மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தேசிய கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இளங்கலை கல்வியியல் (பி.எட்.) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கல்வி நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில், ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். நுழைவுத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பம் வழங்குவது ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பாலன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment