தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், எட்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இளம்கலை, முதுகலை பட்டப் படிப்புகள், முதுகலை பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களையும், முதலிடம் பெற்ற, 138 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், கவர்னர் ரோசய்யா வழங்கினார்.
துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் வரவேற்றார். உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா முன்னிலை வகித்தார். விழாவில், பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது:10 நாட்களுக்குள்...பல்கலை மானியக் குழுவின், '12பி' விதியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையை இணைக்க, விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ் இணைக்கப்படும் கல்வி நிலையத்துக்கு, மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும்.
எனவே, இந்தப் பல்கலையை அந்த விதியின் கீழ் இணைக்க, பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்து விட்டன. 10 நாட்களுக்குள், இத்தகுதி இப்பல்கலைக் கழகத்துக்கு அளிக்கப்படும்.
திறந்தநிலை பல்கலைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, விரைவில், தொலைதுார கல்வி கவுன்சில் உருவாக்கப்படும்; இதற்கு மத்திய
அமைச்சரவை அனுமதி அளித்து உள்ளது. இதன் மூலம், நேரடி கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், தொலைதுார கல்வி மாணவர்களுக்கும் அளிக்கப்படும்.
1,000 பேராசிரியர்கள் மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், இணைய வழி கல்வியை, சர்வதேச கல்வித் தரத்துக்கு உயர்த்தும் திட்டம்
உள்ளது. இதற்காக, வெளிநாடுகளிலிருந்து, 1,000 பேராசிரியர்கள் இந்தியாவுக்கு வர உள்ளனர். தற்போதைய தேர்வு முறைகள் கவலை அளிப்பதாக உள்ளன. மதிப்பெண்களை வாரி வழங்கி, உயர்கல்வியின் மதிப்பை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டம் பெற்றவர்கள், உரிய திறன்மிக்கவர்களாக இருப்பதில்லை. இதனால், வேலை கிடைப்பதும் அரிதாகிறது. எனவே, தரமான கல்வியை வழங்க, கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment