கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 வரை, இந்த உதவித் தொகை பெறுவதற்கு, மாநில அளவில், என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 542 மையங்களில் நடக்கிறது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 9:00 மணிக்கு தேர்வு துவங்கும். மொத்தம் இரண்டு தாள்களுக்கு, மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment