Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 31, 2014

    எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்காக மத்திய அரசு 2400 கோடி ஒதுக்கீடு !!!!

    தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன், தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி இருந்தனர்.

    மாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா? மாலன் நாராயணன்

    தீர்ப்புகளும் கொந்தளிப்புகளும் திரையிலும் தாளிலும் இறைந்து கிடக்கின்றன. வரி பிளந்து வாசிக்கும் எனக்குள்ளோ கேள்விகள் நிறைந்து கிடக்கின்றன.
    1.காற்றும் நெருப்பும் கலந்து ஆடிய மோக விளையாட்டில் மலர்கள் கருகின. நெருப்புப் படர்ந்த நேரத்தில் ஆசிரியர்கள் வகுப்பறையை விட்டு ஓடிவிட்டார்கள் .அவர்கள் எங்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்வே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிழைத்த குழந்தைகள் பேட்டி அளிக்கின்றன. குரு தேவனாகும் போது கும்பிடப்படுகிறான். தேவன் மனிதனாகும் போது தண்டிக்கப்படுகிறான். மாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா?

    அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்

    பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஜெயக்குமார் (36), இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு

    15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது

    தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல், இன்றாவது வெளியிடப்படுமா?

    பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

    எம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரியருக்கு ஊக்க ஊதியம் உண்டு என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட கடித நகல்

    ஒரு நபர் குழு திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.

    1) Training Instructor 
    5200-20200+2800 - 9300-34800+4200

    2) Hostal Superintendent and Physical Training Officer 
    5200-20200+2800 - 9300-34800+4200

    3) Laboratory Assistant 
    5200-20200+2800 - 9300-34800+4200

    4) Laboratory Technician Grade-1 
    5200-20200+2800 - 9300-34800+4200

    பள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் முதல்வர்!

    நடப்பாண்டில் 300 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகியவை, உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு 19.43 கோடி ரூபாய் செலவாகும்.

    Wednesday, July 30, 2014

    TRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்

    பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

    TNTET : 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார்

    தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    MADURAI BENCH OF MADRAS HIGH COURT: வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி

    வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி

    DETAILS OF JUDJEMENT

    Pommakkal ... Petitioner

    Vs.

    The Teachers Recruitment Board,

    தொடக்கக் கல்வி - நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பு

    www.tnkalvi.com

    தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

    www.tnkalvi.com 

    மாறுமா பெற்றோர் மனபாங்கு


    கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

    கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர். | கோப்புப் படம்கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்

    சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஆசிரியர் செயலைக் கண்டித்து குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்

    திருச்சுழி அருகே ஆங்கில ஆசிரியர் செயலை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்தனர். திருச்சுழி அருகே ரெங்கையின்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளி உள்ளது. 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கில ஆசிரியர் நீராத்துலிங்கம் ஒழுங்காக பள்ளிக்கு வராததால், ஆங்கில பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக, பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமியிடம் புகார் செய்தனர்.

    காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரணி

    உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

    1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்
    2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
    3. விளையாட்டு பல்கலைக்கழகம் சென்னை க்கு அருகில் அமைக்கப்படும்.
    4. 1000 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

    2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

    பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை

    திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்

    தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

    ஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது?

    இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது:தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான.பணிகள்,மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்.

    குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

    இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

    இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

    தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

    TNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

    பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

    பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு

    885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : போலீசார் முதல்வருக்கு கோரிக்கை

    கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், 2003 டிசம்பர் முதல் தேதி, காவல் துறையில், 8,000 பேர் காவலர்களாக பணியில் சேர்ந்தோம். நாங்கள், இப்பணியில் சேர, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், விண்ணப்பித்தோம்.

    Tuesday, July 29, 2014

    சமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

    தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை

    1.   தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.

    2.   மாணவர்கள் சரளமாக வாசிக்கவும் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பினை அறிந்துகொள்ளவும், பிழையில்லாமல் படிக்கவும் தமிழ் பாடம் மிக முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே! அவ்வாறு இருக்கையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் தமிழ் பட்டதாரி ஆசிரியரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பணியமர்த்தலாமே!

    நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை

    நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை கட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகா பட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர் அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.

    தமிழகத்தில் அரசு வேலைப்பெற்ற முதல் திருநங்கை

    குணவதி, தமிழகத்தில் முதல் அரசு வேலைப் பெற்ற திருநங்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் பணியாற்றுகிறார். இந்த செல்ல மகள் குறித்து தினமலர், வாரமலரில் வந்த செய்தி
    இப்படியும் இளைஞர்களா!
    எங்கள் பக்கத்து ஊரில், இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று உள்ளது. அவர்கள், ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டில், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்துவர். வழக்கம் போல், இந்த ஆண்டும், பகலில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில், பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடந்தன.

    அலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை

    நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று (28.07.2014) தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். காலை 9.10 மணிக்கு திடீரென ஆய்வில் ஈடுபட்டார். ஒவ்வொரு அறையாக சென்று ஒரு மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டார். அதில், 80 ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராததை கண்டுபிடித்தார். அவர்களின் பெயரைக் குறித்து கொண்டதுடன், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய அரசு அலுவலகங்களில் அமுல்

    மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறையின் அமைச்சர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், வெங்கையா நாயுடு. இவர் நேற்று தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, பல நாற்காலிகள் காலியாக இருந்தன.

    ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

    ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.

    திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்

    Table 7.2. New Pay scale minimum 7TH CENTRAL PAY COMMISSION TABLE


    CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS SUBMITTED MEMORANDUM TO 7TH CENTRAL PAY COMMISSION
                                                            

    தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது

    ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. தமிழகத்தில், 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்; 42, அரசு உதவிபெறும் பள்ளிகள்; 450 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது.

    Monday, July 28, 2014

    பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை

    அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும், 2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.1205,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition.

    55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை

    கல்விக் கடன் கிடைக்கவில்லையா?

    உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

    பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகலின் பட்டியல் கோரி உத்தரவு

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ரம்ஜான்" திருநாள் வாழ்த்துச் செய்தி

    பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது

    தகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழியர்கள்

    சிறப்பு விதிகளில் இடம் பெறாத ஒரே காரணத்தால், தகுதியிருந்தும், பதவி உயர்வு பெற முடியாமல் ஐ.டி.ஐ., ஊழியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், மாணவர்களுக்கு தொழிற்கல்வி தரும் பணியில், 72 ஐ.டி.ஐ.,க்கள் செயல்படுகின்றன. அங்கு, பல துறைகளிலும், டிப்ளமோ முடித்தோர், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி அலுவலர்களாக பணிபுரிகின்றனர்.

    மூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

    "கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதங்களில் வெளியிடப்படும்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? : இடைநிலை ஆசிரியர்கள் புகார்

    மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிளஸ் 2 முடித்து, இரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த நிலையில், பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

    Sunday, July 27, 2014

    ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு

    தகுதித்தேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்

    திமுக தலைவர் கலைஞர் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் படுகிறதே? 

    கலைஞர் :- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப் பட்டுள் ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

    மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்; கலைஞர்

    முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள்

    15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட்: 41 ஆண்டுகளாக வழக்கை சந்திக்கும் பஸ் கண்டக்டர்

    டெல்லி மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் ரன்வீர்சிங். இவர் 1973–ம் ஆண்டு மாயாபுரி வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். அப்போது வழியில் அந்த பஸ்சில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தனர். அப்போது மாயாபுரி செல்லும் ஒரு பெண் பயணிக்கு 15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட் கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பெத்தநாய்க்கன்பாளையம், வட்டார வளமைய சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்


    வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

    தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர். இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.

    ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!

    வழக்கு.1 - மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.

    மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : தமிழும், ஆங்கிலமும் இருந்ததால் சாத்தியம்

    தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையில்லாமல் மூடப்பட்டு வரும் நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்து வருகிறது. கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருகிறது. சில அரசு பள்ளிகளில் மாணவர்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள அவலத்தையும் காண முடிகிறது.

    பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிப்பு

    பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழக முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

    தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்ளி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
    மாவட்ட முதன்மை அலுவலர்கள் மாறுதல்:
    திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கஸ்தூரிபாய் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடலூருக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி திருச்சிக்கும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் வேலூருக்கும்,

    10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசு - விளக்கம்.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து விளக்கம்.

    # 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி., எம்.பி.சி., சீர் மரபினர் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறதா?

    மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் தலா ஒரு மாணவர், மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது.

    'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

    மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். 'எனது அரசு'(MyGov ) http://mygov.nic.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அரசின் ஆட்சியில் மக்களுக்கும் பங்குண்டு என்ற நோக்கத்தில், மக்களின் கருத்துக்களையும் பெற்று சிறந்த அரசை நடத்தும் நோக்கத்தோடு இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    Saturday, July 26, 2014

    பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

    பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

    "பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு

    மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.

    தா.வாசுதேவன், மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் அளித்துள்ள செய்தி

    வாசுதேவன் ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன். பொதுச்செயலாளர் ராஜ்குமார்) அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

    1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

    2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

    3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

    அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை

    உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.

    செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)

    அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.

    உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

    1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600 

    2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250  

    3. தமிழ்நாடு பல்கலைக்கழகம்- 500 

    4. இந்திராகாந்தி பல்கலைக்கழகம் -200 

     5. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்-1000

    Friday, July 25, 2014

    கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்

    யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.

    விரைவில் இரு மடங்காகிறது சமையல் எரிவாயு விலை : விலையை நிர்ணயிக்க குழு அமைக்கிறது மத்திய அரசு

    சமையல் எரிவாயு விலையை இருமடங்காக உயர்த்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயற்கை எரிவாயு விலையை 10 லட்சம் யூனிடிற்க்கு 8.4 டாலர்களாக அதிகரிக்க ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைத்திருந்தது.

    இட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி!

    நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்.
    இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக்கிறது. இண்டர்வியூக்கு ஏற்கனவே நடந்த written exam அடிப்படையில் அழைக்கப்பட இருக்கின்றனர். மொத்த மார்க்குகள் 200. இண்டர்வியூக்கு அழைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட cut-off மார்க்குகள் இப்படி இருக்கிறது.
    SC/ST category - 112
    OBC category - 123
    General Category - 108
    இது நடக்கிற தேசம், இந்தியா.
    அந்த வங்கி, பாண்டியன் கிராம வங்கி.

    தமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு

    >இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
    >தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
    >மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா
    >செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

    கணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி?

    கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள் எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு.

    வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு :ஆன்லைனில் சரியான பெயர் பதிவு செய்ய வேண்டும்

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஆன்லைனில் பதியும் போது முழுமையான பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தாம்பரம் மண்டலத்தின் ஆணையர் மதியழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக கடந்த மாதம் 30ம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சர் வருங்கால வைப்பு நிதிக்கான ஆன்லைன் குறியீட்டு எண்களை வெளியிட்டார். 

    எதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண்ணீர் பிரார்த்தனை

    கடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன....

    ஆழ்மனதின் உணர்வுகளை கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ உளவியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன....

    அதைவிடவும் 76ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றியும் அறிவதற்கு கூட புவியியல் ஆய்வுகள் வந்துள்ளன.....

    ஆனால் இந்த 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றியும் ..... எத்தனை பணியிடம் என்றும் புரியாத புதிராகவும் ....அறியாத மர்மமாகவுமே இருந்து வருகிறது, தினம் தினம் திகில்படம் பார்ப்பது போல் பீதி.....

    TNTET Article : முடிவைத் தருமா?

    சென்ற தகுதித் தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறி அடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்க தொடங்கின கண்கள்...

    பயத்தோடு படிக்க அமர்ந்தோம்..கிட்டத்தட்ட ஆறு மாத கடின உழைப்பு.. பிற சிந்தனைகளை மறந்து நடு இரவில் கூட சுடர் விட்டு எரிந்தது எங்களின் லட்சிய விளக்கு. பார்த்து இருந்த வேலையை விட்டதால் பழிக்கு ஆளாகி பரிட்சைக்கு தயாரானோம்...

    அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை எழுத்தாளர்: கோ.தேவராஜன்

    தேவராஜன் என்கிற நான், அகில இந்திய நுகர்வோர் - மனித உரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு, பல ஆண்டுகளாக வெகு ஜன மக்களுக்காக பல விழிப்புணர்வு பணிக‌ளை செய்து வருகின்றேன்.
    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணப்படி, தமிழ் வழிக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை எந்த விதமான கட்டணம் வசூலிக்கக்கூடாது மற்றும் ஆங்கில வழிக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூபாய் 200/- , 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூபாய் 300/-, 11 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூபாய் 500/- மட்டுமே அரசு கல்வி நிறுவனம் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பெற வேண்டும். மேற்கொண்டு ஒரு ரூபாய் கூட வசூல் செய்யக்கூடாது என்று அரசு ஆணை உள்ளது.

    மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை!

    SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்த வக்கீல்  திங்கள் (21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் வாதத்திற்கு கொண்டு வரலாம் என நமது மூத்த வக்கீல் திரு. செல்வராஜ் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.

    தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் கிளை உத்தரவு

    மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் ஒப்புதல் இன்றி, பேராசிரியர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கலான வழக்கில், தற்போதைய நிலை தொடர, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

    மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

    அதிகம் டி.வி. பார்ப்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

    அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள், ஆயுள் குறைந்து, சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு

    பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்

    மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.

    இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது. தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 7,000 மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்தது. பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 7ம் தேதி துவங்கியது.

    TNPSC Official Group 1 -Tentative Answer Keys

     Sl.No.
    Subject Name
     (Date of Examination:20.07.2014)

    POSTS INCLUDED IN GROUP-I SERVICES (PRELIMINARY)
             1
    Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 31st July 2014 will receive no attention.

    Thursday, July 24, 2014

    பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு?

    வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி.

    பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு? அதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

    ஆசிரியர்கள் நியமனம் : Reply from cm cell

    பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.54903/சி2/14, நாள் 17.07.2014

    Reply :ஏற்கப்பட்டது

    1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.

    2. 2011-12 மற்றும் 2012-13 கல்வியாண்டிற்குரிய பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவுப்பட்டியல் கோரப்பட்டுள்ள எண்ணிக்கை விவரம் :

    கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம் - பி.இராஜலிங்கம்

    மறைக்கப்படும் பணியிடமும், மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள். அப்படியானால் மறைக்கப்பட்ட பணியிடத்திற்கும்,மறுக்கப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தது நம்மில் எத்தனை பேர்?????!

    தாள் 2ன் நிலை:

    2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 17,996 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 25,187 பேரும் தேர்ச்சி பெற்றனர்....சில நல்லவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாக பணியிடம் தாள் 2க்கு 13,777 என அறிய வருகிறது......மேலும் 2014- 2015க்கு 3459 பணியிடம் இருப்பதாக சொல்லியவர்கள் 2013- 2014 பணியிடம் பற்றி சொல்லாதது ஏன்???தாள்2ஐ பொறுத்தவரை கொஞ்சம் துயரத்திலிருந்து மீண்டு வந்துள்ளோம்.

    தமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு

    புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள்

    > முதிர்வு தொகை ரூ.2,00,000/-க்கு கீழ் இருப்பின் ஓய்வூதியம் கிடையாது.

    >அரசு ஊழியர் பணிபுரியும் பொழுது இறப்பு ஏற்படின் அக்குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடையாது.

    >அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர் சேமித்த மொத்த தொகையில் 20% மட்டுமே பெற இயலும், மீதி 80% அரசு கணக்கில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    CPS-ன் அவலம் பாரீர்

    2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில் பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில் மனைவி இறப்பும் நிகழ்ந்தது.

    மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பு

    பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.

    3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

    3 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை, சிறுவனை அடித்து தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த துயர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்துள்ளது.

    மருத்துவக் கல்வியின் நிலை வருத்தப்பட வைக்கிறது: உயர் நீதிமன்றம் வேதனை

    டாக்டர் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு மற்றொரு இடத்தில் பெயரளவில் வருகையை பதிவு செய்வது அல்லது பணியில் உள்ளதுபோல் பெயரை பதிவு செய்கின்றனர். சி.பி.ஐ. அறிக்கையை பார்க்கையில் மருத்துவக் கல்வியின் இன்றைய சூழ்நிலை பற்றி வருத்தப்பட வைக்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு

    பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    TNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

    டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.

    தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .
    சில கேள்விகள்:
    .
    1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.

    போலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்

    போலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பிகார் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, கல்வித்துறை அமைச்சர் பிரிஷன் படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

    ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில அமைப்பாளர், சேசுராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.

    3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்; அமைச்சர் தகவல்

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.

    2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!

    2011 ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதியமான ரூ 750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற

    ஆங்கில வழி ஆசிரியருக்கு ஆங்கிலப் பயிற்சி

    நடப்பாண்டு ஆங்கிலவழி துவங்கப்பட்ட பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு புலமைமிக்க ஆங்கில ஆசிரியர்கள், எளிய முறையில் ஆங்கில பயிற்சியை வழங்கினர்.

    Wednesday, July 23, 2014

    5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை

    மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.

    முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு

    தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத்வி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு

    துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

    தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

    பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஜூலை 28ல் துவக்கம்

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு இடைத் தேர்வுகளும் பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து வைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரே தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது.

    SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

    SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. 
    Sarva Shiksha Abhiyan Statement showing the qualification and initial pay proposed to be fixed as on 1.4.2014 for new recruits Sl. No. Name of the post Existing Qualification in SSA Existing Initial Pay Qualification now proposed Initial pay proposed 
    1 Programmer B.E. (C.S.) / M.C.A. Rs.10,000/- M.C.A./ M.Sc. (I.T./Computer Science) BE (CS/IT/EC) Rs.15,000/- Civil Engineer 
    2 District Engineer B.E. Civil Rs.12,100/- B.E. Civil Rs.15,000/- Block Engineer Diploma in Civil Engg. Rs.10,000/- Diploma in Civil Engg. Rs.12,000/- 

    அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

    SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...

    >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

    >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

    >2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.


    >பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.

    புதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

    இன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி ஆசிரியர் நியமனம் குறித்து எழுப்பிய கேள்வியின் போது இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

    ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

    TET விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

    போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.

    கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்

    அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2012 - 13ல், சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த போது, 'சென்னையில், கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் டி.பி.ஐ., வளாகத்தில், அனைத்து கல்வி அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, அறிவு சார் பூங்கா கட்டடம் கட்டப்படும்' என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

    அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்யக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டிய விண்ணப்பம்

    மாண்புமிகு முதல்வர் அவர்களிடம், CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு   ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும்  என்ற  நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.

    பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

    Tuesday, July 22, 2014

    TNTET Article: மனதில் துக்கம்! கண்களில் கண்ணீர்!

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..
    அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள் அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா??????

    ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்

    TRB சொல்வது:
    மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

    www.tnkalvi.com 

    எந்த வேலை சிறந்தது?

    எந்தப் பணமும் வசதியும் தராத மன நிம்மதி மக்கள் தொண்டில் கிடைக்கும். இது அரசாங்கப் பணியில் தான் இயல்பாகச் சாத்தியமாகிறது.
    ‘அரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா?’ என்று என் பயிலரங்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘எது சிறந்தது
    என்பதைவிட அதை நீங்கள் ஏன் சிறந்ததாகக் கருதுகிறீர்கள் என்று யோசியுங்கள்’ என்றேன். இரு அணிகளாகப் பிரிந்து காரசார விவாதம் நடந்தது.

    ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு

    பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார்

    சிவகங்கை, எஸ்.புதூர் அருகே தர்மபட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் இரு கோஷ்டியாக செயல்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது" என கலெக்டர் ராஜாராமனிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதை மறுத்த ஆசிரியர்கள், பள்ளி கட்டடப் பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தனர்.

    ஆசிரியர்கள், மாணவிகளை வாத்தைகளால் துன்புறுத்தும் வாலிபர்கள்

    பள்ளி சுற்றுச்சுவர் மீது அமர்ந்து வாலிபர்கள் சிலர் மாணவியரை கிண்டல் செய்வதுடன், தட்டிக் கேட்கும் ஆசிரியர்களையும் கேலி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: குழப்பத்தில் தேர்வர்கள்

    குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி. அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26-ல் பணி நியமன கலந்தாய்வு

    பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்

    சங்கராபுரம் அருகே பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 900 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஒரு மாதமாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 150 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

    EXPECTED CUT OFF FOR TNTET 2013 PAPER I & II

    TAMIL
    GT
    BC
    MBC
    SC
    SC(A)
    ST
    BC(M)
    72.5
    71.5
    70.2
    68.6
    68.1
    65.1
    69.8
    ENGLISH
    GT
    BC
    MBC
    SC
    SC(A)
    ST
    BC(M)
    68.8
    66.6
    66.2
    63.7
    63.1
    ALL
    65
    MATHS
    GT
    BC
    MBC
    SC
    SC(A)
    ST
    BC(M)
    74.5
    72.9
    71.8
    68.5
    67.7
    68
    69.5