Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 30, 2013

    தொப்பை குறைய எளிய பயிற்சி..!

    இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

    அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

    குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

    முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு.

    எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி

    எஸ்.எம்.எஸ். கட்டணம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!

    வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

    இந்திய மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டால் பட்டம் பறிபோகும்

    தமிழகத்தைச் சேர்ந்த 7,000 மாணவர், வெளிநாடுகளில் படித்து வரும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவதில் மோசடியில் ஈடுபட்டால், அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கல்விச்சோலையான சிறை: பயிலும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

    மத்திய சிறையில் திறந்தநிலைப் பல்கலைகள் மூலம் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது; படிப்பில் கவனம் செலுத்துவதால் கைதிகளின் மனஅழுத்தம் குறைந்து, வாழ்வில் வெற்றி அடைய தூண்டுகோலாக அமைகிறது.

    குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்

    தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.

    தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு

    தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.

    அரசு பள்ளி என்ற தாழ்வான எண்ணம் வேண்டாம்

    தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,'' என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.

    இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி, ஐகோர்ட் உத்த்தரவு

    எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்ககீடு

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி : நிறுவன இயக்குநர் பள்ளிகளில் ஆய்வு

    அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி

    அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.

    சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது

    சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு, நாளை துவங்கி ஒரு மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில், 2,000 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

    Friday, November 29, 2013

    ஆசிரியர்கள் 12வது நாளாக உண்ணாவிரதம்: அனைவரையும் நிரந்தரம் செய்ய கோரிக்கை

    12வது நாளாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமைத் தொடர்ந்தது. கல்வித் தகுதி உடையவர்களை மட்டும் நிரந்தரம் செய்ய முதல்வர் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், விதிகளை தளர்த்தி அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா..?

    drinking-hot-waterஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘வெந்நீர்’. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.

    மத்திய அரசுக்கு இணையான சம்பளம் தமிழக ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

    மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்ட ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,

    தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

    "இரட்டை அர்த்த' தலைமை ஆசிரியர்? : கிராமத்து பள்ளியில் "ஈகோ' யுத்தம்

    சிவகங்கை அருகே ஒக்குபட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், இரட்டை அர்த்தத்தில் பேசி பாடம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. மலம்பட்டி அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 85 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் உட்பட, நான்கு ஆசிரியர்கள் உள்ளனர்.

    தீ தடுப்பு மற்றும் மனோதத்துவம் பற்றிய விழிப்புணர்வு

    Displaying IMG_2378.JPG
    Displaying IMG_2345.JPG

    தேவகோட்டை ஸ்ரீ அண்ணாமலையார் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனோதத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வம் வரவேற்றார். உதவி தொடக்ககல்வி அலுவலர் பால்ராஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ மற்றும் அவரது குழுவினர் மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும்  தீ தடுப்பு குறித்து அறிவுரைகள் வழங்கி, செயல்முறை விளக்கம் செய்து

    IGNOU - B.Ed., ENTRANCE TEST, 2013 RESULTS RELEASED

    டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள் இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

    சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோல் பங்க்குகள், கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள் இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும். நாளை மறுநாள் முதல், அதாவது டிசம்பர் 1-ம் தேதி முதல் இதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

    "அனைவரின் வாழ்வையும் தீர்மானிக்கும் 3 ஆண்டுகள்"

    "ஒவ்வொருவரின், 15 முதல் 17 வயது வரையிலான காலக்கட்டம், வாழ்வில் முக்கியமான காலக்கட்டம். இதில், நாம் ஜெயித்தால், நம் வாழ்வை, நாம் நிர்ணயிக்கலாம்; இல்லையெனில், அடுத்தவர் தீ்ர்மானிப்பர்" என பேராசிரியர், பர்வீன் சுல்தானா பேசினார்.

    தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி - ஐகோர்ட் உத்தரவு

    "யோகா செய்தால் மனமும் உடலும் திடப்படும்"

    "தேர்வு காலங்களில், தினமும் காலை, யோகா செய்யுங்கள்; இதனால், மனமும், உடலும் திடப்படும்" என மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் கூறினர்.

    உதவி பேராசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி

    உதவி பேராசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் எம்.பில்., படிப்பு அனுபவத்திற்கு, மதிப்பெண் அளிப்பதில் முரண்பாடு நிலவுவதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க சிறப்பு கவனம்

    "தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" என அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் வலியுறுத்தினார்.

    டி.டி., மருத்துவ கல்லூரியை அரசு எடுக்குமா?

    திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும், டி.டி., மருத்துவக் கல்லூரியை, அரசு வசம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் - ஜெனரல் தெரிவித்தார்.

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய TATAவின் கருத்தரங்கம்

    image description

    சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு?

    சென்னையில், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதமே கணக்கெடுப்பு பணியை துவங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு

    Thursday, November 28, 2013

    அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் சஸ்பண்ட் - நாளிதழ் செய்தி

    புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு

    பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக

    தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

    தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்

    அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 12 வரை 68 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

    "படிப்பை தள்ளி வைக்காதீர்; அதுதான் முதல் எதிரி"

    "என்னால் முடியும் என மனப்பூர்வமாக நம்புகிறவர்கள் தான், உலகில் வெற்றியடைந்துள்ளனர். நம்பிக்கை வந்துவிட்டால், உழைப்பு தானாக வரும். "நாளை படிக்கலாம்" என தள்ளி வைப்பதுதான் முதல் விரோதி. அதை விட்டொழியுங்கள்; வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்" என பட்டிமன்ற பேச்சாளரும் கல்வியாளருமான, பாரதி பாஸ்கர் பேசினார்.

    மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்

    ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.

    சம்பளம், தீபாவளி போனஸ் கட் தொண்டாமுத்தூர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

    கோவை தொண்டாமுத்தூர் ஊரா ட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் வர வேண்டிய சம்பளமும் தீபாவளி போனசும் கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 

    "பெண் கல்வியால் தலைமுறையே வளர்ச்சி அடையும்"

    "ஒரு வீட்டில் ஆண் அதிகமாக படித்தால், அந்த குடும்பம் மட்டுமே, வளர்ச்சி அடையும்; ஆனால்,அதே வீட்டில் பெண் அதிகம் படித்தால், அந்த தலைமுறையே வளர்ச்சி பெறும்,&'&' என, கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.

    ஆசிரியைகளின் பிரச்சினையால் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் சரஸ்வதி. அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் மீனலோசனி என்கிற மீனாட்சி. இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நாசா செல்லும் வாய்ப்பு!

    2013ம் ஆண்டு மாநில கல்வி வாரிய தேர்வுகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சென்று, 10 நாட்கள் செலவிடுவதற்கான திட்டத்தை அசாம் மாநில அரசு இரண்டாவது முறை செயல்படுத்துகிறது.

    நேர்முகத் தேர்வு தேதியை வெளியிட்டது யு.பி.எஸ்.சி.,

    மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை லிமிடெட் துறையில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, நேர்முகத் தேர்வு விபரத்தை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

    பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

    அரசு பள்ளிகளில் 2000 தமிழாசிரியர்கள் இல்லை

    அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் 2700, மேனிலைப் பள்ளிகள் 2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர்.

    உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்

    தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில் எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?

    முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு 28.11.2013 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

    புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு

    பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.

    பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்" ஆனா ஆசிரியர்கள், கல்வி இயக்குநர் அதிர்ச்சி

    வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்

    பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப் பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது.

    மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்

    ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.

    வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்

    2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.

    Wednesday, November 27, 2013

    ஏன் வேண்டும் பான் கார்டு?

    கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.

    மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!

    சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.

    அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?

    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன.

    தொடக்கக் கல்வி - வழக்கறிஞ்சரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.

    தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனு தாக்கல்

    தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் கோரிக்கை மனு மீது மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்

    பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசாணையின் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

    அண்ணாமலைப் பல்கலை: இனி அரசு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு. விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கத்தயார்

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

    பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் தொடர்பான கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் சிறப்பு முகாம் சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள் 6 முதல் 10 மற்றும் மேல்நிலை பிரிவுகள் 11, 12 வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.

    தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி

    "சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.

    கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி

    கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதி தேவை: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

    மதுரையில் வாகனங்களை கண்காணித்து சோதனையிடும்படி கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வடக்கு ஆர்.டி.ஓ., ஆய்வாளர்கள் ஆகியோர் நகரின் பல பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்குவதில் டி.ஆர்.பி., கட்டுப்பாடு: 50 சதவீதம் பேர் பாதிப்பு

    "மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு மதிப்பெண் கிடையாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு அனுபவத்திற்கான மதிப்பெண் முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பி.ஏ. ஆங்கில தொடர்பியலும், பி.ஏ. ஆங்கிலமும் ஒன்றா? ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை

    பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சாரணையை துவக்கியது.

    பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

    பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

    பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

    குரூப் 2 தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா

    "டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வில் ஆயிரம் பேருக்கு மேல், எழுதும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊழியரின்றி பணிகள் தேக்கம்

    பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளர் உட்பட 5 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

    Tuesday, November 26, 2013

    அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை

    தன் தாயருடன் ராஜேஸ்வரிஅண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அவரது தற்போதைய முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவரைப் பாராட்டி கெளரவித்தது.

    அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

    பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

    பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு

    நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

    பணியிடம் நிரப்பாத பள்ளிக் கல்வித்துறை: தலைமையாசிரியர்கள் கண்டனம்


    பணப்பலன்கள் வழங்குவதில் தாமதம், கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை

    லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.

    லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.

    "வளரிளம் மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.

    2 டி.இ.ஓ.,களுக்கு பதவி உயர்வு

    அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்

    சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க 29-ந் தேதி கடைசிநாள்

    உதவிப் பேராசிரியர் தேர்வுப் பனி நேர்மையாக நடக்குமா, இரண்டரை ஆண்டுகளுக்கு பின் டி.ஆர்.பி சுறுசுறுப்பு

    குரூப் 2 தேர்வு வினாத்தாளை வெளியிட்ட சென்னை வருமானவரித்துறை அதிகாரி கைது

    222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை

    இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.

    பெண் ஆசிரியர்கள் வட்டார மாநாடு

    Monday, November 25, 2013

    காலி தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம்

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி தெரிந்து கொள்வோமா!

    இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது

    இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    25.11.2013 அன்று இறுதி கட்ட விசாரணையை எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு?

    இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி வருகிற 25.11.2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

    பாரதிதாசன் பல்கலை: முடிவுகள் வெளியீடு

    தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்

    விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு

    சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்

    சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.

    ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம்: கூட்டுக்குழு முடிவு

    தமிழகத்தில் உள்ள 7 ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன.தமிழக தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் (டிட்டோ ஜாட்), சென்னையில் நடந்தது.

    உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாளை சட்டப்பேரவை முன் மறியல் போராட்டம்

    காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக அதன் நிர்வாகிகள் மு.சீத்தாராமன், பிரேமதாசன் கூறியது:

    மாணவர்களின் மொபைல் போனில் ஆபாச வீடியோ, எதிர்காலம் சீரழியும் அபாயம்

    அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை

    அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Sunday, November 24, 2013

    புதிய UNION OF TEACHERS ORGANIZATION (UTO) இயக்க கூட்டமைப்பு உதயம்

    இன்று திருச்சி மாநகரில்  ( UTO ) UNION OF TEACHERS  ORGANIZATION  இயக்க கூட்டமைப்பு உதயம். இடைநிலை ஆசிரியர்களின்  கோரிக்கைகளுக்குகாக மட்டுமே உருவாக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் ஹோட்டல் அருண், மத்திய பேருந்து நிலையம் அருகில் திருச்சியில் நடைபெற்று முடிந்தது .கூட்டத்தில், தமிழக ஆசிரியர் மன்றம் (TAM), ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR), தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA), தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் (TAAS), ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (AMS) ஆகிய 5 சங்கங்கள் பங்குபெற்றன.

    ஆலிவ் எண்ணெய் நமக்கு எப்படி எல்லாம் பயன்படுகிறது !!

    நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை.

    ஐநாவில் பேசிய பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி

    1453288_516430598452474_1660979791_nஅமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…

    இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

    bananas-for-sleepதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

    அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பாவலர்.க.மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பட்டினிப்போராட்டம்

    தனிப்பட்ட கருத்துகள் என்ற பெயரில் போராட்டங்கள் திசை திருப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

    பாதிக்கப்பட்டவர்களை ஆதரித்துக் குரல் எழுப்புவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் உடன் எழுகின்றது.எத்தனைக் கோரிக்கைகள் இருந்தாலும் அத்தனையையும் வென்றெடுக்கும் மன உறுதி நமக்கு இல்லாமல் போனதேன்? இதை மட்டுமே முன் நிறுத்த வேண்டும். மற்றதெல்லாம் பின்தள்ளப்பட வேண்டும் என்பதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே ஆசிரியர்களின் ஒற்றுமையை வலியுறுத்திடாமல் இயக்கங்களின் வலிமைகளை வலியுறுத்தியதால் தான் வெற்றியை தவறவிட்டு தவித்துக் கொண்டிருக்கிறோம். 

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்

    தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

    தொடக்கக் கல்வி - வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள உத்தரவு

    தினமலருக்கு பதில் பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல்

    கல்வியாளர்களின் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். முதலில் மாலையில் தலைமையாசிரியர் கூட்டங்கள் என்பதே அடிப்படையில் தவறானது. மாலை 4 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டங்களை நடத்தும் ஒரு சில அலுவலர்கள் தேவையில்லாமல் கூட்டத்தை ஜவ்வாக இழுத்து 6 அல்லது 7 மணி வரை நடத்துகின்றனர்.

    பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு: கல்வியாளர்கள் கடும் அதிருப்தி

    "பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் ஹெச்.எம்.,கள், பள்ளிக்கு, "டிமிக்கி' கொடுப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வித்துறை அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

    முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவேபடுகிறது. தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை.

    32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை

    செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.

    பணியாளர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு

    தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர் மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

    வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும் மாணவப்பருவத்திலேதான்.

    பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு

    பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

    உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி

    மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    Saturday, November 23, 2013

    தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு

    ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2012 ஆகஸ்ட் முதல் 3 முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 

    அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு

    எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

    ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்

    இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரே ஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

    பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா 2013 - 23.11.2013 அன்று காலை 9.00 மணி அளவில் மணி நாயுடு மகாலில் நடைப்பெற்றது

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைத் தீர்க்குமா இந்த டிடோஜாக் போராட்டம் ??? ஏமாற்றம் தரும் டிட்டோ ஜாக் தீர்மானங்கள்

    ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என விரும்பிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுள் நானும் ஒருவன். இந்த விருப்பம் நிறைவேறியதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு அம்ச கோரிக்கையை மையப்படுத்தி ஒரு மிகப்பெரிய போராட்டம் நிகழப்போகிறது என்ற அளவில்லா சந்தோசத்துடன் டிட்டோ ஜாக் கூட்டம் 9ந் தேதி நிறைவடைந்தது. 

    மாநகராட்சி பள்ளி 10, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சுண்டல் மன்றக்கூட்டத்தில் தீர்மானம்

    மாநகராட்சி பள்ளியில் 10, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல் வழங்கப்படும் என்றும், சென்னையில் இயங்கும் 200 அம்மா உணவகங்களில் தலா 3 நவீன கேமராக்கள் வீதம் 600 கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    IGNOU HALL TICKET DEC-2013 EXAMS

    ஆசிரியர் பயிற்சி முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை

    ஆசிரியர் பயிற்சி முடிவுகள் ஆறு மாதமாக வெளியாகாததால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமச்சீர்கல்வி திட்டம் கொண்டு வந்த பிறகும் சிலபஸ் மாற்றாமல் பழைய பாடதிட்டத்தின் படியே தொடர்ந்து பாடம் நடத்தி வருவதாக கூறினர்.

    National Means Cum Merit scholarship Examination (NMMS) Dec - 2012 Result

    நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!

     நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!1) ஏழ்மையிலும் நேர்மை
    2) கோபத்திலும் பொறுமை
    3) தோல்வியிலும் விடாமுயற்சி
    4) வறுமையிலும் உதவிசெய்யும்
    … மனம்
    5) துன்பத்திலும் துணிவு
    6) செலவத்தி;லும் எளிமை
    7) பதவியிலும் பணிவு

    வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:

    ரூசா திட்டம் - 12 மாநிலங்களுக்கு உயர்கல்விக்கென தலா 120 கோடி!

    ரூசா திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த, 12 மாநிலங்களுக்கு தலா 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சுயமாக தொழில் தொடங்குங்கள் பட்டதாரிகளே

    தமிழகக் கல்விக்கூடங்களிலிருந்து ஆண்டுதோறும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். இன்றைக்கு இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையில், பெரும்பான்மையானவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடிவதில்லை, அதே போன்று பலருக்கும் வேலையும் கிடைப்பதில்லை, என்பதே உண்மை.

    நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது, பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன்

    கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கோவை தீத்திபாளையம், அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களை நேற்று முன்தினம், அங்குள்ள கோவிலுக்கு சுற்றுலா அழைத்து சென்று திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்து 7ம் வகுப்பு மாணவி ரஞ்சிதா உயிரிழந்தார். விபத்து குறித்து மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், ஏழு ஆசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

    ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை?

    கரூர் அருகே பசுபதிபாளயைம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ராகினி, 13. இவர், வடக்கு பசுபதிபாளயைம் பகுதியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ராகினி, அன்றிரவு, 7.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

    தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

    Friday, November 22, 2013

    பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

    2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

    ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பள்ளிக்கல்வி - உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

    இடைநிலை ஆசிரியர்களுக்காக புதிய ஆசிரியர் அணி உதயம்

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் மற்றும் புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய  ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த  ஓர் அணியில் திரள இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைந்துள்ள புதிய  ஆசிரியர் அணி அன்போடு அழைப்பு.

    இடம்: அருண் ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்), திருச்சி மாநகரம்

    நாள்: ஞாயிற்று க்கிழமை ( 24.11.2013 ) மாலை 5 மணி

    பங்கு பெரும் ஆசிரியர் அமைப்புகள் 

    1)தமிழக ஆசிரியர் மன்றம் (TAM )

    2)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR -TESTF )

    மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்!

    மாணவர்களின் விவரங்களைத் திரட்டுவதற்கு தலைமையாசிரியர்கள் பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாறிச் சென்ற மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களது விவரங்களை புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவு செய்ய பொருள் செலவும், கால விரயமும் ஏற்படுவதுடன் ஆரம்பக் கல்வியின் தரத்தையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை கவனகக் கலை இளவல் திருக்குறள் திலீபனுடன் மாணவர்கள் திடீர் சந்திப்பு

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு  கவனகக் கலை இளவல் –திருக்குறள் திலீபன் வருகை புரிந்தார்,இவருடன் பள்ளி மாணவ மாணவிகள் சந்தித்து பல்வேறு கவனகக் கலை        பற்றியும், நினைவாற்றல் குறித்தும் விளக்கம் கேட்டனர்,முன்னதாக திலீபன் சிறப்புரையாற்றினார்.

    பள்ளிக்கல்வி - PTA மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்ஆசிரியர்கள் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது 7 மாதங்கள் வரை இதில் எது முன்னரோ அதுவரை பணியாற்றலாம் மேலும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆணை

    மாணவி பலியான விவகாரம்: உதவி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

    கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    3,625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் தயார்: பதவி உயர்வு அறிவிக்காதது ஏன்?

    தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும் பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

    அரையாண்டு தேர்வு 10-ஆம் வகுப்பு டிசம்பர் 12 முதலும், பிளஸ் 2 டிசம்பர் 10 முதலும் தொடங்குகிறது

    அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

    பத்தாம் வகுப்பு அட்டவணை

    டிசம்பர் 12 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

    டிசம்பர் 13 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

    டிசம்பர் 16 - திங்கள்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

    டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

    பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது

    தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    பள்ளிகளில் ஆசிரியர் காலியிட விபரங்கள் சேகரிப்பு

    அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.

    அரசு பள்ளி மாணவர் 6,700 பேர் உதவித்தொகை பெற தேர்வு

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தற்போது 9ம் வகுப்பு பயிலும் 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!

    மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும்.

    Thursday, November 21, 2013

    முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை பயன்படுத்த வேண்டுமா?

    முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை பயன்படுத்த வேண்டுமா ?தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை.

    பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்

    மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு

    அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பாதிப்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்களால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை

    தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

    மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (2009) அமல்படுத்தியது. இதன்படி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தகுதித் தேர்வு நடத்துகிறது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியாகியுள்ளன.

    வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள்: சரிபார்க்க அழைப்பு

    "வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ஆன்-லைன் மூலம் உயிர்பதிவேட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சரி பார்த்துக்கொள்ளலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    தகுதி தேர்வில் வெற்றிபெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை

    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை சான்றிதழ் சரிப்பார்ப்பு

    டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

    கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது.

    போலி சான்றிதழ் விவகாரம் சூடு பிடிக்கிறது, கல்வி அதிகாரிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு

    கல்வித்துறை முன் அனுமதி இன்றி சுற்றுலா அழைத்து சென்ற போது விபத்தில் மாணவி பலி - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

    14 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர் போதுமா? தமிழக அரசுக்கு கேள்வி

    எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும், 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமா?' என, தமிழக அரசிடம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின், மாநில பொதுச்செயலர், தேவி செல்வம், வெளியிட்ட அறிக்கை:

    மதுரையில் தொடருது மாணவர்களின் தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

    வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர். மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர், அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.

    தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்

    தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

    தொலைதூரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பதாரர்கள் கவலை

    உதவிப் பேராசிரியர் பணியிட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 25ம் தேதி முதல் சென்னையில் நடக்க உள்ள நிலையில் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குரூப்-1 தேர்வுக்கான வயதுவரம்பு உயர்வு? - தமிழக அரசு தீவிர பரிசீலனை

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இந்தத் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Wednesday, November 20, 2013

    பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

    ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை (லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு

    பள்ளிக்கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டிட்டோஜாக் அமைப்பின் இன்றைய முக்கிய தீர்மானங்கள்

    பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

    டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு

    டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர் நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீடாக 7 சங்கங்களும் இணைந்து தங்களுக்குண்டான மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து செயலாற்றுவதென முடிவாற்றப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற மாவட்டத்தின் சங்கத்தை சார்ந்த மாவட்டசெயலாளர் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தொடர்பாளராக( CO-ORDINATOR) செயல் படுவார்கள்.

    மாவட்டப்பங்கீடு விவரம்

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

    நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்

    டிட்டோஜாக் தற்போதய நிலவரம்

    இன்றைய முதல் அமர்வில் ஒவ்வொரு இயக்கமும் தலா 4 மாவட்டங்களை பிரித்துக்கொள்வது எனவும் எஞ்சியுள்ள மாவட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிபோன்ற இயக்கஙகள் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது..முதலில் மாவட்ட அமைப்பு ஏற்படுத்த முடிவு எட்டப்பட்டது.

    இன்றைய டிடோஜாக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது

    இன்று காலை 11.30.க்கு தொடங்கிய டிட்டோஜாக் கூட்டம் இன்னும் தொடர்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மாவட்டந்தோறும் ஆயுத்தக் கூட்டங்கள் நடத்தும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சங்கத்திற்கு 4 மாவட்டங்கள் என பிரித்து மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்க முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    சி.பி.எஸ்.இ., தேர்வெழுதுவோர் எண்ணிக்கை இந்தாண்டு அதிகம்

    சி.பி.எஸ்.இ., வாரிய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி CBSE பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. அதில் 10ம் வகுப்பு தேர்வை மட்டும் சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 10% அதிகம்.

    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் நீக்கம், ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவு

    குரூப் -2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு

    டி.என்.பி.எஸ்.இ குரூப் 2 தேர்வுக்கான ஹால்டிக்கேட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக்கு வந்த மொட்டை கடிதத்தால் போலீசில் சிக்கிய போலி ஆசிரியர்கள்

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பணியாற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது .இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டையில் குப்பன், ராஜா, முருகன் ஆகிய 3 போலி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு

    30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

    மூன்று மாதங்களுக்கு ரூ.2,500: பரிதவிப்பில் பட்டதாரிகள்

    "கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு" என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு, 3 மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் சாட்சியாக உள்ளது.

    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்

    குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்" என பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா தெரிவித்தார்.

    புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்திய அரசு நிதி வழங்காததால் தொய்வு

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம்

    ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டி.இ.டி.,) தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கலாகும் வழக்குகளை கண்காணிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், புதிய கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை: "கவுன்சிலிங்" கனவில் ஆசிரியர்கள்

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல், "பொறுப்பு" ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

    மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, "அப்ளைடு மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்" ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்திய பள்ளிகளில் பணியாற்ற சீன ஆசிரியர்கள் தயார்

    இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது. கடந்த 2011-12-ம் ஆண்டிலிருந்து சீனாவுடனான வர்த்தம் அதிகரித்துள்ளதையடு்த்து தலைநகர் புதுடில்லியில் சி.பி.எஸ்.சி மற்றும் தனியார் பள்ளி நிறுவனங்களில் சீன மொழிகளை கற்போரி்ன் எண்ணிக்கை அதி்கரித்து வருகிறது.

    Tuesday, November 19, 2013

    விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

    பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத 499 ஆசிரிய நியமனங்களை உடனடியாக இரத்து செய்ய உத்தரவு

    ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் ஆர்ப்பாட்டம், முதல்வர் தீர்வு காண வலியுறுத்தல்

    ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு
    செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
                                                                                 

    10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

    தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது. இதை உடனடியாக அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு வகுப்பு

    மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சியை அதிகரிக்க அரையாண்டு தேர்வு விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.

    அரசு பள்ளிகளுக்கு உதவ முன் வர வேண்டும்: தொண்டு நிறுவனங்களுக்கு சி.இ.ஓ.,அழைப்பு

    தேர்ச்சியில் பின்தங்கிய அரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவிகள் செய்ய தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டுமென விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் கூறினார்.

    அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

    "அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

    மத்திய பல்கலை துணைவேந்தர் நியமனம் - இனி கட்-ஆப் வயது உண்டு

    இனிமேல், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மத்திய பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவை, மனிதவளத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    1,093 உதவி பேராசிரியர் பணியிடம்: 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

    தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது.

    453 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அப்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணி மூப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் கடந்த ஜூன் மாதம் சென்னை மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

    20 ஆண்டு பணியாற்றிய ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தர முடியாது

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன் உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை.

    சி.பி.எஸ்.இ.: 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-இல் தொடக்கம்

    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் வழக்கம்போல் வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் எப்போது நடைபெறும் என மாணவர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.