ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளும் செல்லாது என்ற அறிவிப்பு வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
அரசு விளக்கம் :
ரூ.500, 1000 நோட்டுக்களை தொடர்ந்து ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளையும் திரும்பப் பெற பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், 'அது வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை (பி.ஐ.பி.) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் நேற்று விளக்கம் அளித்துள்ளது. மேலும், வங்கி லாக்கர்களுக்கு 'சீல்' வைக்கும் திட்டமோ, தங்கம் மற்றும் வைர நகைகளை முடக்கும் திட்டமோ இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ரூ.2000 சாயம் போகிறதா? :
ரூ.2,000 நோட்டு, தரம் குறைந்ததாகவும், சாயம் போவதாகவும் வெளியான தகவல்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளது. அந்த நோட்டுகளில் 'இன்டக்லியோ பிரிண்டிங்' என்ற பாதுகாப்பு அம்சம் இடம்பெற்று இருப்பதாக கூறியுள்ளது. நல்ல நோட்டா என்று கண்டறிய, அதை ஒரு துணியில் தேய்த்தால், நோட்டில் உள்ள மையின் நிறம், துணியில் ஒட்டிக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ரூ.2,000 நோட்டில் 'சிப்' எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment