மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாணை 177ன்படி SSA மூலம் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது. இ.சி.எஸ் முறையில் ஊதியம், பிடித்தம் இல்லாமல் முழு தொகுப்பூதியம் போன்ற அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி மேலும் அரசாணை 186ன்படி தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் நான்கு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 16549 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணி நிரவலை கைவிட்டு பொது மாறுதல் நடத்தி அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
3) பணியமர்த்தப்பட்ட மார்ச் 2012முதல் இதுவரை மே-2012, மே-2013, மே-2014, மே-2015 ஆகிய 4 மாதங்களின் ஊதியம் வழங்கப்படாததால் அதனை கணக்கிட்டு அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
4) பணியில் இருக்கும்போது மரணமடைந்தவர்களுக்கு அரசின் உதவிகளை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற உன்னத பாதையில் வலம் வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பரிந்துரை செய்திட வேண்டுகிறேன். கோரிக்கைகளுடன் சி.செந்தில்குமார்,9487257203, பகுதிநேர கணினி ஆசிரியர்.
2 comments:
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போது போட்டித் தேர்வுக்கு பின்பற்றப்பட்ட பாடத்திட்டங்களை தெரிவித்து உதவிடும் படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
எனது சங்கத்தை சார்ந்த நண்பர் சரியான நீதிமன்ற தீர்ப்பை கூறிஉள்ளார் இது இந்த ஊடகங்களுக்கு தெரியாது அதுகள் என்னமோ நமக்கு அரசு பிச்சை போடுவது போல பொது மக்களுக்கும் விளக்குகிறது இந்த புதிய பென்ஷன் கொண்டு வந்தது பழைய பென்ஷன் உள்ள அதிகார நயிகளும் அரசியல் நயிகளும் ஒவ்வொரு அரசு ஊழியரும் பழைய பென்சனை கொண்டு என்று சொல்லும் உறுதியான அரசியலுக்கு ஓட்டு போட வேண்டும் நன்றி
Post a Comment