Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 30, 2016

    அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து


    அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யபட்டுள்ளது.

    சம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் 'கவுன்ட்டர்'

    நாளை சம்பள நாள் என்பதால், மாத சம்பளம் பெறுவோரின் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க மத்திய அரசு, வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதால், மாத சம்பளம் பெறுவோருக்கு நாளை சம்பளம் கைக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என தகவல் வெளியானது. இதனால் மாத சம்பளம் பெறும் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் கலக்கம் அடைந்தனர். ஆனால், அது போன்று எந்த சிரமும் ஏற்படாது, வழக்கம் போல் சம்பளம் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும், வங்கிகள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ

    500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஒரு சில நாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் டிசம்பர் மாதத் துவக்கத்தில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் இன்று மாலை முதலே கன மழை பெய்ய வாய்ப்பு

    வங்கக் கடலில்‌ ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைமை‌ச் செயலாளர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ’ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளுங்கள்’!

    ’மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர், சர்வதேச அளவில் பணியாற்ற தயாராகும் வகையில், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என, ’தினமலர்’ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை கூறியுள்ளார்.

    வங்கக் கடலில் நாடா புயல் உருவானது; டிச., 2ம் தேதி கரையை கடக்கிறது: வானிலை ஆய்வு மையம்

    வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் புயலாக உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது.  இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வேலை வேண்டுமா? பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

    பாரத ஸ்டேட் வங்கி, அக்யூசிஷன் ரிலேஷன்ஷிப் மேலாளர், ரிலேஷன்ஷிப் மேலாளர், மண்டலத் தலைமை அலுவலர், முதலீட்டு ஆலோசகர் உள்ளிட்ட ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் பணிக்கு 103 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் அமையும் என பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிக்கை தெரிவிக்கிறது.

    இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு

    அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

    ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள்
    மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாதம் தோறும் கடைசி தேதி அன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். மேலும் ஒரு சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதத்தின் கடைசி தினத்தில் சம்பளம் வழங்கப்படும். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கப்படும்.

    போக்குவரத்து ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்

    அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாய் மட்டும் ரொக்கமாக வழங்க, போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும், 22 ஆயிரத்து, 400 ஊழியர்கள் பயனடைவர். அவர்கள், ஒரு வாரத்திற்கு, ஏ.டி.எம்.,களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்

    செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது

    'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது. 

    புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

    1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
    2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

    ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

    வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.

    Tuesday, November 29, 2016

    மா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்விற்கான அனைத்து பாட வினாத்தாள்கள்

    மகப்பேறு விடுப்பு எடுப்போருக்கு மீண்டும் அதே இடத்தில் பணி

    vijayakanthமகப்பேறு விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்கள், விடுப்பு முடிந்து வரும்போது அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலேயே மீண்டும் பணியமர்த்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

    மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற "பான்' அவசியம்

    மின்னணு வாழ்வுச் சான்றிதழை இணைய சேவை மையங்களில் பெறும்போது, நிரந்தர கணக்கு எண் அவசியம் (பான் அட்டை எண்) என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு

    சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்பு எடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும். 

    இலவச ’பஸ் பாஸ்’ இல்லையா?; மாணவர்களுக்கு அழைப்பு

    ’இலவச, ’பஸ் பாஸ்’ வாங்காத மாணவர்கள், உடனடியாக வாங்கிக் கொள்ளலாம்’ என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. 

    பாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகாரம் விஸ்வரூபம்

    பாரதியார் பல்கலை பணி நியமனத்தில், ஊழல் புகார் எழுந்துள்ள சூழலில், பதிவாளர் பொறுப்பு வகித்த மோகன், திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். கோவை பாரதியார் பல்கலை பதிவாளராக இருந்த செந்தில்வாசன், பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக, ஏப்ரலில் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஜூலை, 29 முதல், வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் மோகன், பதிவாளர் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றார்.

    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்

    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. வேலூரில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.சிவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சோ.சம்பத் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

    உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    மேம்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்து செயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில் பேணுதல் அவசியம்.

    பள்ளிக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்கு ஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன் நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும் தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
    அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
    தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம் புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
    இதற்காக பள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளை பதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்த கருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
    அதேபோல புற மதிப்பீட்டாளர்
    களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன் மூலம் புற மதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினை உருவாக்கலாம்.
    அவ்வாறு மதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும் மூன்று என பள்ளிகள் தர அந்தஸ்து (கிரேடு) வழங்கப்
    படுகிறது.
    முதல் தரம் அந்தஸ்து என்றால் சுமார், 2-வது சாதாரணம், 3-வது தர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்த பள்ளி ஆகும்.
    2016-2017 ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    அரசுப் பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக கல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான தரத்துடன் கல்வி வழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.


    தரங்கள் மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக் காரணிகள்

    1. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின் சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.

    2. ஆசிரியர்கள் கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல் அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகும்.

    3. கற்போரின் வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின் வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின் முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.

    4. புதிய ஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின் வருகை, செயல் இலக்குகளை வரையறுத்து பொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.

    5. தொலைநோக்குச் சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மையாகும்.

    6. உள்ளடங்கிய கற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

    7. பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளி முன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயம கற்றல் வளம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

    அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

    அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன. புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

    கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50% மறைத்து சிக்கினால் 85 சதவீதம் வரி: மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்

    கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்கு கேட்கப்படும், அதற்கு முறையான பதில் அளிக்காவிட்டால் அபராதத்துடன் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

    Monday, November 28, 2016

    20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்!

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை பெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    SCERT - CCE WORKSHEET - MARK SHEET FORMAT

    பயிற்சித்தாள் தேர்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு!

    மேல்நிலை வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தும் பயிற்சித்தாள் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வந்து, நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அறிய, எட்டாம் வகுப்பு வரை, பயிற்சித்தாள் கொண்டு, தினசரி தேர்வு நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது. இத்தேர்வு, இம்மாதம் 15ம் தேதியில் இருந்து, பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.

    அரசு தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்விற்கான (NMMS) பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

    தொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு 2016 - விண்ணப்பங்கள் வரவேற்பது சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள்

    பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை - அடிப்படை விதிகள் - தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 - ஊதியத்துடன் கூடிய அரைச்சம்பள விடுப்பு (6 மாதங்கள் அதிகபட்சமாக) - வழிமுறைகள் வெளியீடு

    தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

    ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.ரூ.50, ரூ.100 நோட்டுகள்கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடிஅறிவித்தார். மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது.

    பள்ளிக்கல்வி - பணிப்பதிவேட்டினை டிஜிட்டல் மயமாக்குதல் சார்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் செயல்முறைகள்

    வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

    தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

    மத்திய அரசின் அடுத்த அதிரடி???

    E-Property Pass Book (EPPB)
    அதாவது *மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்* 
    மத்திய அரசு, மேற்படி புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப் போகிறது. வரும் 01/04/2017 முதல் 31/03/2018 வரை, அடுத்த ஒரு வருடத்திற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து *நிலபுல* சொத்துக்களின் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்போவதால், அடுத்த ஒரு வருடத்திற்கு, யாரும் எந்த ஒரு சொத்துக்களையும் விற்கவோ வாங்கவோ முடியாது. 

    பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'

    பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில்,  ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.

    ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை

    ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருவள்ளூர் மாவட்ட மாநாடு, பொன்னேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நடந்த மாநாட்டில், கதிரவன் முன்னிலை வகித்தார்.

    சம்பளத்தை ரொக்கமாக வழங்க முடிவு

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

    கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்

    மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், இந்த ஆண்டும், ஜெர்மன் மொழி கற்றுத்தர உத்தரவிடப் பட்டு உள்ளது. கே.வி., பள்ளிகளில், மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது. ஆங்கிலம் முதல் மொழி; ஹிந்தி இரண்டாம் மொழி. பிராந்திய மொழி அல்லது வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்று, மூன்றாம் மொழியாக கற்றுத் தரப்படுகிறது.

    அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

    தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள் அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது. 

    அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

    அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசை உள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்பு விழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

    'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

    உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

    உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை

    பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போளிவாக்கம், சத்திரம் பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ளது போளிவாக்கம், சத்திரம் கிராமங்கள். இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மணவாளநகர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.

    வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்

    வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று கையெழுத்திட்டு வாழ்வுச் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் செலுத்த வேண்டும்.

    ஜே.இ.இ. முதன்மை தேர்வு: சென்னை ஐஐடி நடத்துகிறது

    2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) முதன்மைத் தேர்வை சென்னை ஐஐடி நடத்த உள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 2, 8, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், முதன்மைத் தேர்வு 2017-ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    Tuesday, November 22, 2016

    மா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - நகல் எடுத்து வகுப்பறையில்பயன்படுத்தக்கூடாது என இயக்குனர் உத்தரவு


    பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகிதாச்சார அடிப்படையில் பதவிஉயர்வு - விவரங்கள் கோரி உத்தரவு

    CCE WORKSHEET - II ENGLISH ANSWER KEYS


    இளைஞர் வேலை வாய்ப்பு முகாம்; நவ.28ல் நடக்கிறது

    படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், 28ம் தேதி காலை 10:00 மணிக்கு, தேனி கம்மவார் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடக்கிறது. முகாமை டு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்துகிறது. மதுரை, சேலம், திருச்சி, சென்னை, கோவை போன்ற பகுதிகளில் இருந்து வேலை வாய்ப்பு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

    தேர்வு நேரத்தை அதிகரிக்க பார்வை குறைந்த மாணவன் மனு!

    ’பார்வை குறைந்த பள்ளி மாணவன், தனக்கு பள்ளி மாதிரித் தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நேரத்தை அதிகரிக்க வேண்டும்’ என, திண்டுக்கல் கலெக்டர் வினயிடம் மனு அளித்தார். பழநி பச்சலநாயக்கன்பட்டியை சேர்ந்த அம்மாபட்டி மகன் அப்பாத்துரை, 18. அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன். இவருக்கு கடந்த ஓராண்டாக பார்வை குறைபாடு உள்ளது. 

    ஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி

    அனைவருக்கும் கல்வி இயக்க ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் 630 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 6 முதல் 8 வரை பாடம் கற்பிக்கும் 410 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் ’ஆங்கில திறன் வளர்த்தல்’ பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    மாணவர் சேகரிப்பு விவரம் அவசர கதியில் ஆலோசனை!

    மாணவர் விவரம் சேகரிப்பு தொடர்பாக, திருப்பூரில் நேற்று அவசர கதியில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கல்வி மேம்பாட்டு தொகுப்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை இயக்குனர் (பணியாளர் தொகுப்பு) சேதுராமன் வர்மா, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மாணவர் விவரம் சேகரிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

    ’புரிந்து படித்து எழுதினால் முழுமதிப்பெண்’

    ’புரிந்து படித்து, தெளிவாக எழுதினால் தேர்வில் முழு மதிப்பெண்களை பெறலாம்,’ என பொள்ளாச்சியில் நடந்த ’தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர் களுக்கு ’டிப்ஸ்’ வழங்கினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தமிழ்வழி மாணவர்களுக்கான ’தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.

    மாணவர்கள் ’எமிஸ்’ எண் மூலம் பொதுத் தேர்வு பட்டியல் தயாரிப்பு!

    ‘தமிழகத்தில் இந்தாண்டு கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு (எமிஸ்) மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத் தேர்வு எண்கள் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரிக்கப்படும்,‘ என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.

    பொறியியல் மாணவர்களுக்கு சம வாய்ப்பளிக்க வழக்கு!

    பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பிற்கான தேர்வில், அனைத்து பொறியியல் கல்லுாரிகளின் மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. கரூர் பாப்பான்காடு ஜவஹர்லால் நேரு தாக்கல் செய்த பொதுநல மனு: 

    Monday, November 21, 2016

    செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது கிராஸ் மேஜர், சேம் மேஜர் பிரச்னை

    முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் கிராஸ் மேஜர், சேம் மேஜர் பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் டி.ஆர்.பி., தேர்வு மூலமாகவும், மீதம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. 

    எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ’நீட்’ தேர்வு எப்போது?

    மருத்துவ படிப்புக்கான, ’நீட்’ தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்’ என, தகவல்கள் வெளியாகி உள்ளன. ’எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, ’நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம்’ என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

    மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

    சம்பளப்பணம் ரொக்கமாகக் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ஊழியர்கள்!!!

    கறுப்புப் பணத்தை ஒழிக்க, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி.. முன்னெச்சரிக்கை இல்லாமல் பிரதமர் இவ்வாறு திடீர் அறிவிப்பு செய்வாரா, நிச்சயம் மக்கள் அனைவருக்கும் புதிய பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் முன்பணம்!!!

    மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 8–ந் தேதி 500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்திய அரசின் குருப்–சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

    20 சதவீதம் இடைக்கால நிதி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

    'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைபடுத்தும் வரை இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் இச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

    ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உரிய மாற்றங்கள் செய்வேன்: மோடி உறுதி

    ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மறுஆய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன் என்று மோடி உறுதி அளித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஆக்ராவில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

    செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப் பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதிய இ-மின்னணு பதிவேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு சேர்ந்தது முதல் அவர்கள் ஓய்வு பெறும் வரையில் அவர்கள் பெறும் ஊதியம், நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, பணி வரன்முறை, பணி நிரந்தரம், பதவி உயர்வு, பணிக் காலத்தில் பெற்ற தண்டனைகள், அயல் பணி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பணிப் பதிவேட்டில் (சர்வீஸ் ரெஜிஸ்டர்) பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வோர் அரசு ஊழியருக்கும் தனித் தனியாகப் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேட்டை, தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரி கவனித்து வருவார்.

    அரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன்; அமைச்சர் பாண்டியராஜன்

    தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான விலையில்லா சீருடை வழங்குவதற்கான உத்தேச தேவைப்பட்டியல் கோரி உத்தரவு


    Friday, November 18, 2016

    'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார் சுழி போட்ட பெண் அதிகாரி

    இரண்டு ஆசிரியர்கள் உள்ள தொடக்க பள்ளிகளில், பெரும்பாலும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது. எனவே, ஒருவருக்கு மூன்று நாள், இன்னொருவருக்கு இரண்டு நாள் வேலை என, ஆசிரியர்கள் பிரித்துக் கொள்கின்றனர். ஆனால், வருகை பதிவேட்டில், அனைத்து நாட்களுக்கும் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் முயன்றால், சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். 

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க உத்தரவு

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ரொக்கமாக சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை

    'ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க முடியாததால், சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கறுப்பு பணம் பதுக்கியோர், கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். பணத்தை மாற்ற, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

    நவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்டாடும்படி உத்தரவு

    பள்ளி, கல்லுாரிகளில், வரும், 26ல், அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாடும்படி, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. சுதந்திரம் பெற்ற பின், 1949 நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள், சட்ட நாளாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்தது. 

    இனி பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டு மூலம் ரூ.2000 பெற்று கொள்ளலாம்!

    பொதுத்துறை பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ரூ 2,000 பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள் காலி

    தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், முதல்வர், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

    8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்

    'எட்டாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, இன்று முதல், 25 வரை, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கவுள்ள, 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 12 ஆண்டு, ஆறு மாதங்களை பூர்த்தி அடைந்தவர்கள், இன்று முதல், 25 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

    ஆதிதிராவிட பள்ளிகளில் அடிப்படை வசதி

    ஆதிதிராவிட பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், 1,134 ஆதிதிராவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1.15 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 18 மாவட்டங்களில் உள்ள, 48 பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள், கட்டடம், ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் ஐந்து விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு

    வங்கிகளில் பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்த உச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல் குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தை பெற வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்கு சலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காக மணமக்கள் வீட் டார் வங்கி கணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.

    2017-ம் ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு சம்பள பட்ஜெட் திட்டத்தை வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து சேலரீஸ் இன் இந்தியா (salaries in india) நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டும் 10.8% உயரும் என்று கூறியிருந்தது. ஆனால் உண்மையாக 10% மட்டுமே சம்பள உயர்வு இருந்தது குறிப் பிடத்தக்கது. 

    சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா சம்பள உயர்வில் முன் னணியில் உள்ளது. இந்த ஆய் வில், இந்தோனேசியாவில் 9% சம்பளம் உயர்வு இருக்கும் என்றும் இலங்கையில் 8.9 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் 7 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் இந்தியாவில் சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் நன்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வுக் காக 38% ஒதுக்கப்படும் என்றும் சராசரிக்கு கொஞ்சம் அதிகமாக பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 34 சதவீதம் ஒதுக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் சராசரியாக பணிபுரியக் கூடிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 28 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

    ``அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்குவதைக் காட்டிலும் நன்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு சரியான சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வுகள் தெளிவாக்கு கின்றன. எந்தவொரு வேறுபாடு இல்லாமல் சம்பள உயர்வு இருக்கும் என்றால் நிறுவனங்கள் நல்ல திறமையுடைய ஊழியர்களை தக்கவைப்பது சிரமமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஊழியர்கள் தேவை இருக்கும் துறைகளில் இன்னும் சிரமமாக இருக்கும்’’ என்று வில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தகவல் சேவை பிராக்டீஸ் தலைவர் சம்பவ் ரக்யான் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டில் 3 சதவீதம் மட்டுமே சம்பள உயர்வு இருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பார்மச்சூடிகல்ஸ் துறையில் சம்பள உயர்வு அதிகமாக இருக்கிறது. நிதி சார்ந்த துறைகளில் சம்பள உயர்வு சராசரிக்கும் கீழே 8.5 சதவீதமாக இருக்கிறது.

    Thursday, November 17, 2016

    ‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’

    சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    Demonetisation : Financial Advise for Deposit amount in your account

    Financial Advise :

    1. Deposit cash less than Rs. 50000 at one time & 10 lac cash in a year (1.4.16 to 31.3.17) in saving bank account. To avoid Income tax department Notice.

    2.Do not deposit cash more than Rs.2 lakh in saving bank account (from 11/11/16 to 31/12/16). If you are non tax payer. To avoid Income tax department Notice.

    3. Don't try to be over smart
    By depositing cash in your different different saving bank accounts. As for income tax limits (Rs. 200000 & Rs.1000000) those will be considered all together.

    ரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : மத்திய அரசு

    ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளும் செல்லாது என்ற அறிவிப்பு வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
    அரசு விளக்கம் :
    ரூ.500, 1000 நோட்டுக்களை தொடர்ந்து ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளையும் திரும்பப் பெற பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், 'அது வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை (பி.ஐ.பி.) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் நேற்று விளக்கம் அளித்துள்ளது. மேலும், வங்கி லாக்கர்களுக்கு 'சீல்' வைக்கும் திட்டமோ, தங்கம் மற்றும் வைர நகைகளை முடக்கும் திட்டமோ இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

    ரூ.2000 சாயம் போகிறதா? :
    ரூ.2,000 நோட்டு, தரம் குறைந்ததாகவும், சாயம் போவதாகவும் வெளியான தகவல்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளது. அந்த நோட்டுகளில் 'இன்டக்லியோ பிரிண்டிங்' என்ற பாதுகாப்பு அம்சம் இடம்பெற்று இருப்பதாக கூறியுள்ளது. நல்ல நோட்டா என்று கண்டறிய, அதை ஒரு துணியில் தேய்த்தால், நோட்டில் உள்ள மையின் நிறம், துணியில் ஒட்டிக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ரூ.2,000 நோட்டில் 'சிப்' எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கை

    தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில்  மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் நேற்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

    சம்பளத்தை ரொக்கமாக கொடுங்க! : கோவா அரசு ஊழியர்கள் கோரிக்கை

    கோவா மாநில அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, ரொக்கமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய நோட்டுகளை மாற்றவும்,

    9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி

    போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, பல விதமான தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. அத்துடன், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், உயர்கல்வியில் சேர, 'ஜே.இ.இ., - நீட் - கேட்' என, பல நுழைவுத் தேர்வுகளும் உள்ளன.
    இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, கல்வியாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். அதனால், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை தொடக்கப் பள்ளியில் இருந்தே தயார் செய்ய, புதிய வினாத்தாள் முறையை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை, குழந்தைகள் தின விழாவிலேயே, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், புதிய வினாத்தாளை பயன்படுத்தி, சிறப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன.
    இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது: மாணவர்கள் ஒவ்வொரு வினாவையும் புரிந்து, சிந்தித்து, விடையை தேர்வு செய்யும் வகையில், புதிய வினாத்தாளில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றுஉள்ளன. இந்த நடைமுறை, மூன்று பருவ தேர்வுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும். இந்த வினாத்தாளுக்கு, மாணவர்கள் தொடக்கப்பள்ளி முதலே பழகிவிட்டால், உயர்கல்விக்கு வரும் போது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்

    'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும்.

    Wednesday, November 16, 2016

    பாட்டுப்பாடி நடனமாடிய முதன்மை கல்வி அதிகாரி


    தமிழ் - முதல் வாரம் - பயிற்சித்தாள்களுக்கான விடைக்குறிப்புகள் 1 முதல் 10 வகுப்பு வரை

    SSA - RAA - SCIENCE EXHIBITION SCHEDULE

    தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி,இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் டெல்லியில் இளைஞர்நலத்துறை அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக நடக்கும்.

    DSR (Digital Service Register) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை

    *அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு*
    மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:: 

    1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

    2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

    'புது' ஆசிரியர் தகுதித் தேர்வு! ஜனவரியில் அறிவிப்பு


    பள்ளிக்கல்வி - EMIS - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் மேம்படுத்தி அதனை அரசுத் தேர்வு பணிகளுக்கு பயன்படுத்துதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

    மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சுணக்கம் ஏன்? கல்வித்துறை இயக்குநர் கேள்வி!!!

    7th Pay Commission – Employees Provident Fund may be raised to Rs 25,000.

    Under the 7th Pay Commission minimum wage ceiling the Employees’ Provident Fund (EPF) is likely to raise to Rs 25,000 from the existing Rs 15,000. The proposal drafted by Employees’ Provident Fund Organisation (EPFO) will be sent to the Union Government which is likely to be approved, the report suggests. The decision has been taken by the members of Sub-committee of the Central Board of Trustees, EPFO – the highest decision-making body – on contract workers held on November 7.

    மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்: மத்திய அரசு அறிவிப்பு

    மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளத்து. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட் இனி தனியாக தாக்கல் செய்யப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    HIGH SCHOOL HM CASE IS COMING FOR HEARING TODAY

    COURT NO. 8
    Hon`ble Mr Justice R.SUBBIAH

    To be heard on Wednesday the 16th day of November 2016 after motion list

    Sr. No. Case No. Petitioner Advocates Respondent Advocates
    AT 2.15 P.M.
                                     
    112. WP 16137/2016 M/S.DAKSHAYANI REDDY
    S.SUNEETHA SPL GP FOR R1 TO R4
    MR.K.V.DHANAPAL FOR RESPDTS
      (Service)
                                        
             TO                             
      WP 16139/2016 M/S.DAKSHAYANI REDDY
    S.SUNEETHAM/S.SPL GP FOR R1 TO R4

    அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்

    மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அண்ணாபல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டம் அடுத்த கல்வி (2017-2018) ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

    பல்கலைகளில் நொறுக்கு தீனிக்கு தடை!

    பல்கலை கேன்டீன்களில் நொறுக்கு தீனி விற்க, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. பல்கலை கேன்டீன்களிலும், கடைகளிலும், உணவு பொருட்கள் விற்க, உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெற வேண்டும் என, யு.ஜி.சி., நிபந்தனை விதித்துள்ளது. 

    எல்லையை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளை மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இம்மாதம், 1ம் தேதி, பாக்., படையினர் நடத்திய தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட, எட்டு பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர். 

    புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி அதிகாரிகள் தகவல்

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், 500 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பின், 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    'குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

    'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.  இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, 1,863 காலியிடங்களை நிரப்ப, ஜன., 24ல், 'குரூப் - 2 ஏ' எழுத்துத் தேர்வு நடந்தது.

    நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!’ பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

    நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால்,அங்கீகாரம் கிடையாது‘ என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில்,இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர,பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை, ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை

    கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.

    Tuesday, November 15, 2016

    2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவிப்பு

    2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு அறிவித்திருக்கும் 22 அரசு விடுமுறை தினங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள்...தவிப்பு:பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு

    தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. 

    கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., 'அட்வைஸ்'

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வாடிக்கையாளர்கள், 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதிக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 24ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள், அவர்களது கணக்கில் இருந்து, 24 ஆயிரம் ரூபாய் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

    எந்த ஏடிஎம்களில் பணம் உள்ளது? இந்த வெப்சைட் மூலம் அறியலாம்

    ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர். இந்த சிரமத்தை நீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர்

    குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:  

    'டெட்' தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.

    Monday, November 14, 2016

    SECOND TERM SUMMATIVE ASSESSMENT – TIME TABLE STANDARD : VI

    DATE
    DAY
    SUBJECT
    14.12.2016
    WEDNESDAY
    LANGUAGE PAPER
    15.12.2016
    THURSDAY
    ENGLISH
    19.12.2016
    MONDAY
    MATHEMATICS
    20.12.2016
    TUESDAY
    EVS & PET

    SECOND TERM SUMMATIVE ASSESSMENT – TIME TABLE STANDARD : VII

    DATE
    DAY
    SUBJECT
    14.12.2016
    WEDNESDAY
    LANGUAGE PAPER
    15.12.2016
    THURSDAY
    ENGLISH
    19.12.2016
    MONDAY
    SCIENCE

    SECOND TERM SUMMATIVE ASSESSMENT – TIME TABLE STANDARD : VIII

    DATE
    DAY
    SUBJECT
    14.12.2016
    WEDNESDAY
    LANGUAGE PAPER
    15.12.2016
    THURSDAY
    ENGLISH
    19.12.2016
    MONDAY
    SOCIAL SCIENCE

    SECOND TERM SUMMATIVE ASSESSMENT – TIME TABLE STANDARD : IX

    DATE
    DAY
    SUBJECT
    09.12.2016
    FRIDAY
    LANGUAGE PAPER – I
    10.12.2016
    SATURDAY
    LANGUAGE PAPER – II
    14.12.2016
    WEDNESDAY
    ENGLISH PAPER – I
    15.12.2016
    THURSDAY
    ENGLISH PAPER –II

    HIGHER SECONDARY +1 HALF YEARLY EXAMINATION DECEMBER 2016

    DATE
    DAY
    SUBJECT
    07.12.2016
    WEDNESDAY
    PART - I
    LANGUAGE PAPER – I
    07.12.2016
    WEDNESDAY

    EVS ( 2.00 PM TO 3.00 PM)
    08.12.2016
    THURSDAY
    PART – I
    LANGUAGE PAPER – II
    09.12.2016
    FRIDAY
    PART – II
    ENGLISH PAPER – I
    10.12.2016
    SATURDAY
    PART – II
    ENGLISH PAPER – II
    14.12.2016
    WEDNESDAY
    PART –III
    MATHEMATICS / ZOOLOGY / MICRO BIOLOGY / NUTRITION & DIETETICS / TEXTILES DESIGNING / FOOD MANAGEMENT & CHILD CARE / AGRICULTURE PRACTICE / POLITICAL SCIENCE / NURSING (GENERAL)