Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 22, 2014

    அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!

    *அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.

    * மூன்றாண்டு வரையறை ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு
    மட்டும் பொருத்திப் பார்த்து ஈவு இரக்கமற்ற வகையில்பந்தாடப்பட்டுள்ளனர்.ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஆசிரியர்களுக்குரிய மாறுதல் நெறிமுறைகள் பின் பற்றப் படவேண்டும்.
    * இந்த மூன்றாண்டு வரையறை தமிழ்நாடு அரசின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரையில் தமிழக அரசு பொருத்திப் பார்க்கத் தயாராகி விட்டது என்பதற்கான சோதனை முயற்சியின் ஆய்வுக் களமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதோ? எனும் ஐயப்பாடு எழுந்துள்ளது.
    *ஆசிரியர் பயிற்றுனர்களின் பேரவலத்தைச் சகித்துக் கொள்ளவும், பார்வையாளராக நின்று வேடிக்கை பார்க்கவும் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் இயக்கங்கள் தயாராக இருக்காது என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    *தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் தளத்தில் காணப்படும் கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டு பல்வேறு வகையான ஆலோசனைகள், ஐயங்கள்,கோரிக்கைகள், மனக்குமுறல்களை யெல்லாம் ஆசிரியர்கள் கொட்டித் தீர்த்த காலங்களிலெல்லாம் ஆசிரியரோடு சமரிட்டும், சமாதானம் செய்தும் ,மௌன சாட்சியாக நின்று அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் பலா பலன்களை மிகைபடுத்தி எடுத்துரைத்தும், பலவீனங்கள், குறைபாடுகள் ஏதுமே இல்லாத அற்புதமான திட்டம் எங்களது அனைவருக்கும் கல்வித் திட்ட மே என்று எல்லா உயர் மட்ட அதிகாரிகளுக்காகவும் வக்காலத்து வாங்கிக் கொண்டு களப் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுனர்களின் மீது சிறு துளி பச்சாதாபம் கூட இன்றி மிக மிக மோசமாக நடத்தி இருப்பது கொடும் செயலாகும்.இந்த கொடும் செயலைக் கேள்விப்படும் பொழுது மனதிலும் , உடம்பிலும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுகிறது.
    *வரலாற்றின் பக்கங்களில் மத அழிப்பு, மொழி அழிப்பு, ஜனநாயகப் படுகொலை, இனப்படுகொலை போன்றவற்றை காண்கிறோம். அது போன்று தமிழ் நாட்டின் கல்வி வரலாற்றில் ஆசிரியர் பயிறுனர்கள் நடத்தப் பட்டிருக்கிற விதமும் வருங்கால வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் இருக்கப்படுவதற்கு என்னென்ன வழிவகைகள் மேற்கொள்ளப் ப ட வேண்டுமோ 
    அத்தகு திசை வழி நோக்கி
    அனைவருக்கும் கல்வித்திட்டம்
    பயணம் தொடர வேண்டும். 
    இதுவே தமிழ்கூறும் நல் உலகத்தின் வேண்டுகோளில் ஒன்றாகும்.

    5 comments:

    Balaji said...

    some one doing this to spoil the name&goodwill&faith of the government.CM AMMA should be vigilient about what the officials are doing.Changing to total setup will spoil the work & nature of the SSA.

    Anonymous said...

    sila officers ,naan periya all nu kaamika ipadi pandraga.ithanal avanga yenna saathichida poraganu theyriyala.paavam pa BRTEs.familya vitu,kulanthaikala vitutu.... kadavuluku kan illaya? parpom.

    Anonymous said...

    Its not way to punish all. Oru silar seikindra thavarugalukaga anaivariyum thandika paduvathu niyayam atra seyal. Yarum kalanga vendam nanbargalae intha nilaiyum kadanthu pogum. Unmaiyana uzhaipirku vetri nitchayam.

    Anonymous said...

    kumar
    manithabam attra seyal,sattavirothamana,arajagamana transfer councelling. 20th new proceeding pass panni, 21th councelling, enna oru koduingol seyal.above 1500 lady brte's completing suffering on this councelling.ithai seithavargal two members secretary sabeetha ias, ssa spd pooja kulkarni ivargalum pengalthanae konjam kooda evu irakkam illatha seyal. i hate two ladies.

    Anonymous said...

    By these transfers they have Created grounds for extracting money in near future in the name of Administrative transfers from BRTs.