Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Tuesday, March 31, 2015

  தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 2முதன்மை கல்வி அலுவலர் / 4மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலை அலுவலர்கள் 31.03.2015 அன்று பிற்பகல் ஓய்வு பெறுவர்களை அனுமதித்தல் மற்றும் பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு

  பள்ளிக்கல்வி - 2015-16ம் கல்வியாண்டிற்கான உயர் நிலை தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

  Direct Recruitment of Assistant Professor in Govt.Arts Science Colleges - 2012 - Provisional Mark List of Candidates after Oral Interview


  DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
  PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW
  PSYCHOLOGYSANSKRITSOCIOLOGYVISUALCOMMUNICATION
  INDIAN CULTURECOMMERCE (COMPUTER APPLICATION)COMMERCE (INTERNATIONAL BUSINESS)
  CORRECTION(POLITICAL SCIENCE)HISTORY(OMITTED) 

  Dated : 31-03-2015

  Member Secretary

  தேவகோட்டை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்

  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடைபெற்றது.

  TESTF, AIPTF, EI, AEU இணைந்து நடத்தும் EFA - HIV / AIDS மாபெரும் விழிப்புணர்வு பேரணி


  7 வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்தை 3 முறையால். பெருக்க கணக்கிட வாய்ப்பு!

  Following is the excerpt of a media report published in The Economic Times on 29th March 2015. "Welcome to the behind-the-scenes manoeuvring before the Big Sarkari Pay Hike. With a new pay scale for 36 lakh Central government employees, and also pensioners, likely to come into effect from January 1, 2016, the officers and non-gazetted staff of various services have been lobbying hard to get a good deal from the 7th CPC. Unlike in the private sector, the pay hike in government is a once-in-10-years-affair, making every CPC, right from the first that submitted its report in 1947, a hugely powerful agency. No doubt, government employees have to undergo an annual appraisal process called Annual Performance Appraisal Report (APAR), but that exercise is important only for promotion, and not for any pay hike. Government employees do get a regular hike in dearness allowance, a measure meant for offsetting inflationary pressure on their earnings, but at the end of the day it is the CPC that fixes the bureaucrats' pay for 10 long years.

  தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று (31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது.

  தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள் மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

  அரசு மேல் நிலைப் பள்ளிகளில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கணினி பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களை நியமிக்க கோரிக்கை

  7 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை: கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு வருகிறது ஆபத்து

  பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள் மாறுதல் கோரும் நிலையில் நியமன அலுவலரான மாவட்ட கல்வி அலுவலர்/முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் உத்தரவு

  உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  டி.என்.பி.எஸ்.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில், 3,484 கிராம நிர்வாக அதிகாரி, காலி பணியிடங்களை நிரப்ப, 2010, டிசம்பரில் விளம்பரம் வெளியிட்டது. எழுத்துத் தேர்வு முடிந்து 2011 ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், குறிப்பிட்ட சிலரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தனர்.

  பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

  பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

  10ம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது: அதிகம் பேர் 'சென்டம்' வாங்கலாம்!

  நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிமையாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். வீ.பவித்ரா (கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.): ஒரு மார்க்,2 மார்க் வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகளில் இருந்தே கேட்கப்பட்டதால் மிக எளிதாக இருந்தது. கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்தது. பல தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இந்த தேர்விலும் வந்திருந்தது.

  12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

  பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

  சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

  'கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செய்திக் குறிப்பு: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், காலி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,746 முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

  "பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே கடைசி வாரத்திலும் வெளியாகும்,” என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

  தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்

  தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

  பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி. யாருக்காக? எதற்காக? என்பதுதான் முக்கிய விஷயம்.

  Monday, March 30, 2015

  பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு

  த.அ.உ.ச 2005 - தொடக்கக் கல்வி - எம்.காம்., பி.எட்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை என இணை இயக்குனர் தகவல்

  புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

  அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

  அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால் விடுமுறை வழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில் முரண்பாடு எழுந்துள்ளதால், தமிழக அரசு அரசாணை வழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  கட்டண தாமதம் : 1ம் வகுப்பு சிறுமியை நாள்முழுதும் வெளியில் நிற்கவைத்த தனியார் பள்ளி

  கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு மாணவியை, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக, தனியார் பள்ளி மீது புகார் எழுந்துள்ளது.

  9ம் வகுப்பு மாணவர்களை வடிகட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

  அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வடிகட்ட, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  மாணவர்களுக்காக மெனக்கெடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

  அரசுப் பள்ளிதானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத்தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர்.

  போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்

  நேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

  ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவு

  சென்னையில் நடந்த ஜாக்டோ கூட்டத்தில் வரும் ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவாற்றியது.

  ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.

  இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்

  இந்தியாவில் 10-ல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  வானில் பறக்கும் வேளையில் வை-ஃபை இண்டர்நெட் வசதி: இந்திய விமானங்களில் விரைவில் அறிமுகம்

  இந்தியாவி்ல் விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களே வழங்கி வருகின்றன. பெரும்பாலான விமான பயணிகள் நீண்டகாலமாக இந்த இன்பிளைட் வை-ஃபை வசதியை எல்லா விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் மோசடியில் தொடர்புடைய பள்ளியில் தேர்வு மையங்கள் ரத்து?

  வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிகளின் தேர்வு மையங்களை, வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் பிளஸ் 2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன், சஞ்சீவ்குமார், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா என 8 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  "கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவை'

  கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வழி கற்றல் முறை அவசியம் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டி.முத்துசாமி தெரிவித்தார்.

  மழலையர், தொடக்கக் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

  தமிழகம் முழுவதும் உயர் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி விட்டோம். பல பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நிர்வாகப் பயிற்சிக் கல்லூரிகள் வந்து விட்டன. ஆனால், மழலையர் கல்வி, தொடக்கக் கல்வியில் நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டோம். இப்போது 8 ஆம் வகுப்பு வரை தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இல்லை என்ற காரணத்தால், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சரியாகத் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்கள் தெரியவில்லை. இது மிகமிக வேதனைப்படக் கூடிய விஷயம்.

  ஜாக்டோ உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியல் விவாதித்து வெளியிட வாய்ப்பு

  சென்னையில் ஜாக்டோ கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் வரும் உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியல் விவாதித்து வெளியிட வாய்ப்புள்ளது. மேலும் புதிய சங்கங்கள் இணைப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்.

  மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது;


  மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

  Sunday, March 29, 2015

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

  மாற்றம் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகள்:-
  1. பழைய பணியின் நியமன ஆணை
  2. கணக்குத்தாள் நகல் 
  3. மாறுதல் பெற்ற பணியின் DDO மூலம் கடிதம்.

  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

  பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்

  அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால்பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்ட உத்தரவு: ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஎட் பயில்கின்றனர்.

  1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1,025 பேருக்கு அவர்களது மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 721 ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

  முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு

  முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னை உள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உள்ள, பணியிடங்கள் காட்டப்படவில்லை. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

  அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

  அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்

  ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல் ஆந்திராவில் வெண்ணிலா, கருடா, கருடா பிளஸ் என்ற பெயரில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் வருகிற ஏப்ரல் 1–ந்தேதி முதல் இண்டர்நெட் வைபை வசதி செய்யப்பட உள்ளது.

  பிளஸ்2 "பிட்".. அரசு மாணவர்களை மட்டும் பிடித்துக் கொண்டு 7 தனியார் மாணவர்கள் விடுவித்ததால் சர்ச்சை!

  பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக பிடிபட்ட 9 பேரில், தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை மட்டும் விடுவித்துவிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

  வருமான வரியை மின்னணு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

  தனியார் பள்ளிகளின் முறைகேடு; அரசு பள்ளி மாணவர்களுக்கு பறிபோகும் வாய்ப்புகள்

  அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு

  மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வருவதை ஒட்டி ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி:

  கைதான ஆசிரியர்கள் போலீசில் கதறல்

  வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம்: பள்ளி நிர்வாகம் நெருக்கடியால் விடைகள் தயார் செய்தோம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிளஸ்-2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட சம்பவத்தில் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பிய கேள்வித்தாளுக்கு விடைகளை தயாரித்ததாக அதே பள்ளியின் பிளஸ்-2 கணக்கு ஆசிரியர்கள் சஞ்சீவ்குமார், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

  Saturday, March 28, 2015

  TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது; விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு

  ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வழக்கு எண் 29245/2014. 30ந்தேதி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  14 மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்காத தலைமையாசிரியர்

  தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம்

  பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது.

  100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?

  100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை, சிலபல காரணங்களைக் கூறி, பள்ளி நிர்வாகமே, தேர்வெழுத விடாமல் தடுக்கிறது என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

  இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

  'பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள் தெரிவித்தனர். கே.மணிவேல், அரசு மேல்நிலைப்பள்ளி அழகமாநகரி: 3, 5 ,10 மதிப்பெண் வினாக்கள் கடினமில்லை என்றாலும், 5 மதிப்பெண் கட்டாய வினா சற்று கடினம். இதில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. 60 சதவீதம் புத்தகத்தின் பின்புறம் இருந்தும், 40 சதவீதம் புத்தகத்திற்கு உள்ளே இருந்தும் கேட்கப்பட்டன. வகுப்பறையில் ஆசிரியர்கள், 'முக்கியம்' என கூறிய சில வினாக்கள் வந்தன.

  பொதுத்தேர்வில் பழைய வினாத்தாள்: வரிசை மாறாமல் 'அப்படியே' கேள்விகள்

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 திருப்புதல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், 'அப்படியே' பொதுத்தேர்விற்கும் வழங்கப்பட்டது. பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ல் துவங்கி 26 ல் முடிந்தன. இத்தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரத்தில் சில பாடங்களுக்கான வினாத்தாள் 'வாட்ஸ் அப்'ல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

  பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

  பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் 'புளு பிரின்ட்' படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி 'பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக' என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது.

  60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

  நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.

  தொடர்ந்து வங்கி விடுமுறை நாட்களா? பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

  வரும் திங்கட்கிழமை முதல் 6 நாட்கள் வங்கிகள் செயல்படுவது குறித்து வெளியான தகவல்களுக்கு நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 30ம் தேதி திங்கட்கிழமையும், 31ம் தேதி செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  Friday, March 27, 2015

  தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

  Direct Recruitment of Lecturer (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) for Government Law Colleges 2013 - 14 - Provisional Selection List Released


  DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014
  PROVISIONAL SELECTION LIST

  Dated: 27-03-2015

  Member Secretary

  8 ஆண்டுகளாக பணியிட மாறுதல் இன்றி அவதிப்படும், 1000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க கோரிக்கை


  பலிகடா ஆசிரியரா? தினமணி தலையங்கம்

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.

  அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

  ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

  த.அ.உ.ச 2005 - புதிய ஓய்வூதிய திட்டத்தில் (CPS) உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid pension) மற்றும் பணிக்கொடை (Gratuity) வழங்கும் மத்திய அரசின் கடிதம்


  பிரடெரிக் ஏங்கல்ஸ், திண்டுக்கல்     englesdgl@gmail.com

  மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு

  ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

  அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!

  தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

  பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

  பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமைச் செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.

  புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்':கல்வித்துறை மீது சந்தேகம்

  புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது.

  முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சலிங் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம்

  முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  ஓய்வூதியம் வழங்குவதில் அரசுகளுக்கு இடையே பாரபட்சம்

  தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) முடிவுகள் வெளியீடு

  பணம் என்றால் என்ன? முதலில் கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு…!!


  அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த்தாக நிர்வகிக்க முடிவதில்லை.

  அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு.


  தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  Thursday, March 26, 2015

  கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு கோரிக்கை


  ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு


  வணக்கம். 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA) "சார்பில் மாநில பொதுச் செயளாலர் தா.வாசுதேவன், விழுப்புரம் . சசிகுமார் காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டோம். நமது முக்கிய கோரிக்கையான பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக அனுப்புதல்,3 வருட மாறுதலை திரும்பப் பெறுதல் ஆகியவற்றை JACTTOவின் கோரிக்கையுடன் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

  கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?

  பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

  பழைய முறையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு....

  பழைய முறையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுச்சேரி அரசு பணி வழங்க வேண்டும் என, பட்டய பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  சொன்னபடி செய்யும் தேர்வுத்துறை : கிலியில் ஆசிரியர்கள்

  மாணவர்கள் பிட் அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், சஸ்பெண்ட் உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் உஷார் அடைந்துள்ளனர்.

  65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு

  கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

  மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்;

  பட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை

  பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட, புதிய அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

  ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

  ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,

  ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்

  நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

  30 ரூபாய்க்கு காசோலை மாணவர்கள் அதிர்ச்சி

  அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி

  தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  Wednesday, March 25, 2015

  ஈடுசெய் விடுப்பு - தகுதியுள்ள விடுப்பு அனுபவிக்க பட்டியல்

  பள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலைக்கு செல்லும்: ஓபிஎஸ் நம்பிக்கை

  2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

  குறுவள மைய பயிற்சி பயிற்சி நாட்கள்- ஈடுசெய் விடுப்பு அனுமதி -அரசாணை-62 குறித்த ஓர் விளக்கம்

  TNPSC - DEPARTMENTAL EXAMINATION TIME TABLE - MAY 2015 FOR EDUCATION DEPT

  போட்டித்தேர்வு போல் கேட்கப்பட்ட வினாக்களால் திணறிய மாணவர்கள்

  பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.

  ஆசிரியர்கள் பிரச்சனைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா?

  முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா?

  வரும் 28ம் தேதி தமிழகத்தில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

  பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில் துவங்கியது.

  2015ம் ஆண்டு தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான கவனிப்பு என்ன?

  2015-16 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடியும், உயர்கல்விக்கு ரூ.3,696 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், மார்ச் 25ம் தேதி (இன்று) சட்டசபையில் தாக்கல் செய்தார்.

  கல்வித் திருடர்கள்

  தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!

  107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

  தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி

  தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  "தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?

  தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற வாசகர் அரங்கம்
  சரியானதே
  தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியானது. தனியார் பள்ளிகள் மூன்று வயது குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து விடுகின்றன. பெற்றோர் ஐந்து வயது வரை பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும்.

  பள்ளியில் மாணவியிடம் தவறாக பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

  தாராபுரம் அருகே, அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக பேசிய, ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  கல்வித்தகுதி தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்ட ஓவிய ஆசிரியர் போட்டித் தேர்வு

  தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?


  பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.

  ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .


  புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு


  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 

  தொப்பை குறைய - (to burn belly fat) என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க...


  பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.

  Tuesday, March 24, 2015

  குறுவள மைய பயிற்சி சார்பான ஈடு செய்யும் விடுப்பு குறித்து வழிக்காட்டு நெறிமுறைகள்

  குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்

  பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:

  ஆசிரியர்களின் மனதை நோகடித்தனர்; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

  அழைத்து பேச மனமில்லை; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

  பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு

  பள்ளி நிர்வாகிகளை தப்பவைக்க முயற்சியா?

  பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகிகளை தப்பி  வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொது தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட  ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே  கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிர்வாகம் பள்ளி நிர்வாகத்திற்கு துணைபுரியும் வகையிலான காரியங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களை ஒப்படைத்த பின்னர் கூட போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. 

  கிருஷ்ணகிரி பள்ளியில் ஜெராக்ஸ் எடுத்து மோசடி

  ஓசூரை போலவே, கிருஷ்ணகிரியிலும் பிளஸ்2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி  தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், அரசு மற்றும் தனியார்  பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினர். அன்று ஒரு அறையில் கண்காணிப்பாளராக அரசு பள்ளி ஆசிரியை பணியில் இருந்துள்ளார்.

  புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு


  பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு

  *கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா? 
  *பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?
  *எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?
  ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக  இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது.

  பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

  பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்படட தேர்வறை கண்காணிப்பாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்த 3 பேர் வெளியேற்றம்; 3 ஆசிரியர்கள் இடைநீக்கம்

  தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 3 மாணவர்கள் விடைக் குறிப்பை மறைத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் பிடிபட்டதை அடுத்து, தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருந்த 3 ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

  ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

  பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், பிளஸ் 2 கணித வினாத்தாளை அனுப்பியது தொடர்பான விவகாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

  விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

  மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டு பிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  தனியார்பள்ளிகளின் கூத்து!!!

  எங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.

  பிரித்தாளும் கொள்கை?

  மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் ஜாக்டோ உயர் மட்டக் குழு உறுப்பினர் இரா.தாஸ் கூறியதாவது: ஆறாவது ஊதியக் குழுவில் தெரிவித்த ஆசிரியர்களுக்கான ஊதியம் இங்கே பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் கடைநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.1200 என்று சம்பளம் வழங்கும்போது, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.610 வழங்கினர்.

  Monday, March 23, 2015

  அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்

  பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :

  தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
  சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
  கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
  மகப்பேறு விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
  கருச்சிதைவு விடுப்பு- முழுஊதியம் & படிகள் 

  தத்தெடுப்பு விடுப்பு - முழுஊதியம் & படிகள் 

  கோடை விடுமுறை துவக்கம்; பணிகள் விரைந்து துவங்குமா?

  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. அதனால், பிரதான பகுதிகளில் ஓரளவுக்கு நெரிசல் குறைந்துள்ளது.

  10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை அனுமதிக்காததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் அரசு பள்ளியில், கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டுஷீலா அனுமதிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

  பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் மேலும் 5 பேர் சிக்குவதற்கு வாய்ப்பு

  பிளஸ் 2 தேர்வு கணித வினாத்தாளை, வாட்ஸ் அப்பில் அனுப்பிய விவகாரத்தில், ஆள்மாறாட்ட முறைகேடும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர், தலைமைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் என, மேலும் 5 பேர் சிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

  குரூப் - 2 பணியிட நியமனத்திற்கு விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பம்

  டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

  டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 பதவிகளான நகராட்சி ஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறை நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1064 பணியிடங்களுக்கு 2014 நவம்பரில் தேர்வு நடந்தது.

  குடிமை பணிக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் சேர...

  குடிமை பணிக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் சேர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  "நெருக்கடியில் இருக்ககூடிய மக்களிடையேதான் வெளிப்படுத்தும் திறன் அதிகம்"

  அழகப்பா பல்கலையில் இணைப்பு கல்லூரிகளுக்கிடையேயான திறன் வெளிப்படுத்தும் விழா, பண்பாட்டு மையம் சார்பில் நடந்தது.

  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம்

  மணலி புதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுமானம் துவங்கியுள்ளது.

  ஜாக்டா,ஜாக்டோ' தனித்தனி போராட்டம்: ஆசிரியர்கள் குழப்பமோ குழப்பம்

  ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல், 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், ஜாக்டோவுக்கு போட்டியாக, 'ஜாக்டா' குழு சார்பில், ஏப்ரல், 12ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Sunday, March 22, 2015

  வங்கி கணக்கில் குறைந்தபட்சம் தொகை இல்லாவிட்டால் அபராதம்; ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கிறது!

  புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

  காசு இல்லாத மக்களின் கவனதிற்கு; இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை???

  உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் இதற்காக நான் கடந்த 6 வருடமாக அனைத்து விபசார ஊடகங்களையும் அணுகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டும் ஏழை மக்களின் உயிர் காக்க போராடி கொண்டு உள்ளேன் இந்த பல்லடம் சிவகுருநாதன் 9952432752 தயவு கூர்ந்து அனைவரும் பகிருங்கள் உங்களை நான் பணம் கேட்கவில்லை பகிரத்தான் வேண்டுகிறான். மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு???

  மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கையா? பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்


  நாகையில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி வரவேற்றார்.

  சங்கப்பணி - சங்க நிர்வாகிகளுக்கு சங்கப் பணியின் பொருட்டு 15 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து இணை இயக்குனர் உத்தரவு

  தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி!

  ஓசூரில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 18ம் தேதி நடந்த பிளஸ்2 கணித தேர்வில், தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த, ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், கணித வினாத்தாளை, மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்தனர்.

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு; மூன்றே மாதங்களில் பணி நியமனம்

  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  பிளஸ்2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு? 4 ஆசிரியர்கள் கைது; கல்வி அதிகாரிகள் விசாரணை; 118 ஆசிரியர்கள் பணி இடமாற்றம்; ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?

  தமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. ‘வாட்ஸ் அப்’பில் கணித வினாத்தாள் கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

  Saturday, March 21, 2015

  ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?

  திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது. தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? தேர்வுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

  கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

  மார்ச் 21-வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தில் வினாத்தாள் கசிவு பரிமாற்றம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பு விடுகிறது.

  அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

  தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்தகல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 5000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 

  ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!

  நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி. 

  ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

  இன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்  நடத்த ஜாக்டோ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு

  வளவனூர் அரசு பள்ளி யில் பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்க காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற் றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

  பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழகஅரசு முடிவு

  அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  Friday, March 20, 2015

  மேல்நிலை இரண்டாமாண்டு - அரசு பொதுத்தேர்வு மார்ச் 2015 - விலங்கியியல் மாதிரி விடைகுறிப்பு

  தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 - இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை குறித்து திருத்திய ஊதிய விகிதங்கள் - திருத்திய ஆணை வெளியீடு

  Direct Recruitment of Computer Instructor through Employment Registration Seniority - 2014

  Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15


  Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
  PHYSICAL DIRECTOR EXAMINATION RESULTS AND SUPPLEMENTARY PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

  Dated: 20-03-2015

  Member Secretary

  தொடக்கக் கல்வி - "கபீர் புரஸ்கார்" விருது 2015க்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு


  இந்திய கல்வி நிறுவனங்களில் தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற இயக்குனர் உத்தரவு


  பள்ளிகளின் ஒத்துழைப்பு இன்மையால் அதிகாரிகள் அல்லல்படும் நிலை

  பத்தாம் வகுப்பு விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை தேர்வு செய்வதில், இறுதி சமயத்தில், பள்ளிகளின் ஒத்துழைப்பு இன்மையால், அதிகாரிகள் அல்லல்படும் நிலை ஏற்பட்டது.

  "மாணவர்களின் ஒழுக்கம்தான், அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்"

  "மாணவர்களின் ஒழுக்கம் தான், அவர்களை, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்" என, கல்லுாரி ஆண்டு விழாவில், டி.எஸ்.பி., பேசினார். திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. இதில், திருத்தணி டி.எஸ்.பி., பொற்செழியன் பேசுகையில், &'&'தமிழகத்தில் உள்ள 69 அரசினர் கலைக் கல்லுாரிகளில், திருத்தணி கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு துறையில் சிறந்து விளக்குகின்றனர்.

  உதவியாளர், சுகாதார மேற்பார்வையாளர் காலி பணிக்கு பதிவு மூப்பு விபரம்

  "உதவியாளர்,சுகாதார மேற்பார்வையாளர் காலி பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளதாக" சிவகங்கை வேலை வாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

  வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அவுட்

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பரிமளம் மெட்ரிக் பள்ளியில் கடந்த 18ம் தேதி பிளஸ்2 கணித தேர்வு நடந்தது. இதில், ஓசூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் மகேந்திரன், கோவிந்தன் என்ற இரண்டு ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களாக பணியாற்றினர்.

  பழத்தை சுத்தியலாக மாற்றும் நிகழ்ச்சி; அறிவியல் பணிமனையில் ருசிகரம்

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியலை விளையாட்டாக கற்று கொள்வது தொடர்பான நேரடியாக செய்து காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை.


  தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும்.

  உதவியாளர் பணிநியமன கலந்தாய்வு மார்ச் 21ம் தேதி நடக்கிறது: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

  டிஎன்பிஎஸ்சி குரூப்-2- ஏ தேர்வு மூலம் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது.

  கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்

  பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம்.

  ஏப்ரல் 23ம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை?

  ஏப்ரல் 23ம் தேதி முதல், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

  பொதுத்தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவி

  கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'

  பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இத்தேர்வு வினாத்தாளில் சிறுவினா பகுதியில் 'பண்டைய கடல் வாணிபம் குறித்து எழுதுக' என்று 43வது கேள்வி இடம் பெற்றது.

  Thursday, March 19, 2015

  தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

  தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும்

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பிறகு, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு இந்தப் பட்டியல் அண்மையில் அனுப்பப்பட்டது.

  வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்!

  அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டு
  அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!
  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் பிரமாண்ட கண்டனப் பேரணி தமிழக அரசை திகைக்க வைத்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். ஆட்சிக்கு எதிரான முதல் போராட்டத்தை ஜாக்டோ நடத்தி இருக்கிறது.

  பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.

  20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

  ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன் தனது சம்பளத்தில் 20 சதத்தை மாணவர்களின் நலனுக்கு மாதந்தோறும் வழங்கி வருகிறார்.ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன். இவர் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் ரூ.73 ஆயிரத்தையும், 2014-15-ஆம் கல்வியாண்டில் ரூ.79 ஆயிரத்தையும் தனது சம்பளத்தில் இருந்து வழங்கியுள்ளார். 

  வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு

  வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 

  தாய்மொழி கல்வி மசோதா 20ம் தேதி தாக்கல்

  தாய்மொழியில், தொடக்க கல்வி வழங்குவதை கட்டாயமாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, ’தாய்மொழி கல்வி’ மசோதா, வரும் 20ம் தேதி, கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

  விரிவுரையாளர் பணி நியமனத்தில் மத்திய அரசின் விதிமுறை செல்லும்: சுப்ரீம் கோர்ட்

  பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) விலக்கு அளித்திருந்தது.

  10.72 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம் 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.

  கணிதத் தேர்வு சுலபமா? கடினமா?

  பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஈசி’யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, கணிதத்தில், ’சென்டம்’ வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

  ஏப்.1, 2, 3 வங்கிகள் விடுமுறை! 5 நாட்களுக்கு வங்கி சேவை பாதிப்பு.


  ஏப்ரல் 1 முதல் 3ஆம் தேதி வரை இந்தியாவின் பல பகுதிகளில் மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியின் காரணமாக பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 5 நாட்களுக்கு நாட்டில் வங்கி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

  அரசாணை எண்.62ல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.81 (பொதுத்துறை)

  ஆண்டு விழா கொகண்டாட குறைந்த தொகை ஒதுக்கீடு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேதனை

  பள்ளிகளில் சொற்ப தொகையைக் கொண்டு ஆண்டு விழா நடத்தும்படி வழங்கப்பட்ட உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2500, 200-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது.

  5,000 கோடி ரூபாய் எங்கு உள்ளது?தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி

  "தமிழகத்தில், 2003ம் ஆண்டுக்குப் பின், அரசுத் துறை மற்றும் ஆசிரியர்கள் என, இரண்டு லட்சம் பேரிடம், புதிய பென்ஷன் திட்டத்துக்காக பிடித்தம் செய்த, 10 சதவீதம் தொகை, அரசு செலுத்த வேண்டிய தொகை என, 5,000 கோடி ரூபாய்க்கு, என்ன கணக்கு உள்ளது என்பதே தெரியவில்லை,'' என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரங்கராஜன், திருச்சியில் தெரிவித்தார்

  Wednesday, March 18, 2015

  தேர்வுமுறை விஷயத்தில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

  ஒரு கல்வியாண்டில் எந்த தேர்வுமுறை அடிப்படையில் மாணவர்கள் சேர்கின்றனரோ, அதே முறையை கடைசிவரை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். இடையில் மாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது. மனுதாரரை புதிய முறையில் தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் எம்.டி.எஸ்., தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

  உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு

  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

  தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு

  பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

  தொலைதூர கல்வி மூலம் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளை நடத்த யுஜிசி தடை

  தொலைதூர கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு யுஜிசி தடை விதித்துள்ளது.

  மூன்றாவது ஊக்கத்தொகை; பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

  10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.

  ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோரில் 5.40 லட்சம் பேர் மாணவர்கள், 5.32 லட்சம் பேர் மாணவிகள் ஆவர்.

  ஆகஸ்டில் அடுத்த டெட் தேர்வு 10000 ஆயிரம் பேருக்கு ஆசிரியராக வாய்ப்பு

  Tuesday, March 17, 2015

  கண் திறக்குமா?

  மனித வாழ்வின் அடிப்படை விஷயங்களில் முக்கியமானது கல்வி. இது அனைவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும். நாட்டிலேயே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு. ஆனால் இதில் பெரும்பகுதி தனியாருக்கு சொந்தமானவை. உயர்க்கல்வியைவிட முக்கியமானது அடிப்படை, தொடக்கக் கல்வியாகும். இதிலும் தனியார் கல்வி நிறுவனங்களே அதிக அளவில் உள்ளன.

  தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

  1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
  2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

  காலி பணியிட பட்டியல் வந்ததும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

  தமிழக அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்கள் பட்டியல் கிடைத்ததும், போட்டித் தேர்வுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 30ம் தேதி, போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, குரூப் - 1, குரூப் - 2 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் வரிசையாக அறிவிக்கப்படுகின்றன.

  DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012  DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

  Dated : 12-03-2015

  Member Secretary

  பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

  பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு