தாராபுரம் அருகே, அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக பேசிய, ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக உள்ளவர் காளிமுத்து, 50. இப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் அத்துமீறி பேசியுள்ளார்.
தகவல் அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஆசிரியர் காளிமுத்துவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment