18 வரும். எனவே விடை 24, 42ஈரிலக்க எண் 42 (4+2=6) ;  42 - 18 =  24இடம் மாறினால் 42 விடை = 42
    49. தள்ளுபடி என்பது குறித்த விலையில் இருந்து குறைக்கப்பட்ட விற்பனை விலை( குறித்த விலை மீதான உள்ள விலை)
    50. விற்பனை விலை = குறித்த விலை  - தள்ளுபடி

    பி.இ., எம்.பி.பி.எஸ்.: கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்.

    பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.  பி.இ. படிப்பைப் பொருத்தவரை மிக அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், கடந்த ஆண்டைவிட 1 மதிப்பெண் வரை குறைய வாய்ப்புள்ளது. அதாவது, இந்த ஆண்டு பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 முதல் 200-க்கு 185 வரை எடுத்துள்ளவர்களுக்கு பி.இ. படிப்பில் சேரும்

    சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம்.

    பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுக்கு புதன்கிழமை (மே 23) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களும் சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.  சிறப்புத் துணைத்தேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.85-ம் கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 சேர்த்துக் கட்ட வேண்டும்.

    Tuesday, May 22, 2012

    விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறு மதிப்பீடு விண்ணப்பம் பெற...


    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் தங்களது தேர்வு முடிவிலோ அல்லது மதிப்பெண்ணிலோ தவறு இருக்கலாம் என்று கருதினால் விடைத்தாள் நகல் பெறலாம். அல்லது மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் நாமக்கல் மாணவி சுஷ்மிதா முதலிடம்!

    வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில அளவில், முதலிடத்தை, நாமக்கலை சேர்ந்த கு.சுஷ்மிதா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1189. அடுத்த 2 இடங்களையும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே பெற்றுள்ளனர்.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - ஒட்டுமொத்த அளவில் முதலிட விபரங்கள்.

    அனைவரும் பேராவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு, முதலிடத்தை, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 2 மாணவிகள் தலா 1190 மதிப்பெண்கள் பெற்று தட்டிச் சென்றுள்ளனர்.
    புதுச்சேரியிலுள்ள புனித ஜோசப் க்ளூனி மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த S. ஸ்வப்னா, செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கத்திலுள்ள, பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த V. பவித்ரா ஆகியோரே அந்த 2 பேர்.

    பிளஸ் 2 தேர்வுகள் : 2011 - 2012ம் ஆண்டுகளுக்கிடையிலான ஒப்பீடுகள்.

    வேலைவாய்ப்புக்கான ஒரு பிரதான வாயில் என்பதாக, கல்வி மாறிவிட்ட இன்றைய நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கி விடுகிறது என்றால் அதில் மிகையில்லை.
    அந்த வகையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு நிகழ்வுகளை, கடந்த 2011ம் ஆண்டு நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.

    TRB - Corrigendum issued to Notification No.04/2012 dated 07.03.2012 Published by TRB.

    The following corrigendum is issued to Advertisement No.04/2012 Published towards Teachers Eligibility Test in the Newspaper on 07.03.2012.
                                           CORRIGENDUM
    In the said advertisement paragraph 2 relating to categories of candidates appointed with the prescribed qualifications in Government, Government - aided and Un-aided schools on or after 23rd August 2010 read the following paragraph 2 namely.

    PLUS2 RESULTS MARCH 2012.

    Monday, May 21, 2012

    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

    தமிழகத்திலுள்ள 30 அரசு பாலிடெக்னிக்குகளில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் 150 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், கீழே உள்ள நமது  இணையதள இணைப்பிலிருந்து  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் 8-ம் தேதி மாலை 5.45 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ்

    புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிகள் குறித்து, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி.

    புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 224 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. புதுக்கோட்டை தொகுதியை சாராத, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதுதொடர்பாக, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு அலுவலர்ளுக்கான முதல் நாள் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கலையரசி தொடங்கி வைத்தார். இதனிடையே, அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தேமுதிக குற்றம்சாட்டியுள்ளது.

    கல்வி காக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பேரணி; கன்னியாகுமரி குலுங்கியது.

    இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரி அஜீத்பாக் நகரில் (CSI ஆடிட்டோரியம்) மே மாதம் 17,18,19 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

    மாநாட்டு நிறைவு நாளான நேற்று (19.05.2012) பிற்பகல் 03.00 மணிக்கு கன்னியாகுமரி பேருந்து நிலையம் அருகில் இருந்து கல்வி காக்கும் பள்ளி ஆசிரியர்களின் பேரணி தொடங்கி செயின்ட் அந்தோணி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நிறைவு பெற்றது.

    பொறியியல் படிப்பு - குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் மாவட்டம் மற்றும் கல்லூரி வாரியாக விவரம்.

    பொறியியல் படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண் எடுத்தால் எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவில் சேர முடியும் என்ற விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் தனித்தனியாக வழங்கப்பட்டு, அவற்றில் சேர ஒவ்வொருப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண் எடுத்தால் சேர்க்கை பெறலாம் என்ற விவரம்  மாணவர்களின் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.

    சிறப்பு துணைத்தேர்வு கட்டணம் எவ்வளவு?

    மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களையும், சிறப்பு துணைத்தேர்வு மூலம் தேர்வெழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
    அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாத அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்கள், ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் சிறப்பு துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

    சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை.

    சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என, அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
    சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்:
    1. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
    2. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.

    Sunday, May 20, 2012

    Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I in Government Higher Secondary School for the year 2011 - 12

    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I in Government Higher Secondary School for the year 2011 - 12
     I. List of Admitted candidates                                      -        150740
    2. Subject-wise list of candidates admitted for the examination
    Subject
    Code
    Subject
    No. of
    candidates
    12PG01
    Tamil
    28846
    12PG02
    English
    13007
    12PG03
    Mathematics
    20755
    12PG04
    Physics
    11627
    12PG05
    Chemistry
    11485
    12PG06
    Botany
    8385
    12PG07
    Zoology
    10322
    12PG08
    History
    16917
    12PG09
    Geography
    1218
    12PG10
    Economics
    8774
    12PG11
    Commerce
    15539
    12PG13
    Political Science
    47
    12PG14
    Home Science
    230
    12PG15
    Indian Culture
    20
    12PG19
    Physical Director
    3512
    12PG21
    Telugu
    39
    12PG51
    Urdu 17
      Total
    150740
     3. List of Rejected candidates                    -                               1923
    Date of Examination: 27.05.2012 Timing: 10:00 A.M to 01:00 P.M
               

    Dated: 19-05-2012
     
    Chairman

    தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த தொடர் ஆய்வு மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 8752 / ஜே 1 / 2012, நாள். 17.05.2012.
    தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - ஊராட்சி / அரசு / நகராட்சி / உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சார்பான நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த தொடர் ஆய்வு மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
    அனைத்து மாவட்டங்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் சார்பான கூட்டம் 28.05.2012 அன்று காலை 10.00 மணிக்கு  சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித் துறை - சுற்றுச்சூழல் மன்றம் - 2011 - 12 - செயல் திட்டம்.

    தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித் துறை - சுற்றுச்சூழல் மன்றம் - 2011 - 12 - செயல் திட்டம்
    * சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்
    * நிர்வாக அமைப்பு மற்றும் செயல்பாடுகள்
    * மாதந்திர செயல்பாடுகள்
    * பசுமை தினங்கள்
    * படிவங்கள் அடங்கிய செயல் திட்டம் பள்ளிக்கல்வித்துறையால்  வெளியிடப்பட்டுள்ளது.

    TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2012 - HALL TICKETS.


    DEPARTMENTAL EXAMINATIONS-HALL TICKETS

    Month Download Hall Tickets for... Current Status
      May Departmental Examinations May 2012 Online Up to
    30 Jun 2012

    அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் - தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 299 நாள். 19.05.2012
    அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு முதற்கட்டமாக 11432 பணியிடங்களுக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
    அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் :-
    * பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்.

    நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

    தமிழகத்தில் அண்மையில் புதியதாக தொடக்கக் கல்வி இயக்குனராக பதவி ஏற்ற திரு. இராமேஸ்வரன் முருகன் அவர்கள் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அதில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை, தேர்ந்தோர் பட்டியல் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை  தன்னுடைய தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் உடனுக்குடன் முடித்து  வைக்கிறார் என்றும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளாதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

    முன்னுரிமை பட்டியல், பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் அனைத்து ஒன்றியங்களிலும் சரியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,
    தயாரிக்கப்பட்ட பட்டியல்களை ஒன்றியம் மாற்றி சரிப்பார்க்கப்பட்டு, சரியாக உள்ளதா என ஆய்வு செய்த பிறகு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்று இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,

    Saturday, May 19, 2012

    இலவச கட்டாய கல்வி - அரசின் நடவடிக்கை குறித்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

    மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பாக, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    அயப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, சின்மயா நகர் வித்யாலயா பள்ளி, மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேஷன் வித்யாலயா, ஆதம்பாக்கம் டி.ஏ.வி., ஆகிய நான்கு பள்ளிகளுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில், பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.

    மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவது கட்டாயம்.

    மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
    இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

    பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க மேலும் 6 நாள்கள் நீட்டிப்பு.

    பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் ஜூன் 6ம் தேதி வரை பெறப்படும் என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை சமர்பிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 6 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    பள்ளிகளில் காலிப் பணியிட விபரங்கள் சேகரிப்பு.

    தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
    தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.