தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள் அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.
இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன. புதுச்சேரி சார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேரு அரசு பள்ளி பங்கேற்கிறது. தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும் தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளி மாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment