பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போளிவாக்கம், சத்திரம் பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ளது போளிவாக்கம், சத்திரம் கிராமங்கள். இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மணவாளநகர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.
திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை வழியாக செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் விரைவு பேருந்துகள் சிறிய கிராமங்களின் நிறுத்தங்களில் நிற்பதில்லை. ஒரு சில பேருந்துகளே நின்று செல்கின்றன. இந்த நிலையில் பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிற்காததால் மாணவர்கள் தினசரி பள்ளிகளுக்கு தாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் சாதாரணபேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment