Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 31, 2015

    ஓய்வூதியம் என்பது சலுகையா?

    இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

    ♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.

    பகுதிநேர ஆசிரியர்கள் கடந்து வந்த பாதை இதுவரை,,.

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாணை 177ன்படி SSA மூலம் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது. இ.சி.எஸ் முறையில் ஊதியம், பிடித்தம் இல்லாமல் முழு தொகுப்பூதியம் போன்ற அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி  மேலும் அரசாணை 186ன்படி தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் நான்கு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு  போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.

    சென்னையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

    1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.
    2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல்   மாநாடு.

    இந்த வார வல்லமையாளர்!

    Chokkalingam Lவல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும்,

    ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி

    அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.

    366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

    இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இடமாறுதல் கலந்தாய்வில் குளறுபடி?

    அரசுக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் பணியிட மாறுதல் அளிக்க மறுத்துவிட்டது என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 31-இல் வரை நடைபெறுகிறது.

    கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

    செய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.

    600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்றுவிடும்

    அங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.

    செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு

    தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

    Friday, October 30, 2015

    CPS SUBSCRIBERS DETAILS IN INDIA


    10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

    நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.

    நாக் அங்கீகாரம் பெற குறுக்கு வழி; கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

    மத்திய அரசின் தேசிய அளவீடு மற்றும் ஆய்வுக் குழுவான, நாக் அங்கீகாரம் பெற, ஏஜன்டுகளை அணுக வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை

    சூப்பர் ஸ்பெஷாலிட்டி கோர்ஸ் எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், இட ஒதுக்கீடு தேவையில்லை என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதி செய்துஉள்ளது.

    வாக்காளர் சரிபார்ப்பு பணி'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம்

    வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலை இணையதளம் முடக்கம்

    தமிழக இன்ஜினியரிங் மாணவர்களின் கனவு பல்கலையான, அண்ணா பல்கலையின் இணையதளம், ஈரான் நாட்டினரால், 'ஹேக்கிங்' செய்யப்பட்டுள்ளது.

    தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை!!

    பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். 

    குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

    குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

    பள்ளிக்கல்வி - RMSA - அக்டோபர் 2015 மாதத்திற்கான சம்பளம் வழங்கும் அதிகாரம் - 1591 முதுகலை ஆசிரியர் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய ஆணை

    ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'

    பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.

    தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

    சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

    திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

    தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது; 

    ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

    முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடந்துள்ளது. 

    கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

    தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.

    SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி; கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்?

    தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது. 

    'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு

    'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது; 

    Thursday, October 29, 2015

    தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

    தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

    தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை

    பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

    தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. வட்டார தலைவர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். செயலாளர் எம்.ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம்.குமரேசன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி மாணவர்களுக்கு டி.இ.ஓ., ஆலோசனை

    அவலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., ஆலோசனை வழங்கினார். அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திண்டிவனம் டி.இ.ஓ., ஞானஜோதி ஆய்வு மேற்கொண்டார்.

    கல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.

    அண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    அரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் திறன் வளர்ப்பை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறை தான் அமலில் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே இப்பயிற்சி, போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.

    தெருவில் கிரிக்கெட் ஆடும் மாணவர்கள் தேசிய அணிக்கு தேர்வாகலாம்

    தெருக்கள் மற்றும் மைதானங்களில், ஆக்ரோஷமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் மாணவர்களை, தேசிய அணியில் இடம் பெற செய்ய, மத்திய அரசு புதிய, ஆன்லைன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    அரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

    சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்

    சித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது. தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைகால தடை பெற கோரி தொடரப்பட்ட வழக்கில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு மாறுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு

    ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தர வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும்; விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

    இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

    எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

    இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., 'கீட்' மற்றும் 'கேட்' தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன. 

    குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்

    முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.

    வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்

    பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும். இதற்காக, வினாத்தாள் வங்கி புத்தகம் மற்றும் கணித ஆசிரியர்களின் சிறப்பு தயாரிப்பான, 'கம் புக்' என்ற முக்கிய கணித வினா புத்தகம், பள்ளி கல்வித் துறையின் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யப்படும். 

    Tuesday, October 27, 2015

    காலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்?

    'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    மனிதர்களுக்கு ஓரறிவே!

    மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது ஓரறிவே என டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    தீர்வு இதுவல்ல!

    மத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.

    மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விருது

    பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் சிறப்பு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. கமிஷனர் கதிரவன் தலைமை வகித்தார். தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்தனர்.

    வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி

    பள்ளி, கல்லுாரிகளில் அரசு சார்பிலான சில உதவி தொகைகள், கல்விக் கடன் பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம். அரசு வழங்கும் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் நலத்திட்டம் போன்றவை பெறவும் இச்சான்றிதழ் தேவை. இதற்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

    இ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.

    கல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு

    சிக்கண்ணா அரசு கல்லூரியில், புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில், 14 பாடப்பிரிவுகளில், 2,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பனியன் தொழில் நகர மாக திருப்பூர் இருப்பதால், ஆடை வடிவமைப்பு, பேஷன் சார்ந்த படிப்புக்கு, பலரும் (காஸ்ட்யூம் டிசைனிங் அண்டு பேஷன் - சி.டி.எப்.,) ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடிட்டிங் படிக்கவும் பலரிடடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த படிப்பு படிக்கவும் விரும்புகின்றனர். 

    மருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம்!

    கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தகுதிகளும் இருந்தும், கேப்பர் மலையில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி துவங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றுவாறு பல்வேறு வகையான நோய்களும் உருவெடுத்து வருகிறது.

    110வது விதியில் அறிவித்த பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை

    சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளை துவக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

    மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

    ஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு

    மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.

    நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

    அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

    கலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு; ஆசிரியர்கள் புகார்

    பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள்   தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இ.பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

    ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பரில் உயிர் வாழ் சான்றிதழை தங்களது வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்லிடப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.

    வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

    வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின்  இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

    1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன. 

    பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு

    கன்னியாகுமரி மாவட்டத்தில், பிளஸ் 2, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊக்கப்பரிசுத் தொகைகளை, மாவட்ட   ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.

    கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

    என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை.

    Monday, October 26, 2015

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் ஏமாற்றமே - பிரெடரிக் ஏங்கெல்ஸ்


    பள்ளிக்கல்வி - பொது மாறுதல் கணினி பயிற்றுநர் / தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுநர் - மாறுதல் விண்ணப்பங்கள் - பரிசீலினை செய்யப்பட்ட விவரம் - சார்பு

    தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

    மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது? 

    சென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு: அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில், திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்குகிறது

    சென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு வரும் 26, 27 மற்றும் 30ம் தேதிகளில் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 2015-2016ம் கல்வி ஆண்டில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும், இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களிலிருந்து  பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.

    தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தல்

    இலவச மடிக்கணினி திருடுபோன பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.

    சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரிபார்க்கலாம்.

    மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

    நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

    பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

    பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். தீபாவளி பண்டிகை, நவ., 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கியது. பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால், பெரும்பாலானோர், 6ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.

    பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

    அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.

    சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

    ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது.

    பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?

    வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார். 

    அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.

    Saturday, October 24, 2015

    முகரம் பண்டிகை திருநாள் வாழ்த்துகள்

    அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய இதயம் கனிந்த மகரம் நல்வாழ்த்துகள்...       இரா.தாஸ்  பொதுச்செயலாளர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

    திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

    பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.

    பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு! அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. 

    அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

    குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.  

    குரூப் - 2 ஏ: விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா?

    தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.

    தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்

    தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

    தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. 

    2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி

    போட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை பயிற்சி அளித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    Thursday, October 22, 2015

    அக இ - 2015-16ம் ஆண்டிற்கு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "EVERYDAY SCIENCE AND SIMPLE PROJECTS ON CCE" மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "PREPARATION FOR COMPETITATIVE AND TALENT SEARCH EXAMINATION" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்

    புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 4.20 லட்சம் பேர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

    கல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

    அக இ - புதியதாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 02.11.2015 முதல் 06.11.2015 வரையிலும், உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.11.2015 முதல் 20.11.2015 வரையிலும் மாவட்ட அளவில் நடத்த உள்ளது.

    எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

    * வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

    * துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா?

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.  கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு

    பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

    சித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: 4 நாட்கள் நடக்கிறது

    சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர் வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர்.

    அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவிபெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான கணக்குத்தாட்களை பதிவிறக்கம் செயது கொள்ளலாம்

    போனஸ் சம்பள உச்சவரம்பு உயர்வு: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

    தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    Wednesday, October 21, 2015

    வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

    குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.

    Tuesday, October 20, 2015

    பள்ளிக்கல்வி - சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்துதல் சார்பு

    30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் விருது

    உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும், என 30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் 2015 விருது வழங்கி மதுரை முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு விரைவில் மாற்றம்

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறையில், அடுத்த ஆண்டில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசு துறையில், உயர்ந்த அந்தஸ்துள்ள, ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட, 24 வகையான பதவிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    விடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

    பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.

    தலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்

    பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கழகத்தின் மாநில பொதுக்குழு, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் கூடியது. அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்

    ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். 

    'மொகரம்' விடுமுறை திடீர் மாற்றம்

    மொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.

    CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

    மாணவர்களுக்குஓவிய போட்டி

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும்.

    Monday, October 19, 2015

    பொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு

    பள்ளி மாணவர்களின் ஷூ அரசு முடிவில் மாற்றம்

    நிதி பற்றாக்குறையினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், லெதர் ஷூக்களுக்கு பதிலாக, செமி கேன்வாஸ் ஷூக்கள் வழங்க, அரசு தீர்மானித்துள்ளது.

    காலி பணியிடங்கள் குறித்து ஆன்லைனில் அறியலாம்

    அரசு மற்றும் சார்பு நிறுவனங்களின் பணியிடங்களை, வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிக மார்க் வாங்க ரூ.2.50 போதும்! ஆர்.எம்.எஸ்.ஏ., வினோத முடிவு

    சிறப்பு பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு, பயணச்செலவாக ஒரு நாளைக்கு ரூ.2.50 மட்டுமே ஒதுக்கி, அதிர்ச்சி தந்துள்ளது ஆர்.எம்.எஸ்.ஏ., பொதுத் தேர்வில் மாநில அளவில், மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டம்தோறும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்) சிறப்பு பயிற்சி தருகிறது. கடந்த தேர்வில், 450 முதல், 470 மதிப்பெண் வரை பெற்றுள்ள மாணவ, மாணவியரை சனி மற்றும் விடுமுறை தினங்களில் வரவழைத்து, காலை முதல் மாலை வரை சிறப்பு பயிற்சி அளிப்பதே திட்டம்.

    பள்ளிகளில் நூடுல்ஸ், சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை

    நுாடுல்ஸ், சிப்ஸ் போன்ற, ஜங்க் புட் எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    அசுர வேகத்தில் அரசு பணிகள்!

    மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதில் குழப்பம்! அரசின் அறிவிப்பு இல்லாமல் நடவடிக்கை

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கும், லேப்-டாப் வழங்குவதற்கு, அறிவிப்பு இல்லாமல் அரசின் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.

    ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்

    போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களை பணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரவல் முடிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் நெட் தேர்வு

    பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 2 தேர்வும், டிச., 27ல், ஒரே நாளில் நடக்க உள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 1934 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.

    இப்பள்ளியில்  பின்தங்கிய சமுதாய   மாணவர்களின் கல்வி மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். 

    Sunday, October 18, 2015

    அடுத்தக் கட்ட போராட்டம் அக்.31ல் 'ஜாக்டோ' முடிவு

    சென்னை: 'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது.

    பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்

    பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)

    பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)

    அரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள்.

    பொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை. அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. 

    தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கமிட்டி அமைக்க வேண்டும்; மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

    பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    அதன் விவரம்:
    * பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும் 
    * அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்

    ஐந்து மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்

    தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 85 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 13,000 நிரந்தர உதவிப் பேராசிரியர், பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் பற்றாக்குறையால், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

    கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    அரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு

    அரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி

    அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    Saturday, October 17, 2015

    மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா?

    வரும் வெள்ளி அன்று   அறிவிக்கப்பட்டுள்ள மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இளைஞர் எழுச்சி தின அறிவியல் போட்டியில் வினிதா முதலிடம்

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, நடந்த இளைஞர் எழுச்சிதின அறிவியல் செய்முறை போட்டியில், பெரியகுளம் அரசு பள்ளி மாணவி வினிதா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவி ஆர்.வினிதா.

    எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

    நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.

    6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்

    விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை  எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    பி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு

    இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா?

    இரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி இளைஞர்களிடையே எழுந்துள்ளது.

    துண்டிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் : டிராய் அதிரடி உத்தரவு


    வாடிக்கையாளர்கள் செல்போனில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு (கால் டிராப்) விடுகிறது. இப்படி துண்டிக்கப்படும் இணைப்புக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக டிராய்க்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இந்நிலையில் டிராய், நேற்று வெளியிட் ட உத்தரவில் கூறியிருப்பதாவது;

    ஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி; மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்

    ‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?” ‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.

    செல்போன் சேவையில குறைபாடு அபராதத்தை 2 லட்சமாக உயர்த்தியது டிராய்

    செல்போன் நிறுவனங்களின் சேவையில் குறைபாடு இருந்தால், அவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 2 லட்சமாக இந்திய தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ‘டிராய்’ உயர்த்தியுள்ளது.

    விரைவில் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி


    2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

    Friday, October 16, 2015

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு ஆணை வெளியீடு

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு


    ஒசூர் பேடரப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


    அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமை தங்கினார். அப்துல் கலாம் தொடர்பான பேச்சு போட்டி,கவிதை போட்டி, ஓவிய போட்டி,கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆசிரியர் போராட்டத்தால் அகவிலைப்படி தாமதம்

    அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும். 

    பதவி உயர்வு எப்போது? முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு

    முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.

    ரூ.40,000 சம்பளத்தில் வேலை: அறநிலைய துறை அறிவிப்பு

    நகைகளை சரிபார்க்கும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:அறநிலைய துறையில், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சரிபார்க்கவும், மதிப்பிடவும் குழு இருக்கிறது. இந்தக் குழுவில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, நான்கு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த வேலைக்கு, இந்து மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, 28 - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

    அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன் மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினர்.

    மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

    மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.

    அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. 

    கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்


    சமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    Thursday, October 15, 2015

    இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு

    4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

    முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி

    தூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பி.எஸ்.சி / எம்.எஸ்.சி படித்து முடித்த குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவமுள்ள செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு புதுடெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

    650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

    DSE - BT TO PG ASST PROMOTION ADDL. PANEL CLICK HERE... 

    2015-16ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து, முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.

    இன்று "இளைஞர் எழுச்சி நாள்" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

    இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

    சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு

    பள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து விதிமுறை மீறல், வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். 

    கலை தேர்வுக்கு குறைந்தது மவுசு

    அரசு தேர்வுத் துறை சார்பில், கலைப்பாட தொழில்நுட்ப தேர்வு, ஆண்டு தோறும் நடத்தப்படும். தென் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் இந்த தேர்வு எழுத தமிழகத்துக்கு வருவர்.எட்டாவது படித்தவர் இளநிலை (லோயர்), 10ம் வகுப்பு முடித்தவர் உயர்நிலை (ஹையர்) சான்றிதழ் தேர்வு எழுதுவர் ஓவியம், தையல், அச்சுக்கலை, சிற்பம், விவசாயம், கைத்தறி போன்ற பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு

    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

    Wednesday, October 14, 2015

    அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

    இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

    நிதித்துறை கடிதம் 55891/Paycell /2015-1 Date: 08.10.15 பற்றிய ஓர் பார்வை.

    நிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பான கடிதம் 55891/Paycell /2015-1, Date: 08.10.2015ல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தில் பத்தி 4 - ன் இறுதியில் for examining pay anomalies in the ensuing pay commission / committee என்று உள்ளது. (ensuing என்ற வார்த்தைக்கு வருகிற, வரப்போகிற என்ற பொருள் அகராதியில் உள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை

    செமஸ்டர் தேர்வுக்கு முன், பல கல்லுாரி களில் மாதிரித் தேர்வு துவங்கி உள்ளது; சில கல்லுாரிகளில், நாளை துவங்குகிறது. மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான போராட்டம், பஸ் டே, கல்லுாரி மாணவர்களிடையே மோதல், பஸ்சில் தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுத, கல்லுாரி கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது.

    10 வயது இந்திய சிறுவன் ஜாவா தேர்வில் சாதனை!

    சாப்ட்வேர் டெவலப்பர் எழுதும் ஜாவா தேர்வை, ஆமதாபாத்தில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ரூனில் ஷா, 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான். அமெரிக்காவை சேர்ந்த ஆரக்கிள் பல்கலைக்கழகம் ஆன்லைனில் நடத்தும் ஜாவா ஸ்டான்டர்ட் எடிஷன் 6 புரோகிராமர் தேர்வை கடந்த செப்டம்பர் 22ம் தேதி எழுதிய ரூனில் ஷா, தனது முதல் முயற்சியிலேயே முழுமதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

    கேம்பஸ் இன்டர்வியூ1,200 பேருக்கு வேலை

    அண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி., மாணவர்கள், 1,200 பேருக்கு, கேம்பஸ் இன்டர்வியூ என்ற வளாக நேர்காணல் மூலம், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    'சிவில் சர்வீசஸ்' தேர்வு: தமிழகம் பின்னடைவு

    'சிவில் சர்வீசஸ்' தேர்வில், பொதுப் பாடத்தில் தமிழக மாணவர்கள் பின்தங்கியதால், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகையான பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 23ல், முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.

    விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு

    வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு? தினமணி

    மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.

    அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

    திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வுக்கு மாணவர் சேர்க்கை: அரசு பயிற்சி மையம் அறிவிப்பு

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் (Preliminary) வெற்றி பெற்றவர்கள், தமிழக அரசின் கீழ் இயங்கும் பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

    வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை!

    வங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அக்., 2 - காந்தி ஜெயந்தி; 4 - ஞாயிற்றுக்கிழமை; 10 - இரண்டாவது சனிக்கிழமை; 11, 18 - ஞாயிற்றுக்கிழமை; 21 - ஆயுத பூஜை; 22 - விஜயதசமி; 23 - மொகரம்; 24 - நான்காவது சனிக்கிழமை; 25 - ஞாயிற்றுக்கிழமை.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை. இதனால், நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும்.

    ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

    அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

    பார்வையற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளிக்கல்வித்துறை - பள்ளிகளில் இறை வழிப்பாட்டு கூட்டத்தில் மாணவ / மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க உத்தரவு

    Tuesday, October 13, 2015

    நிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பாக கடிதம்

    18 வயதில் சிஏ பட்டம்: இந்திய இளைஞர் சாதனை

    தணிக்கையாளர் படிப்பான சிஏ படிப்பை முடித்து தொழில் முறையில் அதை பயிற்சி செய்வதற்கு ராம்குமார் ராமன் என்கிற 18 வயது இளைஞர் தயாராகியுள்ளார். 18 வயது நிரம்பிய இவர் துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதில் தணிக்கையாளராக பயிற்சி செய்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார் இவர். தணிக்கையாளர் பட்டத்தை பெறுவதற்கு 3 ஆண்டுகள் தொழில் ரீதியில் பணிபுரிய வேண்டும்.

    இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு

    இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:

    தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - ஜனவரி 2016 இளங்கலை கல்வியியல்(பி.எட்.,) விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு

    தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

    தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    1,863 பதவிகளுக்கு டிச.,27ல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

    அரசு துறைகளில், 'குரூப் - 2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மருந்து கடைகள் நாளை 'ஸ்டிரைக்': இன்றே மருந்து வாங்குங்க...

    நாடு முழுவதும், மருந்து வணிகர்கள் நாளை, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பொதுமக்கள், தேவையான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 'ஆன் - லைன்' வழி மருந்து விற்பனையை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'இது, ஏற்கனவே உள்ள மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். தரமற்ற, போலி மருந்துகள் வரத்துக்கும் வழி வகுக்கும்' எனக்கூறி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

    வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்

    வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

    தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், சென்னை தொழிலாளர் கமிஷனர் அலுவலக வாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர்.

    அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்: சென்னை கருத்தரங்கில் தீர்மானம்

    பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விடைத்தாள்களை,திருத்தும் மையங்களுக்கு அனுப்ப புதிய வழிமுறைகளை கையாள உத்தரவு

    தேர்வு மையத்தில் இருந்து, திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    விடைத்தாள்களை,திருத்தும் மையங்களுக்கு அனுப்ப புதிய வழிமுறைகளை கையாள உத்தரவு

    தேர்வு மையத்தில் இருந்து, திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

    அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

    அரசு பள்ளி தேர்ச்சி உயர புதிய அமைப்பு முயற்சி

    அரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இணைந்து, 'தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஓய்வுபெற்ற அலுவலர்கள்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவர், ஓய்வுபெற்ற இயக்குனர் பழனிவேலு.

    தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பட்டய சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

    மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, உதவியாளர் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

    திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை

    "திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் மற்றும் சுப்ரமணியர் தேர் திருவிழா வெள்ளோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழக அரசின் நிலை ஆணை எண் 154 பொது (பல்வகை) துறை நாள் 3.9.2009-ல் அனுமதி அளிக்கப்பட்டபடி, திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்க இன்று முதல் சிறப்பு கூட்டம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்குவது தொடர்பான சிறப்புக் கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(அக்.13) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    Monday, October 12, 2015

    அகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மர்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான "பைல்"ஓரங்கட்டப்பட்டது

    தினமலர் டீக்கடை பெஞ்ச் --ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான, 'பைலை' ஓரங்கட்டி வச்சுட்டாங்களாம்ங்க...'' என்ற அந்தோணிசாமியைப் பார்த்து, விக்கித்து நின்ற அண்ணாச்சி, ''என்ன வே சொல்லுதீரு... பெரிய அளவுல போராட்டம் நடத்தி, பள்ளிகளை ஸ்தம்பிக்க வச்சதெல்லாம் அவ்வளவுதானா...'' எனக் கேட்டார்.

    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு 11.10.2015 அன்று மரக்கன்று நடு விழா

    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு 11.10.2015 அன்று மரக்கன்று நடு  விழாவில் சேலம் சன்னியாசி குண்டு கிராமத்தில் 1008 மரக்கன்றுகள் நடப்பட்டும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திரு.S.மணிவண்ணன், மாவட்ட தலைவர் வரவேற்புரை வழங்கினார். வெ.குமரேசன், மாநில செயலாளர் தலைமையில், திரு புகழ் மாநில துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் விழாவை துவக்கி வைத்துப் பேசினார்கள்.

    நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான பிரம்மாண்ட பேச்சுப் போட்டியினை நடத்த உள்ளது

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா. மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு.

    மார்ச்2015-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியா்கள், தாங்கள் கற்பித்த பாடங்களில் நூற்றுக்கு நூறு, இருநுறுக்கு இருநூறு, மதிப்பெண் பெற்றுத்தந்த ஆசிரியா்கள், மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவ, மாணவிகளை சாதனை பெறச்செய்த உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள். ஆகியோருக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

    அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா?

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .

    நேரடி மாணவர் சேர்க்கையில் முறைகேடா சர்ச்சையில் மதுரை காமராஜ் பல்கலை

    மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், நேரடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு புகார்களால் மே மாதம் தேர்வு முடிவு அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    சிறந்த ஆசிரியர்களுக்கு தேச கட்டமைப்பாளர் விருது

    ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசக் கட்டமைப்பாளர் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின.

    பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நவ., 3 முதல் இடமாறுதல் கலந்தாய்வு

    தமிழகத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான கல்வித்தரத்தை மேம்படுத்தவும், கல்வி வழங்குவதை உறுதி செய்யவும், அனைவருக்கும் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்புப் பாட ஆசிரியர்களாக, 16 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.