வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது, வேலை தேடுவோர்க்கு அவ்வப்போது வெளி வரும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், மத்திய, மாநில அரசு சார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பாட வாரியான பயிற்சி ஏடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள், தொழில் நெறிவழிகாட்டுதல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தன்னார்வ பயிலும் வட்டத்தால் போட்டித் தேர்வுகளுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அளிக்கப்படும் குறுகியகால திறன் எய்தும் பயிற்சிகள் குறித்த விவரங்கள்,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை தேடுவோர், மனுதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment