Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 14, 2017

    2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுடன் பள்ளியில் கலந்துரையாடியவர்கள் 75 ஆளுமைகள்

    2016-2017ஆம் கல்வி ஆண்டில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி தொடர்பான நிகழ்வுகள்
    *நிகழ்வுகள் / விழாக்கள்      -  97

    *போட்டிகள்                               - 52

    *பயிற்சிகள்                                - 32

    *சமுதாய பணிகள்                 -  08

    *களப்பயணம்                           - 06


    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்ளை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ,கேள்விகள் அதிகம் கேட்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு களப்பயணங்களையும் ,ஆளுமை திறன் உடையவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களும் பிற்காலத்தில் கல்வியில்  உயரிய லட்சியங்களை அடையும் வகையில் உருவாக்கி வருகிறார்கள் .அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை மாணவர்களிடம் ஊக்கப்படுத்தி அதன் வழியாகவும் அறிவின் அளவை,சுயமாக சிந்திக்கும் திறனை கல்வியில் உயர்த்தியும்,எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

                              இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில்    கேள்விகள் கேட்டாலே  ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்க்கின்றனர்.இது போன்ற நிலையில் அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு நேரடியாக  அழைத்து வந்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்க தூண்டி அதன் தொடர்ச்சியாக பல கேள்விகளை மாணவர்களே கேட்கும் அளவிற்கு  அவர்களுக்கு சிந்தனையை தூண்டி அவர்களது கேள்வி ஞானம் இன்று வளர்ந்துள்ளது.இது எப்படி சாத்தியமானது ? சொல்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் .

                                                           இந்த பள்ளிக்கு வந்த புதிதில் முதன்முதலாக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்க சொல்லி கலந்துரையாடல் செய்தார்.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மட்டுமே சுமார் 75 ஆளுமைகள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி செல்வதுடன் மாணவர்கள் அவர்கள் சொல்வதை உள்வாங்கி அவர்கள் முன்பாகவே அதனை தொகுத்து சொல்வதை கண்டு வியப்பில் செல்கின்றனர்.இதற்கு நாங்கள் பள்ளியில் செயல்படுத்தும் பல்வேறு போட்டிகள்,புத்தகங்கள் படித்து அதனை மறு நாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்ல சொல்வதும்,ஆளுமைகள் பேசியவற்றை மறுநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்ல சொல்வதும் (ஒவ்வொரு மாணவரும் ஒன்று அல்லது இரண்டு என) ஆளுமைகள் சொன்ன கருத்துகளை சொல்லி அனைவரும்  அனைத்து கருத்துகளையும் சொல்வது போன்று பயிற்சி அளித்து வருகிறோம்.இதனால்தான் காவல் நிலையத்திற்கு களப்பயணம் சென்றபோது டிஸ்பி  கருப்பசாமியிடம் எட்டாம் வகுப்பு படிக்கும்  விஜய்  என்கிற மாணவர் சினிமா படத்தில் எப்படி ஒரு போலீஸ் பல பேரை அடித்து தள்ளுகிறார் என நேரடியாக கேள்விகள் கேட்டார்.  இது போன்று பல்வேறு கேள்விகளை கேட்க செய்ய வகுப்பறையிலும்,பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்திலும் கேட்க சொல்கிறோம்.இது பல்வேறு புதிய சிந்தனைகளை மாணவர்களிடத்தில் விதைப்பதற்கு உதவியாக உள்ளது.ஏன் ,எதற்கு,எப்படி என்று கேள்விகள் கேட்பதற்கு நாம் இளம் பள்ளி பருவத்தில் உருவாக்கி விட்டால் அதுவே அவர்களுக்கு  வரும்காலத்தில் மிகுந்த உதவியாக இருக்கும்.கேள்விகள் அதிகம் கேட்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வருகிறோம்.பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு அழைத்து வரும்போது அவர்களை போல் தாங்களும் வரவேண்டும் என்கிற எண்ணம் மாணவர்களிடத்தில் வளர்ந்து வருகிறது.இது போன்று பதவிகள் உள்ளன என்கிற எண்ணமும் ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் தெரிய வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்டோர் மாணவர்களுடன் பள்ளிக்கே வந்து கலந்துரையாடி சென்று உள்ளனர்.

                                               சமீபத்தில் இந்திய அரசின் உதவி தலைமைக்  கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86), இப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் , எந்த விதமான தயாரிப்பும் இல்லாமல் தீடிரென ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தான்  முன்னின்று நடத்த வேண்டிய கலந்துரையாடல் நிகழ்வை சுமார் நான்கரை மணி நேரம்  மாணவர்களே பல்வேறு கேள்விகள் கேட்டு அவரிடம் பதில்கள் பெற்று அவரை வழிநடத்தி சென்றது மிக வியக்கத்தக்க நிகழ்வு என தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் இப்பள்ளியின்,சமுதாயத்தின் வெற்றி.யார் ஒருவர் இளம் மாணவ பருவத்தில் கேள்விகள் அதிகம் கேட்டு பதில்கள் பெறுகிறார்களோ அவர்களே பிற்காலத்தில் நல்ல சமுதாய சிந்தனை உடையவர்களாக மாறி உருவெடுக்கிறார்கள் என்பது நிஜம். எங்கள் பள்ளியில் தொடர்ந்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். 

    சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி :

                 அது என்ன புதிய முயற்சி ? தலைமை ஆசிரியரே தொடர்கிறார்.சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்த இன்னம்புரான் தனது வலை தலத்தில் பள்ளியின் சத்துணவு தொடர்பாக பின் வருமாறு எழுதி உள்ளார் : 

     " பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் இந்த பள்ளியில் தமிழக  அரசு வழங்கும்  மதிய உணவு சத்துணவு பரிமாறுவதில் நான் கண்டேன்.பிரதமர் மோடி இதனை நேரில்  கண்டால் மகிழ்ச்சி அடைவார் .ஒவ்வொரு மாணவரும் தூய்மையான  கைகுட்டையின்  மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு அருந்தினார்கள்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைத்தனர்.ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தாங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்க

    No comments: