ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், என பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட துவங்கியுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூரிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை (20ம் தேதி) இரவு 7 மணிக்கு சீனா டவர் பகுதியில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தில், இந்த கூட்டம் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு, தமிழக கலாசார நிகழ்வு. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆதரவு கூட்டம் நடைபெற உள்ளது. சிங்கப்பூரில் வசிப்பவர்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் இதர நாட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். போராட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தண்ணீர் மற்றும் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ அல்ல. ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment