ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல் ஆந்திராவில் வெண்ணிலா, கருடா, கருடா பிளஸ் என்ற பெயரில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் வருகிற ஏப்ரல் 1–ந்தேதி முதல் இண்டர்நெட் வைபை வசதி செய்யப்பட உள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் மக்களின் வசதிக்காக வைபை வசதி செய்யப்படுவதாக ஆந்திர அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினார்கள்.
முதல் கட்டமாக விஜயவாடாவில் இருந்து ஐதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, பெங்களூர், செல்லும் பஸ்களில் வைபை வசதி செய்யப்படுகிறது. பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து கிருஷ்ணா, குண்டூர், திருப்பதி செல்லும் பஸ்களில் விரிவுபடுத்தப்படும்.
இதனை பயன்படுத்தும் பயணிகளுக்கு முதல் ஒரு மணி நேரம் இலவசமாக இந்த சேவை கிடைக்கும் அதன் பின் ரூ.16 கட்டணம் செலுத்தி தனது பயணம் முடிவுயும்வரை வசதியை பெறலாம்.
இதன் மூலம் பயணிகள் தெலுங்கு உள்பட பல்வேறு படங்களை தங்களது லேப்–டாப், செல்போனில் பார்க்கலாம். 50 படங்கள் மற்றும் 400–க்கும் அதிகமான வீடியோ பாடல்கள் பார்க்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் சொகுசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment