Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 28, 2017

    பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

    பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த கல்வி ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 200 பள்ளிகள் மூலம் 14 ஆயிரத்து 649 மாணவர்கள், 16 ஆயிரத்து 878 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 527 பேர் மேல்நிலை தேர்வு எழுதுகின்றனர்.

    ‘பள்ளிக் கல்வித் துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.82 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’

    ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 1,919 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சைக்கிள் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: கடந்த ஐந்நாண்டில் மட்டும், பள்ளிக்கல்வித் துறைக்காக, 82 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 28 ஆயிரத்து, 474 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 31 லட்சம் பேருக்கு இலவச லேப் - டாப் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 5.84 லட்சம் பேருக்கு வழங்க உள்ளோம்.

    உதவித்தொகை பெறுவதில்... சிக்கல்! பள்ளி குழந்தைகள் அவதி

    உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு, வங்கிகளில் கணக்கு துவக்க முடியாததால், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க பல்கலைக்கு தடை: உயர்நீதிமன்றம்

    தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கும், வேளாண் பல்கலையின் அறிவிப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

    “ஆர்கிடெக்சர்’ படிப்பில் புரிதல் வேண்டும்’!

    எவ்வளவோ வீடுகளையும், பலவகையான கட்டடங்களையும் நாம் அனுதினமும் காண்கிறோம். அவை அனைத்து கட்டடங்களும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பதில்லை!

    பள்ளிகளில் கணினி ஆய்வகம் அவசியம்: அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வலியுறுத்தல்

    அனைத்து பள் ளி க ளி லும் கணினி ஆய் வ கம் அமைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டு மென தமிழ் நாடு பி.எட்., கணினி அறி வி யல் வேலை யில்லா பட் ட தாரி ஆசி ரி யர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். கிருஷ் ண கிரி மற் றும் தர் ம புரி மாவட்ட தமிழ் நாடு பி.எட்., கணினி அறி வி யல் வேலை யில்லா பட் ட தாரி ஆசி ரி யர் கள் சங் கத் தின் பொதுக் குழு கூட் டம் கிருஷ் ண கி ரி யில் நடை பெற் றது. மாவட்ட செய லா ளர் கள் சர வ ணன், கண் ணன் தலைமை வகித் த னர். மாவட்ட தலை வர் கள் தயா ளன், பெரு மாள் முன் னிலை வகித் த னர்.

    அகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்" என்ற தலைப்பில் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.


    வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதன்படி, தமிழகத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 65 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது,

    பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்ககளை ஈடுபடுத்தக்கூகூடாது; அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு!

    ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; கல்வி அமைச்சர்

    ''மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 1,919 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. 

    டேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் 2018 ஜனவரி பருவத்தில் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

    டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

    தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர்.

    பிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பெப்ரவரி 28 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

    ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல்!

    கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

    பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை!

    பள்ளி மாணவர்களுக்கு யோகா வகுப்பு கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளதாக கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

    TNPSC DEPARTMENT EXAM MAY 2017 DETAILS

    Monday, February 27, 2017

    குரூப் - 2 ஏ பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு

    டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:&'குரூப் - 2 ஏ&' பதவிகளில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட, 1,940 பணியிடங்களுக்கு, 2016 ஜன., 24ல், எழுத்துத் தேர்வு நடந்தது.

    நீட் தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு: சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு

    மருத்துவ படிப்புகளுக்கான, ’நீட்’ தேர்வில், மீண்டும் கட்டணம் செலுத்தும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், மே 7ல், நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

    கல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற்றோர்

    தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை

    பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ’முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்’ என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா தாமதம்: 10 லட்சம் மாணவர்கள் தவிப்பு

    சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழா நடக்காததால், படிப்பை முடித்த, 10 லட்சம் மாணவர்கள், சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில், அண்ணா, சென்னை, மதுரை காமராஜர், மீன்வளம் மற்றும் சட்ட பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லை. அதேபோல, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்ட முக்கிய பதவிகளும் காலியாக உள்ளன. துணைவேந்தரை நியமித்தால் தான், முக்கிய பதவிகளையும் நிரப்ப முடியும்.இரண்டு ஆண்டாக இந்நிலையில், துணைவேந்தர் இல்லாததால், சென்னை பல்கலையில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் மட்டும் வழங்கப்படுகிறது.

    மூன்று மாதங்களுக்கு முன், உயர் கல்வி செயலர் கார்த்திக் கையெழுத்திட்டு, சான்றிதழ் வழங்கும் வகையில், பட்டமளிப்பு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், 'துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது' என, பேராசிரியர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகும், துணைவேந்தரை நியமிக்க, உயர் கல்வித்துறை கூடுதல் அக்கறை காட்டாததால், பட்டமளிப்பு விழா தொடர்ந்து தாமதமாகிறது.

    இது குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: சென்னை பல்கலை யில், அரசு கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 125 கல்லுாரிகள் இணைப்பு பெற்றுள்ளன. 

    அனுமதி தரப்படும்: சென்னை பல்கலை யில் பட்டமளிப்பு விழா முடிந்த பிறகே, பல்கலை யின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி வழங்கப்படும். ஆனால், சென்னை பல்கலையிலேயே பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால், இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்க முடியவில்லை. பல்வேறு படிப்புகள் முடித்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, துணைவேந்தர் நியமன பணிகளை விரைந்து முடித்து, பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு முதல், மூன்றாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., என, பல பாடத் திட்டங்களையும், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என, பல பயிற்று மொழிகளும் பின்பற்றப்படுகின்றன. 

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மற்ற மாநில மாணவர்களும் படிக்கும் வகையில், பிற மாநில மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமாக்கி, 2006ல், தமிழக அரசு உத்தரவிட்டது.

    இடைகால நிவாரணமே ஊதியக்குழுவின் "ஸ்திரதன்மையை" உறுதிபடுத்தும்; அரசு ஊழியர்கள் 'போர்க்கொடி'

    16529 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது?

    வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை நூலகர், உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர், பிரிவு அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, நர்ஸ், தனிப்பட்ட உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்

    படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற ரூ.15 கோடி செலவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.

    Disbursement of salary for the month of February 2017 on 27th February 2017 on account of Nation-wide bank Strike on 28th February 2017.

    கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல்

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

    நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு

    தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேதி வரை மீசல்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி


    மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி மார்ச் 14ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முடிந்த மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது தேர்வர்கள் அதிருப்தி

    ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், ஆரம்பமே குளறுபடியாகி உள்ளது. அதனால், மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 'டெட்' தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, பிப்., 24ல் வெளியிட்டது.

    Friday, February 24, 2017

    EMIS சார்பான தகவல்கள்...

    1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

    2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

    3.இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார் எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

    ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:

    முதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு.

    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதுக்கு முன்பாகவே தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

    பொதுத்தேர்வு முடிவுகள்:

    12ம் வகுப்பு - மே 12ம் தேதியும்

    Thursday, February 23, 2017

    பொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உத்தரவு!

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்க வேண்டும்,” என, கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

    பூமியை போன்ற 7 புதிய கோள்கள் நாசா கண்டுபிடிப்பு

    ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி

    ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Wednesday, February 22, 2017

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு பணியாளர்களுக்கும் செயல்படுத்துவது குறித்த முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது


    7வது ஊதியக் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு


    7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு, ஜூன் 30க்குள் அரசிற்கு அறிக்கை அளிக்க உத்தரவு

    7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, புதிய அரசு நிறைவேற்றாவிட்டால், ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

    டிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு!

    ''டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், பரிசு அளிக்கும் திட்டத்தின் கீழ், 58 நாட்களில், 10 லட்சம் பேருக்கு, 153 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது,'' என, 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்தார்.

    3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு!

    சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர்கள் குறித்து, இன்னும் இரு தினங்களில், கவர்னர் முடிவு எடுக்க உள்ளார்.

    7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது; மத்­திய அரசு ஊழி­யர்கள் ‘அலவன்ஸ்’ உய­ரு­கி­றது!

    மத்­திய அரசு ஊழி­யர்­களின், ‘அலவன்ஸ்’ தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை, சீராய்வு செய்யும் பணி முடி­வ­டைந்து உள்­ளது. இதை­ய­டுத்து, புதிய அலவன்ஸ் மற்றும் அலவன்ஸ் உயர்வு குறித்த அறி­விப்பை, மத்­திய அரசு விரைவில் வெளி­யிடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்­திய அரசு ஊழி­யர்கள் பய­ன­டைவர்.

    தொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

    ‛வங்கிகள் பாரம்பரிய நடைமுறையில் இருந்து, மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாற தவறினால் ஆபத்து' என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    ஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்!

    சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, அதிக அளவில் காளைகள் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ள, 'பீட்டா' அமைப்பு, இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரங்களை தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளது.

    Monday, February 20, 2017

    வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.

    வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும்.

    மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் பதில்



    தமிழகத்தில் வரும் மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்தது.

    மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

    வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

    அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.

    முதல்வராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து மகப்பேறு உதவி உயர்வு, ஸ்கூட்டி வாங்க மானியம் போன்ற 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

    ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    தமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா?

    தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதனுமா வேணடாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா குழப்பம் வேண்டாம். நீட் தேர்வு என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வாகும்.

    ‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? 

    பிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்

    தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு துவங்க, 10 நாட்களே உள்ளதால், மாணவர்கள் யாரும் விடுபடாமல், 'ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல், துவங்குகிறது. 

    'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

    அரசு துறைகளில் காலியாக உள்ள, 85 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

    தனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில் ஆர்வமில்லை: மத்திய சுகாதார திட்டங்களில் சுணக்கம்.

    தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார் பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

    தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

    கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பதிவு, 8ல் துவங்கியுள்ளது. மார்ச், 10 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

    காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!

    இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வயர்லெஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. உதாரணமாக ப்ளுடூத் ஹெட்போன்களை எடுத்துக்கொண்டால் முன்பு வந்த மாடல்களை மாற்றம் செய்து வயரற்ற ஒன்றாக வெளியிட்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

    Friday, February 17, 2017

    வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்


    'தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடத்தப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது


    டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மதுரையில் தினமலர் நடத்துகிறது


    தமிழக போலீஸ் துறையில், 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, மே 21ல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை முகாம், தினமலர் சார்பில் நாளை( பிப்.,18) மதுரையில் நடக்கிறது.

    1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி...


    நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, முறையாக கை கழுவுவது எப்படி என, ஒரு லட்சம், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி செய்முறை பயிற்சி அளித்தது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு.


    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின் அடிப் படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக் கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்


    அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது. 

    என்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன்படுத்த சிபிஎஸ்இ.க்கு உத்தரவு


    தரமான பாடத் திட்டங்களை தரும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது!!!


    ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

    Thursday, February 16, 2017

    தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்றார்.

    *எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர்.

    *திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை.

    *செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை.

    *செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை.

    *தங்கமணி - மின்சாரத்துறை

    ‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!

    தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்த, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம், திடீரென நிறுத்தப்பட்டது; இதனால், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகினர். தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும்; பட்டதாரி ஆசிரியர் களுக்கு, ஏப்., 30ம் தேதியும், தகுதித்தேர்வு (டி.இ. டி.,) நடத்தப்படும் என்று, தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. 

    இந்திராகாந்தி விருதுக்கு மே 2க்குள் விண்ணப்பிக்கலாம்

    இந்திராகாந்தி விருதுக்கு, நாட்டு நலப்பணி திட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டுநலப்பணி திட்ட மாநில அலுவலர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    தான்தோன்றிமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர்கள் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    பள்ளி பரிமாற்றுத் திட்டம் மாணவிகள் கலந்துரையாடல்

    விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருக்கோவிலுார் அடுத்த வடமருதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    SCHOOL EDUCATION - DGE - HSE / SSLC PUBLIC EXAMINATIONS - SCRIBE APPOINTMENT REG ORDER

    சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

    ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - தேர்விற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்தல் / திரும்ப பெறுதல் சார்ந்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கோரி உத்தரவு

    CPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு...

    ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

    தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சங்கராபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பெரியண்ணன் தலைமை தாங்கினார். இதில் வட்டார தலைவராக பாலு, செயலாளராக ராஜாராம், பொருளாளராக யாசின்உசேன், துணை தலைவர்களாக தேவேந்திரன், ஜோஸ்பின்மேரி, துணை செயலாளராக

    Wednesday, February 15, 2017

    தர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்!

    ”தேசிய தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை இடம்பெற, இணையதளம் மூலம் ஆதரவு அளியுங்கள்,” என, துணைவேந்தர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

    10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

    பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு!

    பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

    மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும்

    பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவை வருமாறு:

    ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

    மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை, தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

    ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடையவும், அரசின் பல்வேறுசலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு மிகவும் அவசியமாகிறது. புதிய ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

    அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு "Professional Development programme" என்ற தலைப்பில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சியும், உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சியும் வட்டார அளவில் நடைபெறவுள்ளது.

    10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு

    நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி செய்திக் குறிப்பு: நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத, தனித்தேர்வர்கள், நாளை முதல் இரு நாட்கள், 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

    Tuesday, February 14, 2017

    உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : சிறைக்கு செல்வதால் சசி-யின் அரசியல் கனவு அஸ்தமனமானது

    தமிழகம் மட்டுமல்லாமல் நாடே உற்று நோக்கிய வழக்கில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கினார். முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் பின் தமிழகம் அடுத்தடுத்து இதுவரை கண்டிராத பல சம்பவங்கள் அரங்கேறியது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக கூவத்தூரில் சசிகலா தரப்பால் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவின் அரசியல் கனவை தகர்த்தெறியும் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

    பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. இதனால் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தலுக்கு, அவர்கள் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டு, சமீப காலமாக வலுத்துள்ளது. 

    10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்!

    பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, தற்கால தொல்லியல் ஆய்வுகள் என்ற பாடத்தை, தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று விளக்கினால், கடந்த கால வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

    தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்ப்பு கிடைக்குமா!

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவையொட்டி, செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைந்த அனைவருக்கும் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'

    பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட் வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

    மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம். கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன். சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.

    வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன

    வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையாமல் அதிகமாகவே உள்ளது. அது மட்டும் இல்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய 2012-ம் ஆண்டு முடிவு செய்தது. அது மட்டும் இல்லாமல் 2016 ஏப்ரல் முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டியை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!!!

    உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.

    இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்?

    ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் இழுபறி நடந்துவருகிறது. அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டால் எவ்வாறு அதனை சரியான முறையில் கையாள்வது என்று பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.