Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 31, 2017

    பள்ளிக்கல்வி - ஜுன் 7ஆம் தேதி பள்ளிகள் நாள் - மாணவர் சேர்க்கை - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய ஆயுத்தப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்

    Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Certificate Verification List and Individual Candidate Query


    Dated: 31-05-2017

    Chairman

    Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015 - 16 and 2016 - 17 - Please click here for Corrigendum & G.O MS.110 dated 26.05.2017


    Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015-2016 and 2016-17
              

    Dated: 30-05-2017

    Chairman

    Tuesday, May 30, 2017

    "நீட்" எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு

    எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:

    பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு

    பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார்.

    SG Teacher - Inter District Transfer Counselling - Seniority List - REVISED

    தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் - கோடை விடுமுறை முடிந்து 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் சார்ந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

    கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு

    இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

    கணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து முதல்வரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட பதில்

    உடற்கல்வி ஆய்வாளர் நியமனம்; பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு

    தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

    இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளை கடைசி நாள்

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய அவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    Monday, May 29, 2017

    அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான வட்டார மைய அளவில் "தமிழ், கணக்கு, அறிவியல் மற்றும் சமூகவியல்" ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக 10.07.2017 முதல் 14.07.2017 வரையிலும், இரண்டாம் கட்டமாக 24.07.2017 முதல் 28.07.2017 வரையிலும் நடைபெறவுள்ளது


    SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?

    தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

    **அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

    **இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    Sunday, May 28, 2017

    DEE - SG Teacher - Inter District Transfer Counselling - Seniority List

    பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் - மேல் நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவு

    பள்ளிக்கல்வி - இடைநிலை / சிறப்பு / உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பட்டதாரி பதவி உயர்வு - இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

    பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு அழைக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை (அனைத்து பாடங்கள்)

    Saturday, May 27, 2017

    பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு


    'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    பல்கலை. துணைவேந்தர்கள் நியமனம்

    அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம்


    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம்

    12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

    பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    Wednesday, May 24, 2017

    'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுகளில் வினாக்கள் மாறுபட்டு இருந்ததால் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். 

    பள்ளி திறப்பு தள்ளி போகுமா? அரசு 2 நாளில் முடிவு!

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.

    ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும், மறுநிர்ணயம் செய்திடவும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 26.05.17 அன்று அழைப்பு!

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர்கள் ஆலோசனை !

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,
    தமிழகத்தில், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுடன், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்.

    தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சட்டப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது.

    1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'

    மனப்பாட கல்விமுறையை கைவிடும்வகையில், ஒன்று முதல்பிளஸ் 2 வகுப்பு வரை,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.அறிவியல் பாடத்தில்,கணினி அறிவியலும் இடம்பெறுகிறது. பள்ளிபாடத்திட்ட மாற்றத்திற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர்உதயசந்திரன், நேற்றுவெளியிட்டு உள்ளார்.

    அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி!!

    அரசுப்பள்ளி மாணவர்கள் ,40000பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளி!!

    6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியன் தரத்தை அயல் நாட்டுக் கல்வியின்  தரத்திற்க்கு இணையாக கொண்டு சென்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை    அமைச்சர் ஐயா அவர்களுக்கும், மதிப்புமிகு கல்வி செயலாளர், இயக்குனர், இணை இயக்குனர் அவர்களுக்கும் 40000 பி.எட் கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் சார்பிலும், தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

    Tuesday, May 23, 2017

    பொது மாறுதல் - 2017-18ஆம் கல்வியாண்டில் கலந்தாய்விற்கான திருத்திய கால அட்டவணை வெளியீடு

    பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியீடு


    காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்

    அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

    வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

    7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமி‌ஷன் மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!


    மத்திய அரசின் 7-வது் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு  அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது. 

    Monday, May 22, 2017

    பள்ளிக்கல்வித் துறையில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்கள்


    கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 


    ➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது. 

    ➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு 

    பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்

    இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில், நுாறு நாள் வேலை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளப்போவதாக வெளியான தகவலையடுத்து முழு அளவில் இந்த பணி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

    தமிழ் நாடு பள்ளிக்கல்விப் பணி - 2017-18ம் கல்வியாண்டில் இன்று நடைபெறவிருந்த அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு


    Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Tentative Key Answers - Paper I and II

    Sunday, May 21, 2017

    7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமி‌ஷன் மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது. இதை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

    Friday, May 19, 2017

    தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு


    மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்

    • 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 
    • 98.17% எடுத்து கன்னியாகுமரி  இரண்டாவது இடத்திலும் 
    • 98.16% எடுத்து ராமநாதபுரம்  மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
    • 97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும், 
    • 97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும், 
    • 97.10% எடுத்து தேனி  மாவட்டம் 6 வது இடத்திலும், 
    • 97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது. 

    தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

    பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

    10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு

    பள்ளிகள்
    தேர்வெழுதியவர்கள்
    தேர்ச்சி பெற்றவர்கள்
    சதவீதம்
    ஆதி திராவிடா பள்ளிகள்
    10293
    8931
    86.77
    ஆங்கிலோ இந்தியன்
    3946
    3863
    97.9
    கன்டான்மென்ட் போர்டு
    402
    351
    87.31
    மாநகராட்சி பள்ளிகள்
    10937
    10229
    93.52
    வனத் துறை
    312
    291
    93.27
    உதவி பெறும் பள்ளிகள்
    175020
    164972
    94.26
    அரசு பள்ளிகள்
    403513
    369572
    91.59
    அறநிலைய பள்ளிகள்
    580
    538
    92.76

    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறை வெளியீடு

    இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங்' முறை கிடையாது' என தமிழக கல்வித்துறை அறிவித்தது. அதன்படி வெளியிடப்பட்ட மதிப்பெண் முறை விவரம்:

    மொத்த மதிப்பெண்
    மாணவர்கள்
    மாணவியர்
    திருநங்கை
    மொத்தம்
    சதவீதம்
    481 மேல்
    11,625
    26,988
    0
    38,613
    3.93%
    451-480
    46,915
    75,842
    0
    1,22,757
    12.50%
    426-450
    48,149
    65,681
    1
    1,13,831
    11.59%

    10ம் வகுப்பு தேர்வு 2017; பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி விவரம்


    மொழிப்பாடம்
    ஆங்கிலம்
    கணிதம்
    அறிவியல்
         சமூக அறிவியல்
    தேர்வெழுதியவர்கள்











    மாணவர்
    4,90,870
    4,90,870
    4,90,870
    4,90,870
    4,90,870
    மாணவியர்
    4,91,226
    4,91,226
    4,91,226
    4,91,226
    4,91,226
    திருநங்கை
    1
    1
    1
    1
    1
    மொத்தம்
    9,82,097
    9,82,097
    9,82,097
    9,82,097
    9,82,097

    பாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்?

    இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்:

    மொழிப்பாடம்: 69 பேர்
    ஆங்கிலம்: 0 
    கணிதம்: 13,759 பேர்
    அறிவியல்: 17,481 பேர்
    சமூக அறிவியல்: 61,115 பேர்

    பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

    அரசாணையை மீறி பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

    மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை

    தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

    அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு

    முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    Thursday, May 18, 2017

    நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

    தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை  பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய       வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது. அனைத்து சங்கங்களும்தடையை  நீக்கக்கோரி வைத்த  கோரிக்கையினையும் ஏற்று தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில் தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்றகிளையில் எடுத்துக் கொள்ளப்பட்டு தடையை விலக்கியது.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - திருத்திய பட்டியல் - உதவி தொடக்கக் கல்வி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மூலம் நியமனம் - 31.12.2010 முடிய தகுதியுள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் திருத்திய பட்டியல் வெளியீடு

    பிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத கேள்விகள் கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்.

    நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

    பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

    பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங்கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது

    'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை, கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்.

    பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

    பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 நிதி உதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் - 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26.05.2017 கால அவகாசம் நீட்டிப்பு.

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017 - மறுகூட்டல் / விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் முறை

    இந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது.

    பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 படிக்க, இந்த பொது தேர்வு வழி செய்கிறது. 'பிளஸ் 1க்கு கட்டாயம் பொது தேர்வு நடத்த வேண்டும்' என, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் கூடி, பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து, நிபுணர்களிடம் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்

    ''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். பள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்

    பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், குறிப்பிட்ட மாணவர்களை படம் பிடித்தல், வாழ்த்து தெரிவித்தல் போன்ற, சம்பிரதாய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் மாணவர் மற்றும் பள்ளியின் பெயர், தமிழில் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டது.

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

    TRBக்கு புறப்பொருள் வெண்பா மாலை படிப்பது எப்படி ?

    பூவிதழ் TRB பயிற்சி மையம் தருமபுரி 9865450446

    😡இந்த பகுதியை ஐந்து  படிநிலையில் பிரித்து அணுகி படிக்க வேண்டும்

    முதல் படிநிலை  அடிப்படை தகவல்கள்
    🌑நூலின் ஆசிரியர்
    🌑நூல் கூறும் பொது விவரம்
    🌑பாடப்பட்ட பாவகை
     🌑நூற்பா எண்ணிக்கை

    Wednesday, May 17, 2017

    பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

    பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய

    ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவவொரு ஆண்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். இதை கோடை விடுமுறையிலேயே நடத்தினால் ஆசிரியர்கள் புதிய பணியிடங்களில் பணியேற்க வசதியாக இருக்கும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.  கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறை திறந்த பின் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்த உத்தரவிட்டார்.

    தமிழகப் பள்ளிகளில் விரைவில் புதிய பாடத் திட்டம் - அதிரடி காட்டும் செங்கோட்டையன்


    தமிழக பாடத் திட்டங்களில் மாற்றம், அரசுப் பள்ளிகளுக்கான புதுத் திட்டங்கள், நடப்பாண்டு தமிழகக் கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதி போன்றவற்றைப் பற்றி தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

    பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும்; பள்ளிக்கல்வி அமைச்சர்


    வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

    இன்ஜி., கலை கல்லூரிகளில் பிளஸ் 1 பாடம் கட்டாயமானது

    பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு நடத்தப்படாததால், கல்லுாரிகளில், பிளஸ் 1 பாடங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 

    பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

    பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது. மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.

    பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    "Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".

    சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.

    பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.

    உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

    ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.

    வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.

    பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

    மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

    முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.