To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, August 31, 2013
மத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல்: 20 ஆயிரம் ஆசியர்கள் கைது
மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதி யம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.30) தமிழகம் முழுவதும் ஆரம் பப்பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் சாலை மறியல் போரட்டம் நடத்தி னர். இப்போராட்டங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிக மான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு உறுதி
மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:
கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.
1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்
தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார்.
Friday, August 30, 2013
ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு!
ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் மறியல் போராட்டம் : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் 268 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் 268 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டம்:ஆசிரியர்கள் கைது
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது
அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சைபர் வேவு பரந்த முறையில் வெளிப்படுத்துதல்களுக்குப் பிறகு இரகசியமாக அரசாங்க தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
"பாடத் திட்டம் தவிர இதர திறன்களும் அவசியம்"
பாடத்திட்டம் தவிர இதர திறன்களும் வேலைவாய்ப்புக்கு அவசியம் என்று, ஐ.பி.எம். செயல் வடிவமைப்பு மேலாளர் லிஸ்தாமஸ் கூறினார்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்திட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை
பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர் களுக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு, ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
பொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதிய திட்டம்: கல்வித்துறை ஆலோசனை
பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.
Thursday, August 29, 2013
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு
திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் பணியாற்றும் சிங்கம்புணரி ஒன்றியத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் நேற்று முழுவதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வர வேண்டும்? என்று வினா தொடுத்துக்கெண்டே இருந்தார்கள். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வதால் உதவித் தொடக்கக்கல்வி அதிகாரிகளும் மாற்று பணி ஆசிரியர்களை நியமிப்பதில் மும்மரமாக
காலியிடம் இல்லை என சம்பளம் மறுப்பதா? ஆசிரியருக்கு சம்பளம் வழங்க ஐகோர்ட் உத்தரவு
காலியிடம் இல்லை எனக் கூறி, எந்தப் பள்ளியிலும் வேலையில் சேர்க்கப்படாத, இடைநிலை ஆசிரியருக்கு, ஓராண்டுக்கு உரிய, சம்பளப் பாக்கியையும், தொடர்ந்து சம்பளமும் வழங்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் வழக்கு: விரைவில் தீர்ப்பு
தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு ஆணையை நிராகரித்த கல்வியியல் பல்கலை: பரிதவிப்பில் மாணவர்கள்
தமிழகத்தில் பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசு ஆணையை, பல்கலை., நிராகரித்துள்ளதால் மாணவ, மாணவியர் பரிதவித்து வருகின்றனர்.
வெளிநாட்டு பல்கலையில் பயில 17 பேர் பயிற்சிக்கு தேர்வு
அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.
அகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப் பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும் "பிச்சை எடுக்கும் போராட்டத்தை" அறிவித்தும், தொடர்
EMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு
தமழ்நாட்டில் 1.35 கோடி மாணவா்கள் இருப்பதாக தகவல்.. ஒவ்வொரு மாணவனுடை விபரங்களையும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய Data Enty நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ரூ.15 இல்லாமல் செய்யமாட்டார்கள்.
Wednesday, August 28, 2013
பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன. மேலும் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும்.
பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்
கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.
80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்
நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்
தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
சி.இ.ஓ.,க்கள் சொதப்பல்: மாணவ, மாணவிகள் அவதி - நாளிதழ் செய்தி
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரிகளின் சொதப்பலால், சென்னையில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க வந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அடுத்த வாரம் 03.09.2013 அல்லது 04.09.2013 அன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நேற்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதியர்சர் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுப்பணி மூலம் சென்றுள்ளதால், இந்த வழக்கு அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்
டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. "தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு
கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Tentative Answer Key Paper I and Paper II Released
College Road, Chennai-600006
|
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
TENTATIVE KEY
|
டைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம்; தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
6ம் வகுப்பிலேயே ஆய்வக அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்
"ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, ஆய்வகங்களுக்கு, அழைத்துச் சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்" என மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
Tuesday, August 27, 2013
மதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிரம்பாத மாணவர்களுக்கு சிக்கல்
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 14 வயது நிறைவு பெறதாவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கவலை தரும் ஆய்வு: கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்
ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.
TNPSC GROUP IV EXAM TENTATIVE ANSWER KEYS RELEASED
Sl.No.
|
Subject Name
|
(Date of Examination:28.08.2013 FN)
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
| |
1
| |
2 | |
3 | |
|
தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி?
பொதுவாக நாம் மின்னஞ்சலை open செய்யும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம். அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட mail களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்...
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்– தலைமை ஆசிரியர் கட்டிப் புரண்டு சண்டை: மாணவர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி
கம்பம் அருகே வகுப்பறையில் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
Monday, August 26, 2013
ஆக.30-ல் மறியல் போராட்டம் : 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு
மத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற் குழு முடிவெடுத்துள்ளது.
கூட்டுப்போராட்டம் - சாத்தியப்படுமா?
இன்றைய சூழ்நிலையில் கூட்டுப்போராட்டம்தான் நம் துயர் துடைக்க சரியான பாதை என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் 7 இயக்கங்கள் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் அங்கம் வகித்தன. மூன்று நபர் குழு அறிக்கைக்கு பின்னர் வெளிவந்த அரசானைணளில் இடைநிலை ஆசிரியர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த உடன் அரசாணைகள் வெளிவந்த அன்றே தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார தலைநகங்களிலும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தி
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இன்றும், நாளையும் மாற்று பணி மூலம் நியமிக்கப்பட்டுள்ளதால் சென்னை
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது. தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம் ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள், கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது.
மதிய உணவுக்கு ஒதுக்கப்படும் நிதி: பார்லிமென்ட் குழு விமர்சனம்
"குடி தண்ணீர் பாட்டில் விலையே, 10 ரூபாயாக உள்ள போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க, தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல” என பார்லிமென்ட் குழு விமர்சித்துள்ளது.
புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும்.செ.நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்
ஓய்வூதியம்
என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென்
‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்
உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று
விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில்
அவனுக்குப் பங்கு உண்டு. இந்த
அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம்
1871’ நிறைவேற்றப்பட்டது.
ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்
ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.
Sunday, August 25, 2013
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்
தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.
பள்ளிக்கு பெற்றோர்கள் லுங்கி, நைட்டியுடன் செல்ல வருகிறது தடை
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை
உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்
ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.
Saturday, August 24, 2013
டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி
"டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை" என டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார்.
இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும்.
முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்" செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம். விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.
இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும்.
முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்" செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம். விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.
வேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை!
பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அளிக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.
*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.
*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.
பேச்சுத்திறனை மேம்படுத்த, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை போன்று சரளமாக ஆங்கிலம் பேச தயங்குகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, ஆங்கில அறிவையும், பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொள்ள, "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர் புராஜெக்ட் 100' என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
பதவி உயர்வு தண்டனையா என ஆசிரியர்கள் வேதனை
01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள்
Friday, August 23, 2013
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
SCERT சார்பில் முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடக்கம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதில், மாணவ, மாணவிகள் பாடங்களில் பொருள்களை எளிதாக புரிந்து கொள்ளும், அதிகம மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும்.
அரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.
தமிழக அரசின் கடித எண்.8764 / சி.எம்.பி.சி /2012-1, நாள்.18.04.2012 பதிவிறக்கம் செய்ய...
கடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.
இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/ சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்." என்று உள்ளது.
குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்
வரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...
இரட்டை பட்ட வழக்கு வருகிற ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண்.152ல் பட்டியலிடப்பட்டது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்
பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன.
பி.எட்., படிப்பு: 30ம் தேதி துவங்குகிறது கலந்தாய்வு
பி.எட்., படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்குகிறது.
10ம் வகுப்பு மறுகூட்டல்: 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
உடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், மறுகூட்டல் கோரி, இன்று முதல், 26ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி துவக்கம்
ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம், திறந்து வைத்தார்.
Thursday, August 22, 2013
சம்பள உயர்வுக்கு காத்திருக்கும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பிரச்னையா..?
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய அரசு 12X7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது:
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .152ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜூன் / ஜூலை 2013 - SSLC சிறப்புத் துணைத்தேர்வு எழுதியோர் மறுகூட்டலுக்கு 23.08.2013 முதல் 26.08.2013 வரை Online வழியாக மட்டுமே விண்ணபிக்க வேண்டும்
#]‹/#]iy 2013 Ïilãiy¥
gŸë éL¥ò rh‹¿jœ Áw¥ò¤ Jiz¤ nj®btGÂnah®,
éil¤jh£fë‹ kÂ¥bg©fŸ kWT£lY¡F On-line-š 23.08.2013 Kjš 26.08.2013 tiu é©z¥g§fŸ tunt‰f¥gL»w‹wd. vdnt nj®t®fŸ é©z¥g§fŸ nfhç vªj xU fšé
mYtyf¤ijÍ« mQf nt©lhbkdΫ, On-line
Kiwæš
k£Lnk é©z¥Ã¡FkhW« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
#]‹/#]iy 2013 Ïilãiy¥ gŸë éL¥ò¢
rh‹¿jœ Áw¥ò¤ Jiz¤nj®btGÂnah® jh« nj®btGÂa vªjbthU ghl¤Â‰F« kWT£lY¡F (Retotalling) é©z¥Ã¡fyh«. é©z¥Ã¡f éiHnth® www.dge.tn.nic.in v‹w Ïizajs¤Â‹ _y« On-line Kiwæš
é©z¥Ã¡f nt©L«.
ஓய்வூதியம் என்பது "அரசு ஊழியரின் சொத்து", அதை அந்த ஊழியரின் மீது நிலுவையிலுள்ள துறைவாரியான மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்காக பறிக்க இயலாது
Observing that gratuity and pension are hard earned benefits of an employee and right to receive pension is in the nature of "property", the Supreme Court has held that this right cannot be taken away from a government employee pending departmental or criminal proceedings.
Wednesday, August 21, 2013
தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.
SPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :
இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.
இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.
பின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.
தற்போது 1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -தாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
கல்வித் துறையில் வளர்ந்த நாடு இந்தியா: பல்கலை., துணை வேந்தர் பெருமிதம்
கல்வித் துறையில் வளர்ந்த நாடு என்று நம் நாட்டை அழைக்கலாம் என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேசினார்.
அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட்: நுழைவு தேர்வுக்கு அழைப்பு
அண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு பரிசு
பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு, பரிசு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு
தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு
மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மொழி பெயர்ப்பு வளர வளரத்தான் மொழியின் சிறப்பை அறிய முடியும்: அவ்வை நடராஜன்
நல்லி-திசை எட்டும் சார்பில் மொழி பெயர்ப்புக்கான பாஷா பூஷண் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடலூரில் நடந்தது.
தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்
தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
சமூக சேவையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?
பி.ஏ., சோஷியல் ஒர்க் எனும் படிப்பானது, சமூக சேவையை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக விளங்குகிறது. இப்படிப்பு, தாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றிய பார்வையை, மேம்படுத்தி, விரிவுபடுத்திக்கொள்ள, அதை படிக்கும் இளைஞர்களுக்கு உதவிபுரிகிறது.
Tuesday, August 20, 2013
அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது
அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலை தேடும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்!
இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.
டி.இ.டி., பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு தேவை: கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு குரூப், 2 வினாத்தாள் அவுட்டானது. இந்தாண்டு, டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடும், கண்காணிப்பும் அவசியம் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார், ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் உண்மையில் அவுட்டானதாகவும், அந்த தகவலை போலீஸார் மறைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு: தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை, அடுத்த மாதம், 17ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 2009ல், மத்திய அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் டி.ஆர்.பி. அதிகாரிகளுக்கு தொடர்பு?
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? மணி.கணேசன்
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
Monday, August 19, 2013
பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்
இரட்டைப்பட்டம் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம் அடைந்து கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 22.08.2013 அன்று ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் நீதிபதிகள் மாறாத நிலை இருப்பதால் விசாரணை கண்டிப்பாக 22.8.2013 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருடந்தோறும் ஆகஸ்ட் 20 அன்று நல்லிணக்க நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் எடுக்க அரசு கடிதம் வெளியீடு
GOVT LTR NO.22608 / GEN-I / 2013-7, DATED.13.08.2013 - OBSERVANCE OF SADBHAVANA DIWAS 2013 CLICK HERE...
அரசு முதன்மை செயலர், (பொதுத்துறை ) சென்னை அவர்களின் கடிதம் 22608/ பொது-I / 2013-9 நாள் : 13.08.2013.இல் 20.8.2013 அன்று மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.8.2013 முதல் 03.9.2013முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி வழக்குத் தாக்கல், விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.
கேள்விகளில் அச்சுப் பிழை உள்ளதால், முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை
டி.இ.டி. மதிப்பெண்ணில் சலுகை: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்
ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்களில், சலுகை வழங்கக் கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்த் தகுதித் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட முடிவு
கீ ஆன்சர்’ எப்போது வெளியிடப்படும்? தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசுப் பள்ளிகளுக்கு 36,600 மரக்கன்றுகள்: சுற்றுச் சூழல் மன்றம் ஏற்பாடு
சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.
குளறுபடியின்றி முடிந்தது டி.இ.டி., தேர்வு: கர்ப்பிணி பெண்களும் தேர்வெழுதினர்
தமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி தொடக்கம் பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது. அதற்கான பாடப்புத்தகங்கள் இப்போதே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
விரைவில் "கற்க கசடற' பள்ளிக்கல்வித்துறை திட்டம்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன.
Sunday, August 18, 2013
முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு
இன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் அச்சங்கம் சார்பில் சார்பில் பொதுச் செயலாளர் திரு.பாலசந்தர் (பொறுப்பு), மாநில பொருளாளர் திரு.மோசஸ் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு தலைவர் திரு.வையம்ப்பட்டி ராமசாமி, மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ரக்ஷித் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் சார்பில் மாநில தலைவர் திரு.தியாடர் ராபின்சன், திரு.அம்பை, திரு.அ. கணேசன் ஆகியோரும், தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணை தலைவர் திரு.ர.துரை, திரு.சிங்காரவேலு ஆகியோரும், SSTA சார்பில் பொதுச் செயலாளர் திரு.ராபர்ட், மாநில தலைவர் திரு.ரெக்ஸ் அனந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
பல்கலை விதிமுறைகளில் வயது வரம்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
"வயது வரம்பு குறித்த விதிமுறைகள், பல்கலை விதிமுறைகளில் இடம் பெறாத நிலையில், அதைக் காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது" என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டு உள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலினை
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார்.
கல்வி சாராத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் எழக்கூடிய நிலை பற்றி தேசிய அறிவுசார் ஆணையத்தின் நிலை
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு சசி தரூர் மற்றும் தேசிய அறிவுச்சார் ஆணைய உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
Non teaching duties, such as that of manning poll booths and collecting data for surveys, cuts into the available teaching time and also undermines the professional status of teachers. என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகம்
பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
டி.இ.டி ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் மோசடி கும்பல் கைது
தமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, முதல் தாள் தேர்வு நடந்தது. தர்மபுரி மற்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி காரிமங்கலம் பகுதியில்
கள்ளநோட்டை அடுத்து கள்ளகார்டு.. ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...!
மதுரை ஜி.ஆர்.டி.யில் போலி கடன் அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டதை துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கையில் இதில் பிரபல தனியார் வங்கியில் வேலை செய்பவரின் பங்கு தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது நாம் கொடுக்கும் கடன் அட்டை விவரங்களை சேகரித்து போலி அட்டைகள் தயாரித்து மோசடி செய்துள்ளனர்.
கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க உத்தரவு
கூடலூரில், கூடுதலாக வசூல் செய்த கல்வி கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Saturday, August 17, 2013
ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை
TO DOWNLOAD GOVT LTR.23373/S/2011-2 DATED.09.08.2011 CLICK HERE...
அரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ? குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்.டி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை.
மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.
அடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில ஆசிரியர்களுக்கு முரண்பாடு
அடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேஒப்பிடுகையில்-தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மாதந்தோறும் ரூ.8550/- இழப்பு.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைமை நிலைய செயலாளர் திரு.சாந்தகுமார் கருத்து பதிவுடன் தினமலர் செய்தி வெளியீடு
Friday, August 16, 2013
குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு
குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
தமிழகம் முழுவதும் 6.78 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்வை எழுதுவோரில் 73 சதவீதம் பேர் (4 லட்சத்து 94 ஆயிரத்து 651) பெண்கள். 27 சதவீதம் பேர் மட்டுமே (ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 941) ஆண்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17, 18 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
என்.ஓ.சி., பெற தேவையில்லையா? சி.பி.எஸ்.இ., அறிவிப்பால், கல்வித்துறை அதிர்ச்சி
"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத் தேவையில்லை" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித் துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்" என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை
"ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
TET எழுதும் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் தேர்வு எழுதவும் ஏற்பாடு
தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து விரிவான அறிக்கை
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து நேற்று இரவு ஒரு தரப்பு கூறிய கருத்தை வெளியிட்டிருந்தோம். இது குறித்து இன்று பல்வேறு தரப்பின் மூலம் அறியப்பட்ட செய்தியில் வழக்கு காலதாமதத்திற்கு உண்மையான காரணம் நீதியரசர்களின் மாறுதல், பதவி உயர்வு ஆகும். நீதிமன்ற வழக்கு காலதாமதத்திற்கான சில காரணங்கள், நீதிமன்ற வழக்கு என்றாலே இன்று பட்டியல் வரிசை எண்ணில் பதிவாகி இருக்கும், ஆனால் வழக்கு அடையவதில்லை (Reach), மீண்டும் அந்த பட்டியலில் வழக்கு இடம்பெறுவது குறைந்தது 2 வாரமாவது ஆகும்.
சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் விரக்தி
கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு பிரச்சனைகள்
1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்.
2. தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிடுதல்.
இந்த இரண்டு விசயங்கள் நிறைவேறினால் ஒரளவு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறையும். இதை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள். இதை பெறுவற்கான வழிதான் கூட்டுப்போராட்டம். இதை முன்னெடுக்கும் சங்கங்களை சிலர் இழித்தும், பழித்தும் பேசுவது என்பது கோரிக்கைகளை
ஆசிரியர் தகுதி தேர்வு மையத்திற்கு செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை
ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் கூறினார். ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் பணிக்கு செல்லவேண்டுமானால் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பி.எட்., படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி
பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை, இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, இப்படிப்பிற்கு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள் ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவக்கம்
நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.
மண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்
"பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது:
Thursday, August 15, 2013
சத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: முதல் மந்திரி அறிவிப்பு
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, அரசு போக்குவரத்து, மின்சாரம், ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இரட்டைப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை, மூன்று வருட பட்டபடிப்பு பயின்று வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கும் இடமாறுதலுக்காகவும் காத்திருக்கிறார்கள் ஏனென்றால் இரட்டைப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே பதவி உயர்வும் இடமாறுதலும் பெறமுடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
சிபிஎஸ்சி புதிய உத்தரவு : சி.பி.எஸ்.சி பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை
சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பால் அதிக சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.
G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.
(இதில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். சரிசெய்து வெளியிடுவோம்)
தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION பற்றி ஒரு சிறு விளக்கம்.
OPTION பற்றிய விளக்கம்.
1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு /
சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம்
செய்துகொள்ளும் போது, முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை
பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு
நிலைக்கு பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்
"ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.
வருகின்றன 300 பாலிடெக்னிக் கல்லூரிகள்
"பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.
டி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் புறக்கணிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.
தொலைதூர கல்வி மாணவர்களுக்கு சென்னை பல்கலை அறிவுறுத்தல்
"சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில், 2005-06ம் ஆண்டு முன் பட்டப்படிப்பில் சேர்ந்து, இதுவரை பட்டப்படிப்பை முடிக்காதவர்கள், புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியதில் "தினமலர்" சேவை அளப்பரியது: கனடா பேராசிரியர்
"அனைவரும் செய்தி வாசிக்கும் மரபை, தினமலர் நாளிதழ் ஏற்படுத்தி இருக்கிறது. அதன் சேவை, தமிழ் சமூகத்துக்கு முக்கியமானது" என கனடா நாட்டு டொரண்டோ பல்கலைகழக, மானுடவியல் பேராசிரியர், பிரான்சிஸ் கோடி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)