அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.
இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:அக்.,26ல் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை- 2க்கு மாவட்டத்திற்குள் மாறுதல்; அக்.,27ல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இணையதளம் மூலம் அக்.,30ல் நடக்கிறது. மனமொத்த மாறுதல் கோரும் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு அக்.,௩௦ல் மாறுதல் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment