Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 30, 2014

    நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

    திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.

    கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் 10 மணிக்கு தொடங்க வேண்டிய கலந்தாய்வு இணையதள சர்வர் செயல்படாத காரணத்தால் பிற்பகல் வரை கலந்தாய்வு தொடங்கவில்லை. பிற்பகல் 2 மணிக்கு பிறகு தொடங்கிய கலந்தாய்வில் முதல் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் விட்டு பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு மட்டும் விரும்பிய மாறுதல் கிடைத்தது.

    தொடர்ந்து சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் 7 பேருக்கு பணி இடமாறுதல் கிடைத்தது. இரவு 10 மணியை கடந்த நிலையில் இணையதள சர்வர் இயங்காததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேக்கம் ஏற்பட்டது.இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்தனர்.நள்ளிரவில் 2 மணிக்கு பிறகு கலந்தாய்வு சர்வர் செயல்படத் தொடங்கியதால் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தூக்கத்தை இழந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த கலந்தாய்வில் ஒருவருக்கு கூட வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கிடைக்கவில்லை.

    இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. இணையதள சர்வர் சரிவர இயங்காத காரணத்தால் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு பல மணி நேரம் தாமதமாக

    கலந்தாய்வில் குளறுபடி:

    கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் காலி பணியிடங்கள், பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கலந்தாய்வில் முறையான நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

    1 comment:

    ramjeeram said...

    Entha goverment appadithan.yelloraium alaiya vaipathil athiga inbam