To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, July 31, 2012
புதிய கல்விக் கட்டணம்: 380 தனியார் பள்ளிகளிடம் விசாரணை
கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கோரி மேல்
முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தும் பணியை, கட்டண
நிர்ணயக் குழு நேற்று துவக்கியது. நவம்பர் மாதத்திற்குள், அனைத்துப்
பள்ளிகளுக்கும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என குழு வட்டாரங்கள்
தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட் உத்தரவு
இடைநிலை ஆசிரியர்கள்,
தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை
ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று
முடிவெடுக்கலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
Monday, July 30, 2012
இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் ககன் வெண்கலம்
லண்டனில் நடைபெற்று
வரும் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா
594 புள்ளிகளுடன் 16வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு செல்லும்
வாய்ப்பை இழந்தார். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்
போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. ககன் நரங் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று இறுதிப்
போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ககன் நரங் 701,1 புள்ளிகள்
பெற்று 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். லண்டனில்
நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி
புது
தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், நெல்லூர் அருகே
வந்து கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு பெட்டியில் இன்று அதிகாலை தீ
விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் பலியாயினர். புது
தில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு
இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சலிங் தீவிரம்
தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில், ஒன்றியம்
விட்டு ஒன்றியத்துக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சலிங்
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் நேற்று நடந்தது. இதில்
நூற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசிரியைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கல்வி வளர்ச்சி நிதி ரூ.30,000 கோடி வீண்: கலாம் ஆலோசகர்
உயர்கல்வி மற்றும் பல்கலைகளில், கல்வி
வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கூறினார்.
Sunday, July 29, 2012
டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.
இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ
ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய
பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள்
குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
பட்டதாரி ஆசிரியர்கள் 1,150 பேருக்கு பதவி உயர்வு
பள்ளிக் கல்வித் துறையில், 1,150 பட்டதாரி
ஆசிரியர் முதுகலை ஆசிரியராக நேற்று பதவி உயர்த்தப்பட்டனர். பள்ளிக்
கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்,
பதவி உயர்வு கவுன்சிலிங் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐ.ஏ.எஸ்., பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு
முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர்
5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு
முழுவதும், 1,052 ஐ.ஏ.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், கடந்த மே மாதம் 23ம்
தேதி, முதல் நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
Saturday, July 28, 2012
கல்வி உதவித்தொகை மோசடி - 80 தலைமை ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை மோசடியில் 80 பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆவணங்களை கைப்பற்றி
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 83 தொடக்க
மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ,மாணவியருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை
மூலம் கல்வி உதவித்தொகை வழங்கியதில் ரூ.81 லட்சம் மோசடி நடந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை - இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13943 / சி3 / இ1 / 2012, நாள். 27.07.2012
01012012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை
புதிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்: ஐகோர்ட்
பள்ளி பஸ்களில் செல்லும் குழந்தைகளைப்
பாதுகாக்க, அந்த வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக
விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழை வழங்க,
தனிப்பிரிவு ஏற்படுத்தவும், புதிய விதிகளில் வழி வகை செய்ய வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை தாக்கல் செய்யவும்
அறிவுறுத்தியுள்ளது.
Friday, July 27, 2012
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள்
அரசு மேனிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக
பணிபுரியும், 287 தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால்
சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இதுவரை
நிரந்தரப்படுத்தவில்லை.
அண்ணா பல்கலை மண்டல இயக்குனர்கள் விரைவில் நியமனம்
சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட
பின், மதுரை உட்பட 5 மண்டல அலுவலகங்களுக்கும் இயக்குனர் அல்லது முதல்வர்
அந்தஸ்திலான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
திமுக
ஆட்சியில், 2007 மற்றும் 2010ம் ஆண்டில், சென்னை அண்ணா பல்கலையை கோவை,
திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலை
எனப் பிரித்து, துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
Thursday, July 26, 2012
மாவட்ட கல்வி அலுவலர்களை முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பள்ளிச் சீருடை அணிந்தால் பஸ் கட்டணம் கிடையாது
இலவச கையடக்க பேருந்து பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்படாக, மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலோ அல்லது பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலோ, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தமிழகத்தில், 10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம், நடப்பு கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான சேர்க்கை விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விசாரணை நடத்தி, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் (என்.சி.டி.இ.,) உரிய நடவடிக்கை எடுக்கிறது.
Wednesday, July 25, 2012
கட்டடம் கட்டுவதில் சிக்கல் - தவிர்க்கும் தலைமையாசிரியர்கள்
அரசு பள்ளிகளில் கட்டடம் தேவையிருப்பினும்,
அதை கட்டுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியர்கள்,
அப்பணியினை எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் இடநெருக்கடி
இருந்தும், அதற்கு அரசு நிதி ஒதுக்க தயாராக இருந்தும், மாணவர்களுக்கு
கட்டடம் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
Tuesday, July 24, 2012
Monday, July 23, 2012
Sunday, July 22, 2012
EVERY INDIAN MUST READ AND SHARE THIS. PLS SHARE
Hey guys
good morning.. i wud like to share a news about an intelligent guy who's
getting his rear kicked off..am sure you must have known about this..
read this and i hope you can change in something..
First Rank in State in Secondary School Examination
First Rank in University in Plus Two
First Rank in IIT Entrance Examination
read this and i hope you can change in something..
First Rank in State in Secondary School Examination
First Rank in University in Plus Two
First Rank in IIT Entrance Examination
அண்ணா பல்கலையின் கீழ், மாநிலம் முழுவதிலுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.
மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை
மாணவர்கள் பின்பற்ற ஏதுவாக, சென்னையிலுள்ள அண்ணா பல்கலையின் கீழ், மாநிலம்
முழுவதிலுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
மாணவருக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை அளிக்கக் கூடாது, மீறும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை செயலர் எச்சரிக்கை.
மாணவருக்கு, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ
ஆசிரியர் தண்டனை அளிக்கக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா
எச்சரித்தார்.
பெரம்பலூர்
மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர் ஒருவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி,
அடித்து, துன்புறுத்திய ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை.
23.07.2012 (§fŸ)
|
khWjš fyªjhŒÎ (mnj kht£l«) (mid¤J ghl g£ljhç MÁça®fŸ, MÁça® gæ‰We®, Ïilãiy MÁça®fŸ cl‰fšé k‰W« Áw¥ghÁça®fŸ)
|
r«kªj¥g£l kht£l Kj‹ik¡ fšé mYty®fshš el¤j¥gL« (Kj‹ik¡ fšé mYty®fshš fyªjhŒÎ eilbgW« Ïl« bjçÎ brŒJ m¿é¡f¥gL«) |
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள்கூட வகுப்புக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுத உரிமை கோர முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு.
செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த பி. கீதா உள்ளிட்ட 9 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். போதுமான நாள்கள் வகுப்புக்கு வரவில்லை என்று கூறி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
Saturday, July 21, 2012
Friday, July 20, 2012
Thursday, July 19, 2012
தொடக்கக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வு கவுன்சிலிங் இம்மாதம் 30 , 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிர்யர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். இதற்கான கவுன்சிலிங் 30 ந் தேதி சென்னையில் நடக்க உள்ளது எனவும் தொடக்கப் பள்ளி மற்றும் 6,7,8 ம் வகுப்புகளில் தற்போது இடைநிலை ஆசிரியர்களாக
ஆகஸ்ட் முதல் வாரத்தில் டி.இ.டி. ரிசல்ட்!
தமிழக அரசால் கடந்த 12ம் தேதி நடத்தப்பட்ட,
முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல்
வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த
12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) 6.5 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும், 1,027 மையங்களில் பலத்த பாதுகாப்புடன்
தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்களை,
"ஸ்கேன்&' செய்யும் பணி, சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Wednesday, July 18, 2012
முதல் இடைப்பருவ தேர்வு ஜூலை 23ல் துவக்கம்
மதுரை மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு ஜூலை 23ம் தேதி துவங்குகிறது.
மதுரை வருவாய் கல்வி மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு, ஜூலை 23ம் தேதி துவங்க உள் ளது. காலையில் 6, 8, 9, 10 வகுப்புகளுக்கும், மாலையில் 7ம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறும்.
மதுரை வருவாய் கல்வி மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு, ஜூலை 23ம் தேதி துவங்க உள் ளது. காலையில் 6, 8, 9, 10 வகுப்புகளுக்கும், மாலையில் 7ம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறும்.
கல்விக்கூடம் அருகில் சிகரெட் விற்பனை எஸ்பி எச்சரிக்கை
கல்வி நிலையங்களுக்கு அருகில் 100மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கடைகளில்
பீடி, சிகரெட், புகையிலை, பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்போர்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன்
எச்சரித்துள்ளார்.
8 அரசு பலவகை தொழிநுட்ப கல்லூரிகளில் புதிதாக 410 பணியிடங்கள் உருவாக்கி தமிழக முதல்வர் உத்தரவு.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.இது
குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், உயர்கல்வியை
மேலும் மேம்படுத்தும் வகையில், தேனி, திருவாரூர், விழுப்புரம்,
திருவண்ணாமலை,தர்மபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில்
கட்டுமானப் பணியில் மாணவர்கள் - மெட்ரிக் பள்ளி அட்டூழியம்
பொள்ளாச்சியில், தனியார் பள்ளி வளாகத்தில், கட்டட கட்டுமானப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி - கோவை ரோடு, சக்தி மில் அருகே,
சுபாஷ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி
வளாகத்தில், புதிதாக வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியில், 8
மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தினமும்
காலையில் வகுப்புக்குச் சென்றதும், அரை மணி நேரத்துக்குப் பின், நிர்வாகம்,
மாணவர்களை கட்டுமானப் பணிக்கு, வகுப்பு வாரியாக அனுப்புவதாக
கூறப்படுகிறது.
Tuesday, July 17, 2012
1999 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு
அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும்
திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப்
பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் BOOT அடிப்படையில் நடைமுறைப்படுத்த
ஏற்கெனவே முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக
31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: சென்னையில் காலிப் பணியிடங்கள் இல்லை
உபரி பட்டதாரி ஆசிரியர் 346 பேருக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர், மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை,
ஆசிரியருக்கு, 40 மாணவர் வீதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உபரி ஆசிரியர்
பட்டியலிடப்பட்டனர். அதன்படி, 346 பேர் பட்டியலில் இடம் பெற்றதாக, கல்வித்
துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monday, July 16, 2012
அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள பல
ஆயிரக்கணக்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக
பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்
காலிப்பணியிடங்கள்
Sunday, July 15, 2012
200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!
செல்போனில் தினசரி 200 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பலாம் என்ற டிராய்
நிர்ணயித்த உச்ச வரம்பை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து
தீர்ப்பளித்தது. இதனால், இனி எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
செல்போனில் ரியல் எஸ்டேட் முதல் உடல் எடை குறைப்பு வரை டெலிமார்க்கெட்டிங்
நிறுவனங்களின் எஸ்எம்எஸ் தொல்லை அதிகரித்து வந்தது. இதை தடுக்க தினசரி
அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ் வரை
வங்கிகளில் ரூ.10,000 வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு கட்டணம் ரூ.2.50 ஆக குறைப்பு!
வங்கிகளில் ரூ.10,000 வரையான ஆன் லைன் பண பரிமாற்றத்துக்கு(இடிரான்ஸ்பர்)
கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பண
பரிமாற்றங்களுக்கு காசோலைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் அதிகமாக
உள்ளதால், காசோலை பயன்பாட்டை முழுமையாக கைவிட வேண்டுமென நிதியமைச்சராக
பிரணாப் இருந்த போது கூறியிருந்தார். ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு கட்டணம்
எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கியிடம் கோரியிருந்தார்.
2011 ம் ஆண்டு நடந்த டிசைன் பார் சேஞ் (DESIGN FOR CHANGE) போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த சிவகங்கை மாவட்ட பெரியகோட்டை அரசுஉயர்நிலைப்பள்ளியினால் சமர்பிக்கப்பட்ட செயல்திட்ட வீடியோ
DESIGN FOR CHANGE போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த அரசு உயர்நிலைப் பள்ளியினால் சமர்பிக்கப்பட்ட செயல்திட்ட வீடியோ
Saturday, July 14, 2012
ஆசிரியர் பணி நிரவல் கவுன்சலிங்
மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சலிங் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கட் டாய கல்வி சட்டத்தின்படி ஒரு வகுப்பில் 30மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். கூடுதலாக ஆசிரியர்கள் இருந்தால் மிகை ஆசிரியர்கள் என கணக்கிடப்பட்டது. இந்நிலை நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்தது. கிராமப்புற பள் ளி களில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கட் டாய கல்வி சட்டத்தின்படி ஒரு வகுப்பில் 30மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். கூடுதலாக ஆசிரியர்கள் இருந்தால் மிகை ஆசிரியர்கள் என கணக்கிடப்பட்டது. இந்நிலை நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்தது. கிராமப்புற பள் ளி களில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
சென்னையில் 16ம் தேதி 1,494 பேருக்கு கலந்தாய்வு தமிழாசிரியர்களுக்கு வந்தது சோதனை
கல்வி உரிமைச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும்
பல மாவட்டங்களில் 1,494 தமிழ் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அனைத்து
குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றியது. இதுபற்றி மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்றுடன், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப்-2 நிலையில், 3,631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.
மூன்று புதிய துணைவேந்தர்கள் நியமனம்.
மூன்று பல்கலைக்கழகங்களில், காலியாக இருந்த துணைவேந்தர் பணியிடங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.
Friday, July 13, 2012
Thursday, July 12, 2012
பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர் மாணவர் விகிதம் ஏற்றவாறு பணியிடங்களை நிரப்ப உத்தரவு.
அரசாணை எண். 231 பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2012
TAMILNADU GOVERNMENT GAZETTE - TEACHER STUDENT RATIO & NORMS AND STANDARDS FOR A SCHOOL
Wednesday, July 11, 2012
தொடக்கக்கல்வி - 2012 - 2013 ஆம் ஆண்டுக்குரிய உபரியாக உள்ள பணியிடங்கள் - பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கால அட்டவணை வெளியிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012 , நாள். 11.07.2012
பள்ளிக்கல்வித்துறை - அனைத்து வகை அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் மற்றும் அரசு உதவிப்பெரும் பள்ளிகளில் 2012 - 2013 CCE நடைமுறைப்படுத்தி ஆணையிடப்பட்டது - திட்டங்கள் சிறப்பாக அமைய பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
வேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை
கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை
நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி தினத்தை, பள்ளி வேலை
நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி ,
கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை
15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இரு தினங்களில்,
ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
டி.இ.டி. தேர்வு: ரோல் நம்பர், பெயர் தெரிவித்தால் எழுதலாம்
நாளை நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு,
ஹால் டிக்கெட் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், தங்களது ரோல் நம்பர், பெயர்
தெரிவித்து தேர்வு எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேது
ராமவர்மா தெரிவித்தார்.
இதுகுறித்து
மதுரையில் அவர் கூறியதாவது: ஜூலை 12ல் நடக்கும் டி.இ.டி., தேர்வு தொடர்பாக
அனைத்து மாவட்டங்களிலும் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் தேர்வு மைய முதன்மை
கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.
கேள்வித்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., ஷீட்டுகள் ஒவ்வொரு மையத்திலும் 10
சதவீதம் அதிகமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.
ஜுலை 12ல் டி.இ.டி., தேர்வு: 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழக அரசு நடத்தும், முதல் ஆசிரியர் தகுதித்
தேர்வு, 12ம் தேதி நடக்கிறது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
1,027 மையங்களில், தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு
வீச்சில் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக, டி.ஆர்.பி., தலைவர்
சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
ஆசிரியர் பட்டயப் படிப்பில் 15,000 இடங்கள் காலி
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டின்கீழ், 17 ஆயிரம் இடங்கள் இருந்தும்,
வெறும், 1,998 பேர் மட்டுமே, இந்த பயிற்சியில் சேர்ந்தனர்.
ஆசிரியர்
பயிற்சி படிப்பிற்கு வேலை வாய்ப்பு இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாகவே,
இந்த படிப்பில் சேர்வோர் எண்ணிக்கை, சரிந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை
நடந்தது.
Tuesday, July 10, 2012
ONLINE APPLICCATIONS INVITED FOR THE POST OF V.A.O (1870 POSTS)
List of Current Notifications | ||||||
S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 |
26/2012
09.07.2012
|
Village Administrative Officer in T.N. Ministerial Service |
09.07.2012 | 10.08.2012 | 30.09.2012 |
Monday, July 9, 2012
ஆசிரியர் தகுதித்தேர்வு - 12.07.2012 அன்று வேலூர் மாவட்ட உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 12.07.2012 அன்று விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 12.07.2012 வியாழக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளதாலும், தேர்வு மையங்களாக பெரும்பாலான பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பள்ளிக்கல்விதுறையின் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் இதனை ஈடுசெய்யும் பொருட்டு பள்ளிகளுக்கு 21.07.2012 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை
தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,)
குறித்து, மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
என்பதில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை
பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து
வருகிறது.
தகவல்
பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச்
செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.
Sunday, July 8, 2012
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வுக்கான விடைகள் வெளியீடு
Tentative Answer Keys
Sl.No.
|
Post & Subject Name
|
(Posts included in Group-IV Services)
(Date of Examination:07.07.2012 FN)
|
|
1
|
|
2
|
|
3
|
|
Note: Right
Answer has been tick marked in the respective choices for each question.
Representations if any shall be sent so as to reach the Commission's Office
within 7 days. Representations received after 14th July 2012 will receive no
attention.
|
தனியார் மெட்ரிக் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
உசிலம்பட்டி தேனி சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும்
உசிலம்பட்டி தேனி சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும்
புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
"தி யுனைட்டட் இந்தியா
இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு
செய்யப்பட்டுள்ளது..புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது
தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.இதில்,
சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை,
அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க
வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த
விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு
நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.
ஒரே நாள் இரு தேர்வு: ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் குழப்பம்
ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கு
சமூக அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. அதே நாளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க
உள்ளதால் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், ஆசிரியர் பட்டயப்
பயிற்சி வகுப்புகளை (D.TED) நடத்தி ஆசிரியர் பணிக்கான தகுதி பட்டத்தை வழங்கி
வருகிறது. 2 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பின் முதலாம் ஆண்டில் சமூக அறிவியல் பாடம்
இடம்பெற்றுள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டில் பொதுவான தேர்வு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக
நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டிலேயே (2012-13) இதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில்
சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய வழிமுறைகளை இந்த ஆண்டு
அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
முதலில் மாநிலம் முழுவதும் அனைத்து
பிளஸ் 2 மறுமதிப்பீடு: இன்று புதிய மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ் 2 விடைத் தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில்
மதிப்பெண் மாறுபாடு உள்ள மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை
(ஜூலை 8) வழங்கப்படுகிறது.
மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்த
சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாறுதல் உள்ளவர்களும் பழைய மதிப்பெண் சான்றிதழுடன்
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
Saturday, July 7, 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஒரு லட்சம் விண்ணப்பம் தள்ளுபடி
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(டி.இ.டி.,)
விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்த காரணத்திற்காக, ஒரு லட்சம்
விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, இணை இயக்குனர் சேதுராமவர்மா
கூறினார்.
தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட்
கிடைக்காதவர்களிடம் இருந்து திண்டுக்கல்லில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை
கல்வி அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார்.
Subscribe to:
Posts (Atom)