அரசாணையை மீறி பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment