Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 31, 2017

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?


    ஆசிரியர் தகுதித் தேர்வு 2017க்கான விண்ணப்பங்கள் பிப்பரவரி 15 முதல் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

    பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2016 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை - உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தது - ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிடங்களை சரண் செய்தல் சார்ந்த உத்தரவு

    தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை

    தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல் உள்ளிட்ட பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பகுதிநேரமாக கற்பிக்க 2012-ஆம் ஆண்டு ரூ.5000/- தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், ஒரு மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்ற பணிக்கப்பட்டனர்.

    சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்

    சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன.

    பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு

    பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவிப்பு: வரும் மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜன., 25 முதல், 29 வரை, பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

    வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

    ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.

    இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது!

    வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க, அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. 

    ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு


    உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டித்து சட்டசபையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது.

    பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்

    வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் பேசியது:

    Monday, January 30, 2017

    ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

    ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

    இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்

    இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர், உதவி ஜியாலஜிஸ்ட் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி விரைவில் தேர்வு நடத்தவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் முதல் வெளியிடப்படும்.

    TNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

    இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.

    Limits on Cash withdrawals from Bank accounts and ATMs - Restoration of status quo ante

     (19 kb)
    Limits on Cash withdrawals from Bank accounts and ATMs - Restoration of status quo ante
    RBI/2016-17/217
    DCM (Plg) No. 2905/10.27.00/2016-17
    January 30, 2017
    The Chairman / Managing Director / Chief Executive Officer,
    Public Sector Banks / Private Sector Banks / Foreign Banks,
    Regional Rural Banks / Urban Co-operative Banks,
    State Co-operative Banks / District Central Co-operative Banks
    Dear Sir/Madam,
    Limits on Cash withdrawals from Bank accounts and ATMs - Restoration of status quo ante

    TNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

    > TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April. 

     > Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II. 

    > Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 10.02.2017. 

    > CEO has to allot to each DEO and then to each school. 

    நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்.

    மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    "நீட்" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு

    தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில், விரைவில், 'தினமலர்' சார்பில், மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. 'தினமலர்' சார்பில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    தேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

    'தேர்வுகளை, விழாவாக கருத வேண்டும்; மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷய மாக பார்க்கக் கூடாது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள், அதிகமாக புன்னகைக்க வேண்டும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறியுள்ளார். 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:

    விரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை

    இந்திய தபால் துறை வர்த்தக ரீதியாகப் பேமென்ட்ஸ் வங்கி சேவையை தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் சோதனை அடிப்படையில் இந்திய தபால் வங்கி சேவை (India Post Payments Bank) தொடங்குவதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்; முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

    உயருமா? வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு

    பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு!!

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் விண்ணப்பம் பெற மார்ச் 27-ம் தேதி முதல் விநியோகம் என ஜிப்மர் கல்லூரி அறிவித்துள்ளது.

    'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 கடைசி

    அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கட்டுப்பாட்டில், டில்லி உட்பட, நாடு முழுவதும் ஏழு இடங்களில், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை

    ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும், 85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர் தெரிவித்தார்.  சென்னையில், 'தினமலர்' நடத்திய, 'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் பேசியதாவது: 'நீட்' தேர்வில், கடந்த ஆண்டு விதிமுறைகளில், இந்த ஆண்டு மாற்றம் வர வாய்ப்புள்ளது. 15 ஆண்டு களாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை படிப்பு மட்டுமின்றி, முதுநிலை படிப்புக்கும், 'நீட்' தேர்வு உண்டு. கடந்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு

    வரும் ஆண்டில், 'நீட்' விதிமுறைகளில், மாற்றங்கள் வரலாம். பிப்., முதல் வாரத்தில், அதிகாரப்பூர்வமாக, 'நீட்' தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு, நான்கில் ஒரு பங்கு மதிப்பெண், மைனஸ் மதிப்பெண்ணாக கழிக்கப்படும்.

    அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

    தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி நேரு விளையாட்டு அரங்கம் அருகே புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் இடத்தை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

    ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்

    ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட்: மத்திய அரசின் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் சேர்த்து, வரும் பிப்., 1ம் தேதி, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    Saturday, January 28, 2017

    ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன் கோரிக்கை.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் ஆசிரியர்களின் பணி 
    இன்றியமையாதது.

    சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

    சென்னை பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’சென்னை பல்கலையின் முதுநிலை பட்ட மாணவர்களின், நவ., தேர்வுக்கான முடிவுகள், பல்கலை இணையதளத்தில் நாளை வெளியிடப்படும். மறு மதிப்பீடுக்கு, வரும், 31 முதல், பிப்., 6க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்’ என, கூறப்பட்டு உள்ளது.

    மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப்பெண் வெளியீடு

    உதவி பொறியாளர் தேர்வுக்கான, ’கட் - ஆப்’ மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், உதவி பொறியாளர்களை, எழுத்து, நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்தது. அதன்படி, எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2016 ஜன., மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது. அண்ணா பல்கலை நடத்திய இந்த தேர்வை, பல ஆயிரம் பேர் எழுதினர். 

    பேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்டி

    உதவி பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தலைவராக, தெரசா பல்கலை துணைவேந்தர் வள்ளி நியமிக்கப்பட்டு உள்ளார்.அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேர, முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். 

    8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்வு

    கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

    அகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்

    அகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடத்துதல் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்

    தொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்

    குடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்!

    தேவக்கோட்டையில் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் இன்று குடியரசு நாள் விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது அவர்கள் சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாயை வழங்கி குடியரசு நாளை கொண்டாடினர். சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

    தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ஆண்டில் 20ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

    கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது.  

    உங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?

    “என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி." என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு.

    சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்

    மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான சில பாடங்களின் தேர்வுத் தேதிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மாற்றியுள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு!

    ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    Friday, January 27, 2017

    ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு ஏப்ரல் 30க்குள் நடத்தப்படும்


    ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்பட்டு வரும் ஏப்ரல் 30க்குள் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

    ஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்:ராமதாஸ்

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டிய ராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

    ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்பப் பெறுங்கள்: உறுப்பினர்களுக்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவு

    ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கும் சட்டத் திருத்தத்தை தமிழக சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றியது. முன்னதாக, இது தொடர்பான அவசரச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வந்தது.

    பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

    அனைவராலும் என்எல்சி என அழைக்கப்படும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    த.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2015-16ஆம் நிதியாண்டு வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மொத்த தொகை ரூ.10,222/- கோடி


    பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம.பி.அரசு அறிவிப்பு

    மத்தியபிரதேச மாநிலத்தில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்தார்.

    கட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'

    அரசு கேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது.  இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:

    அகஇ - 2017-18 - PINDICS - QMT - வழிக்காட்டுதல் சார்ந்த நெறிமுறைகள்

    தமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ராவ்!

    நமது முன்னோர்கள் கனவுப்படி, நாட்டை வளமாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என தமிழக கவர்னர் பொறுப்புவகிக்கும் வித்யாசாகர் ராவ் குடியரசு தினத்தையொட்டி ரேடியோ, தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

    அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்! மத்திய அரசு!!

    நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது!!!

    தமிழக அரசு பணியில் 2003ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை 8 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.

    கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு

    கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத்துவம்

    'இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கம்?

    அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம் செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 2012ல், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக, 16 ஆயிரத்து, 500 பேர் நியமிக்கப்பட்டனர். தையல், ஓவியம், இசை, நடனம், கணினி அறிவியல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல சிறப்பு பாடங்களை நடத்துகின்றனர்.

    ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு.

    பள்ளி கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டுதொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெறுவது தள்ளிப்போகாது.

    Monday, January 23, 2017

    தேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை, அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலங்களில் 25.01.2017 அன்று காலை 11 மணிக்கு எடுக்க அரசு உத்தரவு

    தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

    tnusrbஇரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு

    மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நுட்ப கல்லுாரிகளில், வசதிகளை மேம்படுத்தவேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.


    தமிழகத்தில், கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதில்லை. 

    இவர்களுக்கான பயிற்சிக்கு, தொழில்நுட்ப கல்லுாரிகளில் போதிய வசதிகள் இல்லை என்று, பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கல்லுாரிகள் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், பாடவேளைகள் தவிர்த்து விளையாட்டு பிரிவுக்கும் நேரம் வழங்கி, ஊக்குவிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. 

    மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள்பங்கேற்பதை கல்லுாரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

    உசிலம்பட்டியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் மாயவன், மாநிலத்தலைவர் பக்தவச்சலம், செயலாளர் அன்பழகன், சட்ட செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவரகளுக்கான, தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பதால், ஆய்வுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுக்க, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 8ம் தேதியும் துவங்கும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.

    ’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

    சி.பி.எஸ்.இ., சார்பில் கோவை மாவட்டத்தில், நேற்று நடந்த ’நெட்’ தகுதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு, போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    அரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்!

    தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளிகளின் பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட நிர்வாகிகள் மாநாடு, பெரம்பலுாரில் நடந்தது. மாநாட்டில், மாநில பொதுச் செயலர் நந்தகுமார் பேசியதாவது:

    ராணுவ அகாடமி நுழைவுத்தேர்வு

    பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமி மற்றும் கடற்படையில் பயிற்சி பெறுவதற்கான, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமியில், ராணுவ அதிகாரி படிப்பிலும் சேர முடியும். இதற்கான, தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை நுழைவுத்தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது; பிப்., 10 வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்தோரும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

    ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

    'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது. 

    நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் சில தினங்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை என அனைத்து தரப்பினரும் அறிவித்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்

    எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள் பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது; இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள், மத்திய சட்டம் - 1960 பிரிவு மூன்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. 

    அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்! நிபுணர்கள் கருத்து

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Saturday, January 21, 2017

    ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல்

    ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது. ஜல்லிக்கட்டு ஒப்புதலை அடுத்து மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடைபெறுகிறது. அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க மதுரை புறப்பட்டு சென்றுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சி போரட்டாமாக எழுந்தது.

    ஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்!

    அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று

    Friday, January 20, 2017

    அ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை தேர்வு அலுவலர் நியமனம், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு

    தொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.


    காட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கும் சட்டப்பிரிவு சேர்ப்பு - பிடிஜ

     *தமிழக அரசின் அவசரச் சட்டத்தில் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக பிடிஜ தகவல்.

    *ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல்.

    *உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது, குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவையில்லை.

    நானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ். நம்பிக்கை பேட்டி

    சென்னையில் பேட்டியளித்த முதலமைச்சர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன்.

    அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே!? வரைவு சட்டம் உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.


    ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றுகிறது. இதற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவசரச் சட்டத்திற்கான வரைவு, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சற்றுமுன் அனுப்பி வைக்கப்பட்டது.

    ஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃபர்..!

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், 
    தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

    பள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, அப்பள்ளிகளுக்கு ஆசிரியர், பிற பணியிடங்கள் தோற்றுவித்து அரசு உத்தரவு

    ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற முடிவு - பன்னீர்செல்வம் பேட்டி

    *குடியரசு தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

    *ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் : அரசு அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

    “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று 8 லட்சம் அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்,”என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

    ஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்?'

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும், இன்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஊழியர்கள், இன்று ஒரு நாள், தற்செயல் விடுப்பு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள், இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ,ராமநாதபுரம், திருப்பூர் ,சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

    மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    Thursday, January 19, 2017

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் அவசர அறிவிப்பு.

    ஜல்லிக்கட்டுக்குகு ஆதரவாக அனைத்து வட்டாரத் தலை நகரங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் இன்று (19.1.17) அல்லது நாளை (20.1.17) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

    தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வாகன ஸ்டிரைக் காரணமாக மாணவர்களின்

    தமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால் பாதிக்கப்பட்டுள்ளன!

    indian_bullsகாங்கேயம் காளை அறக்கட்டளைத் தலைவரும், ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள  கார்த்திகேயன் சிவ சேனாதிபதி, மாணவர்களின் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து தமது கருத்துக்களை தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலில் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன விசயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு விவகாரத்தைப் போன்று மேலும் 13 மாநிலங்களில் பீட்டாவால் கலாச்சாரத் தடை உருவாக்கப்பட்டுள்ளது.

    தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2016ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

    நீதிமன்றங்களிலும் ஜல்லிக்கட்டு

    சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று, ஜல்லிக்கட்டு தொடர்பான மனுக்கள் பரபரப்பை ஏற்படுத்தின.மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஜல்லிக்கட்டுக்கு சிங்கப்பூரில் ஆதரவு

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், என பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட துவங்கியுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூரிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற உள்ளது.

    ஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்துக்கு இடையே எழும் நம்பிக்கை துளிர்

    ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வரும் நிலையில், அதற்கான அதிகாரம் நம்மிடமே உள்ளது என்ற நம்பிக்கைக் குரல் எழுந்துள்ளது.

    ஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோடி திட்டவட்டம்

    ஜல்லிக்கட்டு விஷயத்தில் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க அவசரச் சட்டம் இயற்றுமாறு பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

    நுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி

    அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கியுள்ளன. நுழைவுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இதை சரி செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு

    மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது. அதனால் தான், இந்த இரு தேர்வுகளுக்கும், கல்வித் துறை மற்றும் பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

    விளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து அரசு விளம்பரங்கள் - நேரடியாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்பி நாளிதழ்களில் வெளியிட உத்தரவு

    அகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி, பள்ளி தொகுப்பாய்வு மைய அளவில் 30.01.2017 முதல் 01.02.2017 வரை நடைபெறவுள்ளது.

    5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகுதிநேரப் பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு வரும் கூட்டந்த்தொடரில் சட்டம் இயற்ற கோரிக்கை.

    சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, ஆதரவு குரல் கொடுத்து, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தர, பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் தன்னார்வ சமூக ஆர்வலர்கள்  உதவிட அனைவரும் வேண்டுகிறோம்.

    5 அம்ச கோரிக்கைகளின் சுருக்கம்:-
    1. பொங்கல் போனஸ் ( 5 வருட பண்டிகை போனஸ் ).
    2. ஐந்து வருட ’ மே ’ மாத நிலுவைத்தொகை – 51 கோடி.
    3. ஆண்டு வாரியான ஊதிய உயர்வு (2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16 & 2016-17).
    4. பணி நிரந்தரம் செய்ய துறை ரீதியான பரிந்துரை.
    5. பணியின்போது இறந்தவர்கள், 58 வயதை பூர்த்தி அடைந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள்.

    ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

    ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் சட்டப்பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு : ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம். இது இந்தியாவில் அல்ல. ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபைக்கட்டிடத்தின் முன்பாக ஆஸ்திரேலிய தமிழர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். 

    ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதியதாக பொறுப்பேற்க உள்ள துறைகள்

    அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம்.

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வழங்கினார். 

    டிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'

    தொடக்க கல்வி ஆசிரியருக்கான, டிப்ளமோ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆதரவு

    Image may contain: 1 person, smiling, text

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும்,போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் 19.01.2017 இன்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

    சென்னையில் 31 கல்லுாரிகள் இன்று முதல் விடுமுறை

    *அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சட்ட கல்லுாரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை.


    *கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை.

    Wednesday, January 18, 2017

    தமிழகத்தில் நாளை 19.01.2017 பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

    தமிழகத்தில் நாளை 19.01.2017 பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என

    Budget 2017 – Expectations of the Salaried Class.

    With the Union Budget 2017 just a couple of weeks away, there are expectations that the government will take some measures to help the common man, especially the salaried class, who has rallied behind the government’s decision on demonetization despite suffering a lot post the note ban. Experts are also of the view that the upcoming Budget 2017 should provide some tax gain for the common people to soothe at least the cash ban pain. Otherwise also, “there are only a few tax concessions available to individual tax payers. Most of the current set of tax benefits like medical reimbursement, conveyance allowance etc., at the present level, do not offer any real economic benefit to the individual tax payers.

    தமிழக அரசு ஊழியர்கள் "கடவுச்சீட்டு" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்

    அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    ஓய்வூதியத் திட்டத்தை வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்தி வருவதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.23 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த ஓய்வூதிய சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்றோர் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் தூங்கும் நூல்கள் பாதிப்பு!

    கல்லல், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 80 சதவீத அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளில், இடப் பற்றாக்குறை காரணமாக நுாலக வசதி இல்லாத நிலை தொடர்கிறது. 

    ’பலவீனத்தை கண்டறிந்து வெல்ல வேண்டும்’

    முத்துக்கவுண்டன்புதுார் அரசு நடுநிலைப் பள்ளியில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. சூலுார் அடுத்த, முத்துக்கவுண்டன்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத்தின் சார்பில், விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. மாணவர்களுக்கு விவேகானந்தர் குறித்து பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தன. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

    45 வயதுக்கு குறைந்தால் பதவி இல்லை; பல்கலை நிபந்தனை

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2014 முதல், தனியார் கல்லுாரி பேராசிரியர் முகமது ஜாபர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். துணைவேந்தராக இருந்த, சந்திரகாந்தா ஜெயபாலனால் நியமிக்கப்பட்டவர். 

    ’டிஜிட்டல்’ பரிவர்த்தனை; கல்வி நிறுவனங்களுக்கு கடிதம்

    அனைத்து கல்வி மையங்கள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் தொடர்புள்ள நிறுவனங்களை, ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கடிதம் எழுதியுள்ளார்.

    காசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

    இன்ஜி., உதவி பேராசிரியர் நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

    அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு, 2016, அக்., 22ல் நடத்தப்பட்டது; 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    'ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு

    'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

    தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது. பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது. 

    Tuesday, January 17, 2017

    மே 7-ல் நீட் நுழைவுத் தேர்வு


    எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட்  நுழைவுத்  தேர்வு மே 7-ம் தேதி  நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.23 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைப்பு

    தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.23 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த ஓய்வூதிய சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்றோர் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    பகுதிநேர பயிற்றுநர்களுக்கு பொங்கல் போனஸ், ‘மே’ மாத நிலுவை தொகை, ஆண்டு ஊதியஉயர்வை, தமிழக அரசு வழங்க வேண்டி - பகுதிநேர பயிற்றுநர்கள் கோரிக்கை.

    சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு,ஆதரவு குரல் கொடுத்து, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரநீதிமன்றங்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் - ஆசிரியர்சங்கங்கள், உதவிட அனைவரும் வேண்டுகிறோம்.

    கோரிக்கைகள் சுருக்கம்:-

    1. பொங்கல் போனஸ் ( 5 வருட பண்டிகை போனஸ் ).
    2. ஐந்து வருட ’ மே ’ மாத நிலுவைத்தொகை – 51 கோடி.
    3. ஆண்டு வாரியான ஊதிய உயர்வு (2011-12, 2012-13, 2013-14, 2014-15,2015-16 & 2016-17).
    4. பணி நிரந்தரம் செய்ய துறை ரீதியான பரிந்துரை.
    5. பணியின்போது இறந்தவர்கள், 58 வயதை பூர்த்தி அடைந்து ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்கள்.

    கோடை வெயிலுக்கு முன் தேர்வு நடத்த கோரிக்கை!

    எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்!

    அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது. இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு, நிடி ஆயோக் அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

    ஆசிரியர் குறைதீர் கூட்டங்கள்; ’கம்பி நீட்டும்’ ஏ.இ.ஓ.,க்கள்

    மதுரையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் ஆசிரியர் குறைதீர்க் கூட்டங்களில் பெரும்பாலும் ஏ.இ.ஓ.,க்கள் பங்கேற்பதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சேமநல நிதி முன்பணம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பகுதி இருப்பு முன் பணம் பெறுதல், உயர்கல்வி பயில முன் அனுமதி பெறுதல் உட்பட ஆசிரியர் குறைகள், பணப் பலன் பிரச்னைகளுக்கு தீர்வு காண இக்குறைதீர்க் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?

    (1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii) 

    (2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும். 

    (3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது. 

    (4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும். 

    காசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

    இன்ஜினியரிங் படிப்புக்கு விரைவில் தேசிய நுழைவுத்தேர்வு

    'நீட்' தேர்வு போல், இன்ஜினியரிங் படிப்புக்கும், தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த, மாநில அரசுகளிடம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கருத்து கேட்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில் வெறும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, தனியார் கல்லுாரிகளில் நன்கொடை கொடுத்து, மருத்துவ படிப்பில் சேர்வதாக, மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேர, அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவித்தது.

    NHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு...

    அரசு ஊழியர், ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

    கழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு

    பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
    இதையொட்டி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில், கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என, ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுக்கிறது.
    இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், மாணவ, மாணவியரிடம் பேசி, கழிப்பறைகள் இல்லாத வீடுகளின் பட்டியலை, ஜன., 18க்குள், ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    இரண்டுக்கு மேல் இருந்தால் பள்ளியில் 'சீட்' கிடையாது

    'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பள்ளியில் 'அட்மிஷன்' மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பும் கிடையாது' என, டில்லியில் இயங்கி வரும் ஒரு பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Monday, January 16, 2017

    ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம்: பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதேபோல் நடப்பு கணக்கில் வாரம் ரூ.1 லட்சம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடந்த நவம்பர் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

    Friday, January 13, 2017

    17 ம் தேதி அன்று அரசு விடுமுறை எம் ஜி ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு


    அகஇ - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 21.01.2017 அன்று "புரிதலை மேம்படுத்த புத்தாக்கப்பயிற்சி" என்ற தலைப்பிலும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு" என்ற தலைப்பில் 28.01.2017 அன்றும் நடைபெறவுள்ளது

    கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!!!

    பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.

    மாணவியருடன் பேச தடை; தாடி வளர்க்கவும் கூடாது!!

    மாணவியருடன் பேசக் கூடாது, தாடி வளர்க்கக் கூடாது என்றும், தவறு செய்பவர்களை தண்டிக்க, தனியாக சித்ரவதை அறை அமைத்து, கொடுமைப்படுத்துவதாகவும், கேரள மாநிலத்தில் உள்ள, நேரு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் குமுறுகின்றனர்.

    பாடநூல் அலுவலகத்தில் சசிகலா படம்; முதல்வர் பன்னீர் படம் புறக்கணிப்பு!!

    தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில், முதல்வர் பன்னீரின் படத்தை புறக்கணித்து, சசிகலா படத்தை வைத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக, கல்வி யாளர்கள் அல்லது கல்வி அமைச்சர் களை நியமிப்பது வழக்கம். ஆனால், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தற்போது அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நல்ல நேரம் பார்த்து, தன் பொறுப்பை ஏற்றார்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு.

    ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில்தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் 50 லட்சம் முதல் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில் 88 சதவீதம் பேரின் ஓய்வூதிய கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!

    மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு-
    கடந்த 2013 ல் நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக எந்த விடையும் தெரியாத எங்களுக்கு தங்களின் தற்போதைய அறிவிப்பு ஒரு வித நிம்மதியாக உள்ளது.

    மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை பயிற்றுவிக்க, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒழுக்க பண்புகளை கற்றுக் கொடுக்காததால், அவர்களின் செயல்பாடுகளில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

    தனியார் பள்ளிகளில் 'அட்மிஷன்': கண்டுகொள்ளாத கல்வி துறை

    தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி, மாணவர் சேர்க்கை நடப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவே, பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். ஆங்கில பேச்சு, மொழியறிவு, பொது அறிவு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தல் போன்றவற்றுக்காக, தனியார் பள்ளிகளை தேடி, பெற்றோர் படையெடுக்கின்றனர். 

    மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்

    தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. கடந்த, 2005ல் வழங்கிய, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்கான, ஒருங்கிணைப்பு பணிகள், 2015ல் துவங்கின. 

    மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை பயிற்றுவிக்க, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒழுக்க பண்புகளை கற்றுக் கொடுக்காததால், அவர்களின் செயல்பாடுகளில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

    வன சீருடைப் பணியாளர் தேர்வு: நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு. வன சீ

    வன சீருடைப் பணியாளர் தேர்வின் வனவர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி, நடைத்தேர்வில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தாற்காலிகப் பட்டியல் www.forests.tn.nic.in  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    Thursday, January 12, 2017

    நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்

    மனிதனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று சக்கரம். இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதன் கால்நடையிலிருந்து வாகனத்திற்கு தாவினான். இன்றைக்கு இருக்கும் சாதாரண பைக்குகள்,கார்கள் முதல் ரோடு ரெயில்கள் என்று சொல்லப்படும் 30 க்கும் மேற்பட்ட சக்கரங்களை கொண்ட பிரமாண்டமான சுமை இழுக்கும் லாரிகள் வரை ரப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட டயர்கள் தான் வாகனத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட வைக்கின்றன.

    ஆசிரியர் தகுதித் தேர்வு கிடையாது' - அமைச்சர் அறிவிப்பின் பின்னணியில் அரசியல்

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்' என்று அறிவித்து இருந்தார் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன். தற்போது 'ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஏற்கனவே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கும் 30 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்' என்று சொல்லி இருக்கிறார்.

    அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து இப்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். 

    தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுதல் சார்ந்து விவரம் கோருதல்

    பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைனில் டிப்ஸ்'

    பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், 'டிப்ஸ்' வழங்கி, தனியார் பள்ளி ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு?


    எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது.

    நன்னெறி கல்வி போதிப்பது எப்படி? பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

    நன்னெறி வகுப்பு நடத்துவது குறித்து, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சி வகுப்பு, ராஜவீதி, ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளியில், நேற்று நடந்தது.

    ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும்: அமைச்சர்

    ''ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.

    வறட்சி நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியம்

    வறட்சி நிவாரணத்திற்காக, ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், சென்னை பல்கலையில் நடந்தது.

    17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி

    பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விதிகளில், குளறுபடி நீடிக்கிறது.

    Wednesday, January 11, 2017

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வர் அறிவிப்பு

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார். பிராணிகள் வதைத் தடுப்பு சட்டத்திற்கு முரணாக அவசரச் சட்டம் ஏதும் கொண்டு வர இயலாது எனவும், ஏற்கெனவே 2009ல் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

    *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு*

     ★ *AB பிரிவுக்கு ₹1000 சிறப்பு மிகை ஊதியம்*

     ★ *CD பிரிவுக்கு ₹3000 என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு 30நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம்*

    தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

    தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்

    வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

    தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.

    மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதி!!

    பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது.

    பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

    தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

    தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் 'ஜாக்டோ - ஜியோ

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

    பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

    Tuesday, January 10, 2017

    பள்ளிக்கல்வி - இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெறவுள்ளது

    நாளை மறு நாள் அதாவது வருகின்ற 12.01.2017 வியாழக்கிழமை அன்று தற்போது காலியாக உள்ள 58 பட்டதாரியாசிரியர் (தமிழ்) காலிப்பணியிடங்களுக்கு 01.01.2016 நிலவரப்படி இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர் பணி நிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இருந்து வரிசை எண் 302 ல் இருந்து 616 வரை உள்ள நபர்களுக்கு

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு


    அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

    கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு.


    மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

    பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

    பாடத்திட்டத்தை மாற்றுங்கள்...

    முன்பெல்லாம் தமிழகத்தில் பள்ளிக்கூடக்கல்வி மிகவும் உயர்தரத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வித்தரம் குறைந்ததால், ஐ.ஐ.டி. உள்பட அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்லூரிகளிலும், கலைக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 
    குறையத்தொடங்கியுள்ளது.

    தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை!!! YOUR CHILD, YOUR CHOICE!!!?

    தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறோம். அவற்றுக்கு ஆதாரமாக தற்போது ஒரு பித்தலாட்டம் அம்பலமாகி உள்ளது.

    அமெரிகாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) 2003 ல், அறிக்கை ஒன்றில் 340% ஆட்டிஸம் நோய் (மூளை சிதைவு) ஆப்ரிக்க - அமெரிக்கா பிள்ளைகளிடத்தில் பரவ காரணம் MMR தடுப்பூசி என்பது கண்டுப்பிடிக்கபட்டு மறைக்கப்பட்டது.

    தமிழக அஞ்சல்துறைக்கு பொங்கல் விடுமுறை இல்லை : ஊழியர்கள் அதிர்ச்சி

    பொங்கல் காலங்களில் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

    பட்டதாரிகளுக்கு கோல் இந்தியா நிறுவனத்தில் 1319 காலி பணியிடங்கள்!!

    *கல்வி தகுதி:* Degree
    *காலியிடங்கள்:* 1319

    Mining – 191
    Electrical – 198
    Mechanical – 196
    Civil – 100
    Chemical/Mineral – 04
    Electronics & Tele – 08
    Industrial Egg – 12
    Environment – 25

    காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை

    மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், விண்ணப்பத்தில் இடம் பெற்ற பகுதிகளுக்கான (காலம்) மதிப்பெண் நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு

    பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு

    தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாததால், சிகிச்சைக்கு தவித்து வருகின்றனர்.

    புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.


    புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழகஅரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தார்.

    10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு


    2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

    டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை!


    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். 

    Monday, January 9, 2017

    பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவிப்பு

    பொங்கல் விடுமுறை அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பா.வளர்மதிக்கு ஏன் பாடநூல் கழகம்? -மாஃபா.பாண்டியராஜனுக்கு கார்டனின் செக்?! விகடன்

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. ' அமைச்சருக்கும் துறையின் உயர் அதிகாரிக்கும் சமீப நாட்களாக முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

    டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்


    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

    டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை மறு தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், அந்த 11 பேரில் 10 பேரை மீண்டும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமமூர்த்தியை மட்டும் மீண்டும் தேர்வு செய்யக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கின் பின்னணி :
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக வழக்குரைஞர்கள் ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி. பாலுச்சாமி, எம்.மாடசாமி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, பொறியாளர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் ஆகிய 11 பேரை தமிழக அரசு நியமித்தது.

    இந்நிலையில், இந்த நியமன நடவடிக்கை சட்ட விதிகளின்படியும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படியும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், சமூக நீதிப் பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

    இந்த வழக்கை கடந்த டிசம்பர் 22-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 11 பேரை நியமிக்க கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, இதுதொடர்பாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்தது.

    இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில்,"டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரும் தகுதி வாய்ந்தவர்கள்.

    பொது நிர்வாகப் பணிகளில் அனுபவம் பெற்றிருப்பவர்கள். உறுப்பினர்களின் தகுதி, பொது வாழ்வு பின்னணி, அனுபவம் போன்ற கூறுகளை சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அத்தீர்ப்பை ரத்து செய்து தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமன நடவடிக்கை தொடர்பான மாநில அரசின் அறிவிக்கையை உறுதிப்படுத்தி நீதி வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இணையதளத்தில் அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

    கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்றுத்திட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் வீராணம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, 20 மாணவ, மாணவியர் மற்றும் கவுண்டம்பாளையம் பள்ளி மாணவ, மாணவியர், 20 பேர் என, 40 பேர் பங்கேற்றனர். 

    ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும்

    யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆண்டிற்கு ’நீட்’ தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    ’ஸ்மார்ட்’ ஆக தயார் வகுப்பறையால் மாற்றம்

    கூடலுார், இரண்டாவது மைல், அரசு துவக்கப் பள்ளியில், ’ஸ்மார்ட் கிளாஸ்’ மூலம், மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில், ’ஸ்மார்ட் கிளாஸ்’ மூலம், மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடுகின்றன. 

    மாணவர்களிடம் தனியார், உதவி பெறும் பள்ளிகள்  பகல் கொள்ளை!

    பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் - 2 மாணவர்களிடம், பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழுக்காக, 300 ரூபாய் வசூலிக்கின்றன. ஆனால், இந்த சான்றிதழ்கள் பெற, ஒரு பள்ளி சார்பில், மாவட்ட கல்வி அலுவலகத்தில், 300 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர்  எதிர்பார்க்கின்றனர்.

    பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை

    காமராஜர் பல்கலை துணை வேந்தராக, பல்கலைகளில் பணியாற்றுவோர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, கல்வித்தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் பதவி, ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ளது. 

    பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!

    பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில், எந்த எண்ணை ஆய்வுக்காக பயன்படுத்துவது என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

    ‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.

    "பான்காரடு" கட்டாயம் : வருமான வரித்துறை

    வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்'என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Sunday, January 8, 2017

    நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

    இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே 7ம் தேதி இந்த தேர்வு நாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

    *TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்
     
    💥CPS ரத்து

    💥8 வது ஊதியக்குழு அமைக்க

    💥இடைக்கால நிவாரணமாக 20% வழங்க

    முழு மதிப்பெண் பெறும் விடுதி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசு

    தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. இவற்றில், தங்கி படிக்கும், மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு

    பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990க்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி

    தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    Saturday, January 7, 2017

    தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமனம்


    ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகத் திரளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

    தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.