உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும், என 30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் 2015 விருது வழங்கி மதுரை முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.
அவர் பேசியதாவது:
சமுதாய வளர்ச்சி என்ற நோக்கத்தில் தினமலர் வழங்கும் லட்சிய ஆசிரியர் விருது என்பது ஆசிரியர்களுக்கு மாநில, மத்திய அரசுகள் வழங்கும் விருதுகள் வரிசையில், ஒரு மைல்கல். மனிதர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைப்பதற்கு காரணமான கல்வி செல்வத்தை அளிப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் வாழும் சகாப்தம். உலகத்தை இயக்கும் ஆற்றல், சக்தி அவர்களிடம் தான் உள்ளது. மனிதனின் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் அவனை சாதனையாளனாக மாற்றுவது ஆசிரியர்கள் தான். அவர்கள் இருக்கும் இடம் புனிதம் பெறும். அவர்கள் நினைத்தால் அனைத்தையும் சாதிக்க முடியும்.
மறைந்த அப்துல் கலாம் விஞ்ஞானி, ஜனாதிபதி என பன்முக தன்மை கொண்டிருந்தாலும் அவரது எண்ணம் முழுவதும் இருந்த உணர்வு ஆசிரியர் என்பது தான். கற்பித்தல் மூலம் தரமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர் புரிந்து படிக்கும் கல்வி தான், சமுதாய வளர்ச்சிக்கு உதவும். அந்த கல்வியை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் அனுபவித்து கற்பிக்க வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை வளர்த்துக்கொண்டு, கற்பிக்கும் திறனில் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவர வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட, குடும்ப சூழல்களை அறிந்து, அன்பு செலுத்தி, வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். இரண்டாவது பெற்றோர் என்ற பெருமை ஆசிரியர்களுக்கு தான் உண்டு.
பாடங்களில் உள்ளதை மட்டும் கற்றுக்கொடுக்காமல், அதையும் தாண்டி, நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல், புவி வெப்பமடைதல், விஞ்ஞான வளர்ச்சி, பாதுகாப்பு போன்ற மக்கள் முன் உள்ள பல்வேறு சவால்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையிலான கல்வியை கற்பிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. இதை புரிந்து பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும், என்றார்.
விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள்
ரா.அன்னப்பூரணி, விகாசா பள்ளி, மதுரை.
ம.பரமேஸ்வரி, மெப்கோ ஸ்லெங்க் மழலையர் பள்ளி, திருமங்கலம்.
க.சரவணன், டாக்டர் டி.திருஞானம் துவக்கப்பள்ளி, மதுரை.
மு.மகேந்திரபாபு, அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனுார்.
கே.ஜெயலதா, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குறிச்சிபட்டி, மேலுார்.
கா.ராமகிருஷ்ணன், வித்யோதயா பள்ளி, தோப்புப்பட்டி
ப.ஸ்டெல்லா ஜோஸ்பின் ராணி, ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
வ.பரிமளாதேவி, நா.சு.வி.விசாலா ஆரம்பப்பள்ளி, பட்டிவீரன்பட்டி.
எஸ்.வனிதா, அரசு மேல்நிலைப் பள்ளி, பழநிச்சாலை, திண்டுக்கல்.
ச.மணிமேகலா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சக்கையநாயக்கனுார், நிலக்கோட்டை.
ரா.உமாராணி, இந்து ஆரம்பப்பள்ளி, பாப்பையநாயக்கர்பட்டி.
ஜெ.மீனாட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊஞ்சாம்பட்டி.
தி.ராஜலட்சுமி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஓடைப்பட்டி.
ச.அந்தோணி ஆரோக்கியசெல்வி, அரசு மேல்நிலைப் பள்ளி, உச்சிப்புளி.
ரா.பாஸ்கரன், அரசு உயர்நிலைப் பள்ளி, கமுதக்குடி.
ச.சொக்கநாதன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தேத்தங்கால்.
பி.ஜெயலெட்சுமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்னப்பாலம், பாம்பன்.
து.ஜீனத்பேகம், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை.
தமிழ்மதி நாகராஜன், ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, புதுவயல்.
லெ.சொக்கலிங்கம். சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை.
பொ.அமுதா, நகர்மன்ற தொடக்கப்பள்ளி, காரைக்குடி.
மு. இந்திராதேவி, தி லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.
லுா. அந்தோணிசாமி, தே.பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.
ச.கலையரசி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கான்சாபுரம்.
ப. கருணைதாஸ், அரசு உயர்நிலைப் பள்ளி, நாராயணபுரம்.
ச.ரமேஷ், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கோப்பை நாயக்கன்பட்டி.
சி. இப்ராகிம், ஹாஜி பி.செய்யது முகமது மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
மா.சுரேஷ், அரிமா பதின்ம மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார்.
1 comment:
My hearty wishes
Post a Comment