ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஊழியர்கள், இன்று ஒரு நாள், தற்செயல் விடுப்பு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள், இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.
அதே போல, அரசு அலுவலர் ஒன்றியமும், ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் உறுப்பினராக உள்ள, எட்டு லட்சம் பேர், இன்று தற்செயல் விடுப்பு எடுப்பர் என, அறிவித்துள்ளனர்.
கறுப்பு 'பேட்ஜ்' : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, தலைமை செயலக ஊழியர்கள் இன்று, கறுப்பு, 'பேட்ஜ்' அணிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். அரசு பணியாளர் சங்கம் சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment