பாரத ஸ்டேட் வங்கி, அக்யூசிஷன் ரிலேஷன்ஷிப் மேலாளர், ரிலேஷன்ஷிப் மேலாளர், மண்டலத் தலைமை அலுவலர், முதலீட்டு ஆலோசகர் உள்ளிட்ட ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் பணிக்கு 103 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் அமையும் என பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிக்கை தெரிவிக்கிறது.
தேவையான தகுதி
குறைந்தபட்ச வயது 22, அதிகபட்ச வயது 40. ஒவ்வொரு பதவிக்கும் இது மாறுபடுகிறது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் பணிக்குப் போதுமான அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
கல்வித் தகுதி, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி ஆகிய பிரினருக்கு ரூ.100. பொதுப் பிரிவினருக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கும் ரூ. 600. உரிய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் 25.11.2016 முதல் 12.12.2016 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட்டை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் 16.12.2016-க்குள் கிடைக்கும்படி State Bank of India, Central Recruitment & Promotion Department, Corporate Centre, 3rd Floor, Atlanta Building, Nariman Point, Mumbai 400021 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய நாள்கள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 25.11.2016, ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.12.2016, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதி நாள்: 16.12.2016, விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்க இறுதி நாள்: 27.12.2016
கூடுதல் விவரங்களுக்கு: www.sbi.co.in
No comments:
Post a Comment