“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று 8 லட்சம் அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்,”என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: தமிழகத்தின் தொன்மைமிக்க வரலாற்றின் அடையாளமாகவும், பாரம்பரிய உரிமையாகவும் திகழும் ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்க மறுக்கப்படுகிறது.இதன் எதிரொலியாக மாணவர்கள் தன்னெழுச்சியான நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஆதரவு தெரிவிக்கிறது. இதில் அரசு அலுவலர்களும் பங்கேற்க வேண்டும்
என்ற நோக்கில் இன்று ஒருநாள் எங்கள் சங்கத்தில் உள்ள எட்டு லட்சம் பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றனர்,” என்றார்.
No comments:
Post a Comment