Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 28, 2013

    தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - புதிய நியமனங்கள் - TRB மூலம் 2009-2010ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நியமனம் செய்யப்பட்ட கணித மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து உத்தரவு.

    விடைத்தாள் திருத்தும் கட்டணம் அதிகரிப்பு

    கல்லூரி ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் கட்டணத்தை அதிகரிக்க தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது

     கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
    * மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.

    பொது பட்ஜெட் : வருமான வரி விலக்கு உச்சவரம்பு சம்பளதாரர்கள் ஏமாற்றம், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி

    சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும்.

    ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

    2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

    வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.

    வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி

    ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.

    மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக டாக்டர் வைகைச்செல்வன் அவர்கள் பதவி ஏற்பு.


    கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

    கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
    * கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்

    ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் அறிமுகம்

    அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    முறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

     "பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.

    பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%

    மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.

    தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்

    தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

    மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு

    வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

    உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?

    தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்; டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர் வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால், இங்கே நடப்பதென்ன...?

    Wednesday, February 27, 2013

    பள்ளிக்கல்வி - 2009-10 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட RMSA உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூ.1900ல் இருந்து ரூ.2400ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

    பள்ளிக்கல்வி - 2009-10 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் தோற்றுவித்து தமிழக அரசு ஆணை வெளியீடு.

    GO.67 SCHOOL EDUCATION (C2) DEPT DATED.16.3.3012 - 344 JUNIOR ASST & 544 LAB ASST POSTS SANCTIONED ORDER ISSUED.
    GO.67 - PAGE NO.1 CLICK HERE...
    GO.67 - PAGE NO.2 CLICK HERE...
    GO.67 - PAGE NO.3 CLICK HERE...
    GO.67 - PAGE NO.4 CLICK HERE...

    பாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா ஆகிய
    மூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை வாய்ப்பிற் -காக இளநிலை பட்டத்திற்கு சமமாக கருதி அரசாணை வெளியீடு

    பள்ளிக்கல்வி பட்டியல் மாற்றத்தை கண்டித்து பாராளுமன்றம் முன்பு மறியல் போராட்டம் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

    பொதுப்பட்டியலில் இருந்து தொழில் பட்டியலுக்கு பள்ளிக் கல்வியை மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு அகில இந்திய ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதை கண்டித்து பாராளுமன்றம் முன்பாக மறியல் போராட்டம் நடக்க உள்ளது.

    மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கு இழுத்தடிப்பு: ஆசிரியர் கூட்டணி நிர்வாகி புகார்

    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிகிச்சை பெற வசதியாக, அவர்களது ஊதியத்தில், மாதம், 150 ரூபாய் வீதம், எட்டு மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

    அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக் கோரி வழக்கு

    தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை மறுநாள், துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர்.

    கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது "ஸ்கைப்" வசதி

    கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து, "ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

    தேர்வு நேரத்தில் ஜெனரேட்டர் நிதி கேட்டு அதிகாரிகள் கடிதம்

    மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    கல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை நிறைவேறுமா?

    மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும்

    Tuesday, February 26, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழ் வினா - விடை தொகுப்பு (6 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு வரை)

    தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.

    எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:1.பாலக்காடு- ஈரோடு 
    2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ்

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உறுதி ஏற்பு

    அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    தொடக்கக் கல்வி - குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இல்லாத பள்ளிகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பாணையின் படி குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்த எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை அனுப்ப இயக்குநர் உத்தரவு.

    கருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு.

    நித்திரையை தொலைப்பவர்கள்.......

    தை பிறந்தால் வழி பிறக்கம் என்பது முதுமொழி. தை பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ, மாணவர்களுக்கு வலி பிறந்து விடுகிறது. தையைத் தொடர்ந்து வரும் மாதங்கள் தேர்வு மாதங்கள். குருப்பார்வை,

    கடைசிநேர படிப்பு - அதிக மதிப்பெண்களைத் தருமா?

    நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உண்டு. நெருக்கடியில் இருக்கும்போதுதான், ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதே அது. நெருக்கடி என்பது நமது சிறந்த நண்பர் என்று நினைக்கிறோம். மர்பியின் சட்டம் என்ற பெயரில்

    பிஎப் கணக்குக்கு 8.5% வட்டி நிர்ணயிக்க பரிந்துரை

    நடப்பு ஆண்டுக்கான பி.எப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று, விரைவில் நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

    பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு

    கல்வி அதிகாரிகள் மீது தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - நாளிதழ் செய்தி

    ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, ஏ.இ.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    தமிழ்ப் பல்கலைக்கு நிதிச்சிக்கல் தீருமா?

    பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களை பெறும் வகையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை, உயர்கல்வித்துறையின் கீழ் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    Monday, February 25, 2013

    ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

    ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என வேலூரில் நேற்று நடந்த தமிழக தமிழாசிரியர் கழக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் அறிவியல் பாடத்தை எளிமையாக்க புதிய பயிற்சி திட்டம் செயலாக்கம்

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியல் பாடங்களை நடத்தும் புதிய பயிற்சி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தொடக்க கல்வித் துறையின்

    வருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி

    சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்)

    டி.இ.டி தமிழ் வினா - விடை: திருவருட்பா

    ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திற்கான வினா - விடைகள்

    வாழ்த்து: திருவருட்பா

    டி.இ.டி தமிழ் வினா - விடை: திருக்குறள்

    * இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா

    *    உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
    *    உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: பாம்புகள்

    *   விவசாயிகளின் நண்பன் - பாம்பு.

    *   உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: நாலடியார்

    *   நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.

    *   நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: பாரதியார்

    *   பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

    *   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: நான்மணிக்கடிகை, நாட்டுப்புறப்பாட்டு

    நான்மணிக்கடிகை:
    *  ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: இசையமுது, பழமொழி நானூறு

    *  எழுதியவர் - பாரதிதாசன்

    *  இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்

    டி.இ.டி தமிழ் வினா - விடை: பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

    பெரியார்: 
    *  இயற்பெயர்: இராமசாமி்.

    *  பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.

    டி.இ.டி தமிழ் வினா - விடை: பறவைகள்

    *   பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

    *   உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது.

    டி.இ.டி தேர்விற்கான வினா-விடைகள்

    டி.இ.டி தேர்வினை எழுதுபவர்களுக்கு ஓர் வேண்டுகோள். நவம்பர் 19ஆம் தேதி தினமணி நாளிதழில் "தகுதிதான் அடிப்படை!" என்ற தலைப்பில் வெளிவந்த கீழ்காணும் தலையங்கத்தை படித்து தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு கீழ்வரும் வினா - விடைகளை படித்து பயன்பெறுங்கள்.

    ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம் எப்போது?

    மதுரையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவுப்படி, மாதம்தோறும் நடக்கும் ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம், மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் நடத்தபடாததால் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

    பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் முறைகேடு?

    பி.டி.ஏ., எனப்படும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. முறைகேடுகளை மறைப்பதற்காகவே, ஆண்டுக்கு, இருமுறை நடத்த வேண்டிய, பொதுக்குழுகூட்டத்தை கூட்டுவதில்லை என, கூறப்படுகிறது.

    மொழிக் கல்வி பயிற்சித் திட்டம்

    மொழிக் கல்வியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுபான்மை மொழியினர், மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழிக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து, 10 மாத மொழிக்கல்வி பயிற்சித் திட்டத்தில் சேர மத்திய மொழிக்கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

    குழு விவாதத்தின் வெற்றி ரகசியம்

    வேலை வழங்கும் நிறுவனங்கள், போட்டியாளர்களின் திறனை பரிசோதிக்க, குழு விவாதத்தை நடத்துகின்றன. இதன்மூலம் போட்டியாளர்களின் திறமையை, நிறுவனங்கள் கண்டு கொள்கின்றன. இதில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை.

    தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சிலின் பணிகள்

    6 முதல் 16 வயது வரையான 30 கோடி குழந்தைகளில், 10% பேர் மட்டுமே பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆண்டுதோறும், முதல்முறையாக பணியில் சேரும் 130 லட்சம் பேரில், 45% பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 25% பேர் தொடக்கக் கல்வி மட்டுமே பெற்றவர்கள்.

    ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,

    சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.

    அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஊழியர் பற்றாக்குறை: கேள்விக்குறியான கல்வித்தரம்

    ராமநாதபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில், காப்பாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால், மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

    01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

    www.tnkalvi.com

    Sunday, February 24, 2013

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாநகர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

    ரத்தாகுமா? ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி... அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி - நாளிதழ் செய்தி


    பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்படாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

    பள்ளிக்கல்வித்துறை - 2009-10 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது - விவரம் கோரி உத்தரவு.

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; மாணவ, மாணவியருக்கு பரிசு

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில், திருப்பூர் பெம் பள்ளியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி, நேற்றும், நேற்று

    ஆர்வம் இருந்தால் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளலாம்

    "நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றிய ஆர்வம் இருந்தால், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்," என, ரி-சாட்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி பேசினார்.

    வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்கம்

    கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா வரவேற்றார்.

    இன்று போலியோ சொட்டு மருந்து

    தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கான இரண்டாம் தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    Saturday, February 23, 2013

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


    தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை - பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு.

    தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரி தலைமையில் சட்டப்பூர்வ குழு

    தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசு அமைத்துள்ளது.

    மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைந்ததால் 117 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன

    ஆசிரியர் பயிற்சி முடிந்து மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது... அதனால் பிளஸ்-2 படித்து

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 - கல்வி விழிப்புணர்வு நாடகம், கல்வி விழிப்புணர்வு பாடல் மற்றும் மெட்டுகள்

    மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்

    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கணித திறமையை வளர்த்துக் கொள்ள....

    உங்களின் குழந்தைகள் கணிதத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேக இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக

    கல்விச் சேவைக்காக விருதுபெறும் பேராசிரியர்

    திருச்சி என்.ஐ.டி.டி., பேராசிரியரின் கல்வி சேவையைப் பாராட்டி தி இந்தியன் இன்டர்நேஷனல் பிரன்ட்ஷிப் சொசைட்டி, "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" பட்டத்தை வழங்கியது.

    கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹால்டிக்கெட் வழங்குவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி

    "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட் பெற, டி.பி.ஐ., வளாகத்தில், குவிந்தனர். ஒரே நாளில், அதிக மாணவ, மாணவியர் திரண்டதால், ஹால் டிக்கெட் பெற முடியாமல், அவதிக்குள்ளாயினர்.

    குடிகார ஆசிரியர் குஜராத்திற்கு இடமாற்றம் - நாளிதழ் செய்தி

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு, மது போதையில் வருவது, மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது என, செயல்பட்ட, கணக்கு ஆசிரியர் பவுல் பாப்பையா, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    தமிழ் வழியில் தேர்வானவர்கள் பணிக்கு சேர்வதில் சிக்கல்!

    ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், வரலாறு உட்பட மூன்று பாடங்களில், தமிழ்வழி சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வான, முதுகலை பட்டதாரிகள், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம்

    "உங்கள் பள்ளியில் அமெரிக்கா" என்ற திட்டத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், துவங்கியது.

    குரூப்-2 தேறியவர்களுக்கான நேர்முகத்தேர்வு தொடக்கம்

    குரூப்-2 நேர்முகத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், துவங்கியது. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள, 3,631 பணியிடங்களை நிரப்ப, கடந்த நவ., மாதம் குரூப்-2 தேர்வு நடந்தது.

    போட்டி அதிகம் - என்ன செய்கின்றன வணிகப் பள்ளிகள்?

    இந்தியாவில் தற்போது 3500க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் இருந்தாலும், புதிதுபுதிதாக வணிகப் பள்ளிகள் முளைப்பதும் நின்றபாடில்லை. இத்தகைய போட்டிகள் நிறைந்த சூழலில், வணிகப் பள்ளிகள் தொடர்ந்து

    ஜவகர் சிறுவர் மன்றங்கள் விரைவில் அமையுமா?

    ஒன்றியங்கள் தோறும், ஜவகர் சிறுவர் மன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்த, அரசு முன்வந்துள்ளதாக தெரிகிறது.

    முதன்மை தேர்வில் 66 மனிதநேய மைய மாணவர்கள் தேர்ச்சி

    மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில், சைதை துரைசாமி மனித நேய பயிற்சி மையத்தில் படித்த, 68 மாணவ, மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

    Friday, February 22, 2013

    சிங்கம்புணரி ஒன்றியத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்


    தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியர் களுக்கு TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள் பெற்று வழங்க தேவைப் பட்டியல் கோரி உத்தரவு.

    புதிய பள்ளிக் கட்டடப் பணிகளில் நிதியின்றி இழுபறி - நாளிதழ் செய்தி

    அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தில், நிதி பற்றாக்குறையால், 200 புதிய பள்ளிக் கட்டட பணிகள் நிறைவு பெறாமல், இழுபறியில் உள்ளன.

    பழைய பேப்பருக்கு சென்ற விடைத்தாள்கள்! - நாளிதழ் செய்தி

    தேர்வுத்துறை அலட்சியத்தால், பழைய பேப்பருக்கு, விடைத்தாள்கள் விற்கப்பட்டதால், பிப்., 24 ல், ஊரக திறனாய்வு மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.

    முடங்கி கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்

    பள்ளி மாணவர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக, "ஜல்மானி" என்ற திட்டத்தை, மத்திய அரசு, 2009 -2010 ல், துவக்கியது.

    நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன்: ஐகோர்ட்

    நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், வங்கிகள், கல்விக்கடன் வழங்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி - நாளிதழ் செய்தி

    தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப

    கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும்

    கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை மற்றும் இச்சமூகத்தின் எதிர்கலமே குழந்தைகள்தான் என்ற நம்பிக்கையில் கல்விக்கான முழூ செலவையும் அரசே ஏற்றுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் நலவாழ்வு மையங்கள் அமைக்க அரசு உத்தரவு

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நலவாழ்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் கி. ராமசுப்பு தெரிவித்துள்ளார்.

    ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி

    பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. ஆரம்ப கல்வியை அதிகரிக்க

    தமிழக ஆசிரியர் கூட்டணி அரியலூரில் ஆர்ப்பாட்டம்

    அகில இந்திய அளவில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    Thursday, February 21, 2013

    இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ.அதிரடி அறிவிப்பு

    இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள்

    ஐதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு

    ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் வியாழன் அன்று மாலை 7 மணியளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கணக்கு எண் வழங்கப்பட்டு பிடித்தம் செய்த விவரங்களை தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை அனுப்ப உத்தரவு.

    பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிநியமனம் இழுபறி

    அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    ஆசிரியர் நியமனத்திற்கு போலீஸ் நற்சான்றிதழ் தேவை

    ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

    பிளஸ் 2 தேர்வு - சிறப்பான ஏற்பாடுகளை செய்ய அமைச்சர் உத்தரவு

    பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.

    பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 10.5 லட்சம் பேர் பங்கேற்பு!

    பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

    ஹால்டிக்கெட் பெறுவதில் மாணவர்கள் கடும் அவதி

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 தனித் தேர்வாளர்களுக்கான, ஹால்டிக்கெட் புறநகரில் உள்ள பள்ளியில் வைத்து வழங்குவதால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    பள்ளிகளில் பாலியல் கல்வி?

    டில்லி கற்பழிப்பு சம்பவத்தில், இளஞ்சிறார் ஒருவன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதிபதி வர்மா குழு சமர்பித்த அறிக்கையில், "நாடு முழுவதும் பாலியல் வன்முறை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

    நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்

    நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.

    பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்

    பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு!

    குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. விடைகளில், ஆட்சேபம் இருந்தால், அதுகுறித்து, ஒரு வாரத்திற்குள், தேர்வாணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.

    Wednesday, February 20, 2013

    அகஇ - அனைத்து அலுவலர்கள் பள்ளிகளில் 1முதல் 4 வகுப்புகளுக்கு கற்றல் அட்டைகளை கொண்டு தான் கற்றல் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்து அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு.

    அரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு வெளியீடு: முதல்வர் வரவேற்பு

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    பெற்றோர்கள் எப்படி உதவலாம்?

    பொதுத்தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் தங்களைத் தகுந்த முறையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமாக கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விஷயம் பிள்ளைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகும்.

    கல்வி என்பது வாழ்க்கை முழுமைக்குமான செயல்பாடு: கலாம்

    கல்வி என்பது வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். கற்பதற்கு கற்றுக்கொள்ளல், கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளல் மற்றும் வாழ்வதற்கு

    ஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது.

    முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி. தகவல்

    முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

    மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்

    மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கல்விக் கட்டணம் நிர்ணயம்: ஐகோர்ட் புது வழிமுறை

    கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கு ஆகும் செலவை, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கருத்தில் கொள்ள வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    ஆதரவளிப்போம்... பணிக்கும் செல்வோம்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்

    அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

    சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி: அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

    காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

    Tuesday, February 19, 2013

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாகப்பட்டினம் வட்டார பொதுக்குழு தீர்மானங்கள்


    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

    17.02.2013 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

    அகில இந்திய அளவில் நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி ஆதரவு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

    பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவு.

    பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம்

    மாணவர்களே தேர்வு பயமா?

    பொதுத்தேர்வை எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுக்கான அறிவுரைகள்

    ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்

    சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

    திறந்தவெளி பல்கலையில் 8 புதிய படிப்புகள்

    தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் துவங்கப்படுகின்றன.

    கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.

    என்ன பாவம் செய்துவிட்டார்கள்...... நாளிதழ் செய்தி

    பள்ளிக்கல்வித்துறையும், தொடக்கக்கல்வித்துறையும் ஒரே அரசின் கீழ் இயங்கும் இரு துறைகளாக இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்னெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையே உள்ளது.

    டி.இ.ஓ., பதவி உயர்வு "பேனல்': தத்தளிக்கும் தலைமையாசிரியர்கள் - நாளிதழ் செய்தி

    மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனலில் பெயர் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள், "ரகசிய அறிக்கை' (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) பெற உயர் அதிகாரிகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு

    பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Monday, February 18, 2013

    பள்ளிக்கல்வி-2010-11ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 218 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக நிலையுர்த்தப்பட்ட 218 பள்ளிகளுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலையுயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

    பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் - வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு.

    பள்ளிக் கல்வித் துறை - பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்பான விவரம் கோரி உத்தரவு.

    பொது பணிகள் - கல்வித் தகுதிகள் - பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் (M.SC., INDUSTRIAL CHEMISTRY) பட்டத்தை முது அறிவியல் வேதியியல் (M.SC., CHEMISTRY) பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு - கருதுதல்.

    Private Schools Fee Determination Committee 2013-2014 - Questionnaire, Fee Format and Enquiry Notice

    உயர்கல்வி பெற முடியாத மாணவர்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

    சிங்கம்புணரி வட்டாரத்தில் பிளஸ் 2,முடிக்கும் மாணவர்கள், கல்லூரி வசதியின்றி உயர்கல்வி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    குரூப்-2 தேர்வு: மனிதநேய மையத்தில் படித்த 517 பேர் வெற்றி

    சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த, 517 பேர், குரூப்-2 எழுத்து தேர்வில், தேர்வு பெற்றுள்ளனர்.

    உண்டு உறைவிட பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

    அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும், உண்டு உறைவிடப் பள்ளியில், இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஏப்ரல் இறுதியில் 3வது ஆசிரியர் தகுதி தேர்வு?


    தேசிய அளவிலான யோகா போட்டி:அரசு பள்ளி மாணவன் முதலிடம்

    அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில், அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். இந்திய யூத் யோகா பெடரேஷன் மற்றும் ஆசிய ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் ஆகியன இணைந்து இம்மாதம் 2ம்

    மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிட வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கான மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றங்களை நிர்ணயம் செய்ய மாநில அரசு மூலம் 6 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு சமச்சீர் ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் பல்வேறு துறைசார்ந்த அரசு ஊழியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவால் ஊதியம் பரிந்துரைசெய்யப்பட்டது.

    பள்ளி வளாகம் சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்தும் அவலம்

    கச்சிராயபாளையம் அரசு பள்ளியில் வகுப்பறை, விளையாட்டு மைதானம் பகுதிகளை மாணவிகளே சுத்தம் செய்யும் அவல நிலை பெற்றோர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.கச்சிராயபாளையம் மலையடி வரதராஜ

    Sunday, February 17, 2013

    இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் B.Ed., தகுதியுடன் பணியாற்றிவரும் (01.06.2006 வரை) இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.

    கல்வி கற்பிக்கும் முறை

    பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சுமார் 19 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இக்கல்வியானது மாணவர்களின் வருங்கால வாழ்க்கைக்கோ, வேலையில் சேருவதற்கோ உதவுவதில்லை. கல்வி வேறு வாழ்க்கை வேறாக இருக்கிறது. இதனால் அனேகர் வாழ்க்கையில் சரியான முன்னேற்றத்தை காண முடிவதில்லை.

    அரசு பள்ளி வசதிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    குரூப்-1 தேர்வு: கஷ்டமா? எளிதா? தேர்வர்கள் மாறுபட்ட கருத்து

    தமிழகம் முழுவதும், 352 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு எளிதாக இருந்ததாக, பெண் தேர்வர்களும், ரொம்ப கஷ்டம் என, ஆண் தேர்வர்களும், கருத்து தெரிவித்தனர்.

    தனியார் பள்ளிகளில், அட்மிஷன் கிடைப்பது கேள்விக்குறி

    கட்டாயக் கல்வி சட்டம் காரணமாக பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சீட் வழங்குவதற்கு, தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க திட்டமிட்டுள்ளன. இதனால், அட்மிஷன் எளிதில் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

    Saturday, February 16, 2013

    கலெக்டர் ஆய்வின்போது பாடக்குறிப்பேடு சமர்ப்பிக்காத அரசுப்பள்ளி ஆசிரியருக்கு மெமோ

    சேலம் மாவட்டம் சாத்தப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சரவணக்குமார் என்பவர் இயற்பியல் பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், சாத்தப்பாடி அரசுப்பள்ளியில் கடந்த 5ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பால்பாயின்ட் பேனா உருவான விதம்

    பேனா என்பது இன்று மிக பெரிய ஆயுதம். இந்த பேனாவின் மூலம் ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை கூட மாற்றி விடலாம். அன்பை வளர்த்து கொள்ளலாம் இவ்வாறு பல்வேறு இடங்களில்  பேனா உபயோகப்படுத்தப் படுகிறது. அது எப்படி உருவானது என்று தெரிந்து கொள்ள ஆவல் இல்லையா?

    சத்துணவில் 13 வகையான கலவை சாதங்கள் வழங்கும் திட்டம் தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வரின் தலைமையில் நடைபெற்றது.


    தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை - II ஆக பதவி உயர்வு அளித்தல் - 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல்.

    எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்கு 18–ந் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

    எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஹால்டிக்கெட் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறையின்

    கட்டண வசூல் பற்றி கேட்டதால் பள்ளி நிர்வாகிகள் அசிங்கப்படுத்தினர் 8ம் வகுப்பு மாணவன் வீட்டைவிட்டு ஓட்டம்

    அரும்பாக்கம் வத்தலகுண்டு ஆறுமுக நகரை சேர்ந்தவர் ராதிகா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    சிறுபான்மை மொழிப் பாடம்: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

    சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

    குரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்

    குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.

    அங்கீகாரமற்ற பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    பள்ளிகள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைப்பு

    பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.

    Friday, February 15, 2013

    அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கிலவழி கல்விக்கு பரிந்துரை

    தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.

    இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம்: தமிழக முதல்வரின் ஆதரவு கேட்டு கோரிக்கை

    அகில இந்திய தொழிற் சங்கங்கள், இம்மாதம், 20, 21ம் தேதிகளில் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்க வேண்டும்' என, மத்திய தொழிற்சங்கங்கள், மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - எல்.பி.எப்., - எச்.எம்.எஸ்., -

    அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்ட வட்டி அதிகரிப்பு

    தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது.

    வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை: பட்ஜெட் தயாரிக்க குவியும் கோரிக்கைகள்

    வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்துமாறு காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பரிந்துரை செய்துள்ளனர். இம்மாதம் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இ.பி.எப்., முதலீடு : 8.5 சதவீத வட்டி

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு, ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியின் கூட்டம், இன்று நடந்தது. இதில், தொழிலாளர்

    குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்வெளியீடு

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. இதனை இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்

    தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்

    பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம்

    குரூப் 2 மறுதேர்வு முடிவுகள் 5 நாள்களில் வெளியாகும்

    குரூப் 2 மறு தேர்வுக்கான முடிவுகள் ஐந்து நாள்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

    பள்ளிக்கல்வி - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை.

    தாவரவியல் பட்டியல் தயார், எந்நேரமும் வெளியாக வாய்ப்பு! தமிழ் வழி ஒதுக்கீட்டு பட்டியலால் தாமதம் - டி.ஆர்.பி

    தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.

    பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம்: மீண்டும் கருத்துக் கேட்க முடிவு

    தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக பெற்றோர் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, அறிக்கை சமர்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    திருப்புதல் தேர்வு ஒரு தொந்தரவல்ல...

    ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே போதும். அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு படபடப்பு தொடங்கிவிடும். அதிலும் குறிப்பாக, 12ம் வகுப்பு மாணவர்கள், மார்ச் மாதத்திலேயே தேர்வை எதிர்கொள்பவர்களாக இருப்பதால், புத்தாண்டிலிருந்து பதட்டத்துடனேயே காணப்படுவார்கள்.

    ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசிய பள்ளி பதிவு எழுத்தர் பணியிடை நீக்கம்

    மதுரையில் பள்ளி ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசிய பதிவு எழுத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் பதிவு எழுத்தரகப் பணிபுரிபவர்

    திட்டமிட்டு உழைத்தால் சாதிக்கலாம் - குரூப் 1 தேர்வில் சாதித்த பெண் பேட்டி

    கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல், தேவையானதை, தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும்,'' என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி கூறினார். டி.எஸ்.பி., 

    2000 மெட்ரிக் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலை - நாளிதழ் செய்தி

    மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட, ஐ.எம்.எஸ்., பணியிடங்கள் காலியாக இருப்பதால், மெட்ரிக் பள்ளிகள் குறித்த ஏராளமான பணிகள் முடங்கியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    TNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதனிலைத் தேர்வு

    பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. மிக குறைந்த காலி இடங்கள் என்றபோதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.

    சூரிய ஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்

    காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வயல்களில் மனித தி கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது.பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து

    Thursday, February 14, 2013

    பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?

    தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம் ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு.

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சிதம்பரத்தில் நடந்தது. மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிடக்கோரி மத்தியத்

    காலியிடம் நிரப்பக்கோரி ஆசிரியர் கூட்டணி 20ம் தேதி ஆர்ப்பாட்டம்

    புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு இடை நிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை தமிழக இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதத் தேர்வை ரத்து செய்ய

    வருமான வரி உச்ச வரம்பினை ரூ.5 லட்சமாக்க வேண்டும் தலைமை ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்

    வருமான உச்ச வரம்பினை ரூ.5 லட்சமாக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை ஆசிரியர் கூட்டணி அரியலூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் அரியலூர்

    ஆசிரியர் மன்றம் போராட்டம்

    ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை, பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றாவிடில், ஜூன் 9ம் தேதி முதல், தொடர் போராட்டங்கள் நடக்கும்' என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.

    218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக உயர்த்தி அரசு உத்தரவு

    தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மாநில பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு SSTA பொதுச் செயலாளரின் கடிதம்

    பேரன்புமிக்க மாநிலப்  பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு, எனது அன்பான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் மிக உயர்ந்த பதவியாகிய ஆசிரியர்

    பணப்பலன் கிடைக்காமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி

    எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த 433 முதுகலை ஆசிரியர்களை கோர்ட் உத்தரவிட்டும் பணிவரன் முறை செய்யாமலும், உரிய பணப் பலன்களை

    ஆசிரியர் பயிற்றுநரை இடமாற்றம் செய்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை - மதுரை உயர் நீதிமன்றம்

    Photo: ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் - உயர் நீதி மன்றம் தீர்ப்பு

    பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்

    வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.

    பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரி முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

    தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆறாவது ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்ட மூன்று

    அரசுப் பள்ளி மாணவனுக்கு வீரதீரச் செயல் விருது! மோகனன்

    தனது உயிரை துச்சமாக மதித்து, ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் சுகந்தனின் சேவையைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வீரதீரச் செயல் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

    ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை.

    அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என இயக்குனர் உத்தரவு.

    தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவிஉயர்வு மூலம் நிரப்ப 2013ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

    தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2004-06 வரை

    பி.லிட் தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர மறுப்பு

    பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்.சி., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்எட் முடித்தால் 2வது ஊக்க ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தொலைதூரக் கல்வியில் எம். எட்., படிப்பை

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை "கல்வி அதிகாரிகள் நேரடியாக சஸ்பெண்டு செய்ய அதிகாரம் இல்லை - மதுரை ஐகோர்ட்டு

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் நேரடியாக சஸ்பெண்டு செய்ய அதிகாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    ஆங்கிலப் பள்ளி துவக்க அனுமதி கோருகிறது முஸ்லிம் அமைப்பு

    இதுவரை உருது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வட மாநில முஸ்லிம்களின் முக்கியமான, தருல் உலூம் தியோபந்த் வக்ப் அமைப்பு, உத்தர பிரதேசத்தில், ஆங்கில கல்வி முறை பள்ளி துவக்க அனுமதி கோரியுள்ளது.

    உயர் கல்வி தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிட கோரிக்கை

    தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில், மாணவர்கள் குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு

    குரூப்-2 தேர்வில் வெற்றி: பணி நியமனம் கிடைக்காமல் விதவைகள் அவதி

    குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றும் ஆதரவற்ற விதவைகள், பணி நியமன ஆணை கிடைக்காமல் நான்கு மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்தாண்டு குரூப்-2 தேர்வில், 2,000 பேர் தேர்வு

    டான்செட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

    அண்ணா பல்கலை, இந்த கல்வியாண்டுக்கான "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு(டான்செட்)" தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு, எம்.பி.ஏ/எம்.சி.ஏ/எம்.இ/எம்.டெக்/எம்.ஆர்க்/எம்.பிளான்., போன்ற தொழிற்

    அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தொடக்க பள்ளி - நாளிதழ் செய்தி

    பொறையூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொறையூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை

    Wednesday, February 13, 2013

    மாணவரின் பார்வை பாதிப்பு: தனியார் பள்ளி முற்றுகை - நாளிதழ் செய்தி

    மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால்,  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    குறைந்தபட்ச நிலப் பரப்பளவு இல்லை: 1,500 பள்ளிகள் மூடப்படும்?

    குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

    பணப்பலன் கிடைக்காமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் அவதி

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த, 433 முதுகலை ஆசிரியர்களை, கோர்ட் உத்தரவிட்டும், பணிவரன் முறை செய்யாமலும், உரிய பணப் பலன்களை வழங்காமலும், பள்ளி கல்வித்துறை, பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

    3 மாதங்களாக வந்து சேராத அரசின் பணி நியமன உத்தரவு

    தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வாகியுள்ள தட்டச்சர்களுக்கு, மூன்று மாதங்களாக பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதால், பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

    77 தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் பணிநியமன உத்தரவுகள்

    நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்ததாக, டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி: கல்வியாளர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி

    தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கல்வித்துறை அதிகாரிகளுக்குள் கருத்து மோதல்: மாணவர்கள் அவதி - நாளிதழ் செய்தி

    ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை யூனியன் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஏ.இ.ஓ.,வுக்கும் பனிப்போர் வெடித்ததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    பிளஸ் 2 செய்முறை தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு

    நாளிதழ் செய்தி எதிரொலியாக, பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பாதிக்காத வகையில், தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தல்

    10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவுறுத்தியுள்ளார்.

    குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்

    குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Saturday, February 9, 2013

    தொடக்கக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - நாமக்கல் ஒன்றிய ஆசிரியர்களுக்கு - ஜனவரி மாத சம்பளம், பொங்கல் போனஸ் வழங்காததை குறித்து TNPTF-ன் கடிதம்


    பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மாதம் தான் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

    பள்ளிகளில் மாணவர் சேர்கை மே மாதத்தில் தான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பிளஸ் 2 தேர்வு: பொள்ளாச்சிக்கு புதிதாக 2 மையங்கள் தேர்வு

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக இரண்டு தேர்வு மையங்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம்

    மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்

    கூடுதல் பள்ளி கட்டணத்தை திருப்பி செலுத்தும் உத்தரவு செல்லும்

    மாணவர்களிடம் இருந்து, கூடுதலாக வசூலித்த, கல்விக் கட்டணத்தை, திருப்பிச் செலுத்த வேண்டும் என, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது சரிதான்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி: கூடுதல் நிதி ஒதுக்கீடு

    அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் கருதி, இவ்வாண்டு தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.