To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, October 31, 2013
மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை
திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ.,
தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நவம்பர் 1 ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,
பள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்?
தமிழக அமைச்சரவையில் சட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வகித்த சி.வி.சண்முகம், "அக்ரி" கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகைச்செல்வன் ஆகியோர் பதவியை இழந்து, எம்.எல்.ஏ.,வாக மட்டும் தற்போது பதவி வகிக்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவருக்கு அபராதம்
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்
"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அதிரடி முடிவு
குரூப்-2 தேர்வு தேதியில் எந்த மாற்றமும் கிடையாது. திட்டமிட்டபடி, டிச., 1ல், முதல்நிலைத் தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில்வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது.
Wednesday, October 30, 2013
இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.
புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.சி.வீரமணி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
குழந்தைகளை சித்ரவதை செய்த ஆசிரியை நீக்கம்
காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளை கால் பிடிக்கச் செய்து கொடுமைப்படுத்திய ஆசிரியை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளார்.
கல்வித்துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும்,தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர். நடுநிலை பள்ளி: தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கடும் சரிவை சந்தித்து வந்தது.
இரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது
இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்.43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்
"மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு
பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு என்ன?
கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
வேதியியல் படிக்காத மாணவர்களும் பயன்பெற ஏ.ஐ.சி.டி.இ புதிய ஆலோசனை
மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் பிளஸ் 2 படிப்பில், வேதியியல் பாடத்தை படிக்காவிட்டாலும், அவர்கள் தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற தடையில்லாதவாறான ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசனை வழங்கியுள்ளது.
கல்வி அதிகாரியை கண்டித்து போராட்டம்: கணவன், மனைவி உள்பட ஏழு பேர் கைது
நெல்லை மாவட்ட பெண் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் குடும்பத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஏர்வாடியில் உள்ள தனியார் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தவர் யுனைசிகிரேனா. அந்த பள்ளியின் நிர்வாகம் மாற்றப்பட்டதால், நிர்வாகியின் மனைவியை தலைமையாசிரியையாக பணிநியமனம் செய்வதற்காக இவரை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன
"ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்பவேண்டும்" என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாணவனின் நேர்மை: பாராட்டிய பொதுமக்கள்
தேனி உழவர்சந்தையில் கீழே கிடந்த பணத்தை எடுத்த கல்லூரி மாணவன் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.
1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன், சி.மணி, ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28–5–2013 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது.
முதுகலை ஆசிரியர்களுக்கான அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் நடந்த சான்றிதழ் சரிபார்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு
Also during the certificate verification held on 22nd and 23rd October 2013 as per the Provisional List dated 11.10.2013. A few candidates were absent for certificate verification and some candidates who attended the certificate verification did not produce the required certificates.Now, it is decided by the Board to give both of them another opportunity to attend the certificate verification or to produce the certificates at the venue and date mentioned below.
Tuesday, October 29, 2013
டிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது
இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும்
1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
4. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
5. தமிழக ஆசிரியர் கூட்டணி,
6. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
7. தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
ஆகிய 7 அமைப்புகளும் இதில் பங்கேற்று ஒரு மிகப்பெரிய போராட்ட அறிவிப்பனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இயக்கங்களும் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : ராமதாஸ்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது.
நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.
ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன்.
நவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
"தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 1ம் தேதி, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க, நாமக்கல் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.
விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம்
விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது.
Monday, October 28, 2013
கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி
கணிதம்,தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும்,சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே,அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவு
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியைகள் மீது போலீஸ் வழக்கு
அரசு நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்த ஆசிரியைகள் ஜமுனாராணி (42), லதா(48) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் லதா 8ம் வகுப்புக்கு ஆசிரியையாக உள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு
திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMS மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது
அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர்.
டிட்டோ ஜாக் கூட்டம் 09/11/2013 அன்று காலை சென்னையில் நடைபெறவுள்ளது
டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை அலுவலகத்தில் (இராமுன்னி மாளிகை) 09.11.2013 சனிக்கிழமையன்று காலை நடைபெறவுள்ளது.
மாற்றுச்சான்றிதழ் வழங்கியதில் மோசடி: தலைமையாசிரியர் மீது வழக்கு
ராஜபாளையம் அருகே மோசடியாக பலருக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக தலைமையாசிரியர் மீது கோர்ட் உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை
தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
"கேள்வி கேட்பதன் மூலமே மாணவர்கள் பாடங்களை தெளிவாக கற்க முடியும்"
வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்பதன் மூலம்தான் பாடங்களை தெளிவாக கற்க முடியும் என காந்திகிராம பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) ஜோசப் துரைராஜ் பேசினார்.
25 பேருக்கு "லட்சிய ஆசிரியர் - 2013" விருது
"ஆசிரியர் தினம்" முன்னிட்டு, "தினமலர்" நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட, "நான் ஒரு லட்சிய ஆசிரியர்" கட்டுரைப் போட்டியில் தேர்வு பெற்ற, 25 ஆசிரியர்களுக்கு, "லட்சிய ஆசிரியர் -2013" விருது, கோவையில் நேற்று வழங்கப்பட்டது.
பள்ளிகளுக்கு மத்தியில் பெரும் இடையூறாக "டாஸ்மாக்"
சின்னமனூரில் பள்ளிகள், கோயில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கடையை உடனடியாக இடம்மாற்ற பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.
கோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி
எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை
பிளஸ் 2 மாணவர்களுக்கான "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த "டிப்ஸ்" விபரம்:
குரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்
தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sunday, October 27, 2013
பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர் வலியுறுத்தல்
மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பிச்சையப்பன் வலியுறுத்தினார். பிச்சையப்பன் கூறியதாவது:பள்ளி வளாகத்திற்குள் பெற்றோர்களை அனுமதிக்கக்கூடாது.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவு
தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது.
Saturday, October 26, 2013
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில் கூட்டுப் போராட்டம்
இன்று சென்னை, திருவல்ல்கேணி, மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழக ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இயக்ககங்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு
தாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக" தீபாவளி வசூல்: பெற்றோர் அதிருப்தி
கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக" நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்
தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
மறக்கப்படும் சத்துணவு: கீரைகளின் வகைகள் குறித்த தொடர் ஆராய்ச்சி அவசியம்
நம் முன்னோர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி வருகின்றன.
அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்
அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.
அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்!
சரா 'ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?' பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
Friday, October 25, 2013
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவன் காயம்: போலீசில் புகார்
வேலூர் கொணவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படித்து வருபவர் இம்ரான்பாட்சா (வயது 13). நேற்று காலை மாணவன் பள்ளிக்கு வந்தார். காலை இடைவேளைக்கு பிறகு அவர் தாமதமாக வந்தார். இதை பள்ளி ஆசிரியர் உலகநிதி கண்டித்தார்.
ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது....
நமது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதாரம் பணம். அந்த பணத்திற்காகவே மக்கள் பணிபுரிகிறார்கள். அந்த வகையில், முடிந்தளவு அதிக சம்பளம் வாங்குவதே பலரின் குறிக்கோளாக இருக்கிறது. பணி திருப்தி மற்றும் வாழ்க்கை திருப்தி என்பது பலருக்கும் இரண்டாம்பட்சம்தான்.
சென்னையில் தொடங்கியது புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
சேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளிகளின் பட்டியல் தயார்
கோவை மாவட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க, 49 பள்ளிகளின் பெயர் பட்டியல் பொதுப்பணித்துறையிடம் மாவட்ட கல்வித்துறையால் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக்கல்வித் துறையில், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை.
கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்
மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்
வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன், நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் மாணவர்களுக்கு, கல்விக் கடனாக 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
காமராஜ் பல்கலை பி.எட்., வகுப்புகள் அக்., 26ல் துவக்கம்
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடைபெறும் பி.எட்., படிப்பிற்கான வகுப்புகள் அக்.,26 முதல் 2ம் ஆண்டு (13ஏ) மாணவர்களுக்கும், நவ.,9 முதல் முதலாம் ஆண்டு (14ஏ) மாணவர்களுக்கும் நடக்கின்றன.
எம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்
படிப்பில் சிறந்து விளங்குபவராய் இருந்தாலும், இன்றைய போட்டி உலகில் வெற்றியாளராக விளங்க, எம்.பி.ஏ., மாணவர், ஓர் ஆல்ரவுண்டர் என்ற நிலையை அடைய வேண்டும்.
குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.
ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தகவல்
"தமிழ்நாடு அரசு ஆவண காப்பகங்களில், ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி
கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள் மூடப்பட்டன.
ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். 5வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பொறுப்பேற்றுள்ளார். 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
எம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்
படிப்பில் சிறந்து விளங்குபவராய் இருந்தாலும், இன்றைய போட்டி உலகில் வெற்றியாளராக விளங்க, எம்.பி.ஏ., மாணவர், ஓர் ஆல்ரவுண்டர் என்ற நிலையை அடைய வேண்டும்.
எம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்
படிப்பில் சிறந்து விளங்குபவராய் இருந்தாலும், இன்றைய போட்டி உலகில் வெற்றியாளராக விளங்க, எம்.பி.ஏ., மாணவர், ஓர் ஆல்ரவுண்டர் என்ற நிலையை அடைய வேண்டும்.
கல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சிறை
கல்விக்கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என அடம்பிடித்த சென்ட்ரல் பாங்க்., மேலாளர் ஒருவர் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Thursday, October 24, 2013
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதும் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்துசெய்ததை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
தாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு, தவிக்கும் பதவி உயர்வு ஆசிரியர்கள், முடிவு எப்போது?
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013 புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசு பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று குகை மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்டது.
புதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை செக்
வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்...
கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 24.10.2013 அன்று தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.33ல் பட்டியலிடப்பட்டுள்ளது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கு என அனைத்தும் ஒருங்கிணைத்து இன்று விசாரணை நடக்கும் என தெரிகிறது.
ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்
ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம் ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்துள்ளது.
IGNOU TERM END EXAM 2013-DECEMBER EXAM SHEDULE
Es 331-9.12.13
332_ 10/12
333 _11/12
341 _12/12
342 _13/12
பொறியியல் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆன்லைன் படிப்புகள்!
தமிழகத்தில் பொறியியல் கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் பலவிதமான ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Wednesday, October 23, 2013
செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேல்நிலைத் தேர்வினை "சிறப்பு அனுமதி திட்டம்" (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. இதில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர் என இரண்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவதற்கு பதிலாக ஏதேனும் ஒரு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவது சார்பாக தேர்வு செய்ய "OPTION" வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டது.
2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு: இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வுப பட்டியல்
ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி - ஐகோர்ட் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 30 கடைசி நாள்
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வான நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கிடைக்கும் சில முக்கிய உதவித்தொகை திட்டங்கள்
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை. அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கற்கும் ஆர்வத்தை அதிகரிப்பது எப்படி?
"மறைந்த தலைவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஆசிரியர்கள் பாடத்தோடு கலந்து கற்பிக்கும்போது, மாணவர்களிடையே கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்" என, ஆசிரியர் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்" செயற்கைகோள்
செவ்வாய் கிரகத்திற்கு, "மங்கள்யான்" செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு
தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது.
10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல் விற்பனை
இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
Tuesday, October 22, 2013
திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளித்து பொது மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது
இன்று காலை அரசாணை எண்.297 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.10.2013ன் படி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்கி காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு
தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. மேலும் இப்பிரச்சனையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில் 2013-14ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. இப்பிரச்சனை குறித்து ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கும், இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 20/10/13 அன்று நாமக்கல் நகரில் நடைபெற்றது. பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையாக உள்ள தர ஊதியம் 4200 ஆக மாற்ற கீழ்க்கண்டநடவடிக்கைகளில் செய்வது என முடிவாற்றப்பட்டது
முதலில், அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து
1.இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 என மாற்றம் செய்து,ஊதியக்கட்டு 1லிருந்து 2க்கு மாற்றம் செய்யக்கோருவது
தீபாவளி போனஸ் : பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Monday, October 21, 2013
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உண்மைநிலை அறிய நமது "TNKALVI" சார்பில் மேற்கொண்ட முயற்சியில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு சார்பாக வாதிடும் வழக்கறிஞ்சரை தொடர்பு கொண்டதில் மேற்கொண்டவாறு தகவல்களை தெரிவித்தார்.
தீபாவளி போனஸ்: தமிழகஅரசு அறிவிப்பு
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருச்சி உதவிக் கல்வி அலுவலர் மீது அமைச்சரிடம் புகார்
துப்புரவு பணியாளர் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் இருக்க காரணமாக இருந்த, திருச்சி ஏ.இ.ஓ.,வை மாற்றக்கோரி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சிறப்பு இளைஞர் படை : ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் தேர்வு செய்யப்படுபவர்கள், ஏற்கனவே காலியாக உள்ள, ஓட்டுனர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், தபால் பணி, குடியிருப்பு பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்விக்கு தடை: தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
மாணவர்களின் சிந்திக்கும்திறன் வலுப்பெறவும், படைப்பாற்றல் வளரவும், தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தடை செய்து, தமிழ்வழிக் கல்வியை உருவாக்க வேண்டும்" என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் விசாரணைக்கு வருகின்றதுமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை
விடுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.
2 கல்லூரிகளுக்கு பல்கலை அந்தஸ்து!
ஆந்திர மாநிலத்தில் கல்விக்குப் புகழ்பெற்ற விஜயவாடா நகரில், இரண்டு கல்லூரிகளுக்கு, பல்கலை அந்தஸ்தை UGC அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழக பட்டியல்: யுஜிசி வெளியீடு
இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.இந்தியாவில், 9 மாநிலங்களில் உள்ள அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பல்கலைகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, யுஜிசி அதன் இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலினை
சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்த உத்தரவு
பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்" ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றி
"மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றியாகும்" என உடுமலையில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி அரசு ஒதுக்கீடு
ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம்
"ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.
எதிர்காலத்திற்கான மகிழ்ச்சி மாணவப் பருவத்தில் தொடங்குகிறது
பள்ளி, கல்லூரியில் படித்த மாணவர்கள் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நிகழ்வுகளை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் பள்ளித் தோழர்களோடு மீண்டும் ஒன்றாகக் கூடும் நிகழ்வுகளை சந்தித்த அனுபவம் இருக்கும்.
Sunday, October 20, 2013
ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்
தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த வேண்டியதுள்ளது.
Saturday, October 19, 2013
ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
'வை-ஃபை' க்கு மாற்றாக 'லை-ஃபை' சீனாவின் புதிய தொழில்நுட்பம்
இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்ப டுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லை-ஃபை என்ற புதிய தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வை-ஃபை தொழில்நுட்பத்துக்கு மாற்றாகக் கருதப்படும். இத்தொழில்நுட்பம், வை-ஃபை கருவியை விட விலை மலிவான கடத்தியைக் கொண்டது.ஷாங்காய் பியூடன் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப த்துறை பேராசிரியர் சி நான் தலைமையில், ஷாங்காய் தொழில் நுட்ப இயற்பியல் துறை விஞ்ஞானி கள் இணைந்து இத்தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிகளில் (Army Public School-APS) ஆசிரியராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கூட்டுப் போராட்டம் கானல் நீரா? கொதித்தெழும் இடைநிலை ஆசிரியர்கள்
6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை களைய ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய தனிப்பட்ட பலத்தை நிரூபித்தாகிவிட்டது. பலன் என்பது பூச்சியமாகத்தான் உள்ளது. எனவே கூட்டுப்போராட்டம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு தள்ளுப்பட்டுள்ளோம்.
தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 2,900 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தத்தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்
ஒரே நாளில் குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வும் நடத்தப்படுவதால் எந்தத் தேர்வை எழுதுவது? என்று மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண்: மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவரை கலெக்டர் பாராட்டினார்.
கணினி பொறியியல் பட்டதாரிகளின் அவல நிலையை தெரிவிக்கும் சர்வே
ஏறக்குறைய 50% முதல் 60% வரையிலான கணிப்பொறி அறிவியல் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பொறியாளர்கள், தங்கள் பாடங்களுடைய நுணுக்கமான கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
சார்க் நாட்டு பல்கலை படிப்புகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்!...
சார்க் நாடுகளின் பல்கலைகளில், 5 வகையான முதுநிலைப் படிப்புகளுக்கு, ஒரேவிதமான பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படிப்பு - இந்தியாவில் பணி வாய்ப்பு எப்படி?
வெளிநாட்டில் சென்று படிப்பது ஒரு சாதாரண விஷயமாகிவிட்ட நிலையில், அதன்பிறகு, மீண்டும் இந்தியா வந்து, ஒரு நல்ல பணியில் அமர நினைப்பவர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இந்திய கல்வி பவுண்டேஷன்(USIEF) என்ற அமைப்பு, ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து, கற்பித்தல் ப்ரோகிராமில், The 2014 Fulbright Distinguished விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 20.
Friday, October 18, 2013
நவம்பர், 10ம் தேதிக்குள், 2,200 புதிய முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில்,
சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்
13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உரிய படிவத்தில் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
10,000 பட்டதாரி ஆசிரியர், 3,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள். இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
குரூப் - 1 தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை
"குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 50 வயதாக உயர்த்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகளுக்கொரு முறை இலவச புத்தக யோசனை - ஏற்க மறுப்பு
ஆண்டுதோறும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதற்குப் பதில், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கினால் போதாதா என்ற, மாநில திட்டக் குழுவின் யோசனையை ஏற்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மறுப்பு தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு
பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை.
எஸ்.எஸ்.ஏ., ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்பு
ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள, 10 யூனியன்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து, மாநிலத்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமை ஆய்வு கூட்டம் நடந்தது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது
''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.
Thursday, October 17, 2013
காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு
பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க ஆசிரியர்கள் கோரிக்கை
பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கொள்ளிடம் வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்
தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த வேண்டியதுள்ளது.
நீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வந்த வினை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி வழிகாட்டு வகுப்புகளை நடத்தாமை, விளையாட்டு உள்ளிட்ட உடல்சார் நடவடிக்கைகளை ஊக்குவிக்காமை மற்றும் தேவையான பெற்றோர் கவனிப்பின்மை ஆகியவையே மாணவர்களை தடம் மாற செய்வதாக, நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெற்ற விருதுகளும் கௌரவங்களும் / விருது வழங்கிய அமைப்பும்
2011 IEEE கவுரவ உறுப்பினர் IEEE
2010 பொறியியல் டாக்டர் (பட்டம்) வாட்டர்லூ பல்கலைக்கழகம்.
2009 ஹூவர் மெடல் ASME மணிக்கு, அமெரிக்கா.
2009 சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா.
2008 பொறியியல் டாக்டர் (பட்டம்) நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.
2007 கிங் சார்லஸ் II பதக்கம் ராயல் சொசைட்டி, இங்கிலாந்து.
2007 அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து.
முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வருவாய் துறை முதன்மை செயலர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
Wednesday, October 16, 2013
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாரதி,சகுந்தலா,தமயந்தி,செந்தாமரை உள்ளிட்ட12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த 2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.
குழந்தை திருமணத் தடை சட்டம் பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு "குழந்தை திருமணத் தடை சட்டம்" குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க கோரிக்கை
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு 5 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாயுமாக உயர்த்தியும், சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும், என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி அக்.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை சி.இ.ஓ., செந்திவேல்முருகன் தெரிவித்தார்.