To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, June 30, 2014
விவசாயிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்கபடுவது ஏன்? நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சியில் மாணவியின் ருசிகர கேள்வி
சிவகங்கை மாவட்டம் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்திலேயே முதன் முறையாக பள்ளி மாணவர்களின் மூலமாக பெற்றோருக்கு மின்கட்டண தகவலை எஸ்.எம்.எஸ்.செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்தூரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
OC - 508
BC - 22172
BCM - 7772013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295
இரவு நேரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதி
நாமக்கல்லில் இரவில் நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக கடந்த இருவாரமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
டி.இ.ஓ. இன்று ஓய்வு கூடுதல் பொறுப்பை ஏற்க 20 தலைமையாசிரியர்கள் மறுப்பு
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பிரபு ராதாகிருஷ்ணன் (58). இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சிவாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டுபேசினார்.
சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம் - 30.6.2014 நிலவரப்படி
சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதன் விபரம் வட்டாரம் வாரியாக வட்டாரச் செயலளார்களின் தொலைபேசி எண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்களின் தெலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். வட்டாரப் பொறுப்பாளர்கள் அளித்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
I.தேவகோட்டை வட்டாரம் ( திரு. தனுஷ்கோடி - 9443181443)
அறிவியல் பட்டதாரி பணியிடம் :
1. காவுதுகுடி
2. பிடாரனேந்தல்
3. உருவாட்டி
எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா?
போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க முடியும்?
சுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன?
பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் அதனைக் கடன் வாங்கியாவது சமாளிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் ஊடகங்களில் விலாவாரியாக எழுதியாகிவிட்டது.
நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வையணன். 2012ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் டி.எம். கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் அவதி
மரக்காணம் ஒன்றியத்தில் ஆங்கில வழி கல்வி ஆரம்ப பள்ளிகளுக்கு புத்தகம் வழங்காததால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
இட மாறுதல் கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு
கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
பி.எட். விண்ணப்ப வினியோகம்: ஜூலை 18ம் தேதி வரை நீட்டிப்பு
மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்: காலி பணியிடங்களால் திண்டாட்டம்
பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால் பலனில்லை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்திருப்பு
சிவகங்கையில், "ஆன்லைனில்' நேற்று மாலை வரை காலியிட விபரங்களை வெளியிடாததால், ஆசிரியர்கள் எட்டு மணி நேரம் வரை, கவுன்சிலிங் மையத்தில் காத்திருந்தனர். சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என, அறிவித்தனர்.
Sunday, June 29, 2014
தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்...
=========================================================
திருவண்ணாமலை மாவட்டம்
*********************************************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை
ஈரோடு மாவட்டம்
*****************************
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
ஈரோடு
விருதுநகர் மாவட்டம்
*********************************
கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர்
காஞ்சிபுரம் மாவட்டம்
*********************************************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை
ஈரோடு மாவட்டம்
*****************************
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
ஈரோடு
விருதுநகர் மாவட்டம்
*********************************
கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர்
காஞ்சிபுரம் மாவட்டம்
*******************************
ராணி அண்ணாதுரை பள்ளி, காஞ்சிபுரம்
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!
"திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…" இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும், அதன் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.
2013 - 2014ஆம் கல்வியாண்டில் 20500 காலிப் பணியிடங்கள்?
வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது. இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடம்
1. njk;khT+h;
2. njk;khT+h;
3. fz;zq;Fb
4. Nkyg;gl;b
5. itj;J}h;
6. tLfg;gl;b
சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது, தமிழக ஆளுநர் ரோசய்யா உடன் இருந்தார்.
தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை
அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும்.
2014 ஜூலை மாத நாட்காட்டி
01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம்
05-குறை தீர் சிறப்பு முகாம்
11-உலக மக்கள் தொகை தினம்
15-கல்வி வளர்ச்சி நாள்/காமராஜர் பிறந்த தினம்
டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.
இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்
1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.
2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.
3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.
1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!
ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார். 2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன.
GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M.
SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013
26.WP.28640/2013
82.WP.28647/2013
84.WP.28893/201
85.WP.28902/2013
86.WP.29346/2013 TO WP.29349/2013
வங்கி கடன் மூலம் வீடு வாங்குகிறீர்களா? உங்களுக்கு சலுகை காத்திருக்கிறது
வங்கி கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதலாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வரும் 10ந் தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மூலத்துறை நடுநிலைப்பள்ளியில் சதுரங்க பயிற்சி முகாம்
அரசுப்பள்ளி மாணவர்கள், சதுரங்க ஆட்டத்தில் திறன்களை பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளி மாணவர்களும் செஸ் போட்டிகளில் பயிற்சி பெறுதலை ஊக்குவித்து வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.06.2014) சதுரங்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
Saturday, June 28, 2014
பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு
இதுகுறித்து பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் நமது "TNKALVI"க்கு அளித்த அறிக்கையில், 2014-15ம் கல்வியாண்டின் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
தமிழ் : 171
ஆங்கிலம் : 42
கணிதம் : 81
பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் / சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு
காமராஜ் பல்கலையில் வலுக்கும் ஆதரவு, எதிர்ப்புப் போராட்டங்கள்: தவிக்கும் மாணவர்கள்
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடையே சிக்கி உண்மையிலேயே படிக்க விரும்பும் மாணவர்கள் தவிக்கின்றனர்.
பொறியியல் கலந்தாய்வு: இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்?
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரை கால தாமதம் ஏற்படலாம் என்பதால் இந்த நாட்களை ஈடுகட்ட இரவு 10:00 மணி வரை கலந்தாய்வை நடத்த அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்த முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் தர பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது) மற்ற மாவட்டங்கள் பற்றிய காலிப்பணியிடங்கள் விவரம் தொகுத்து எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பினால், அம்மாவட்ட விவரம் வெளியிடப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களின் மேல் விபரங்களுக்கு அடைப்புகளுக்கு உள்ள எமது வட்டாரப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
(கீழ்கண்ட தகவல்கள் அனைத்தும் TNPTF வட்டாரச் செயலாளர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சில இடங்கள் மாறுதல்களுக்கு உடபட்டது. )
சிவகங்கை ( Kumaresan - 986553847)
1. திருமலை
2. கருத்தன்பட்டி
3. வீரவலசை
4. சிங்கிணிப்பட்டி
5. பெரிய கோட்டைப்பட்டி
ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி என்பவர் தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது:நான் கடந்த மே மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினேன். அதில், 81 மதிப்பெண் பெற்றேன். தேர்வில், 33 வது கேள்விக்கு சரியான விடை எழுதிய எனக்கு மதிப்பெண் கொடுக்க தவறிவிட்டனர்.
கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே
மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற 'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு, மையத்திற்கு 600 ஆசிரியர்கள் குவிந்தனர். மதியம் 1 மணிக்கு தான் 'ஆன்லைனில்' காலியிட விவரம் காண்பிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம்
சிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களின் மேல் விபரங்களுக்கு அடைப்புகளுக்கு உள்ள எமது TNPTF வட்டாரப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
சிவகங்கை ( Kumaresan - 986553847)
1. சிறுமலை
2. கருத்தன்பட்டி
3. வீரவலசை
4. சிங்கிணிப்பட்டி
5. பெரிய கோட்டைப்பட்டி
சிங்கம்புணரி ( Balakrishnan - 9865352562)
பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு
பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை; மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கடைகளில் விற்பனைக்கு வந்த அரசின் இலவச பாட புத்தகங்கள்!!!
குன்னூரில் புத்தக விற்பனை கடைகளில் நடந்த திடீர் சோதனையில், அரசின் விலையில்லா புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள, சில பாட புத்தக கடைகளில், விலையில்லா புத்தகங்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது' என, புகார் வந்தது. நேற்று காலை குன்னூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில், தாசில்தார் இன்னாச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர்கள் கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் மஜீத் மற்றும் போலீசார், குன்னூரில் ஒரு கடையில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சத்துணவு சாம்பாரில் விழுந்த சிறுமி சாவு: பள்ளியில் 3 பேர் இடைநீக்கம்
ராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மூவரை மாவட்ட ஆட்சியர் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.
Friday, June 27, 2014
பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்களாக இருப்பர். அதில் ஏப்ரல் மாதத்தில் பெற்று வருபவர்கள் ஏவரேனும் பதவி உயர்வு பெற்றிருப்பின் அவர்கள், வரும் ஜூன் 30க்குள்
நண்பர்களே!
சங்க அனுபவமுடைய பணி ஓய்வு மூத்த ஆசிரியர்கள் ,மேலும் பல திறமைகளுடைய ,எழுத்தாளர் ,சட்ட வல்லுனர்,ஆகியோருடன் ஆசிரியர்குரல் ஆலோசித்து ஆசிரியர் நலன்பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற, சங்கங்கள் போல கூட்டம், ஆர்ப்பாட்டம் இன்றி தகவல் அறியும் உரிமை,,மனித உரிமை, பத்திரிக்கை உதவியுடன் கல்வி சார்ந்த ,ஆசிரியர் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொணர ,தீர்க்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ,உங்கள் கேள்விகளை அமைப்பின் வழியில் கேட்க, சட்ட ஆலோசனை பெற எண்ணியுள்ளோம்.
காலி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளகரையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் காலி பணியிடத்தை நிரப்பக்கோரி, மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுப்பாமல், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளகரையில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் வரை நடுநிலைப்பள்ளியாக இருந்த, இப்பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
இதுகுறித்து தமிழ்நாடு பதவி உயர்வு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் நிறூவன தலைவர் திரு.வேம்பன், மாநில தலைவர் திரு.பொன்.செல்வராஜ் "TNKALVI"க்கு கூட்டாக அளித்த பேட்டியில்; தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் நடந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் பண்டிட்களுக்கு அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து பதவி உயர்வு வழங்கப்பட்டு, இதை எதிர்த்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவினால், நியமன ஆணை வழங்காமல் இருந்தது.
பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.
மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்
முகலிவாக்கம் அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தும் அளவிற்கு வசதிகள் இருந்தும், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஒரே நாளில் 2 முக்கிய தேர்வுகள் - பட்டதாரிகள் தவிப்பு
தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., &'குரூப் 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனர். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2,800 உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 எழுத்துத்தேர்வு, ஜூன் 29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
தமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொள்ளாச்சியில் விடுதியில் தங்கி இருந்த, இரண்டு மாணவியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு துவங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இல்லை; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
மதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர். ஜூனில் துவங்கிய மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விரும்பிய ஆசிரியர்கள், ஏப்.,லில் விண்ணப்பித்தனர். தலைமையாசிரியரிடம் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், கல்வித் துறை குறிப்பிட்டிருந்த நாளுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’ அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல்
புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 2004 முதல் 2006 ம் ஆண்டு வரை கள்ளர் சீரமைப்புத் துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 150 பட்டதாரி மற்றும் 50 முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) பணி நியமிக்கப்பட்டனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி
பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளியை தனிநபர் ஆக்கிரமிப்பு; நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம்
சேந்தமங்கலம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியை, தனிநபர் ஆக்கிரமித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக் குழந்தைகள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும் கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா?
பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்' ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன.
Thursday, June 26, 2014
ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்
ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி .ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன். இந்நிலையில் இவரை சங்கீதவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!
அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு
TET புதிய வழக்கு தாக்கல் : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்
TET NEW CASE : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
"அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுவது அரசுப் பள்ளிகளே"
"அரசு பள்ளிகள் தான், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது" என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் தெரிவித்தார். கரூரில் நடந்த ரோட்டரி கிளப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் பேசியதாவது:
டில்லி பல்கலை- யு.ஜி.சி. மோதல் விவகாரம்: உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பு தொடர்பாக, டில்லி பல்கலைக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக முதலில் டில்லி உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி உள்ளது.
டி.ஆர்.பி. ஏற்க மறுத்த பாடத்தை மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லூரியில், பி.எஸ்.சி. விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர். இந்த பாடம் படித்த 100 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு மூலம்தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம்ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) பதவி உயர்வு பெறுவதற்கு வையணன் தகுதியானார்.
TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES (TNTET 50% + UG TRB 50% )
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கான தேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித் தேர்வு நடைபெறும்.
சி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்?
தமிழ்நாட்டில் பல கல்வித்திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக இரு கல்வித்திட்டத்தின் கீழ்தான் சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தமிழக கல்வித்திட்டம் அதாவது சமச்சீர் கல்வித்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மத்திய செகண்டரி போர்டு கல்வித்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள். இந்த பள்ளிக்கூடங்களை பொதுவாக சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் என்றே அழைப்பார்கள்.
காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு
அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர். முதுகலை ஆசிரியர்களுக்கான வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. சிவகங்கையில் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய கலந்தாய்வு மதியம் 3 மணி வரை துவங்கவில்லை.
பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு படி, தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட 40 வகை விளையாட்டுகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
Wednesday, June 25, 2014
காஸ் விலை உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: மத்திய அரசு
சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் ரூ.5 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், காஸ் மற்றும் கெரசின் விலையை உயர்த்த மத்தியஅமைச்சரவை திட்டமிடவில்லை எனவும்,
கல்வி உதவி தொகை கையாடல்: நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை ஐகோர்ட்டில், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டுகளில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையை வழங்காமல் கையாடல் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 77 தலைமை ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி உத்தரவிட்டது.
பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள பணி நிரவல் கலந்தாய்வில் இந்த நிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிநிரவல் ஆணை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மை
பதவி ஏற்ற ஒரு மாதத்தில் மோடியின் சாதனைகளும், சந்தித்த சோதனைகளும்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. மோடி அரசின் நிர்வாகத் திறமை பற்றியும், அவரது செயல்பாடுகள் பற்றியும் நடுநிலையாளர்கள், பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்கு ஏற்றவாறு மோடியும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அரசு துறை உயர் அதிகாரிகள் சுணக்கத்துடன் செயல்பட்டதாக குறை கூறப்பட்டது.
2013-14ம் நிதியாண்டு முதல் ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்
நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?
பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் பெரிய நாடுகள் பட்டியலைப் போட்டால், அதில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. இந்த எல்லா நாடுகளையும் எடுத்துக் கொண்டால், அதிக வேலைப்பளு இருப்பது இந்தியப் பிரதமருக்குத்தான். ஆனால், குறைந்த சம்பளம் வாங்குவதும் அவர்தான் என நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள்.
500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு - சிஎன்என்-ஐபிஎன்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வருமான வரி விலக்கு வரம்பை எதிர்வரும் பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் என தெரிகிறது. அதிகார வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது. வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியம் பற்றி முடிவு செய்து அறிக்கை தரும்படி வருமான வரித்துறைக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
பழைய ஓய்வூதிய நடைமுறை: தமிழ் ஆசிரியர்கள் தீர்மானம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என, திருவண்ணாமலையில் நடந்த தமிழக தமிழாசிரியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து தமிழாசிரியர்களும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த சிறந்த முறையில், மாணவர்களை உருவாக்க பாடுபட வேண்டும். பணி நிரவல் என்ற பெயரில், ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதை தடுக்க, தமிழக அரசு பணி நிரவலை கைவிட வேண்டும்.
திருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உதயமாகிறது: 30ம் தேதி முதல்வர் அறிவிப்பு?
திருச்சி மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை பகுதி கடந்த 1974ம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகள் மட்டும் திருச்சி மாவட்டமாக இருந்து வந்தது.
விலையில்லா ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விலை வைக்கப்படுகிறதா??
ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது அவற்றில் சில பள்ளிகளில் இருந்த உபரி ஆசிரியர் பணியிடங்கள் நிரவல் மூலம் சரிபடுத்தப்பட்டன.இந்நிகழ்வின் போது சில பள்ளிகளில் இருந்த சில காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டுவிட்டன காரணம் மாவட்ட மாறுதல் கோருபவர்களுக்காக என்ற பேச்சு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு மாதம் வீணடிப்பு
பள்ளி திறந்து ஒரு மாதமாகியுள்ள நிலையில், கவுன்சலிங் நடத்தப்படுவதால், மாறுதல் பெற விரும்பிய ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலட்சியப்போக்குடன் இருப்பதால், பல பள்ளிகளில், கற்பித்தல் பணிகளில், கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சலிங், கோடை விடுமுறையான மே மாதத்தில் நடத்தப்பட்டு வந்தது.
TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும்
பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு; ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பு
18.06.2014 அன்று நடந்து முடிந்த தொடக்கக் கல்வி துறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்ட மாறுதல் மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் கூடுதலாக ஒரு ஆசிரியை நியமனம்
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், வான்பாக்கம் பள்ளிக்கு, தற்காலிகமாக கூடுதலாக ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம், வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவிபெறும் துவக்கப் பள்ளியில் 71 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக் கட்டடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய தானே புயலில் முற்றிலும் சேதமானது.
ஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல்; மாணவர்கள் வெளியேறும் அவலம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியர்களுக்கிடையே, கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளியில், டி.சி., வாங்கி சென்று, வேறு பள்ளியில் மாணவர்கள் சேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் பணியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
Tuesday, June 24, 2014
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க பரிந்துரை?
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படியை 7% உயர்த்தி 107% ஆக வழங்க நிதித்துறை பரிந்துரை செய்துள்ளதாக இரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள் அமைப்பு ஒன்று தகவல் கூறியுள்ளது.
ஜூலை 10! மோடி அரசின் பட்ஜெட் தாக்கல்... வருமான வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா?
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், அடுத்த மாதம், 7ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 14ம் தேதி வரை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின், முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், 10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.
மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தனது தலைமையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவை மோடி பிறப்பித்துள்ளார். அதில் மூன்று முக்கிய விஷயங்களில் தீவிர கவனம் செலுத்துமாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர இணக்கம், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் தொடர்பில் துரித நடவடிக்கை, ஆயுத படைப்பிரிவுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள தளவாடங்களை உடனே வழங்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கபில் சிபல் குடிபோகும் வீட்டின் ஒரு மாத வாடகையே ரூ.16 லட்சமாமே!!!!
முன்னாள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் மாதம் ரூ.16 லட்சத்திற்கு வாடகை வீடு எடுத்துள்ளார். முன்னாள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தான் குடியிருக்கும் அரசு பங்களாவை வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குள் காலி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் டெல்லி ஜோர்பாக்கில் ஆயிரத்து 250 சதுர அடியில் உள்ள சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மா நில தலைவர் மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை
Ï‹W 23.06.2014 KJfiy MÁça® khWjš fyªjhŒÎ kht£l Kj‹ik¡ fšé mYty® ÂUk nf.Ã.knf°tç mt®fŸ jiyikæš kht£l Kj‹ik¡ fšé mYtyf tshf¤Âš eilbg‰wJ. 278 KJfiyahÁça®fŸ khWjš nfhç fyªjhŒéš fyªJ bfh©ld®. Ïš 17 MÁça®fS¡F k£L« khWjš Miz tH§f¥g£lJ. M© MÁça®fS¡F M©fŸ gŸëæY« bg© MÁça®fS¡F bg©fŸ gŸëæY« k£L« khWjš tH§F« eilKiwia fil¥Ão¤jik¡F ghuh£L bjçé¡»nwh«. ϪeilKiw ÏåtU§fhy§fëY« ghug£r‰w Kiwæš bjhlu nt©L»nwh«.
'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை
வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலராக மதி பணிபுரிந்து வந்தார். இவரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, 20ம் தேதி உத்தரவிட்டார்.
கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!
கொடைக்கானலை சேர்ந்த பெண்ணிற்கு கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால், பெல்ஜியம் தூதரகம் விசா மறுத்தது. தற்போது அப்பெண் அரசிதழில் பெயர் மாற்றம் செய்துள்ளபடி, பிறப்புச் சான்றில் திருத்தம் செய்து வழங்குமாறு, நகராட்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: மசோதா நிறைவேற்றம்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது: தற்போதுள்ள சட்டம் 1984ல் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்கள் 8 பேர் டிஸ்மிஸ்
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் 8 பேர், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 8,612 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கலை ஆசிரியர்களாக மட்டும் 3,620 பேர் பணியாற்றி வருகின்றனர்.
காலிப்பணியிடத்தை மறைத்ததாக புகார்: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடம் மறைக்கப்பட்டதாக புகார் கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியை மேலும் சிறப்பாக்கும் நோக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு த.அ.உ.சட்டம் குறித்த பயிற்சி முகாம்
திருச்சியில் அரசு ஊழியர்களுக்கு தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாமை அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார். இதுகுறித்து அண்ணா மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்
மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை என்.சுசீலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம்: ஆதரித்து, எதிர்த்து மனுக்கள் தாக்கல்
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணையில் மூழ்கி மாணவர் பலி: ஆசிரியர்கள் 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 42 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் பத்மநாபன் (15) என்ற மாணவன் அணையின் மதகு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டான். போலீஸ் விசாரணையில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
Monday, June 23, 2014
இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு................
இந்து பத்திரிகையில் 10வயது பெண்ணோ அல்லது 12வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே! இந்தக் காலத்தில் கூட 10வயது அல்லது 12வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்:
உடையும் இந்தி மாயை... 25 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி!
சமூக வலைதளங்கள் மற்றும் அரசு தொடர்புமொழியாக இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு, மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்தியாவில் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்தியை தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திலிருந்து எதிர்பார்த்ததுபோன்றே திமுக தலைவர் கருணாநிதி முதல் எதிர்ப்பு குரலை உயர்த்த, அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் இந்தி திணிப்பை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? தி ஹிந்து
தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!
அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும் இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும் பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக மாறியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை மூடியிருக்கின்றனர்.
ஆசிரியர் வருகைப் பதிவை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி முறை கைவிடப்பட்டதா? - தினமலர்
ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் மாணவர் வகுப்புக்கு வரவில்லை எனில் பெற்றோருக்கு போனில் எஸ்.எம்.எஸ்.,அனுப்பும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை கடந்த கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது.
தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ. கருப்பையா
"தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்' என பழ.கருப்பையா பேசினார். சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் தினமணி நாளிதழ் சார்பில் இரண்டாம் நாள் இலக்கியத் திருவிழா நடந்தது. இதில், சமயமும் தமிழும் என்ற தலைப்பில் நடந்த அமர்விற்கு சுதா சேஷய்யன் தலைமை வகித்தார்.
ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு 16- வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா?
தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
முதுகலை ஆசிரியர்களுக்கு முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டதால் மறு கலந்தாய்வு நடத்த அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூரில் நடைபெற்று மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வில் முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கருகும் மொட்டுகள்! இரும்பு கூடார வகுப்பறைகளால் பரிதாபம்; கருணை காட்டுமா பள்ளிகல்விதுறை?
கடும் வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து, குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. அம்பத்துார் மண்டலம், 86வது வார்டில் உள்ள, மண்ணுார் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், மாநகராட்சி துவக்க பள்ளி உள்ளது.
தொடக்க கல்வி பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு மாறுதலில் முறைகேடு
தொடக்க கல்வி பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதலில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதல் ஜூன் 18 முதல் நடைபெற்று வருகிறது.
மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அவர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.
எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் என்ன?
சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (வகுப்பு வாரியாக) கீழே அளிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு/ அரசு/ சுயநிதி அரசு/ அரசு பி.டி.எஸ்/.
எம்.பி.பி.எஸ். எம்.பி.பி.எஸ்.
ஓ.சி. 199.25 198.25 198.25
பி.சி. 198.50 198.00 198.00
பி.சி.(எம்) 197.50 197.00 197.00
அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே உஷார்! பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
பள்ளி வயதிலேயே மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆயிரக்கணக்கில் மாணவ மாணவியர்கள் படிக்கும் பள்ளிகள் ஏராளமாக பெருகிவிட்டன. ஒரு சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் இருபாலரும் படிக்கும் நிலை உள்ளது.
போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்
வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், அவர் போலி கையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் கல்வி துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மதி என்ற பெண் அதிகாரி இருந்து வந்தார். இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக பள்ளி கல்வி துறை செயலர் ஷபிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
Sunday, June 22, 2014
விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் ஊழல்... மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை
விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. போலியாக பில்கள் தயாரித்து ரூ.4.20 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் என் கனவை நிறைவேற்றி தர வேண்டும்: மாணவி நந்தினி கண்ணீர் பேட்டி
மாணவி நந்தினி கண்ணீர் மல்க கூறியதாவது: எனக்கு சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது கனவு. இதற்கு கடுமையாக உழைத்தேன். 10–ம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்தேன். பின்னர் பிளஸ்–2வில் 1170 மதிப்பெண் பெற்றேன். இதையடுத்து மருத்துவ படிப்புக்கான கட்–ஆப் வாங்கி விட்டேன்.
தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழே கட்டாயப் பாடமாக அறிவிக்க தமிழ்ச் தேசப் பொதுவுடைமை கோரிக்கை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண்உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.அந்த இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய மையம் இலவச பயிற்சி; மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதற்காக மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தனியார், பேராசை தணியார்!
கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு கற்றுத் தருகிறார்களாம்.
சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க., சம்பள உயர்வு வாக்குறுதி... [ 8-4-14 தினமலர் ]
சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், மாதம், 5,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியை! மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவி பெறும் துவக்க பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 71 மாணவ, மாணவிகள் பள்ளியில் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய 'தானே' புயலில் இப்பள்ளி கட்டடம் முற்றிலும் சேதமானது. இதுவரை புதியதாக கட்டடம் கட்டாததால், சமுதாயக் கூடத்தில் பள்ளி இயங்குகிறது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார்.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!
*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.
பள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி
பள்ளி திறந்து ஒரு மாதம் முடிய உள்ள நிலையில் தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் பயிற்றுனர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Saturday, June 21, 2014
கலந்தாய்வில் முறைகேடு கண்டித்து ஆசிரியர்கள் 23ல் ஆர்ப்பாட்டம்
தலைமையாசிரியர்களுக் கான இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி துறையை கண்டித்து 23ம் தேதிஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
பணிச்சுமை அதிகரிப்பை தடுக்க பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு
கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும் மேற்பட்ட இலவச நலதிட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிசம்: தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு
புதுவை சண்முகா புரத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (வயது 30). தமிழ் ஆசிரியர். இவர் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில் முதல் மற்றும் 2–ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தி வருகிறார்.
வாத்தியார் வந்துட்டாரா? ஆன்லைனில் தெரியும்! 5.50 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரங்களுடன் தகவல் தொகுப்பு தொடக்கம்:
தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள், 5.50 லட்சம் ஆசிரிய, ஆசிரியைகள், 1.35 கோடி மாணவ, மாணவிகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கல்வி தகவல் மேலாண்மை திட்ட வசதியை அமைச்சர் கே.சி.வீரமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள், பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் கல்வி தகவல் மேலாண்மை திட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்
பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கும் எம்எட் படிப்புக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால்
பள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி
பள்ளி திறந்து, ஒரு மாதம் முடிய உள்ள நிலையில், தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆசிரியர் பயிற்றுனர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று, சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு ஆசிரியை, 3 மாணவர்கள்: இப்படியும் செயல்படுது பள்ளி
ராஜபாளையம் அருகே தென்றல் நகரில், 3 மாணவர்களே படிக்கும் அரசு துவக்கப்பள்ளியில், ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார்.
பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'
பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல் செய்தது தொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஈஸ்வரன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் கல்விக் கட்டணம் சேகரிக்கப்பட்டு, மாவட்ட பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் இருப்பு வைக்கப்படும். பள்ளிகளில் நடக்கும் தேர்வு, மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேடு, விழா உள்ளிட்டவைகளுக்கு, இந்த நிதியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அங்கன்வாடி மையங்களுக்கு 'சுகாதார பை' வினியோகம்
தமிழகத்தில், 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, குழந்தைகளின் சுகாதாரம் பேண, 2.72 கோடி ரூபாய் செலவில், சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
*மாவட்ட மாறுதல் - ஓர் விளக்கம்*
1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை
சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாக டான் பாஸ்கோ கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் மற்றும் டேலன்ட்ஈஸ் ஆகிய அமைப்புகள் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
106 மாணவர்கள், 106 ஆசிரியர்கள், 109 பெற்றோர், 23 பள்ளி நிர்வாகிகள் என மொத்தம் 344 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!
ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.
Friday, June 20, 2014
2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
உள்துறை அமைச்சக உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு
யு.பி.எஸ்.சி.,யில் பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவிற்கு யு.பி.எஸ்.சி., பாடத்திட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
90% தேர்ச்சி பெற்ற, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் இல்லை!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்ற, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் தொடர்கிறது.
பள்ளி மாறுதலை தவிர்க்க வயது குறைந்த மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு!
பணி நிரவல் மாறுதலை தவிர்க்க, அரசு ஆரம்ப பள்ளிகளில் வயது குறைந்த மாணவர்களை சேர்த்து, எண்ணிக்கையை உயர்த்தி காட்டும் சுயநல ஆசிரியர்களால், பாடத்தை கிரகிக்க முடியாமல், வெறுப்பில் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் குழந்தைகள் உள்ளன.
10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வித்தியாச முயற்சி
10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது.
தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும், தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, வரும் கல்வியாண்டிலும் தொடராமல் இருக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
'காசாய்வு' ஆன ஆசிரியர் கலந்தாய்வு
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.சங்க ஆய்வு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் அவர் கூறியதாவது:கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லை. போக்குவரத்துக்கு வசதியான காலி பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன.
'கடை கடையாக' அலையும் பெற்றோர்:பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு
பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.
பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன? பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலர்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம்'
மாவட்ட மாறுதல் பெறுவோர் கவனத்திற்கு!!!
மாவட்ட மாறுதல் வேண்டுவோர்க்கு தாங்கள் பகிறும் இந்த தகவல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். SSTAவின் மிகப் பெரிய போராட்டத்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று கடந்த ஆண்டு மாவட்ட மாறுதல் தடை ஆணையை தகர்த்து எறிந்தது, அது மட்டும் இல்லாமல் மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நற்செய்தியாக தொடக்கக் கல்வித் துறையின் வரலாற்றில் முதல் முறையாக SSTAவின் தொடர் முயற்சியால் இணையதளம் வழியாக மாவட்ட மாறுதல் நடைபெற இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)