To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, March 31, 2017
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு
ஆசிரியர் பதவி உயர்வு; மீண்டும் தலைதூக்குது ’கிராஸ் மேஜர்’
அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில் மீண்டும் ’கிராஸ் மேஜர்,’ ’சேம் மேஜர்’ பிரச்னை தலைதுாக்கியுள்ளது. முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.
அரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க அலட்சியம்!
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கோடை விடுமுறைக்கு முன்பே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கல்வித்துறை எவ்வித வழிகாட்டுதலும் வழங்கவில்லை. இதனால், வரும் கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை குறையும் சூழல் உருவாகியுள்ளது. உடுமலையில், 98 அரசு துவக்க பள்ளிகளும், 22 நடுநிலைப்பள்ளிகளும், குடிமங்கலத்தில் 45 துவக்கம், 12 நடுநிலை, மடத்துக்குளத்தில் 43 துவக்கம் மற்றும் 12 நடு நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஒரே மாதிரியான மாணவர் எண்ணிக்கை இருப்பதில்லை.
’நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா; அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு!
பிளஸ் 2 தேர்வு, இன்று முடிய உள்ள நிலையில், ’நீட்’ தேர்வை எப்படி எழுதுவது என, அரசு பள்ளி மாணவர்கள், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்படுவர்.
விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின.
அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு
பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்துமொத்தம் 554 உள்ளன.
1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம்; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராக இருந்தது.
சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை
பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்
அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர்.
2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
Thursday, March 30, 2017
ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில அரசு நிதி உதவி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகையை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத் தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 1ம் வகுப்பு முதல் 12வது பயிலும் மாணவர்களின், வருவாய் ஈட்டும் தந்தை, தாய் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந் தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, நாளை மறுநாள் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. பிளஸ் 2வுக்கு மார்ச், 2; 10ம் வகுப்புக்கு, 8ம் தேதியிலும், பொதுத் தேர்வுகள் துவங்கின. பிளஸ் 2வில், 9.33 லட்சம் பேரும், 10ம் வகுப்பில், 10.38 லட்சம் பேரும் தேர்வு எழுதினர்.
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி
இன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால் அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.
பாட புத்தகத்தில் முரண்பாடு; பொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வினாத்தாளில், சில வினாக்களுக்கு, விடையை கண்டறிவதில், தமிழ், ஆங்கில வழி மாணவர்களுக்குள் முரண்பாடு ஏற்படுகிறது.
தொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு
ஆண்டிபட்டி வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சரவணமுத்து, பொருளாளராக முருகானந்தம், துணைத்தலைவர்களாக பூ முடிராஜா, கார்த்திகேயன், துணைச்செயலாளர்களாக அழகுசுந்தரம், முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு; பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்
2017-18ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக உள்ள 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக அரசு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகதகுதித்தேர்வு நடத்தப்படாததற்கு இந்த வழக்குதான் காரணம். இந்த வழக்கை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி வழக்கை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.
ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது: பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், நெட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். அதனால், மாநில மொழிகளில் நடத்தப்படும் செட் தேர்வையே, தென் மாநில பட்டதாரிகள் விரும்புகின்றனர்.இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. தேர்வுக்கான பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது: விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ல் ஆரம்பம்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற் றுடன் (செவ்வாய்க்கிழமை) முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது.
Tuesday, March 28, 2017
கடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்!
பிளஸ் 2 கணிதத் தேர்வில், கட்டாய வினா மிகவும் சிக்கலானதாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால், இருநுாறுக்கு இருநுாறு சென்டம் சரியும் என, தெரிய வந்துள்ளது.
அடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் தேர்வு
கற்கும் பாரத மையங்களில், அடிப்படை எழுத்தறிவு பெற்ற, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4,000 பேர், சமநிலை கல்வி தேர்வு எழுதவுள்ளனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு, கற்கும் பாரத மையங்கள் மூலம், இரண்டாம் வகுப்புக்கு இணையாக, அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டது.
’நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்!
’பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, ’நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
துணைவேந்தர் பதவிக்கு ’வெயிட்டேஜ்’ மதிப்பெண்
பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கான தேர்வு பணியில், பேராசிரியர்களுக்கு, ’வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. தகுதியில்லாதவர்கள், பல்கலைகளின் உயர் பதவிக்கு வருவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளில், துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்!
பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், ’சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர். நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்து எஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 - ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை.
உயர்கல்விக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி!
பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என வழிகாட்டும், ’தினமலர் வழிகாட்டி’ நிகழ்ச்சி, ஏப்., 1 முதல் மூன்று நாட்கள் நடக்கிறது
பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என வழிகாட்டும், ’தினமலர் வழிகாட்டி’ நிகழ்ச்சி, ஏப்., 1 முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
Monday, March 27, 2017
தூக்கம் அவசியம் ஏன்? ஒரு விரிவான அலசல்.
தூக்கத்தின்போது உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ன?
‘‘நாம் தூங்குகிறபோதும் நம் உடலின் உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மைப் புதுப்பிக்கவும் தேவையான பல ஆச்சரியகரமான நடவடிக்கைகள் தூக்கத்தின்போதுதான் நடைபெறுகின்றன’’ என்கிறார் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன். அப்படி என்னதான் நடக்கிறது தூக்கத்தில்?
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!
பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை, கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 200 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி காலை- மாலை என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்?பேரவையில் அரசு தகவல்
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்தவிவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்வர் உத்தரவு.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் பணி, வாக்காளர்களை சரிபார்க்கும் பணி ஆகியவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வழக்கம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்கள் வரை ஒவ்வொரு தேர்தல் பணிகளிலும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏப் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கிபுதுடில்லி: ஏப்1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு
பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.
கோடை விடுமுறையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. இத்தேர்வைஎழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
Friday, March 24, 2017
போலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம்!
போலி சான்றிதழ்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், உயர்கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண் இணைப்பு உட்பட புதிய அம்சங்களை சேர்க்க பல்கலை, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
’டெட்’ தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்
ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ’அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்தது. ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த நியமனத்துக்கு தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து, தேர்வர்களின் விபரங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், மார்ச், 10ல் வெளியிடப்பட்டன.
மாணவர் பாதுகாப்பு; முதல்வர் உறுதி
”வெளிமாநிலத்தில், உயர் கல்வி படிக்க செல்லும் மாணவர் பாதுகாப்பு ஏற்பாடுகளை, தமிழக அரசு செய்யும்,” என, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்த, தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை, தி.மு.க., கொண்டு வந்தது.
Thursday, March 23, 2017
வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய அரசின் மனித வளத்துறை. அது மட்டுமில்லை... கலை அறிவியல் படிப்பு உள்பட பிற படிப்புகளுக்கும், தொழில்சார் வேலை வாய்ப்புக்கும் தேசிய அளவில் ஒரே தேர்வைக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. முதல்கட்டமாக, இந்தத் தேர்வுகளை எல்லாம் நடத்துவதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்க மத்திய அமைச்சரவையின் அனுமதியைப் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது மனித வளத்துறை.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்
விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம். தமிழகத்தில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்; முகவரி மாற்றம்; பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகள், உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள ஊழியர்கள், மக்களை, அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாமணி நியமனம்
தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
Wednesday, March 22, 2017
இன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தல்
தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது.
இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி
இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள் எளிமையாக இருந்ததால் சென்டம் மதிப்பெண் எடுக்கலாம், என மாணவர்கள் கூறினர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்
திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு திறந்தநிலைபல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும்.
Tuesday, March 21, 2017
சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்து விலக்கு?
'டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது. இது குறித்து, மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது: அரசு பள்ளிகளில், 2011 டிசம்பரில், 3,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி துறை தீவிரம்
தேர்வுத் துறை மூலம், ஆய்வக உதவியாளர் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தயாரிக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக பி.எட்., கணினி அறிவியல் பயின்றுள்ள ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும்
Monday, March 20, 2017
இன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்
ஒவ்வொரு வீட்டிலும் அழையா விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. ஓடு வீடுகளிலும், குடிசை வீடுகளிலும், உத்திரம் உள்ள வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன.
தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது.
'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, 'நெட், செட்' என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட முடிவு; தமிழக அரசு
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவுகளை வெளியிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல்!
பாரதியார் பல்கலை, தொலைதுார கல்வி மையத்தின் கீழ் செயல்படும், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்களின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்பு எழுந்துள்ளது.
பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல்துவங்கி, வரும், 22ல் முடிகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், தமிழகம், கேரளா, அரியானா உட்பட, ௧௦ இடங்களில், மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்
பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை.
Sunday, March 19, 2017
பிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாத்தாளில் தேர்வு எழுதும் 'நேரம்' தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் நேற்று குழப்பம் அடைந்தனர்.
ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வுக்குழு அறிவுறுத்தல்
தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது. ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த, துறை ரீதியாக குழுக்கள் அமைத்து, கருத்து கேட்கப்படுகிறது. இன்ஜி., கல்லுாரிகளிடம் ஆலோசனை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா?
அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ஜெயக்குமாருக்கு அப்பா இல்லை. அம்மா பட்டாசு ஆலைக் கூலித் தொழிலாளி. சொந்தங்கள் ஒவ்வொருவரும் வெடிவிபத்தில் இறக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் அவர் முடங்கவில்லை.
நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்!
அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 'அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் சிக்கல் - சுகாதாரத் துறை
மீசல்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது. தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 'இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்' என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை.
அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி!
250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு .அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி வரும் கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும்.
நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Thursday, March 16, 2017
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னிலை!
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக, தேசிய அளவில் இரண்டு கட்ட தேர்வுகள் நடக்கும். 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முதல் கட்டமாக, மாநில அளவிலும்; அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, இரண்டாம் கட்டமாக, தேசிய அளவிலும் திறனாய்வு தேர்வு நடக்கும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்துறை உத்தரவு
’பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்’ என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்தாக்கல்
*நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து....*.
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
Wednesday, March 15, 2017
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
டி.இ.டி., அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது நிச்சயம்!
'மதுரையில் நடந்த தினமலர் டி.இ.டி., ஆலோசனை முகாமில்' வல்லுனர்கள் தெரிவித்த அரிய ஆலோசனைகளால், அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என நிகழ்ச்சியில் பங்கேற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி குறித்து அவர்கள் கூறியதாவது:
பணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, 2016 ஜூலையில், விளம்பரம் வெளியிடப்பட்டது.
கணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்
பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கணக்கு பதிவியல் தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சில கிராமப்புற மாணவர்களுக்கு, நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண்களுக்கான, 50வது வினாவுக்கான விடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப்பு மாணவர் மகிழ்ச்சி
'தமிழ்த் தேர்வைப் போலவே ஆங்கில முதல்தாள் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெறுவது உறுதி' என, 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். திண்டுக்கல்லில் மாணவர்கள் கூறியதாவது: பி.அருண்அஸ்வந்த் (எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 'இ- பிரிவில் 51வது வினாவில் 'ஏ' வினாவிற்கு 'எஷன்ஷியல்' என்ற வார்த்தைக்கு ஒரே மாதிரியான பொருள்படும்படி 3 விடைகள் கொடுத்திருந்தது மாணவர்களை சிரமப்படுத்தியது. அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன. மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29, 30ல், இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. அதற்கான விண்ணப்ப வினியோகம், 6ல் துவங்கியது.
Tuesday, March 14, 2017
ஆங்கிலப் பாடத்தால் ’ரிசல்ட்டில்’ சறுக்கல்!
ஆங்கில பாடத்தில், இலக்கண பகுதியில் பயிற்சி பெறாவிட்டால், தேர்வு முடிவுகளில், பின்தங்கும் அபாயம் உள்ளதாக, ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல்கலை பாடத்திட்டத்தில் வேதம் மற்றும் யோகா!
பல்கலைக்கழகத்தில், வணிகப் பாடத்திட்டத்தில் இருந்து, வெளிநாட்டு கல்வியாளர்களின் படைப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக, பழமையான வேதம் மற்றும் யோகா சேர்க்கப்பட்டுள்ளது.
தோல்விகளை எதிர்கொள்ளும் ஆளுமை மாணவர்களுக்கு தேவை
தேர்வு பயம் மற்றும் தேர்வுகளில் ஏற்படும் எதிர்பாராத தோல்விகளில் இருந்து தப்பிக்க, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுத் தேர்வுகளை சந்திக்கும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளியிலும், வீட்டிலும், முறையான அறிவுரைகள் அவசியம்.
தேர்வு குறித்த பயத்தை நீக்கும் வகையிலும், தேர்வு சரியாக எழுதவில்லை எனில், மாணவர்கள், விபரீத முடிவுகளை எடுக்காமல், அதிலிருந்து மீண்டு வரும் மனவலிமையும், ஏற்படுத்துதல் வேண்டும்.
பள்ளிகளில், ஆசிரியர்கள் சார்பிலும், சில தன்னார்வ அமைப்புகள் மூலமும், மாணவர்களுக்கு இதுகுறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில், சந்தோஷ் குமார், 18, என்ற மாணவர், தேர்வு சரியாக எழுதாத காரணத்தால், சில நாட்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது, தேர்வு எழுதும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு, பிரச்னைகளில் இருந்து வெளி வருதல் குறித்து, இனி வருங்காலங்களில், பள்ளிகளிலும், வீட்டிலும் கற்பிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பாதுகாப்பு துறை மூலம், மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்குவது குறித்து, இரண்டு கட்டமாக, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவங்கி விட்டன. இது தவிர்த்து, மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில், பாடல்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம், நேரடியாக மாணவர்களிடம், தேர்வு பயத்தை கைவிட விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.
மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, நேரடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மாணவர்களுக்கிடையேயான விழிப்புணர்வு முயற்சிகள் மேலும் அதிகப்படுத்தப்பட உள்ளன.ஐ.டேவிட் பால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காஞ்சிபுரம்
தேர்வு தான் வாழ்க்கை இல்லை
பொதுத் தேர்வு என்பது, அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பதைப் போன்ற வழக்கமான தேர்வு முறை தான். அரசே நேரடியாக நடத்துவது மட்டுமே வித்தியாசம். ஆனால், பொதுத் தேர்வு குறித்து, மாணவர்களுக்கு, தற்போது அதிக பாரம் சுமத்தப்படுவதாக தோன்றுகிறது.
பள்ளிகளிலும், வீட்டிலும், எந்நேரமும் படிப்பிலேயே கவனம் செலுத்தச் சொல்வதைக் கேட்க முடிகிறது. இந்த எண்ணம் மாற வேண்டும். பொதுத் தேர்வில் தவறினால், அடுத்த வாய்ப்பும் உண்டு. அதுமட்டுமின்றி, பொதுத் தேர்வுகள் தான், வாழ்க்கையை தீர்மானிப்பதாக கருதுதல் தவறு.சி. அருணாச்சலம், சமூக ஆர்வலர், ஊரப்பாக்கம்
மார்ச் 14 முதல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 'ஸ்டிரைக்' :வாக்காளர் பட்டியல் பணி முடங்கும்
இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று (மார்ச் 14) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
+2 வேதியியல் தேர்வு 'ஈசி' : பிளஸ் 2வில் 'சென்டம்' கூடும்
பிளஸ் 2, வேதியியல், கணித பதிவியல் வினாத்தாள்கள், 'ஈசி'யாக இருந்ததால், 'சென்டம்' அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்து, நேற்று முக்கிய பாடத் தேர்வுகள் தொடங்கின. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. மூன்று ஆண்டுகளாக, வேதியியல் தேர்வில் கடினமான வினாக்கள், வினாத்தாளில் பிழைகள் இருந்தன.
ஓய்வு வயதை 60ஆக உயர்த்த கூடாது : அரசு ஊழியர் சங்கம்
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு
தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏப்., 15 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், மார்ச் 2ல், பிளஸ் 2; மார்ச் 8ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இரு தேர்வுகளிலும், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க உள்ளது.
Subscribe to:
Posts (Atom)