Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 31, 2012

    ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.

    இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    "ஒரே ஒரு தேர்வு தான்: தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

    AEEO / AAEEO - அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 3 சதவீதம் பதவி உயர்வு அளிப்பது.

    animated gifதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 22399 / ஐ 2 / 2010 நாள்.  03.2012.
    animated gifதமிழ்நாடு சார்நிலைப் பணி - உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலி ஏற்படும் பணியிடங்களில் 3 சதவீதம் பதவி உயர்வு அளிப்பது.
    animated gifதம்தம் மாவட்டத்தை சார்ந்த 1.11.2011 முடிய உள்ளவர்களின் விவரங்களை பணிப்பதிவேட்டினை கொண்டு பூர்த்தி செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் மூன்று நாட்களுக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இன்று தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வேலை நாளாக செயல்படுத்த இயக்குனர் உத்தரவு.

    தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
    தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதால் கலந்தாய்வு நடைபெறும் நாளான 31.03.2012 மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் வேலை நாளாக செயல்படுத்தல் வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    Friday, March 30, 2012

    பத்து மாற்றுத்திறனாளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை முதல்வர் நேரடியாக வழங்கினார்.

    ஆசிரியையை தாக்கிய டிஎஸ்பி விடுப்பில் சென்றார்.


    தர்மபுரி : தர்மபுரியில் ஆசிரியர்களை டிஎஸ்பி தாக்கிய சம்பவம் தொடர்பாக சாலை மறியல் நடந்த இடத்தில் டிஐஜி விசாரணை நடத்தினார். தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப விநியோகத்தில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி மறியலில் ஈடுபட்டவர்களில் ஆசிரியையும், பட்டதாரியையும் டிஎஸ்பி சந்தனபாண்டியன் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளீயீடு.

    6 நாட்களில் 16,126 ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை.


    மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 6 நாளில், 16 ஆயிரத்து 126 விற்பனையாகியுள்ளன.
    இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு விண்ணப்ப விற்பனை, மாவட்டத்தில் கடந்த, 22ம் தேதி துவங்கியது. முதல் நாளிலேயே, 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாயின.

    ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடிவுகள் நாளை வெளீயீடு.


    ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும்,&'&' என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
    கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

    நிலையிறக்கம் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு.


    தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
    2011 - 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் தொடக்கப்பள்ளியாக நிலையிறக்கம் செயயப்பட்ட பள்ளிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு நடத்துதல்.
    ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
    நாள். 31.03.2012 
    இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.

    சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு - 2011 (நகர்புரம்) - மதிப்பூதியம் விவரம்.

    மதிப்பூதியம் விவரம் - மேற்பார்வையாளர்கள் (SUPERVISORS)
    பயிற்சியின் பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் வழங்கப்படும்.
    (இத்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் உண்டு).  
    அனைத்து பொருட்கள் திரும்ப ஒப்படைத்தும், கணக்கெடுப்பு பிளாக்குகளிலும்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை 100 சதவீதம் உறுதி செய்த பிறகு ரூ.3000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும். (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணி ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனில் இத்தொகை கிடையாது). 
    களப்பணி பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் அதிகபட்சமாக ஒரு கணக்கெடுப்பு பிளாக்கிற்கு 10 நாட்கள் வீதம் வழங்கப்படும்.  (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணிக்கு செல்லவில்லை எனில் இத்தொகை கிடையாது).
    மதிப்பூதியம் விவரம் - கணக்கெடுப்பாளர்கள் (ENUMERATORS)
    பயிற்சியின் பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் வழங்கப்படும்.

    சமூக பொருளாதாரம், சாதிவாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடக்கம்.

    animated gifநாடு முழுவதும் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று நடத்தப்பட்டது. இதுகுறித்து கணக்கெடுப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது : 
    animated gifஏற்கெனவே நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெறப்பட்ட புள்ளி விவரங்களை கொண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் இந்த கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. இப்பணி தொடர்ந்து 40 முதல் 45 நாட்கள் வரை நடைபெறும். 
    animated gifஇதில் நகரப்பகுதியில்  அங்கன்வாடி பணியாளர்கள், பில் கலெக்டர்களும், கிராமப் புறங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களும் ஈடுப்படுவார்கள். அதேபோல் விருப்பத்தின் பேரில் ஆசிரியர்களையும் இப்பணிகளில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இவர்களுடன் கணினி குறித்து நன்கு அறிந்தவர்களும் பயன்படுத்தபடுவார்கள்.  அவர்கள் கையளவு கணினி கொண்டு வீடுவீடாக சென்று மக்களின் விவரங்களை சேகரித்து அங்கேயே பதிவு செய்வார்கள்.
    animated gifமேலும் இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநிலம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேருராட்சி அலுவலகங்களில் தற்போது மும்முரமாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    Thursday, March 29, 2012

    தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் / மாணவர்கள் வகுப்பறையில் கைப்பேசியினை பயன்படுத்த தடை.

    animated gifதொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 004027 / J3 / 2012, நாள். 22.02.2012.
    animated gifதொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் வகுப்புகள் நடத்தும் போது கைப்பேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு.


    ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து  4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    உயிரியல் பாடத்தில் 3 மதிப்பெண்கள் தப்புமா?


    பிளஸ் 2 உயிரியல் பொது தேர்வில், மூன்று மதிப்பெண் கொண்ட கேள்விக்கு, இரண்டு பதில்கள் உள்ள நிலையில், எந்த பதிலை &    'கீ நோட்&'டாக தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் என தெரியாமல் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இலவச பாடப்புத்தக அறிவிப்புக்கு வரவேற்பு.


    பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.
    சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, 2012-13ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    Wednesday, March 28, 2012

    பெண் பட்டதாரி ஆசிரியர்கள் மீது போலீசார் தாக்குதல்

    டி.இ.டி., தேர்வுக்கு மேலும் 4 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்.

    டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சிடப்பட்ட, 8 லட்சம் விண்ணப்பங்களும், மூன்று நாட்களில் விற்றுத் தீர்ந்தன.
    கூடுதலாக அச்சிடப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்கள், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இன்று(27.03.12) அனுப்பப்படுகின்றன.

    இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்.

    சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும், 226 இளநிலை உதவியாளர்களுக்கு, உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், 29.03.12 அன்று சென்னையில் நடக்கிறது.
    மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில், இளநிலை உதவியாளர்களாகப் பணியாற்றி வருவோரில், பணிமூப்பு அடிப்படையில், 226 பேர் உதவியாளர்களாகப் பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.
    சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 29.03.12 அன்று பகல் 2 மணிக்கு, கவுன்சிலிங் நடக்கிறது. இதில், சம்பந்தப்பட்டவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம்.


    ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் வேலைவாய்ப்பு மாவட்ட குறியீடு குறித்த விபரங்கள் இல்லாததால் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
    தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டம் - முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளீயிடு - வகுப்பு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை.

    Tuesday, March 27, 2012

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - 9 ம் 10 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான கல்விப்பயணம்.

    animated gifதமிழ்நாடு மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 217 / அ2 / அஇகதி / 2011-12, நாள். 02.02.2012. 

    SCHOOL EDN - ANNOUNCEMENT MADE BY HON'BLE CM - IMPLEMENTATION OF CHESS GAMES IN ALL SCHOOLS.

    animated gifGovt. Letter. No. 25240 / E1 / 2011 - 8, Dated. 26.12.2011
    animated gifThe game of Chess may be introduced from 3rd standard instead of 2nd standard as already proposed.(Age 7 to 17Years)
    animated gifIn respect of High and Higher Secondary School, the Director of School Education, and Addl. Project Director, Rastriya Madyamic Shiksha Abiyan have stated that the cost for the Chess Board, coins and others materials can be met out from the school fund available and the training for the key resource person for the standards 9th, 10th, 11th and 12th may be given under RMSA.
    animated gifAs the Government need not bear the cost for aided and other private schools for implementation of this programme.

    பத்தாம் வகுப்பு வரையில் இனி நோட்டுப் புத்தகங்கள் இலவசம்!

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளில், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இருந்து, இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கல்வித்துறைக்கு கடந்தாண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு!

    பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த நிதியாண்டை விட, 1,219.16 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில், திட்டங்களுக்கு மட்டும், 1,900 கோடி ரூபாய் செலவழிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    Trimester I Term Syllabus for I to VIII Std.

    animated gifClick Here to View the following Subjects of Trimester I Term Syllabus for I to VIII Std.
    English medium

    Tamil medium

    Monday, March 26, 2012

    தொடக்கக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் விவரம்.

    animated gifதொடக்கக்கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 01.06.2012 நிலவரப்படி உடனடியாக அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்கமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
    animated gif31.05.2012 அன்று ஏற்படும் காலிப்பணியிடங்களை 01.06.2012 அன்று உள்ள காலிப் பணியிடங்களாக கருதி  சேர்த்து அனுப்பிவைக்கமாறு உத்தரவிட்டுள்ளார். 

    தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் முழு விவரம்.

    பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள் 
    animated gifபள்ளிக்கல்வித் துறைக்கு இதுவரை வழங்கப்படாத உயர் அளவாக இந்த 2012 - 13 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 14552.82 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
    animated gifஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    animated gifஅரசு ஊழியர்களின் காப்பீட்டு திட்டம் ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்வு.
    animated gifஅரசு ஊழியர்களின் வீட்டுக் கடன் அளவு ரூ.15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்வு.
    animated gifஅனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
    animated gifதமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் 2012 - 13 பதிவிறக்கம் செய்ய...

    2012 - 13 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் துவங்கியது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை துவங்கினார்.


    பட்ஜெட் விவரம் பின்வருமாறு:
    * புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வீடு கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    * புயல் பாதித்த 2 மாவட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தொடக்கக் கல்வி - தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக பயிற்சி.

    animated gifதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 006365 / கே 2 / 2012, நாள்.  .03.2012.
    animated gifTraining Programme for Teacher on “Series of National Level Workshop for Transit of Venus-2012” என்ற தலைப்பில் திருச்சியில் பயிற்சி நடைபெறவுள்ளது.
    animated gifஒரு மாவட்டத்திலிருந்து  ஒரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது பட்டதாரி ஆசிரியர் இவர்களில் ஒருவரை மட்டும் மேற்கண்ட பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க  தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    Sunday, March 25, 2012

    அரசு விடுமுறையன்று பத்தாம் வகுப்பு தேர்வா?

    animated gifபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நாள் அரசு விடுமுறையா? என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
    animated gifவரும் ஏப்ரல் 4ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது. ஆனால், அன்றைய தினம் மகாவீர் ஜெயந்தி என்பதால், அரசு விடுமுறை என்பதாக காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறையன்று தேர்வா? என்று மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் முடிவு!

    animated gifஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 சதவீதம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு வழங்காததற்கு  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது என தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்க மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில அவசர செயற்குழு கூட்டம் தஞ்சை லாலிஹாலில் 23.03.2012 அன்று நடந்தது.

    1040 இடைநிலை ஆசிரியர் பணியிடம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தி முதல்வர் உத்தரவு.

    animated gifதமிழக அரசு செய்தி வெளீயீடு எண். 227 நாள். 25.03.2012 மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்.
    animated gifநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சலுகைகள் எப்போது?

    animated gifஒரே கல்வித் தகுதி, ஒரே சம்பளம், ஒரே பணி, ஒரே தேர்வு முறை என அனைத்தும் ஒன்றாக இருந்தும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ள பதவி உயர்வு வாய்ப்புகள், தொடக்க கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சுத்தமாக இல்லை.

    Saturday, March 24, 2012

    பள்ளிக்கல்வி - கணினி வசதி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி - 2 திட்டத்தின் கீழ் நிறுவ / நிறுவப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கோருதல்.

    பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 51958 / பிடி1 / இ2 / 2010, நாள். 01.03.2012 
    பள்ளிக்கல்வி - கணினி வசதி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி - 2 திட்டத்தின் கீழ் 2008 - 09 ஆம் ஆண்டு முதல் 2011 - 12 ஆம் முடிய எல்காட் நிறுவனம் கணினி உதவியுடன் ஆங்கில மொழி ஆய்வகங்கள் நிறுவப்பட்ட / நிறுவிட அரசு மேல்நிலைப் பள்ளிகளின் பெயர்ப்பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனர் கோரியுள்ளார்.

    நாட்டின் முதல் மெடா பல்கலையை அமைக்க திட்டம்.


    animated gifநாட்டிலேயே முதன்முறையாக, டெல்லியில், மெடா பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    animated gifஇதுகுறித்து மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி கூறியதாவது: டெல்லியில், நாட்டிலேயே முதன்முறையாக, Meta பல்கலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா கல்வி நிறுவனம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி-டெல்லி ஆகிய கல்வி நிறுவனங்கள், இப்பல்கலையை உருவாக்குவதில் துணைபுரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதித்தேர்வால் பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு.


    animated gifஆசிரியர் தகுதித் தேர்வு எதிரொலியாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    animated gifஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அடிப்படையிலும் நடக்க உள்ளது.

    தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப் பணியிடவிவரம் கோருதல்.

    animated gifதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.5559 / டி1 / 2012, நாள். 21.03.2012.
    animated gifதொடக்கக் கல்வி - உத்தேச காலிப் பணியிடங்கள் விவரம் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு / தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 31.05.2012 அன்று பணி ஓய்வினால் ஏற்படும் உத்தேச காலிப் பணியிடங்கள் விவரம் தொடக்கக் கல்வி இயக்குனர் கோரியுள்ளார்.
    animated gif31.05.2012 அன்று  ஒய்வு பெறுவதால் ஏற்படும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்படும்போது ஏற்படும்  பட்டதாரி / தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உத்தேச காலிப்பணியிட விவரம் 26.03.2012 க்குள் இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கல்வி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு செல்வது வெறும் 6% மட்டுமே...


    animated gifடெல்லி: பட்ஜெட்டில் கல்விக்கென்று ஒதுக்கப்படும் நிதியில் 78%, ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் போக, வெறும் 6% மட்டுமே மாணவர்களுக்கு கிடைக்கிறது.
    animated gifபள்ளியின் சுவர்களுக்கு வெள்ளையடித்தல், பள்ளியில் நடைபெறும் விழாக்களுக்கான செலவு என்று கணிசமான நிதி செலவிடப்படுகிறது.