''மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 1,919 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில் சைக்கிள் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:கடந்த ஐந்நாண்டில் மட்டும், பள்ளிக்கல்வித் துறைக்காக, 82 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 28 ஆயிரத்து, 474 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 31 லட்சம் பேருக்கு இலவச லேப் - டாப் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 5.84 லட்சம் பேருக்கு வழங்க உள்ளோம். ஆசிரியர்களின் குறைபாடு, ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்து கொடுக்கப்படும்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளதோ, அதை வரும் நிதியாண்டில், முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், அனைத்து அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு துவங்க சிந்தித்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள நகரம் மற்றும் ஒன்றியங்களில், சிறந்த கல்வியாளர் மற்றும் வல்லுனர்களால், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும். மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான ஆணை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment